1986 ஜுலை

முகம்மது அலி, M.A., திருச்சி. நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டதற்காகவும், அவர்களின் மூலமாகவே அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான் என்பதற்காகவும், நாம் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். அதுவே ஸலவாத் எனப்படும் என்று சென்ற இதழில் கண்டோம். ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும், அதன் சிறப்பையும் நாம் காண்போம்.

* நஜாத் ஆசிரியர், “சமாதான வழி” ஆசிரியரை நேருக்கு நேர் சில விஷயங்களைப் பேசிக்கொள்ள அழைத்ததாகவும், “சமாதான வழி” ஆசிரியர் “பத்திரிகை வாயிலாகவே அதை வைத்துக் கொள்ளலாம்” என்று பதில் தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாரே! நீங்கள் முன் வரலாமே! A.ரபீவுல்லாஹ்(+2 இறுதி) சேரன்மாதேவி

பேரன்பு கொண்ட சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் எங்களுக்கு அளித்து வருகின்ற பேராதரவும், ஒத்துழைப்பும், எங்களுக்கு மேலும் ஆர்வமூட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன. எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் ஒருசில கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஒருசில விளக்கங்கள்.