1990 நவம்பர்

தாருந் நத்வா பாரீர்! இப்னு ஹத்தாது.  M.k முஹம்மது சுலைமான் பாகவி தனது மாத இதழ் மக்காச் சுடர் செப்படம்பர் இதழில்  ‘இமாம்களை தக்லீது செய்வது அவசியம்் என்ற தலைப்பில் தம் மனம் போனப் போக்கில் 4:115, 21:7 குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார், என்ன தான் எழுதினாலும் விளக்கங்கள் கொடுத்தாலும் மவ்லவிகள் சத்தியத்தை உணரத் தயராக இல்லை. காரணம் தங்கள் மவ்லவி வர்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பேராசை அவர்களை இப்படி எல்லாம் உளற வைக்கிறது. ‘தக்லீதின் […]

ஜமாஅத்துல் உலமா (சபை)  ஓர் ஆய்வு  அபூ பாத்திமா சென்ற இதழில் இன்றைய ‘மதரஸாக்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் மார்க்கத்திற்கு சொந்தம் கொண்டாடும் மவ்லவிகளின் உண்மை நிலைகளை விரிவாக பார்த்தோம். இந்த இதழில் அந்த மவ்லவிகளின் சபையாகிய ஜ.உ.ச பற்றி விரிவாக ஆராய்வோம். ஜ.உ.ச தோன்றிய காலம் : தமிழகத்திலுள்ள முகல்லிது மவ்லவிகளின் ஜ.உ.ச சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டதாகும். அதுவன்றி தவ்ஹீது மவ்லவிகளின் ஜ.உ.ச 1987-ல் அமைக்கப்பட்டதாகும். ஜ.உ.ச என்றால் அதன் மறுப்பெயர் […]

நபி வழியில் நம் தொழுகை தொடர் : 46 அபூஅப்திர் ரஹ்மான் என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) ஜும்ஆவுக்கு முன் பின் சுன்னத்தான தொழுகையின் விபரம்: ஜும்ஆ தொழுகைக்கு முன்னால், சுன்னத்து என்ற அடிப்படையில் தொழுவதற்கு எதுவுமில்லை. ஆனால் இமாம் மிம்பரில் ஏறிய பிறகு வருவோர் உள்பட அதற்கு முன்னால் வந்தவர் அனைவரும் “தஹிய்யத்துல் மஸ்ஜித்” என்னும் பள்ளியின் காணிக்கைத் தொழுகை 2 ரகாஅத்துக்கள் தொழுதுக் […]

நாஸ்திக நண்பர்களே!  நாசத்தை தவிர்ப்பீர்!!         தொடர் : 11     கே.எம். ஹெச், அபூ அப்தில்லஹ் செப்’89 இதழில், நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைக் கூறி இருந்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும், மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாரரும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள், ஆஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி […]

குர்ஆனின் நற்போதனைகள் தொடர் : 20 அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே:    A. முஹம்மது அலி வழிபடாதீர்கள்; பின்பற்றாதீர்கள்; 1. நம்பிக்கை (ஈமான்) கொண்டோரே; காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டால், அவர்கள் உங்களை உங்கள் குதிகால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (இறை நம்பிக்கையிலிருந்து ) திரும்பி விடுவீர்கள்  (3:149) 2. நீங்கள் வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிபடாதீர்கள் (26:151) 3. நம்பிக்கை (ஈமான் கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவினரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின் […]

ஹதீஸில் இடைச்செருகலானவையும்! பலகீனமானவையும்!! (48) ‘நீங்கள் உலமாக்களை (சன்மார்க்க அறிஞர்களைப்) பின்பற்றி நடவுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தாம் இவ்வுலகத்தின் தீபங்களாகவும் மறுமையின் விளக்காகவும் இருக்கின்றனர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (X) இதை அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக “தைலமி” அவர்கள் தமது “முஸ்னதுல் பிர்தவ்ஸ்” எனும் நூலில் இடம் பெற செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் காஸிமு பின் இப்றாஹிம்’ என்பவர் இடம் பெற்றுள்ளார், “இவர் சரியான பொய்யர்’ என்பதாக தாருகுத்னீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவே […]

ஐயமும், தெளிவும் ஐயம் : சில அவசியத்தை முன்னிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு திருமணம் செய்து கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறதா?                            அந்நஜாத் வாசகர், வாணாதிராஜபுரம். தெளிவு :   முறைப்படி மார்க்க அடிப்படையில் நிக்காஹ் செய்து விட்டு, அவசியத்தை முன்னிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவுத் திருமணம் செய்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஐயம்:     தப்லீக் தஃலீம் கிதாபுகளில் இது செய்தால் இத்தனை நன்மை, இது செய்தால் இத்தனை பாவம் என்பதாக பட்டியல் போட்டு காட்டப்பட்டுள்ளதே இவ்வாறு ஒன்றை எதிர்ப்பார்த்து அமல் […]

விமர்சனங்கள்!   விளக்கங்கள்!! *தவ்ஹீத்வாதிகளால் வெளியிடப்பட்ட “தர்கா முரசு” என்ற புத்தகத்தில் ஆலிம்களையும் அவ்லியாக்களையும் கேலிசித்திரங்களாக வரைந்தும், கிண்டலான வாசகங்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளதே! இதுதான் தவ்ஹீதை போதிக்கும் முறையா?    கே. சர்புதீன், பெருவளநல்லூர். இன்று ஆர்வமாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களில் பெரும்பான்மையினரைப் பிடித்துள்ள ஒரு மயக்கம் பற்றி வினா எழுப்பியுள்ளீர்கள். அந்த மயக்கத்தைப் போக்க  மிக நீண்டதொரு  தெளிவான விளக்கத்தைத் தர நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்று அந்தச் சகோதரர்கள், தங்களில் ஏற்ப்பட்டுள்ள மயக்கம் காரணமாக செய்யும் தவறுகள் குர்ஆன், ஹதீஸை முறையாகவும் […]