1990 டிசம்பர்

ஊருக்கு உபதேசமா?     K.M.H. அபூ அப்தில்லாஹ் ஜமாஅத்துல் உலமா நவம்பர் ’90 இதழில் “நாமடைந்த பெரு நஷ்டம்! பலகோடி மக்கள் இழிநிலையிலிருக்க காரணம் யார்?” என்ற தலைப்பில் சமுதாய மக்களின் சிந்தனைக்கென்று ஒரு ஆக்கம் திருச்சி ரசூல் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரை நமக்கு எந்த அளவு கடந்த வியப்பையே ஊட்டியது. இறால் மீன் தலைப்பில் மலத்தைச் சுமந்துக் கொண்டு மற்ற மீன்களை வயிற்றில் மலம் சுமப்பதற்காக நையாண்டி செய்வதற்கு ஒப்பான செயல் இது. சென்ற செப்டம்பர் 29ம் தேதி […]

நபி வழியில் நம் தொழுகை தொடர்: 46  அபூ அப்திர்ரஹ்மான் என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) ஜும்ஆ  பிரசங்கம்  சுருக்கமாகவும்,  தெளிவாகவும்  இலக்கிய  நயத்தோடும்  இருத்தல். *ஒரு முறை அம்மார்(ரழி) அவர்கள் எங்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் இலக்கிய நயத்துடன் ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள். அவர்கள் மிம்பரில் இருந்து இறங்கியவுடன் நாங்கள் அவர்களை நோக்கி, தாங்கள் சிறந்த வகையில் சுருக்கமாக பேசி விட்டீர்கள். சற்று விரிவாக பேசி […]

குர்ஆனின் நற்போதனைகள் :     அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே! தொடர்: 21   A. முஹம்மது அலி பகுதி 7  நபி(ஸல்) அவர்களுக்கே எச்சரிக்கை! 1.     பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் ஊகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் பொய்யான கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.   (6:116) 2.    நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நன்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், […]

ஹதீஸ் பெட்டகம் தொடர் : 7 A. முஹம்மது அலி, அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு எதிலும் சிரமம் தரவில்லை. எவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறாரோ அவருக்கு அழகான நற்கூலி இருக்கிறது. இன்னும் நமது கட்டளைகளில் (சிரமமற்ற) இலகுவானதை அவருக்கு நாம் கூறுவோம்.  (18:88) எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ அவருடைய காரியத்தை அவன் (அல்லாஹ்) எளிதாக்குகிறான்.  (65:4) என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!   (20:26) அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை […]

மனிதன்! புலவர் செ. ஜஃபர் அலி, பி, லிட், நாகப்பட்டினம். மனிதன் என்பவன் மாசுமருவற்றவனும் அல்லன்; மாசே உருவானவனும் அல்லன்; இவ்விரண்டுக்கும் இடைப்பட்டவனாகவே மனிதன் படைக்கப்பட்டான். இவண், “மனிதன்” என யான் குறிப்பிடுவது ஆண், பெண் இருவரையும் தான். மனித இனத்தைப் பற்றி திருக்குர்ஆன் துணைக் கொண்டு ஆய்வதே இக்கட்டுரையின் விழுமிய நோக்கமாகும். உலக அளவில் நொடிக்கு நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவில் மட்டும் ஒன்றரை நொடிக்கு ஒருக் குழந்தைப் பிறக்கிறது. இன்று உலகின் மொத்த மக்கள் […]

வல்லாண்மைக் (FASCISM)   கட்சியின் வெறி உருவம்.  அபாயம் அண்மித்து விட்டது: விசுவ ஹிந்து பரிஷத்தின் திட்டங்கள் தடை செய்யப்படாமல் நடந்தேற விட்டு விடப்பட்டாலோ, அன்றி ஜனநாயக அறசியல் கட்சிகளுக்காக விசுவ ஹிந்து பரிஷத் விரித்துள்ள வலையில் அவை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தாலோ நம் பாரத நாடும் வருங்காலத்தில் (மேற்கூரிய) அவ்வழியிலேயே நடைப்போட நேரிடும் என்பதை எளிதாக உணரமுடியும். இந்த ஆபத்து உடனடியாக அல்லவெனினும் வெகு அண்மையில் நிகழவுள்ள சாத்தியமும் கவலைக்குரிய விளைவுகளை அண்மையில் நிகழவுள்ள சாத்தியமும் கவலைக்குரிய விளைவுகளைக் […]

ஆதாரம் அவர்களே தருகிறார்கள்! இப்னு ஹத்தாது மதரஸாக்களின் கல்வி முறை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைக்கப்பட வில்லை. ஆலிம்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் மவ்லவிகளுக்கு உண்மையான மார்க்க ஞானம் இல்லை; அவர்கள் தங்களை மார்க்கத்தின் ஏகபோக உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொள்ள தகுதியும் உரிமையும் இல்லை; அவர்கள் சில வருடங்கள் மதரஸாக்களில் தங்கியிருக்கும் காலக்கட்டத்தில் அவர்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டு குருட்டு பக்தர்களாகி, முன்னோர்களின் குர்ஆன், ஹதீஸுக்கு முரணான போக்குகளை எல்லாம் மார்க்கமெனக் கண்மூடி நம்பிச் செயல்படுகின்றனர்; […]

ஐயமும் தெளிவும் ஐயம் : உடல் சுத்மாயிருந்து உடை சுத்தமில்லாமல் இருந்தால் தொழுவதுக் கூடுமா?    உவைஸுல்கர்னி, அல்கோபார் தெளிவு : தொழுகைக்கு உடல், உடை, இடம் ஆகியவை சுத்தமாயிருத்தல் வேண்டும். உமது ஆடைகளை  நீர் சுத்தப்படுத்திக் கொள்வீராக!”   (74:4) இந்த வசனத்தின் அடிப்படையில் ஆடைகள் பரிசுத்தமாயிருத்தல் அவசியம் என்பது தெளிவாகிறது. *ஒரு முறை ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் நான் எனது மனைவியுடன் கலந்துறவாடும் சமயத்தில் அணிந்துள்ள ஆடையில் தொழுவதுக் கூடுமா? என்று அவர் கேட்கும் போது (நான் அதைக்) கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு […]

தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பதும் இஸ்லாமியக்  கடமையல்லவா? தொடர்-4  H. அப்துல் சமது உபைதா பின் தாபித்(ரழி) அவர்களின் அறிக்கையின் படி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடமிருந்து பெற்ற உறுதிமொழியில் மற்றும் பல விஷயங்களோடு கீழே குறிப்பிடப்படுவது ஒரு முக்கிய அம்சமாக உட்ப்படுத்தப்பட்டிருந்தது என அறிகிறோம். …..நாங்கள் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்(வையும் அவனது மார்க்கம்) சம்பந்தப்பட்ட காரியங்களில் எங்களைக் குறை கூறுபவர்களின் வெறுப்பைச் சட்டை செய்யமாட்டோம்’ என்று எங்களிடம் உறுதிமொழி பெற்றார்கள்.   (முஸ்லிம், புகாரீ) பிரச்சார மேடை முதல் […]