annajaath

தலையங்கம் : தி(க)ணிப்பும்–தீர்ப்பும் (SECOND WINNER) பொதுவாக அரசியலிலும் சரி, போரிலும் சரி வெற்றிப் பெற்றவர்களே மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதை கொண்டாடவும் செய்வார்கள். ஆனால் நடந்து முடிந்த  இந்திய நாடாளுமன்ற 2024ம் ஆண்டிற்கான தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் N.D.A. கூட்டணி மகிழ்ச்சியாக இல்லை. குறிப்பாக N.D.A. கூட்டணிக்கு தலைமை தாங்கிய BJP மகிழ்ச்சியாக இல்லை. மாறாக இரண்டாவது இடத்திற்கு வந்த (Second Winner) I.N.D.I.A.  கூட்டணி தலைவர்கள் மற்றும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது நடைமுறைக்கு மாற்றமான […]

{ 0 comments }

ஆலிம் எனத் தனிப்பிரிவு இஸ்லாத்தில் உண்டா? அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : ஹிஜ்ரி 400க்குப் பிறகு மத்ஹபுகளின் பெயரால் “தக்லீது” என்ற கண்மூடிப் பின்பற்றல், முஸ்லிம்களிடையே நுழைந்த யூத மதகுருமார்களால் தோற்றுவிக்கப்பட்ட பின் “ஆலிம்” என ஒரு தனிப் பிரிவினர் தோன்றி தாங்கள்தான் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; மதகுருமார்கள் எனக் கடந்த ஆயிரம் (1000) வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக 6:50, 13:16, 58:11, 35:19,28, 39:9, 35:19,22, 40:58 […]

{ 0 comments }

அல்லாஹ் மிகப் பெரியவனா? எப்படி? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலக முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லாத மற்றும் ஏகபோகமாக நம்பிக்கை கொண்ட ஒரு வார்த்தை அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்பதாகும். அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்ற இந்த அரபி மொழி வார்த்தையானது. உலகில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஒரு உன்னதமான  வார்த்தையும்  கூட. ஆனால் முஸ்லிம்களில் பெரும்பாலோர் அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹ் அக்பர்) என்ற வார்த்தையின் பொருளை […]

{ 0 comments }

மரணம் உங்களை அடைந்தே தீரும்! N. அலி, கல்லிடைக்குறிச்சி உலகில் உள்ள மற்ற நெறி நூல்களைக் காட்டிலும் அல்குர்ஆன் மரணம் குறித்து அதிகமாகவும் மிகத் தெளிவாகவும் பேசுகிறது. மனிதர்களுக்கு மரணம் ஏற்படுத்தப் பட்டதற்கான நோக்கம் மனிதர்கள் அழகிய செயலுடையவர்களாக ஆகவேண்டும் என்பதற்காகவே என்று அல்குர்ஆன் சொல் கிறது. (அல்குர்ஆன் 67:2) மரணத்தை விட் டும் எந்த மனிதரும் விதிவிலக்கு பெற முடியாது என்று சொல்கிறது (அல்குர்ஆன் 29:57) படைத்தவனின் அனுமதி கொண்டே படைப்பினங்கள் மரணிக்கின்றன. (அல்குர் ஆன் […]

{ 0 comments }

உலக நிகழ்வுகள் யாரால்? ஏன்? அய்யம்பேட்டை A.  நஜ்முதீன் இறைநூலில்(அல்குர்ஆனில்) பல இடங் களில் “இறைவன் நாடினால்‘ என்றும், “இறைவனின் நாட்டப்படியே‘ நடக்கின் றன என்றும், மற்றும் உலக நிகழ்வுகள் அனைத்தும் இறைவனுக்கு தெரியாமல் நடப்பதில்லை  என்றும்  கூறப்பட்டுள்ளது. ஆனால் அநீதியாக ஆட்சி செய்த பல மன்னர்களும் (ஆட்சியாளர்களும்) பல சமு தாயங்களும் இப்பூவுலகில் வாழ்ந்தும், மறைந்தும் இருக்கின்றார்கள். அத்தகைய ஆட்சியாளர்களின் அநீதிக்கு இறைவனின் நாட்டமும் காரணமா? நிச்சயமாக இல்லை;  ஏன்  என்றால் அத்தகைய ஆட்சியாளர்களையும், அநீதியாக […]

{ 0 comments }

உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் – அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. அல்லாஹ்வையே வழிபடுங்கள், அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காதீர்கள், மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும்,(பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36) […]

{ 0 comments }

ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024  ஜூன் மாத  தொடர்ச்சி… ரியாதுஸ் ஸாலிஹீன் பக்கம் 519, பாடம் 230இல், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது விரும்பத்தக்கதாகும்‘ எனும் உபதலைப்பின் கீழ் (மாதம் மூன்று நோன்புகளில் மிகச் சிறந்தது “அய்யாமுல் யபீழ்‘ நாட்களாகும். அது பிறை 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும்) நாட்களாகும். 12,13,14ஆம் நாட்கள் என்றும் கூறப்படுகிறது (எனினும்) பிரபலமான சரியான கருத்து முதலாவது தான்) என்று ஆரம் பித்து, […]

{ 0 comments }

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024  ஜூன் மாத  தொடர்ச்சி… கொலையுண்ட மனிதரை மீண்டும் உயிர்பித்து எழுப்பித் தன்னைக் கொலை செய்தவன் யார் என்பதைச்  சொல்லவைத்த  சமூகத்தைச்  சேர்ந்தவர்களான  யூதர்கள்: ஒரு படுகொலைச் சம்பவம் நடந்து கொலைகாரன் யாரென்றே தெரியாது பெரும் சமூகப் பிரளயம் ஏற்படவிருந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ் வழக்கத்திற்கு மாறாக ஒரு பசுவை அறுப்பதன் மூலம் கொலையுண்ட […]

{ 0 comments }

இஸ்லாமிய இறை ஒருமை இயல் அல்லாஹ்வின் ஒருமை: தெய்வங்கள் உற்பத்தியாளர்களா மனிதர்கள்? – முஹிப்புல்  இஸ்லாம் அல்லாஹ்வின்  ஒருமை: அல்லாஹ்வின் அருள் மார்க்கம் இஸ்லாம் மக்கள் சமுதாயத்துக்கு அல்லாஹ் அருளிய அருட்கொடை எவராலும் எதனாலும் அசைக்க முடியாத இஸ்லாத்தின் அடித்தளம்; இஸ்லாத்தின்  இறைக் கோட்பாடு. இறைக் கோட்பாட்டின் தனித்துவம் இறை ஒருமை! இறைவன் ஒருவன்! அந்த ஒரே இறைவன்தான் அல்லாஹ்! அவன் அல்லாத எவரும்  எதுவும்  இறைவன்  அல்லன். அல்லாஹ் அல்லாத எதுவும் இறைவனாக, கடவுளாக, தெய்வமாக […]

{ 0 comments }

புத்தாண்டின் பத்தாம் நாள் (ஆஷீரா) அபூ முஹம்மத் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷீரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அதுபற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவியபோது “மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர்அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்”  என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களை […]

{ 0 comments }

சாபம் இடலாமா? M. சையது முபாரக், நாகை. அன்பாகக் கொஞ்சுவதாக நினைத்து கோபமாகவோ திட்டுவதில் மிகைத்து நிற்ப வர்கள் பெண்கள். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “….பெண்கள் சமூகமே! தான தருமங்கள் செய்யுங்கள். காரணம் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள்தான் என எனக்குக் காண்பிக்கப்பட்டது” என்று “அல்லாஹ்வின் தூதரே அது ஏன்?” என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு “நீங்கள் அதிகமாகச் சாப்பிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர் களாக இருந்துகொண்டு […]

{ 0 comments }

மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றோம்? அஹமது இப்றாஹிம், புளியங்குடி நடப்பு துல்ஹஜ் பிறை பெருநாளுக்கு முந்தைய நாளிலிருந்து ஒவ்வொருவக்த் ஜமாஅத் தொழுகைக்குப் பின்பு இமாம் தக்பீரோடு சிற்சில வார்த்தைகளை சேர்த் துக்கொண்டு இராகத்தோடு சப்தமிட்டு சொல்ல அவரைத் தொடர்ந்து பின்பற்றித் தொழுவோரும் கோரஸாகவும் சப்தமாகவும் தக்பீர்  கூறுவது  நபிமொழியில்  உள்ளதா? அதன் அறிவிப்பாளர் தொடர் பற்றி விபரம் அறிந்தோர் யாராவது பகிரங்கமாக அறிவிக்க  முடியுமா?  நிச்சயமாக முடியாது! ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நெறிநூல் அல்குர்ஆனில் சப்தமிட்டு […]

{ 0 comments }

ஐயமும்!  தெளிவும்! ஐயம் : “ஸிராத்தல் முஸ்தகீம், கைரில் மக்லூபி அலைஹிம்  வலல்லால்ஹீன்‘’ மேற்படி வசனத்தை நாம் ஒவ்வொரு நேர (வஃத்து) தொழுகையிலும் ஓதிவருகிறோம். ஏன் என்றால் இந்த வசனத்தின் பொருள் நேரான பாதையிலும், மற்றும் கோபத்திற்கோ, வழி தவறியவர்களாகவோ ஆககூடாது  என்பதற்காக.  அவ்வாறுயிருக்க நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இந்த துஆவை ஓதி வந்தார்கள். அவர்கள் நேர்வழியிலிருந்தும்  இதை  ஏன்  ஓதி  வந்தார்கள்? ஹி. அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு இறைவனின் சாந்தியும் சமாதான மும் அவருக்கு […]

{ 0 comments }

தலையங்கம் : தியாகம் (குர்பானி) ஏன்? “எனது தொழுகையும், எனது தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் அல்லாஹ்வுக்கே  உரியன”    (அல்குர்ஆன் 6:162) மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறை நூலின் வசனம் நம்முடைய செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யக்கூடியவையாக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாகும். அப்பொழுதுதான் அல்லாஹ்வின் பொருத்தத்தைப்  பெறமுடியும். மேற்கண்ட இறைநூலின் வாசகத்திற்கு ஏற்ப பல தியாகங்களை செயலின் மூலம் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றவர்கள்தான் நபி இப்ராஹீம்(அலை) அவர்களது துணைவியார், மற்றும் அவர்களது மகன் […]

அல்குர்ஆனுக்கு மொழியாக்கம் – விளக்கம் – சுயவிளக்கம் அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : மே 2024  மாத தொடர்ச்சி….. பிக்ஹு சட்டங்களை முழுமையாக மண்டையில் ஏற்றிக்கொண்டு வெளிவருவதால், குர்ஆன் மொழி பெயர்ப்புகளும் அவரவர்கள் மத்ஹபு, தரீக்கா, இயக்கக் கொள்கைகளை நிலை நாட்டும் நோக்கில் அமைவதிலும் வியப்பில்லை. தர்கா–சமாதி வழிபாடுகளை மார்க்கமாக்கும் பரேல்வி கொள்கையுடைய மதகுருமார்கள் “மின்தூனில்லாஹ்‘ என்று குர்ஆனில் வரும் இடங்கள் அனைத்திலும் “அல்லாஹ் அல்லாதவைகள்‘ என மொழியாக்கம் செய்துள்ளனர். அஃறிணைப் பொருள்களான கல், சிலைகள், […]

அலைபாயும் மனதை (நப்ஸை) அடக்க முடியுமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் மனிதனின் மனதில் எது பதிந்து நிற்கிறதோ, அல்லது எது அவனுடைய சிந்தனையை ஆக்கிரமித்திருக்கிறதோ  அதுவே  அலைபாயும்  மனதாக  இருக்கிறது. இத்தகைய அலைபாயும் மனதிற்கு எடுத்துக்காட்டாக இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) இரண்டு முக்கியமான சம்பவத்தையும், மற்றும் பல்வேறான நிகழ்ச்சிகளையும் கூறியுள்ளான். அவை ஒன்று: ஆதமுடைய இரு மகன்களின் வரலாறு.   (பார்க்க.  அல்குர்ஆன் 5:27-31) மற்றொன்று : நபி யூசுப்(அலை) அவர்களின் வரலாறு. (பார்க்க. […]

மனிதனை நரகத்திற்கு கொண்டு செல்லும் மூன்று தன்மைகள்! அஹமது இப்ராகீம்,  புளியங்குடி 1. ஆணவம்  2. மோசடி 3. கடன் ஆகிய இந்த மூன்றும் நீங்கிய நிலையில் ஒரு மனிதரின் உயிர் பிரிந்தால் அவர் சுவனத்தில் இருப்பார்! என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸவ்பான்(ரழி) அவர்கள், (ஆதார நூல்கள் : திர்மிதி : 1497, அஹ்மத்: 2356) அடுத்ததாக ஆணவத்திற்கு அடையாளங்களாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்  கூறியது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள்  கூறியதாவது […]

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும்! அந்நாட்களின்  சிறப்பும்!! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை. விடியற்காலையின்  மீது  சத்தியமாக!   (89:1) “ஃபஜ்ர்‘ எனும் சொல்லைப் பொறுத்தவரையில் அது அனைவருக்கும் தெரிந்ததுதான் அதிகாலை, விடியற்காலை என்பதுதான் மஸ்ரூக்(ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது. “விடியற்காலை‘ எனும் இந்த வார்த்தை (துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளின்) அதிகாலையை மட்டும் குறிக்கும் அதுதான் பத்து நாட்களின் இறுதி நாள் ஆகும். இதுதான் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள், இப்னு ஸுபைர்(ரழி) அவர்கள், மற்றும் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர் 1. கவ்ஸர் என்னும் நீர்தடாகத்தின் அளவு என்ன? ஒரு  மாத  பயண  தூரம்.   (புகாரி: 6579) 2. எந்த நேரத் தொழுகையை தொழுவதால் இரு மடங்கு நன்மை கிடைக்கும்? அஸர்  தொழுகை.   (முஸ்லிம் : 1510) 3. அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு இறந்தோரை உயிர்ப்பித்த நபி யார்? ஈஸா(அலை).   (அல்குர்ஆன் 5:110) 4. நாம் எதனை நினைவு கூறவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? மரணம்.   […]

ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை. உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்.  (அல்குர்ஆன் 2:185)  திருக்குர்ஆன் மூலம் தமிழாக்கம், விளக்கவுரை, மெளதூதி(ரஹ்) இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 1989-1993, வெளியீடு) உங்களில் அம்மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) “திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர்”, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை 2010, ஜூலை வெளியீடு) உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு […]