எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா?

in 2026 பிப்ரவரி

எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா?

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

ஜனவரி  தொடர்ச்சி  2026

முஸ்லிமீன்அல்லாஹ் இட்ட பெயர் (22:78) நபிமார்கள் செய்த பணியையே முழுமையாக ஒருவன் செய்தாலும் தன்னைமினல் முஸ்லிமீன்முஸ்லிம்களில் உள்ளவன் என்று மட்டுமே கூறவேண்டும். நபிமார்கள் அனைவருமே தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று கூறியதை 2:131,132, 5:111, 7:126, 10:72,84, 12:101 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்து கின்றன. மேலும் பாருங்கள்.

குர்ஆனில் முஃமின் என்று 15 இடங்களிலும் முஃமினன் என்று 7 இடங்களிலும், முஃமினாத் என்று 22 இடங்களிலும், முஃமினத் என்று 6 இடங்களிலும், முஃமினூன் 35 இடங்களிலும் முஃமினின் என்று 144 இடங்களிலும், முஃமினைனி என்று 1 இடத்திலும் ஆகமொத்தம் 230 இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

மேலும்யாஅய்யுஹல்லதீன ஆமனூஓ ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து பல இடங்களில் அறிவுரை கூறியுள்ளான். அதேபோல் முஸ்லிமீனும் பல திரிபுகளில் எண்ணற்ற இடங்களில் இடம் பெற்றிருந்தாலும்ஓ முஸ்லிம்களேஎன்றோஓ உலமாக்களேஎன்றோ ஒரேயயாரு இடத்திலும் அழைத்து அறிவுரை கூறியதாக இல்லவே இல்லை. ஓ மனிதர்களே, ஓ ஈமான் கொண்டவர்களே, ஓ நபியே! ஓ ரஸூலே! என்று அழைத்து அறிவுரை கூறியுள்ள அல்லாஹ் ஒரே ஒரு இடத்தில் கூட ஓரு முஸ்லிம்களே என்றோ ஓ உலகமாக்களே என்றோ அழைத்து அறிவுரை கூறாத காரணம் என்ன?  சிந்திக்க  வேண்டாமா?

ஆம்! உண்மை இதுதான். பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கும், வீண் பெருமை பேசும் உலமாக்களுக்கும் அறிவுரை கூறுவது பலன் தராது. எருமை மாட்டில் மழை பெய்த கதை யாகத்தான் இருக்கும். அதனால் தான் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கும், பெருமை பேசும் ஆலிம்களுக்கும் அல்லாஹ் அறிவுரை கூறவில்லை. 

இதை நாம் கற்பனையாகக் கூற வில்லை. 51:55 குர்ஆன் வசனம் உபதேசம் முஃமின்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்றும் 7:146 குர்ஆன் வசனம் ஆலிம், மவ்லவி, அல்லாமா என வீண் பெருமை பேசும் மதகுரு மார்களை அல்லாஹ் குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பிவிடுவதாகவும், குர்ஆன் வசனங்களை நம்பமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே அதாவது மதங்களையே நேர்வழியாகக் கொள்வார்கள் என்று கூறுவதையும் மட்டுமே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.

உண்மையான முஃமின்களுக்கு மட்டுமே குர்ஆன் வசனங்கள் எடுத்துக்காட்டப்பட்டால் சுயவிளக்கம் கொடுக்காமல், மறுப்பேதும் கூறாமல் அப்படியே ஏற்று அதன்படி நடப்பார்கள். இந்த உண்மையை குர்ஆனின் 23ம் அத்தியாயமும் மற்றும் 2:8,93,94,223,285, 3:68,110,139, 4:94,103,115,124,162, 5:11, 8:2, 3,4, 16:97, 17:01, 20:75,112, 21:94, 33:36, 40:40, 49:10, 64:13 

இன்னும் இவை போல்  எண்ணற்ற வசனங்கள் முஃமின்களின் சிறப்புகளை விலாவாரியாகத் தருகின்றன. இவ்வ ளவு சிறப்புகள் இருந்தும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் தன்னை முஃமின் என்று சொல்லிக் கொள்ளவோ, பிற ஒரு முஸ்லிமைப் பார்த்து முஃமின் என்று சொல்லவோ மார்க்கம் அனு மதிக்கவில்லை. ஃகனீமத் பொருட்களை நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு நபி தோழர் இன்னொரு நபி தோழரைக் காட்டி அவர் முஃமின் அவருக்குக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்தபோது முஃமின் என்று சொல்லாதே முஸ்லிம் என்று சொல் என்று நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்தும் நபி தோழர் முஃமின் என்று சொல்ல நபி(ஸல்) அவர்கள் முஃமின் என்று சொல்லாதே முஸ்லிம் என்று சொல் என்று மீண்டும் எச்சரித்ததாக  ஹதீஃத்  கூறுகிறது.  (புகாரீ: 1478)

இப்போது நாம் சிந்திக்க வேண்டும். குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் முஃமினீன் என்ற பதம் இருந்தும், தன்னையோ, பிறரையோ முஃமின் என்று சொல்லவே அனுமதி இல்லாத போது 4:49, 53:32 இன்னும் பல இறைவாக்குகளுக்கு முரணாக அவற்றை நிராகரித்து தம்மைத் தாமே தவ்ஹீத்வாதிஏகத்துவவாதி, தவ்ஹீத் ஜமாஅத்ஏகத்துவக் கூட்டமைப்பு என்று பீற்றிக் கொள்ள மார்க்கம் அனுமதிக்குமா? இறைவனுடன் கூட்டு வைப்பது சிர்க்கிலும் ஆகக் கொடிய சிர்க் இல்லையா? சிந்தியுங்கள்.

ஆலிம்கள், அல்லாமாக்கள், மவ்லானாக்கள், ஷேகுகள், ஹஜ்ரத்கள், மவ்லவிகள், தாயிகள் எனப் பொருமையடிக்கும் ஒட்டுமொத்தப் புரோகிதர்களும் மனித குலத்திற்கே இழைத்து வரும் மாபெரும் கொடுமை. அநீதி, அகில உலக மக்களுக்கும் சொந்தமான இறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி முழுமை பெற்ற வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று தார்ப் பாயில் வடித்தெடுத்த பொய்யைக் கூறுவதாகும். அடுத்த அண்டப் புளுகு, ஆகாசப் பொய், மனித வர்க்கத்திற்கே அல்லாஹ்வால் தெள்ளத்தெளிவாக விளக்கப்ப்டட குர்ஆன், புரோகித மதரஸாக்களில் தெண்டச் சோறு சாப்பிட்டுக் காலம் கழித்த மவ்லவிகளுக்கு மட்டுமே விளங்கும் என்பதாகும். 

அரபு மொழியில் டாக்டரேட் பட்டம் பெற்ற மேதையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு குர்ஆன் விளங்காது என்ற பீற்றலாகும். அது மட்டுமா? அரபு மொழி தெரியாத முஸ்லிம்களும் தங்களுக்குத் தெரிந்த மொழியில் குர்ஆனின் மொழி பெயர்ப்பைப் படித்து விளங்கமுடியாது என்ற ஆகாசப் பொய்யாகும். இம்மத குருமார்களின் இப்படிப்பட்ட அண்டப் புழுகு ஆகாசப் பொய் காரணமாக மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டிய அறிவு ஜீவிகள் அனைவருக்கும் சொந்தமான குர்ஆனை நேரடியாகப் படித்து நேர்வழியை விளங்க முடியாமல் போய்விட்டது. இதை விட அநீதி உண்டா?

மேலும் இந்த முல்லாக்கள் அல்லாஹ்வின் பெயரால் அரங்கேற்றி வரும் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்கள், மக் களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் நிலை இவற்றைக் கண்கூடாகக் கண்டவர்கள், மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் மற்ற மதங்களின் வரிசையில் உள்ளதுதான் இஸ்லாமும் என்று முடிவுக்கு வந்து, இஸ்லாமிய மார்க்கத்தையும், அதைப் போதிக்கும் குர்ஆனையும் விமர்சிக்கிறார்கள். அவர்களில் பலர் கடவுள் மறுப்புக் கொள்கை, நாத்திகத்தைப் போதித்தும் வருகிறார்கள். தூய இஸ்லாமிய மார்க்கம், முன்னைய மதகுருமார் களைப் போல், இம்முல்லாக்களாலும் மாசு படுத்தப்பட்டு உள்ளது என்பதை மறுப்போர் உண்டா? வடிகட்டிய  மூடர்கள்  இவர்கள்தானே!

இம் முஸ்லிம் மதகுருமார்கள், தங்களின் அற்பமான இவ்வுலக வாழ்க்கையை லட்சியமாகக் கொள்ளாமல், 2:186 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வை முழுமையாக நம்பி, மறுமையில் உறுதியான நம்பிக்கை கொண்டு, முழுமை பெற்ற இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் மனித குலத்திற்கே சொந்தமானது. மனிதர்களில் எவரும் அதை எந்த நிலையிலும் தங்களுக்குத் தெரிந்த மொழி பெயர்ப்புகளைப் படித்து எளிதாக விளங்கலாம். அந்தளவு விளக்கமாக ஏக இறைவனாகிய அல்லாஹ்வே தெளிவாக, எளிதாக விளக்கியுள்ளான். மனிதரில் எவரது மேல் விளக்கமும் அவசியமில்லை. 

அப்படிச் செயல்படுத்தவேண்டிய முஹ்க்கமாத் வசனங்களுக்கு ஒருவன் மேல்விளக்கம் கொடுக்க முற்பட்டால் அவன் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்க முற்படுகிறான் என்று உள்ளது உள்ளபடி கடந்த ஆயிரம் வருடங்களாக சொல்லி வந்திருப்பார்களேயானால் இன்று இவ்வுலகம் அழிவின் விளிம்பில் நிற்குமா? நரக விளிம்பில் நிற்குமா? சிந்தியுங்கள். நாத்திகம் இந்தளவு வளர்ந்திருக்குமா? சிந்தியுங்கள்.

மற்றவர்கள் குர்ஆனை இழிவுபடுத்தவும், நபி(ஸல்) அவர்களை விமர்சிக்கவும் முற்பட்டிருப் பார்களா? சிந்தியுங்கள். இன்று ஒழுக்கங்கள் அனைத்தும் இழுக்கங்களாகவும் கருதப்பட யார் காரணம்? இத்தகைய தவறானவர்கள் மக்கள் தலைவர்கள் ஆக யார் காரணம்? சொல்லுங்கள்! உலகமே லஞ்ச லாவண்யத்திலும், ஊழல்களிலும் மூழ்கித் திழைக்க யார் காரணம்? உலக மக்கள் அனைவருக்கும் உரிய வாழ்க்கை நெறிநூலான குர்ஆனை மக்களிடமிருந்து மறைத்தது தானே! குன்றிலிட்ட 1000 வாட்ஸ் வெள்ளை விளக்காக இருக்கவேண்டிய அல்குர்ஆனை குடத்திலிட்ட 0 வாட்ஸ் இருட்டு விளக்கு போல் மறைத்து மோசம் செய்வதும் இம்மவ்லவிகள்  தானே!

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே நீங்கள்எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?” இது அறிவீனம் இல்லையா? சொல்லுங்கள். உண்மையில் நீங்கள் சுய சிந்தனையாளர்களாக, அறிவுடையவர்களாக இருந்தால், உலக மக்களுக்கே சொந்தமான குர்ஆனை அவர்களிட மிருந்து மறைக்கும், அம்பை எய்யும் இம்மவ்லவிகள் மேல்தான் உங்களது முழு கோபமும் ஏற்படவேண்டும். அதை விட்டு குர்ஆனை இழிவுபடுத்தும், நபி(ஸல்) அவர்களை விமர்சிக்கும் மாற்றார்கள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், அதாவது அம்பின் மேல் கோபம் வந்தால் உங்களை விட அறிவீனர்கள் இல்லை என்பதுதானே அதன் பொருளாகும். முஸ்லிம்களே நீங்கள் அறிவிலிகளா? அறிஞர்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: