வரலாறும் – படிப்பினையும்….

in 2026 பிப்ரவரி

வரலாறும்படிப்பினையும்….

A. நஜ்முத்தீன்

இறைத்தூதர்களும், இறை நம்பிக்கையாளர்களும் சோதனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பது இறை நியதியில் ஒன்றாகும்.

அதிகம் சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்களாவார்கள், பின்னர் அவர்களுக்கு நிகராகியவர்கள்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த சோதனை என்பது;

1. செல்வத்தின் மூலம்,

2. ஆட்சி, அதிகாரத்தின் மூலம்,

3. விவசாய நிலங்கள் மூலம்,

4. கால்நடைகள் மூலம்,

5. பிறப்பு    இறப்பு மூலம்,

6. குடும்பங்கள்  மூலம்,

7. நோய்கள் மூலம்

மேற்கண்ட ஒன்றோ அல்லது பலவற்றின் மூலமோ  சோதனைகள்  வருகின்றன.

இஸ்லாமிய வரலாற்றில் எல்லா நபிமார்களும் ஒவ்வொரு விதத்தில் சோதிக்கப்பட்டவர் களாக இருந்தாலும் அய்யூப் நபி அவர்களே அதிகமாக சோதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்று ஜும்ஆ மேடையிலும், பொது மேடையிலும்  அதிகமாக  பேசப்படுகிறது. கற்பனைகளை யும், கப்ஸாக்களையும் அதிகமாக பேச அய்யூப் நபியின் வரலாறு சிலருக்கு  வாய்ப்பாகவும்  உள்ளது.

அய்யூப் நபி(ஸல்) அவர்கள் சோதிக்கப்பட்டார்கள் என்பது மட்டுமே பெரும்பாலும் பேசப்படுகிறது. ஆனால் அவருடைய வரலாறு படிப்பினையாக இருக்கின்றது என்பதை பெரும்பாலோர் பேசுவது இல்லை. அவரது வரலாறு அழகான குடும்ப வரலாறாக (கணவன்மனைவி உறவை) இருந்தும் அதை எடுத்துக்காட்டுவது இல்லை. உலகில் நோயால் பாதிக்கப் பட்ட கணவரால், அல்லது மனைவியால் பொறுமை இழந்து சலித்துக் கொண்டவர்களுக்கு அய்யூப் நபியின் வரலாறு தெரியாததற்கு காரணமே. ஆனால் அய்யூப் நபியின் வரலாற்றில் என்ன நடந்தது என்பதை இறைநூல் பேசுகிறது. 

அய்யூப் நபியின் மூல வம்சம் :

இஸ்ஹாக் நபி(ஸல்) அவர்களின் சந்ததியில் வந்த ஒருவர் மற்றும் யூசுப் நபி(ஸல்) அவர் களின் பிற்கால சந்ததியில் வந்தவரும் ஆவார்.

அவருக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடை:

1. பெரும் செல்வம்,

2. விவசாய பண்ணை நிலங்கள்,

3. கால்நடைகள்,

4. குழந்தை பாக்கியம்

5. நல்ல குடும்பம் (மனைவி)

மேற்கண்ட எல்லாம் வழங்கப்பட்டு இருந்தன.

ஆயினும் அவரின் செல்வம், விவசாய நிலங்கள் அழிந்தன, குழந்தைகள் இறந்தனர். இதை அல்லாமல் மிக நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டார்கள்.

அவரது நோய் சிலர் ஜும்ஆ மேடையில் பேசுவது போல மிக மோசமானது அல்ல. உடல் வலி, உடலில் புண்கள், வீக்கம் போன்ற வையே. அது அவருக்கு நெருக்கடியாக இருந்தது என்பது மட்டுமே உண்மை. ஆயினும் அவரது ஈமானும் (இறை நம்பிக்கையும்) நன்றியுணர்வும் மிக உயர்ந்ததாகவே  இருந்தது.

எனவேதான்,

அவர் சிறந்த பொறுமையாளர்என  இறைவன் கூறுகிறான். (38:44)

அதாவது நபிமார்கள் வரலாற்றில், மரபில் மிக உயர்ந்த பொறுமையாளர் (செய்யது அல்சாபிரீன்) என்ற போற்றப்படுகின்றார். அவர் நோயால் பாதிக்கப்பட்ட நேரத்தில் (காலத்தில்) இறைவன் மீது சலிப்போ, குறையோ கூறவில்லை.

மாறாக, 

என் இறைவா!

என்னை துன்பம் தொற்றிக் கொண்டுள்ளது. நீயே கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்….”  என்று  கூறினார்.   (38:42)

அவருக்கு  அல்லாஹ்வின் பதில் என்ன தெரியுமா?

அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம், அவரது குடும்பத்தையும், அவர்களை போன்றவர் களையும் அவருக்கு வழங்கி னோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப்பெறும் அருளும் அறிவுடையோருக்கு படிப்பினையும்  ஆகும்.”  (38:43)

இவ்வாறான வரலாற்று சம்பவங்களை குர்ஆன்ஹதீத் மூலம் படிக்கும்போது கடந்து போகாமல் கவனத்தில் கொண்டு, இறை நம்பிக்கையிலும், கொள்கையிலும் நிலைத்திருந்தால் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் குறிப்பாக பனி காலங்களில் வழக்கத்திற்கு மாறாக சில நோய்கள் வந்தாலும் அல்லாஹ்வின் உதவி பொறுமையாளர்களுக்கு கிடைக்கும்.

அதாவது,

சோதனையில் பொறுமை (சப்ர்)

நலனின்  ஷிக்ர்(நன்றி செலுத்துதல்)

துஆவில் அழகு

குடும்ப  உறவில்  நேர்மை.

இதுவே எடுத்துக்காட்டாக விளக்கப்படுகிறது.

அய்யூப் நபி(ஸல்) அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டபோது அல்லாஹ் அவர்களுக்கு சபா (நோய் நிவாரணமாக) ஒரு மருத்துவத்தையும்  கூறினான். அந்த மருத்துவ முறைதான் இன்றும் உடல் வலி, காய்ச்சல் போன்றவற்றுக்கு அலோபதி மருத்துவர்களால் (வேறு முறையில், வேறு பெயரில்) பரிந்துரைக்கப்படுகிறது.

அல்லாஹ் வழங்கிய ´பா : (நோய் நிவாரணம்)

பூமியில் உம்முடைய கால்களைக் கொண்டு உதையும், குளிப்பதற்கும், குடிப்பதற்கும் குளிர்ந்த நீர்கிடைக்கும் என்பதாக.   (அல்குர்ஆன் 38:42)

அலோபதி மருத்துவர்கள் இப்போதுதான் காய்ச்சல் ஏற்பட்டவர்களை, “ஈர துணியால் துடைத்து கொள்ளுமாறு இவர்கள் கண்டுபிடித்தது போல கூறுகிறார்கள்.  ஈரத் துணியால் துடைக்கும்போது காய்ச்சல் சிறிது சிறிதாக குறையும் என்பதே நிஜம்.

Previous post:

Next post: