FACEBOOK (Vs) MUSLIM

in 2026 பிப்ரவரி

FACEBOOK (Vs) MUSLIM

முகநூலும்முஸ்லிம்களும்….!!

. நஜ்முத்தீன்

எல்லா நவீன கண்டுபிடிப்புக்களிலும் எப்படி நன்மைகள் தீமைகள் உள்ளதோ அதேபோல் முகநூலிலும் நன்மைதீமைகள் உண்டு.

நன்மைகள் :

1. உலகின் நடக்கும் நிகழ்வுகளை உடனுக் குடன் (அடுத்த நொடியில்) தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.

2. அறிவியல், கல்வி, அரசியல், ஆரோக்கியம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை களின் வளர்ச்சியை அறிய வாய்ப்பு.

3. வெகு தொலைவில்(வெளிநாட்டில்/ வெகுதூரத்தில்) உள்ளவர்களை மிக எளிதில் தொடர்புக் கொள்ள வாய்ப்பு.

4. ஆன்லைன் கோர்ஸ், போன்றவற்றின் மூலம் அறிவை பெருக்க வாய்ப்பு.

5. சிறு வியாபாரிகள் மற்றும் பெரும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் உற்பத்தி பொருட்களை நேரிடையாக விற்பனை செய்யவும்,  வாங்கவும்  வாய்ப்பு.

6. அவசர உதவிகள், நிதி உதவிகள், இரத்த தானம் போன்றவைகளை துரிதமாக தெரிவிக்க வாய்ப்பு.

7. எழுத்தாற்றல், புகைப்படம், வீடியோ, இசை போன்றவைகளில் ஈடுபட்டு திறமையை வெளிகாட்டவும் திறமையானவர்களை அறியவும் வாய்ப்பு.

இன்னும் பல நன்மைகள் உண்டு.

தீமைகள் :

1. தகவல்களை சரிபார்க்காமல் வதந்திகளை பரப்புவது.

2. தவறான பிரச்சாரம்,  குழப்பம்  உருவாக்குதல்,

3. பிறரை இழிவுபடுத்தி அல்லது ஒப்பீட்டு மனவேதனை தருவது.

4. இளைஞர்களிடம் LIKE, FOLLOWERS போன்ற கலாச்சாரம் பெருகி மிக பெரிய பாதிப்பு.

5. ஒழுக்கமற்ற  விசயங்களை மிக எளிதில் அணுகக்கூடிய  தீமைகள்.

6. நேரடியான மனித உறவுகள் குறைதல்,

7. REEL LIFE அதிகரித்து,  REAL LIFE குறைந்துவிட்டது.

8. மத, மொழி, ஜாதி, அரசியல் வெறுப்பு அதிகரித்தல்,

9. CYBER  CRIME  மோசடிகள்,

10. நேரத்தை அதிகமாக வீணாக்க கூடியது.

11. தூக்கம் குறைவு,

12. கவனக் குறைவு,

13. வேளை, படிப்பு, குடும்ப உறவுகள் பாதிப்பு,

14. ADDICTION   ஏராளமான  தீமைகள்.

இன்னும்  ஏராளமான  தீமைகள்.

இவைகள் எல்லாம் உலக ரீதியாக அனைத்து பிரிவினருக்கும் (எல்லா மதத்தின ருக்கும்) ஏற்படக்கூடிய  நன்மை,  தீமைகள்.

முகநூலின் வளர்ச்சியை (நன்மையை)  முஸ்லிம்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும், அனைவராலும் நேரிடையாக சென்று காணமுடியாத பல அறிய வரலாற்று நினைவு சின்னங்களையும் அறியக்கூடிய வாய்ப்பை முகநூல் மூலம் முஸ்லிம்களில் ஒரு சிலர் மட்டும்  பதிவு  செய்வதை  காண்கிறோம்.

மேலும்மேலும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு  பயன்படுத்த வேண்டும்.

ஆனால் முஸ்லிம்களில் உள்ள மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் சிலர் முஸ்லிம் களுக்கு முகநூல் மூலம் நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு தீமையை செய்கிறார்கள். அவைகளின் பட்டியல் மிக நீண்டதாகும். அவற்றில் மிக முக்கியமாக துஆக்களைப் பற்றி அதிகம் பதிவு செய்கிறார்கள். அதாவது, இதைஇதை நூறு முறை/ஆயிரம் முறை/70 ஆயி ரம் முறை ஓதினால் பெரிய செல்வந்தராக ஆக லாம். அனைத்து கடன்களும் நீங்கிவிடும், வறுமை அண்டாது,  வியாபாரம் பெருகும், இன்னும் இதுபோன்ற கப்ஸாக்களை நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தராத துஆக்களை (திக்ருகளை) பதிவு செய்கிறார்கள்.

துஆக்களுக்கு பலன் உண்டு என்பதில் மாற்று  கருத்தில்லை. எவ்வாறு என்றால்;

செருப்புவார் அறுந்துவிட்டாலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என்று நபி (ஸல்)  கூறியுள்ளார்.

அதே  வேளையில்;

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருந் தாலும்ஒட்டகத்தை(மேய்ச்சல் இல்லாத நேரத்தில்) கட்டிவையுங்கள்என்றும் கூறி யுள்ளார்கள். எந்தவொரு நபி தோழரும் (சஹாப்) 100 முறை/ஆயிரம் முறை சில திக்ருகளை ஓதி பணக்காரராக  ஆனதாக  வரலாறு இல்லை.

இறைநூலில் (குர்ஆனில்) சுமார் 63 துஆக் கள் உள்ளன.

அவைகளில் இறைவனே கற்றுத்தந்த துஆ வும் உள்ளன. உதாரணம் : அல்ஹம்து சூரா.

மேலும் பல நபிமார்கள் கேட்ட துஆக்களும் உள்ளன. வானவர்கள் கேட்ட, கேட்கின்ற துஆக்களும் உள்ளன. மனிதர்கள் கேட்கவேண்டிய துஆக்களும் உள்ளன. அதுமட்டுமல்ல நாளை (மறுமையில்) நரகவாதிகள் கேட்க போகின்ற துஆக்கள் கூட உள்ளன. மனிதர்கள் கேட்கவேண்டிய துஆக்களும் உள்ளன. அதுமட்டுமல்ல நாளை (மறுமையில்) நரகவாதிகள் கேட்க போகின்ற துஆக்கள் கூட  உள்ளன.

குர்ஆனில் கூறப்பட்ட துஆக்கள் அல்லா மல் நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த துஆக்களும் பல உள்ளன. இவைகளை மட்டுமே நாம் கேட்டுவந்தால் நமது ஈமான்(இறை நம்பிக்கை) பாதிக்காது. அவ்வாறு அல்லாமல் முகநூலில் பதிவிடுகின்ற இறை நியதிக்கு பொருந்தாத, இறைவனின் செயல் திட்டத்தில் இல்லாததை எல்லாம்  கேட்பதால்  ஈமான்  பாதிக்கும்.

இறைநூல்  கூறுகிறது :

உங்களுக்கு முன் சென்றோர் (அடைந்த சோதனைகளைப்) போன்று உங்களுக்கும் வராமல் நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என நினைத்துக் கொண்டீர்களா? அவர்களுக்கு வறுமையும், நோயும் ஏற்பட்டது. இறைத்தூதரும், அவருடனிருந்த இறை நம்பிக்கை  கொண்டோரும்,

அல்லாஹ்வின் உதவி எப்போதுகிடைக்கும்? என்று ஏங்குமளவிற்கு சோதிக்கப்பட் டார்கள்.

அறிந்து  கொள்ளுங்கள்!

அல்லாஹ்வின் உதவி அருகில் இருக்கிறது. (அல்குர்ஆன் : 2:214)

எனவே முகநூலில் சில முல்லாக்கள், சுயமாக பதிவிடும் துஆக்களை நம்பி ஈமானை பறிகொடுத்து விடாதீர்கள்.

அல்லாஹ்வும்அல்லாஹ்வின் தூதரும் கற்றுத்தந்த துஆக்களை ஓதி இம்மைமறுமை இரண்டிலும் வெற்றி பெறுவோம்.

Previous post:

Next post: