ஐயமும்! தெளிவும்!!

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : குர்பானி துல்ஹஜ் 10ஆம் நாள் மட்டுமா? இல்லை 10,11,12,13 நான்கு நாட்களா? ஆய்வு என்ற பெயரில் நவீன இயக்க வாதிகள் புதுப்புது கருத்துக்கள் வெளியிடுகிறார்களே! இது பற்றிய அந்நஜாத்தின் பார்வை என்ன? வார்னர் நதீர், நாகர்கோவில். தெளிவு : இதுபற்றி தாங்கள் அந்நஜாத்தின் பார்வையை கேட்டிருப்பதின் பேரில், குர்ஆன் மற்றும் ஹதீதின் அடிப்படையில் எமது பார்வையை பதிவிடுகிறோம். கீழே கொடுத்துள்ள 22:28 இறைவசனத்தைப் பாருங்கள். “தங்களுக்குரிய பலன்களை அவர்கள் அடைவதற்காகவும், அவன் அவர்களுக்கு வழங்கியுள்ள […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஆண்களும், பெண்களும் அடக்கப்பட்டிருக்கும்போது கப்ருஸ்தானில், ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் கப்ருஸ்தான் வர தடை இருக்கிறது. அந்நிய ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், பெண்களுக்கு தடை இருக்கிறது. அதேபோல் அந்நிய பெண்கள் அடக்கப்பட்டிருந்தும் ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்பட காரணம் என்ன? தெளிவு : சிந்தனையின் அடிப்படையிலான நல்ல கேள்வி இது! அந்நிய ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், பெண்களுக்கு தடை இருக்கிறது என்று கூறுகிறீர் கள். அந்நிய பெண்கள் அடக்கும் செய்யப்பட்டிருக்கும் அதே கப்ருஸ்தானில் ஆண்கள் மட்டும் […]

ஐயம் : “மார்க்கத்தை மறைப்பவர்களை சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்” என்று குர்ஆன் கூறுகிறதே. அவ்வாறு சபிப்பவர்கள் யார்? ஆதாரத்துடன் தெரிவிக்கவும். தாவூது இப்ராஹீம், மதுரை. தெளிவு : குர்ஆன் கூறும் அந்த வசனத்தை முதலில் காண்போம். நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும், அதன் நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும், யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்”. அல்குர்ஆன் : 2:159 சபிப்பவர்கள் யார் என்பது தங்களுக்கேற்பட்டுள்ள ஐயம். தமது குடும்பத்திலுள்ள தாய். தந்தை, மனைவி, மக்கள், […]

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : 1. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலுக்கு (தானே) பொறுப்பாளியாக இருக்கிறான்.  (அல்குர்ஆன் : 52:21) அணுவளவு நன்மை செய்தோர் அதன் பலனைக் கண்டுகொள்வார். அணுவளவு தீமை செய்தோர் அதன் கேட்டையும் கண்டுகொள்வார் (99:7,8) உங்களுக்கு அவனை (அல்லாஹ்வை) அன்றி உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாருமில்லை நீங்கள் (இதனை) சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 32:4) எச்சுமையானாலும் (தனது சுமையை அன்றி) மற்றெவரின் சுமையையும் சுமந்து கொள்ளமாட்டான். (53:33) இக்கருத்து குர்ஆனின் […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : “யஃஜூஜ் மஃஜூஜ் (கூட்டத்தாரு)க்கு வழி திறக்கப்படும்போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள் என்று அல்குர்ஆன்: 21:96 இறை வசனம் அறிவிக்கிறதே, யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கவும். (அப்துல் ஜலீல் வயது 84, ஒயர்மேன், (ஓய்வு) நெல்லிக்குப்பம்) தெளிவு : தஜ்ஜாலைப் பற்றியும், யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தார் பற்றியும் விளக்கம் கேட்டிருந்தீர்கள். தஜ்ஜாலைப் பற்றி செப்டம்பர் 2020 இதழில் விளக்கி இருந்தோம். இடமின்மையால் எழுதமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தோம். எனவே, இந்த […]

ஐயம் : ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புகாரியின் ஹதீஃத் எண். 4425ல் அபூ பக்கர்(ரழி) அவர்கள் ஜமல் போரில் நாம் கலந்து கொள்ளாததன் காரணத்தைக் கூறுகிறார்கள். அபூபக்கர்(ரழி) அவர்கள் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகுதான் ஜமல் போர் நடைபெற்றது. அப்படி இருக்கும் போது, இந்த ஹதீஃத் வரலாற்று செய்தியுடன் நேரடியாக மோதுகிறது. இதில் முரண் பாடு இருக்கிறதா? விளக்கவும்.   ஜாஃபர், திருநெல்வேலி. தெளிவு : அபூபக்கர்(ரழி) அவர்கள் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகுதான் ஜமல் போர் நடைபெற்றது என்பதில் தாங்கள் […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஜனாஸா-மய்யித்தைக் குளிப்பாட்டும் போது தண்ணீரில் இலந்தை இலையை ஏன் போடுகிறார்கள்? இது நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தா? வழிமுறையா? மாஜிலா இத்ரீஸ், அடிஅக்காமங்கலம். தெளிவு : நபி(ஸல்) அவர்களின் புதல்வி (ஜைனபு(ரழி) அவர்கள்) மரணமாகி (அவர்களின் ஜனாஸாவை நாங்கள் குளிப்பாட்டி)ய போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்து நீங்கள் 3 தடவை அல்லது 5 தடவை, மேலும் தேவை என்று கருதினால் இவற்றைவிட அதிகமான தடவைகள் தண்ணீரையும் இலந்தை இலையையும் கொண்டு ஜனாஸாவைக் குளிப்பாட்டுங்கள். இறுதியாக […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : அக்டோபர் 2019 இதழ் 32 பக்கத்தில் அலாஸ்காவிற்கும், கனடாவிற்கும் இடையில் கிப்லா மாறவதாகக் கூறுகிறீர்கள். இரு நாடுகிளின் கிப்லாவின் திசைகள் எது? ஹாஸிக் முகம்மது, சென்னை தெளிவு : கிப்லாவின் திசைகள் சர்வதேச தேதிக்கோட்டில் மாறுவதாக ஹிஜ்ரி கமீட்டி கூறி வந்தது. அதனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு பார்த்தபோது அது உண்மை இல்லை என்று தெரிய வந்தது. உண்மையில் அலாஸ்காவிற்கும், கனடாவிற்கும் இடையே உள்ள நேர்கோட்டில் மாறுகின்றது. அதுதான் சரியான இயற்கை யான தேதிக்கோடு ஆகும். […]

ஐயமும் தெளிவும் ஐயம் : உடல் சுத்மாயிருந்து உடை சுத்தமில்லாமல் இருந்தால் தொழுவதுக் கூடுமா?    உவைஸுல்கர்னி, அல்கோபார் தெளிவு : தொழுகைக்கு உடல், உடை, இடம் ஆகியவை சுத்தமாயிருத்தல் வேண்டும். உமது ஆடைகளை  நீர் சுத்தப்படுத்திக் கொள்வீராக!”   (74:4) இந்த வசனத்தின் அடிப்படையில் ஆடைகள் பரிசுத்தமாயிருத்தல் அவசியம் என்பது தெளிவாகிறது. *ஒரு முறை ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் நான் எனது மனைவியுடன் கலந்துறவாடும் சமயத்தில் அணிந்துள்ள ஆடையில் தொழுவதுக் கூடுமா? என்று அவர் கேட்கும் போது (நான் அதைக்) கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு […]

ஐயமும், தெளிவும் ஐயம் : சில அவசியத்தை முன்னிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு திருமணம் செய்து கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறதா?                            அந்நஜாத் வாசகர், வாணாதிராஜபுரம். தெளிவு :   முறைப்படி மார்க்க அடிப்படையில் நிக்காஹ் செய்து விட்டு, அவசியத்தை முன்னிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவுத் திருமணம் செய்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஐயம்:     தப்லீக் தஃலீம் கிதாபுகளில் இது செய்தால் இத்தனை நன்மை, இது செய்தால் இத்தனை பாவம் என்பதாக பட்டியல் போட்டு காட்டப்பட்டுள்ளதே இவ்வாறு ஒன்றை எதிர்ப்பார்த்து அமல் […]

ஐயமும், தெளிவும் ஐயம்: நபி(ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் அவர்களின் நிழல் கீழே விழுவதில்லை காரணம் அவர்களுக்கு மேகம் குடை பிடித்துக் கொண்டிருந்தது என்று கூறுகிறார்களே இது உண்மையா! பி.ஷாஹுல் ஹமீது, கோவை. தெளிவு: தாங்கள் கூறுவதுபோல், நபி(ஸல்) அவர்களின் நிழல் பூமியில் விழுவதில்லை என்பதற்கும், இவ்வாறே அவர்கள் மணலில் நடந்து சென்றால் பாதம் பூமியில் பதிவதில்லை. பாரையில் அவர்கள் நடந்து செல்லும் போது பாதங்கள் அதில் பதியும் என்றெல்லாம் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கூறப்படும் கூற்றுக்கள் அனைத்தும் கப்ஸாவும், […]

ஐயமும், தெளிவும் ஐயம் : சிலர் ‘ஜனாஸா’ தொழுகையின் போது தமது செருப்பு முதலிய காலணிகளைக் கழற்றி விட்டும் மற்றும் சிலர் தமது காலணிகளைக் கழற்றி விட்டு அதன் மீது நின்று கொண்டும் தொழுகிறார்களே! இவ்வாறு தான் தொழ வேண்டுமா?     – முஹம்மது யூனுஸ், சேலம் தெளிவு : ஒரு முறை நான் அனஸ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தமது காலணி-செருப்புகளுடன் தொழுதுள்ளார்களா? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். (அபூ மஸ்லமா ஸயீது பின் யஜீத்(ரழி), புகாரீ) […]

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய பள்ளிகளில் கிடைக்கும் நன்மையில் ஏற்றத் தாழ்வு இருப்பதாகக் கூறப்படும் ஹதீஸின் நிலை என்ன? ரஜின் அஹ்மத், சென்னை தெளிவு : “எனது இப்பள்ளியில் தொழும் ஒரு தொழுகையானது இதரப் பள்ளிகளில் தொழும் 1000 தொழுகைகளை விட சிறப்பானதாகும். எனினும் மஸ்ஜிதுல் ஹராம் நீங்குதலாக” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்) ஆகவே இவ்வறிவிப்பின்படி மஸ்ஜித் நபவியில் தொழுவதைவிட மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது சிறப்புமிக்கது […]

ஐயமும், தெளிவும் ஐயம் : தஸ்பீஹ் தொழுகைக்கு ஹதீஸ்களில் முறையான ஆதாரம் உண்டா?  ஷேக்தாவூத், சுப்ரமணியபுரம், திருச்சி.  எம்.எல்.எம் ஸாபிர் மன்வானை, கொழும்பு தெளிவு : இது சம்பந்தமாக அபூதாவூத், இப்னுமாஜ்ஜா ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர் தொடரில் “முஸப்னு அப்தில் அஜீஸ்” என்பவரும், “ஹக்கமுப்னு அஃப்பான்” என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவருமே பலஹீனமானவர்கள் என்று ஹதீஸ் கலாவல்லுநர்கள் கூறுகிறார்கள். இமாம் அஹ்மது பின் ஹம்பல்(ரஹ்) அவர்களிடம் தஸ்பீஹ் தொழுகைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, அதற்கு அவர்கள், இதற்கு ஆதாரமே கிடையாது என்று […]

  ஐயமும், தெளிவும். ஐயம் : “மிஃராஜ்” இரவு என்பதாக ரஜபு மாதத்தின் 27-வது இரவையும், “பராஅத்” இரவு என்பதாக ஷஃபான் 15-வது இரவையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு இவ்விரவுகளில் சிலர் தம் இச்சையாக பல வகையான நபில் தொழுகை தொழுகிறார்கள். மிஃராஜ் பரா அத்தை முன்னிட்டு நோன்பு வைக்கிறார்கள். குறிப்பாக ஷஃபான் 15-வது இரவுக்கு “பராஅத்து இரவு” என்பதாக அவர்கள் தாமாகவே பெயர் வைத்துக் கொண்ட அந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் தனியாகவோ கூட்டமாகவோ அமர்ந்து நீண்ட […]

ஐயம் : ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : 14:4) அந்நஜாத் மாத இதழில் ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருடைய நேரத்தில் இருந்து ஆரம்பமாகும் என எழுதி வருகின்றீர்கள். அதற்கு நபி மொழியிலிருந்து சில தரவுகளை முன்வைக்கிறீர்கள். ஆனால் அவற்றில் மனித யூகங்கள் சேர்ந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் பூமியையும், வானங்களையும், உயிரி னங்களையும் படைத்த நாட்களை விளக்கியுள்ளார்கள். அவ்வாறு […]

ஐயம் : டிசம்பர் மாத தலையங்கம் பார்த்தேன். இணைவைக்கும் காஃபிர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்த தாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பிறருக்கு அனுப்பலாமா? ஜாகிர் உசைன்,  திருவொற்றியூர், சென்னை-19. தெளிவு : தங்கள் ஐயத்திற்கான தெளிவை பிறகு பார்ப்போம். இணை வைக்கும் காஃபிர்களில் உள்ள ஒரு ஆணும் முஸ்லிம் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள லாமா? முஸ்லிம் ஆண் ஒருவர் காஃபிர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா? என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். இறை […]

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் தமது 63வது வயதில் ஹஜ் பயணம் செல்லும் வழியில், தன் தாயாரின் கப்ரைப் பார்த்து, “நான் தொழுகையில் இருக்கும்போது, நீங்கள் “”முஹம்மது, முஹம்மது” என்று அழைத்திருந்தால், தொழுகையை விட்டுவிட்டு பணிவிடை செய்ய வந்திருப்பேன் என்ற கருத்தில் கூறியதாக (முஸ்லிம்) ஏதேனும் ஹதீஃத் உள்ளதா? சுல்தான்ஜீ, ஆத்தூர். தெளிவு : இதுபோன்ற செய்தி சமூக வலை தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மார்க்கத்தில் எள்ளின் முனையளவு கூட ஆதாரம் இல்லை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) […]

ஐயம் : இது நாள் வரைக்கும் குர்ஆன் சுன்னா (ஸஹீகான ஹதீஃத்) மட்டுமே மார்க்கம் என்பவர்களின் மத்தியில் இன்று புதிதாக குர்ஆனுக்கு முரணில்லாத ஹதீஃத் என்கிறார்களே! இப்படி கூறக் காரணம் என்ன? அப்படியானால் குர்ஆனுக்கு முரணாக ஸஹீஹான ஹதீஃத் இருக்கிறதா? இதில் அந்நஜாத்தின் நிலையையும் தெளிவு படுத்தவும். நாஸர், நாகர்கோவில் தெளிவு : தமக்குக் கிடைத்த ஹதீஃத்களில், ஸஹீஹானதைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஹதீஃத் கலா வல்லுனர்கள் கையாண்ட அளவுகோள்களில் முதன்மை யானது. கிடைத்த ஹதீஃத் குர்ஆனுடன் […]

ஐயம் : குர்ஆனை மிகவும் எளிதாக நாம் ஆக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 54:17) எளிதாக்கப்பட்ட குர்ஆனை விளங்கிக் கொள்ள அதன் மொழியாக்கம் (தர்ஜுமா) மட்டும் போதுமா? இல்லை அதன் விரிவாக்கமும் (தப்ஸீர்) தேவையா? அபூ நபீல், தேங்காய்பட்டணம் தெளிவு : எளிதாக்கப்பட்ட குர்ஆன் வசனங்களை விளங்கிக்கொள்ள மொழியாக்கம் போதுமானதே. வசனங்களை விளக்குவதற்கு அல்லாஹ்வால் அங்கீகாரம் பெற்றவர் கள் அழகிய முன்மாதிரியை பெற்றுள்ள (33:21) அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே. எளிதாக்கப்பட்ட வசனங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் […]