2021 ஏப்ரல்

தலையங்கம்! தேர்தல் வருது!  தேர்தல் வருது!  ஓட்டுப்போடுங்க!! சட்டசபைக்கான தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தமது ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் உரிமையை பயன்படுத்தும் நாள் இது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியைத் தொடரச் செய்யலாமா? அல்லது தேர்தலில் களம் காணும் பிரதான எதிர்கட்சி திமுகவையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்சியையோ ஆட்சியில் அமர்த்தலாமா என்று மக்கள் முடிவெடுக்கும் நாள் இது! மாநிலத்தின் இதுபோன்ற ஒவ்வொரு தேர்தலும் அந்தந்த மாநிலத்தை ஆளும் அரசின் வலிமையைக் கொண்டு […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? அபூ அப்துல்லாஹ் தொடர் – 8 மறு பதிப்பு : இஸ்லாமிய நிறைவு பெற்று, உலகம் அழியும் வரை இஸ்லாம் மார்க்கமாக்கப்பட்டு, இறுதி நெறிநூல் அல்குர்ஆன் ஒரு புள்ளி கூட மாற்றப்பட முடியாத நிலையில் இறைவனால் பாதுகாக்கப்பட்டிருந்துநம், மார்க்கத்தை மதமாக்கி, அதைத் தொழிலாக்கிப் பிழைப்பு நடத்தும் புரோகிதர்கள், இஸ்லாத்திற்குள்ளும் சட்டவிரோதமாக கொல்லைப்புற இடுக்கு வழியாகப் புகுந்து கொண்டு, செய்து வரும் தில்லுமுல்லுகளையும், அட்டூழியங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அவர்களில், பிணத்தை மக்கள் நடமாடும் […]

நோன்பு ஆரம்பம், பெருநாள் தினம் பற்றிய அறிவிப்பு! அன்று தொழுகையின் நேரங்களை சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் கண்டே உரிய நேரங்களில் தொழுது வந்தனர் முஸ்லிம்கள். ஆனால் இன்றோ சூரிய ஓட்டத்தை எந்த முஸ்லிமும் கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இதுபோலவே அன்று தலைப்பிறையைக் கண்ணால் கண்டே நோன்பு நோற்க ஆரம்பித்தது போல், அடுத்த பிறையைக் கண்ணால் கண்டே நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடியது போல், இன்றும் தலைப்பிறையைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் அவசியம் மார்க்கத்தில் இல்லை. இன்று சூரியன், […]

இஸ்லாத்தின் இலட்சியம்!     ஒன்றுபட்ட சமுதாயம்!! நபிகால  இஸ்லாமிய ஒற்றுமை! முஹிப்புல்  இஸ்லாம் (தொடர் – 2) நாங்கள் யார்? நாங்கள் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள்தான் என்றாலும் நாங்கள் பல அமைப்புகளாய், பல்வேறு பெயர்களில் செயல்படுகிறோம். அதனால் எங்களை தாங்கள் கொள்கை சகோதரர்கள் என்றே அழைத்துக் கொள்கிறோம். சேவைகள் அடிப்படையில் செயல்பட வசதியாய் பல்வேறு குழுக்களாய் இயங்கி வருகிறோம். நன்மைதானே! நன்மைகள் தானே செய்துவருகிறோம். ஒன்று முடக்கப்பட்டாலும் மற்றொன்றின் மூலம் செயல்பாடுகள் தொடரலாமே…. ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டதொரு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் […]

தானதர்மங்களைக் குறித்த சில நினைவூட்டல்! M.A. ஹனிபா, பொட்டல்புதூர். தர்மங்கள் செய்வதை இஸ்லாம் அதிகமாக ஆர்வமூட்டியுள்ளது. அவற்றில் சில… ‘மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள். நன்மையும் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்.” (2:195) “நம்பிக்கையாளர்களில், தர்மங்களைத் தாராளத் தன்மையுடன் வழங்குவோரையும் தங்கள் உழைப்பைத் தவிர வேறு எதனையும்(தர்மம் செய்ய) பெற்றுக் கொள்ளாதோரையும் குறை கூறி, ஏளனம் செய்வோரை அல்லாஹ்வும் ஏளனம் செய்கின்றான். […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 68 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் :  அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி, உடன்குடி நிம்மதியாக இருக்கிறார்களா? சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராது என்று அல்லது அவர்களே உணராத வகையில் யுக முடிவு நாள் திடீரென வராது என்று அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? (அல்குர்ஆன் : 12:107) நீங்கள் ஒரு சோதனையைப் பற்றி அஞ்சுங்கள். அது உங்களில் யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை மட்டுமே தாக்காது. (மற்றவர்களையும் தாக்கும்) நிச்சயமாக அல்லலாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் ஆவான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். […]

முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக இருப்பவை எவை? எவை? H.S. ஜாஹிர் ஹுஸைன், சென்னை. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஈமானிய உணர்வின் மூலம் அவரவர்கள் தங்களால் முடிந்த அளவு என்று சொல்வதை விட அளவுக்கு அதிகமாகவே தங்களின் பங்களிப்பால் இஸ்லாத்திற்காக பெரும் தியாகங்கள் செய்திருக்கிறார்கள். உத்தம சஹாபாக்கள், அந்த தியாகங்கள் என்பது உயிராலும், உடலாலும், பொருளாலும், ஹிஜரத் செய்வதன் மூலமும், சொத்து சுகங்களை இழந்ததின் மூலமும், வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, பல தற்காப்புப் போர்கள் செய்து […]

சிந்திப்பவர்களுக்காக…. அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம். வானங்கள் மற்றும் பூமியில் அமைப்பையும், அல்லாஹ் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களது “தவணை” நெருங்கிவிடக்கூடும் என்பதையும் அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?  இதன்  பின்னும் அவர்கள் எந்த விஷயத்தைத்தான் நம்பப் போகிறார்கள்? (இறைநூல் 7:185) சில நூறு மைல்கள் பூமிக்கு மேலும் கீழும் பயணித்துவிட்டு, படைப்புகளின் பிரம்மாண்டங்களைப் பார்த்தபின்னும் படைத்தவனை மறுக்கும் மனிதர்களே! நீங்கள் இதுகாறும் அங்கே என்ன கண்டீர்கள் தெரியுமா? பலநூறு ஆண்டுகள் பறந்தாலும் முடிவடையாத பெருவெளி, அதில் காற்றில் பறக்கும் […]

திருமண அவலங்கள்… (பகுதி-1) முகமது ஹனீப்,  திருச்சி இந்த மனித இனம் வாழ்வதற்கு காற்று, தண்ணீர் எப்படி அவசியமோ அதைப்போன்று இந்த மனித இனம் பூமி முழுவதும் பல்கிப் பெருகி தன் இனத்தை அழியாமல் பெருக்கி வாரிசு வாரிசாக வாழ்ந்து வருவதற்கு திருமணம் என்ற ஆண் – பெண் ஒப்பந்தம் அவசியமாகிறது. மனித இனம் வாழ அவசியமான காற்றும், நீரும், பூமியை தவிர மற்ற கிரகங்களில் தேவையான அளவு இல்லை. பூமி மட்டும் தான் இந்த மனித இனம் வாழ […]

நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்… எஸ்.எம். அமீர்,  நிந்தாவூர், இலங்கை மார்ச் மாத தொடர்ச்சி…. நரகவாசிகளின் இரு காதுகளின் தூர அளவு : நரகத்தில் நரகவாசிகள் மிகவும் கோரத் தோற்றமுடையவர்களாகக் காட்சியளிப்பார்கள் அவர்களது காதின் சோனைக்கும் தோளுக்குமிடையே எழுபது ஆண்டுகால நடைப்பயண தூரம் அளவிற்கு இடைவெளி இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்(ரழி), முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 2:284) நரகவாசியின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம் : […]

விமர்சனம்! விளக்கம்!! விமர்சனம் : காட்சியை அடிப்படையாக கொண்டே நோன்பை ஆரம்பிக்கவும், முடித்து கொள்ளவும் ஹதீஃத் ஆதாரம் இருக்கும்போது கணக்கீட்டிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?  ஹாஸிப் முஹம்மது, சென்னை. விளக்கம் : நபி(ஸல்) காலத்தில் அனைத்தும் காட்சியை அடிப்படையாக கொண்டுதான் செய்யப்பட்டது. தொழுகை நேரங்கள் சூரியனின் காட்சியை அடிப்படையாக கொண்டு தொழப்பட்டன. (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலைநிறுத்துவீராக! இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக, ஃபஜ்ரு தொழுகை […]