2018 டிசம்பர்

அந்நஜாத் டிசம்பர் 2018 ர.அவ்வல் -ர.ஆகிர் 1440 “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” சமீப காலமாக இஸ்லாத்திற்கு எதிரான பல பொய் பிரசாரங்கள், நாடெங்கும் பலரின் பேச்சுக்களிலிருந்தும், சில பத்திரிகைகளிலும், ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், சுலபமாக பரப்பப்பட்டு வருகின்றன. அவைகளில் ஒன்று: முஸ்லிம்களின் உணர்வைத் தூண்டிவிட்டு கலவரங்களை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக முஸ்லிம் பெண்கள் பிறமத ஆடவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக பல செய்திகள் சமூக […]

அல்லாஹ்வும் அவன் தூதரும்(ஸல்)… அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து “அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; (என்றும்) அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மேலும் நமக்கு அருள் புரியக்கூடும். நிச்சயமாக நாம் அல்லாஹ் வையே நம்பியிருக்கிறோம்” என்றும் அவர்கள் கூற வேண்டாமா? 9:59 பொறுப்புள்ள பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? ஏறத்தாழ ஐந்து வயதிலிருந்தே தங்களுடைய பிள்ளைகளைக் கண்டிப்புடன் கூடிய அன்பு காட்டி வளர்க்கத் துவங்குகிறார்கள். அதிகாலையிலேயே எழுப்பி விட்டு, காலைக் கடனை முடிக்கச் செய்து மதரஸா டியூசன் […]

நவம்பர் தொடர்ச்சி…… உலகில் பலம் மிக்க உயிரினங்களான சிங்கம், புலி போன்றவை ஆடு, மாடு, மான் போன்ற மிருகங்களை வேட்டையாடி தனது உணவுத் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றன. அத்துடன் அவை தாம் உணவாக உட்கொள்ளும் சந்தர்ப்பத்தில் மட்டுமே அந்த சாதுவான உயிரினங்களை கொல்கின்றன. அவை தமது தேவைக்கமை யவே மிருகங்களை உணவாக உபயோகிக்கின்றன. அவை வீண் விரயமாக அறிவில்லாத சில மனிதர்களைப் போல், தாம் உண்பதற்குப் பயன்படுத்தும் உயிரினங்களைக் கொல்வதில்லை. அத்துடன் சிங்கம், புலி போன்ற […]

  எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. அல்லாஹ்வுக்கு  ஒருமுகப்பட்ட அடிமைகளாக திகழுங்கள்.அவனோடு எதனையும் இணை  வைக்காதீர்கள். யாரேனும் அல்லாஹ்வுக்கு  இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி பறவைகள் அவரை இராஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்து விடும். அங்கு அவர் சின்னாபின்னமாகிவிடுவார். –அல் குர்ஆன்.22::31. இணைவைக்கும் செயலை செய்யும் ஒரு மனிதனின் நிலையை, ஒரு உதாரணம் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான். பிற படைப்பினங்களை கடவுளாக […]

அமல்களின் சிறப்புகள்… ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து,12 ­வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… பக்கம் 384, பத்தி2ல் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்திகள். “அல்லாஹ்வை […]

* நபி நூஹ்(அலை) அவர்களை இறை தூதராக ஏற்றுக்கொண்டவர்கள் சொற்பமானவர்களே! ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களின் ஒன்பதாவது தலைமுறையில் பிறந்த நபி நூஹ்(அலை) அவர்களுக்கு (தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 7, பக்கம் 17) நாற்பதாவது வயதில் நபித்துவம் கொடுக்கப்பட்டு (இப்னு அப்பாஸ்(ரழி) தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் பாகம் 7, பக்கம் 18,19) ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக 950 ஆண்டுகள் (என நீண்ட கால அளவுக்கு) அவர்களுடைய சமூகத்தா ருடனேயே தங்கியிருந்து (29:14, […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? நவம்பர் தொடர்ச்சி….. இந்த நமது விளக்கத்துக்கு மறுப்பாக : “உஸ்மான்(ரழி) அவர்களது பிரதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதன் அர்த்தத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரிசைக் கிரமம், உச்சரிக்கும் ஓசை ஆகியவை உஸ்மான்(ரழி) காலத்துப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது என்பதே அதன் பொருளாகும். இவ்வாறு அல்ஜன்னத் மே, 90, பக்கம் 34ல் எழுதி மேலும் 30 ஜுஸ்வுகள், ஜேர், ஜபர் குறியீடு இன்னும் எதனையயல்லாமோ எழுதி நம்மை நையாண்டி […]

ஆங்கிலேயர் நிர்ணயம் செய்த  (UTC) (ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்) இஸ்லாமிய அடிப்படையா? அன்புள்ள சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சந்திரனை கணக்கிட்டு காலண்டர் போட்டு அதன் அடிப்படையில் அமல்கள் செய்து வருகின்றோம். கணக்கீடு நவீன அறிவியல் உலகில் மனிதர்களால் முடிந்த வரை துல்லியமான முறையில் கணக்கிட முடியும். (அல்லாஹ்வின் துல்லியம் என்பது இறுதியானது) அதன்படி கணக்கிட்டு வருகிறோம். இதற்காக உலக நடைமுறையில் உள்ள தேதிக்கோடு IDL உலக நேரம்  UTC ஆகிய உலகம் நியமனம் செய்த அளவீடுகளை […]

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் தமது 63வது வயதில் ஹஜ் பயணம் செல்லும் வழியில், தன் தாயாரின் கப்ரைப் பார்த்து, “நான் தொழுகையில் இருக்கும்போது, நீங்கள் “”முஹம்மது, முஹம்மது” என்று அழைத்திருந்தால், தொழுகையை விட்டுவிட்டு பணிவிடை செய்ய வந்திருப்பேன் என்ற கருத்தில் கூறியதாக (முஸ்லிம்) ஏதேனும் ஹதீஃத் உள்ளதா? சுல்தான்ஜீ, ஆத்தூர். தெளிவு : இதுபோன்ற செய்தி சமூக வலை தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மார்க்கத்தில் எள்ளின் முனையளவு கூட ஆதாரம் இல்லை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) […]