1987 அக்டோபர்

  K.M.H. இறைவன் ஒருவன் இருப்பானேயாகில் இந்த உலகில் நடக்கிற பஞ்சமா பாதங்களை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறான்? எந்தவொரு நல்ல உள்ளமும், தீமைகள் நடக்கக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த முற்படும் போது, இறைவன் எப்படி கண்டுங் காணாதது போல் இருக்க முடியும்? அப்படியொரு இறைவன் இருக்க முடியாது, நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய சந்தேகம்; ஏன் இது அவர்களின் வாதமும்கூட.