1986 நவம்பர்

அல்லாஹ்வின் வல்லமையை விளக்கி அண்ணலார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு அல்லாஹ் கூறுகிறான்:- எனது அடியார்களே! நான் நிச்சயமாக (யாருக்கும் அநீதி இழைக்க மாட்டேன் என்று) என் மீது அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் அதை ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள் தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்ளைத் தவிர, ஆகவே நேர் வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.