மனிதர்கள் அனைவருக்கான நோன்பை  பற்றி இறைநூல்கள்..

in 2026 பிப்ரவரி

மனிதர்கள் அனைவருக்கான நோன்பை  பற்றி இறைநூல்கள்..

S.H. அப்துர் ரஹ்மான்

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும்  சமாதானம்  உண்டாகட்டும்

படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்       

அந்த ஒரே இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

நோன்பு  பற்றி  இறுதி  இறைநூல் :

நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள்  இறையச்சமுடையோர்  ஆகலாம்.   (2:183)

(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர்) அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். எனினும், அதற்கு சக்தி பெறாதவர் (அதற்குப்) பரிகாரமாக, ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். எனினும், எவரேனும் உபரியாக நன்மை செய்தால் அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை) அறிவீர்களானால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்க ளுக்கு  நன்மையாகும்.  (2:184)

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டி யாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பது மான இறுதி இறைநூல் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்கவேண்டும். அந்த இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடு கிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அந்த இறைவனின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அந்த இறைவன்  இதன்  மூலம் நாடுகிறான்)   (2:185)

ரமழான் மாதம், மனிதர்களுக்கு வழிகாட்டலாகவும், தெளிவான ஆதாரங்களாகவும் இறுதி இறைநூல் இறக்கப்பட்ட மாதம். ஆகவே, அந்த மாதத்தை அடையும் ஒருவர் நோன்பு நோற்க வேண்டும். நோயாளி அல்லது பயணத்தில் இருப்பவர் பிறநாட்களில் ஈடு செய்யலாம். கஷ்டப்படும் நிலையில் இருப்பவர்கள் ஏழைகளுக்கு  உணவு  வழங்கவேண்டும். நோன்பு இரவில் உங்கள் மனைவியருடன் சேருவது அனுமதிக்கப்பட்டது. விடியற்காலை தெளிவாகும் வரை உண்ணவும், குடிக்கவும் அனுமதி உண்டு. பின்னர் இரவு வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள்.

நோன்பின்  நோக்கம் :

இறையச்சம் பெறுதல், உடலையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்துதல், பொறுமை மற்றும் சுய  கட்டுப்பாடு  பெறுதல்.

நோன்பு பற்றி  பைபிள் :

நோன்பு பற்றி பைபிளிலும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இரண்டிலும் நோன்பு ஆன்மீக செயலாக  விளக்கப்படுகிறது.

பைபிளில் நோன்பு

பழைய  ஏற்பாடு 

1. மோசே.      யாத்திராகமம் 34:28

அவர் கர்த்தருடன் நாற்பது நாள் நாற்பது இரவு இருந்தார். அப்பமும் தண்ணீரும் அவர் உண்ண வில்லை.” அந்த இறைவனின் கட்டளைகளை பெறும்போது மோசே(அலை) நோன்பு இருந்தார். 

2.  தாவூது.  சங்கீதம் 35:13

நான் நோன்பிருந்து என் ஆத்துமா வைத் தாழ்த்தினேன்.”

நோன்பு : தாழ்மை பணிவு. 

3. நினவே மக்கள்.    யோனா. 3:5

நினவே மக்கள் தேவனை நம்பி பெரிய வர்களும், சிறியவர்களும் நோன்பு இருந் தார்கள் 

பாவமன்னிப்பிற்கான  நோன்பு.

புதிய  ஏற்பாடு

இயேசு.  (ஈசாஅலை) மத்தேயு : 4:2

அவர் நாற்பது நாள் நாற்பது இரவு நோன்பிருந்த பின்  பசித்தார்.”

இயேசு (அலை) தாமும் நோன்பு இருந்தார். இயேசுவின் போதனை. மத்தேயு : 6:16-182)

நீங்கள் நோன்பிருக்கும்போது, மனிதர்கள் காணும்படி அல்ல; இரகசியமாக நோன்பிருங்கள்மற்றவர்களுக்காக அல்ல, இறைவனுக்காக, ஆரம்ப கிறிஸ்தவர்கள்.     அப்போஸ்தலர் : 13:2,3

அவர்கள்  நோன்பிருந்து  ஜெபித்தார்கள்

நோன்பின்  நோக்கம்  பைபிள் :

தேவனுக்கு அருகாமை, பாவங்களுக்கு  மனமாறுதல்,  ஜெபத்தில்  கவனம்.

இறைநூல் பைபிள் ஒற்றுமை இறைநூல் (2:183)

உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டது  போல்…”

நோன்பு முன் தூதர்களுக்கும் இருந்த ஒரு  வழிபாடு.

நோன்பு பற்றி தவ்ராத் :

தவ்ராத் பழைய ஏற்பாட்டின் சட்டப் பகுதிகள்)இல் நோன்பு ஒரு முக்கியமான ஆன்மீக நடைமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பாவமன்னிப்பு, தாழ்மை, இறைவனிடம் நெருக்கம் என்பவற்றுடன் நோன்பு தொடர்புபடுத்தப்படு கிறது.

இறை செய்தி (வெளிப்பாடு) பெறும்போது பாவமன்னிப்பிற்கான நோன்பு.    1 சாமுவேல் 7:6

அவர்கள் நோன்பிருந்து கர்த்தரிடம் பாவங்களை ஒப்புக்கொண்டார்கள்      நெகேமியா 9:1

இஸ்ரவேல் மக்கள் நோன்பு இருந்து பாவங்களை அறிக்கையிட்டார்கள்

நோன்பு + பாவ மன்னிப்பு

நோன்பின்  நோக்கம்தவ்ராத்:

ஆத்துமா தாழ்மை, பாவங்களுக்கு மன்னிப்பு, இறைவனின் கோபத்திலிருந்து விடுதலை, சமூக சீர்திருத்தம்.

இறுதி  இறைநூலுடன்  தொடர்பு :

உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு விதிக் கப்பட்டதுபோல்தவ்ராத்திலும் நோன்பு இருந்தது என்பதற்கு தெளிவான சான்று.   (இறைநூல் : 2:183)

தவ்ராத்  பார்வையில்  நோன்பு :

உணவு தவிர்ப்பை விட ஆத்துமா தாழ்த்தல் & பாவமன்னிப்பு.

நபிமார்கள்  &  நோன்பு :

1. மோசே (மூஸா அலை)

 தவ்ராத்.  யாத்திராகமம் 34:28

மோசே நாற்பது நாள் நாற்பது இரவு அப்பமும்  தண்ணீரும்  உண்ணவில்லை

முக்கிய அம்சங்கள் 40 நாள் கடுமையான நோன்பு. வஹி (இறைவனின் சட்டம்) பெறும் நேரம்.

நோன்பு = இறைவனுடன் தொடர்பு.

2.  இயேசு / ஈசா(அலை)

இன்ஜீல் / பைபிள்      மத்தேயு 4:2

அவர் நாற்பது நாள் நாற்பது இரவு நோன்பிருந்தார்

முக்கிய  அம்சங்கள்:

பொதுப்பணியை தொடங்குவதற்கு முன் சாத்தானின் சோதனையை எதிர்கொள்ள நோன்பு + ஜெபம் ஆன்மீக வலிமைக்கான நோன்பு.

3.   முஹம்மது(ஸல்) இறைநூல் & ஹதீஸ் 2:183

உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டது போல்

முக்கிய  உண்மை :

நோன்பு என்பது ஒரு மார்க்கத்தின் புதுமை அல்ல. எல்லா தூதர்களும் செய்த வழிபாடு. ஆன்மாவை தூய்மைப்படுத்தும் பொதுவான  இறை வழிபாடு.

எல்லா மதங்களிலும் நோன்பு இருக்கிறது. அதன் ஒரே நோக்கம் இறைவனுக்கு அடிபணிதல், இறையச்சம், தூய்மைப்படுத்துதல். கிறிஸ்தவம்/யூதம் தேவனிடம் நெருக்கம் நோன்பு படைத்த இறைவனை உணரும் வழி.     ஹதீத் 5927, புகாரி

இறைத்தூதர்(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்:

(இறைவன் கூறினான்) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது. நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன்.

மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நோன்பாளியின் வாய் வாடையானது. கஸ்தூரியின் வாசனையை விட, இறைவனிடம் நறுமணமிக்கதாகும் என அபூஹுரைரா(ரழி) அறிவித்தார். 115, புகாரி: 5927, அத்தியாயம் : 77, ஆடை  அணிகலன்கள்.

Previous post:

Next post: