தலையங்கம் : S I R – (SLAVE INDIAN RESIDENT) SIR என்பது பல்வேறு இடங்களில், பல்வேறு பொருளில் அழைக்கப்படுகிறது. அதாவது மரியாதை சொல்லாக SIR ஆசிரியர், அதிகாரி, பெரியவர் அல்லது மரியாதைக்குரிய நபரை அழைக்கும்போது பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல். ஆங்கிலேயர்கள் காலத்தில் SIR என்று ஆங்கிலேயர்களை அழைப்பதற்கு சில மறைமுகமான அர்த்தங்களும் இருந்தன. அதாவது ஆங்கிலேயர்கள் மேன்மையானவர்கள், மதிப்பிற்குரியவர் கள் என்றும் இந்தியர்கள் மதிப்பு குறைவானவர்கள் என்றும் நம்ப வைப்பதற்காக இந்த SIR வார்த்தையை […]
2025 டிசம்பர்
எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா? அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : நபி(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு : ஒரு காலம் வரும். இஸ்லாத்தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது. குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மை தவறியவர்களைக் கொண்டே நிரம்பியிருக்கும். அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே […]
இஸ்லாமிய வாழ்வியல் இஸ்லாத்தின் பார்வையில் சோதனை! முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு : வாழ்க்கை – ஓர் மனித கண்ணோட்டம் : வானங்களையும், பூமியையும் அவனே (அல்லாஹ்) ஆறு நாட்களில் படைத்தான். மேலும் அவனுடைய சிம்மாசனம் (அர்ஷ்) நீரின் மீதுள்ளது. உங்களுள் எவருடைய செயல்கள் மிக சிறந்தவை என அவன் உங்களைச் சோதிப்பதற்காக (இவற்றைப் படைத்தான்) ஹூது 11:7 மனிதர்கள் வாழப் பிறந்தவர்கள்! வாழ்க்கை வாழ்வதற்கே! வழக்கமாய் மனிதர்கள் அனைவரும் வாழ்க்கை குறித்து கொண்டிருக்கும் பொது கருத்து. எது […]
ஸஜ்தா இல்லையேல்…..! ஷைத்தானால் தொல்லையே!! ஷேக் அலாவுதீன் ஈமான்கொண்டவர்களே! நீங்கள் ருகூஃவு செய்யுங்கள். இன்னும் ஸஜ்தா செய்யுங்கள். இன்னும் உங்கள் ரப்பை வணங்குங்கள்; மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு நன்மையே செய்யுங்கள். அல்குர்ஆன் 22:77 என்று வல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஆனால், முஸ்லிம்கள் எனப் பெயர் மட்டும் வைத்துக் கொண்டு திரியும் பெரும்பாலானச் சகோதரர்கள் தொழுவதே இல்லை! சிலர் சில நாட்கள் தொழுவதும், பல நாட்கள் தொழாமல் இருப்பதும், கேட்டால் முக்கியமான வேலை […]
யூஸுஃப் என்னும் ஜோஸப்பின் அழகிய வரலாறு! S.H. அப்துர் ரஹ்மான் நவம்பர் மாத தொடர்ச்சி…. “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்” யூஸுஃப் : நபியுடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர். அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “”நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் திண்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் […]
வாழ்க்கை ஒரு போராட்டமா? அ. நஜ்முத்தீன் அல்லாஹ் உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் அமைதியையும், அருளையும் பொழியட்டும். அன்பிற்கினிய அந்நஜாத் வாசகர்களே! இக்கட்டுரையின் வாயிலாக பேசப்போகும் தலைப்பு : ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒலிக்கும் ஒரு கேள்வி : “வாழ்க்கை ஒரு போராட்டமா? அதாவது வாழ்க்கை என்பது, PRESSURE…? மன அழுத்தமா) PLEASER…? பிளெசரா? மன மகிழ்ச்சியா) இதை ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் போது இரண்டுக்கும் பெரிய வேறுபாடு தெரியும். வாழ்க்கையும் அதுபோலவே. அதாவது வெற்றி – தோல்வி இன்பம் […]
தாயின் காலடியில் சொர்க்கமா? அ. நஜ்முத்தீன் சமீப காலமாக எங்கு பார்த்தாலும் கீழ்கண்ட விளம்பரத்தைப் பார்க்கலாம். “தாய்மை ஒரு வரம்” “நாங்கள் இருக்கிறோம், கவலை வேண்டாம்”, இதுவொரு வியாபாரத் தந்திரமாகயிருந்தாலும் அதில் ஒரு உண்மையும் அடங்கியுள்ளது. தாய்மை என்பது சாதாரண உணர்வு அல்ல, அது மனித வாழ்க்கையில் மிக உயர்ந்த, மிக உன்னதமான அன்பின் வடிவம். கருவில் குழந்தை உருவான பொழுதிலிருந்து தாய் அனுபவிக்கும் வலி, தியாகம், பொறுமை இதற்கு ஒப்பானது இவ்வுலகில் எதுவே இல்லை. எனவேதான் […]
முதுமையில் நிம்மதி காணமுடியுமா? அ. நஜ்முத்தீன் பொதுவாக எது முதுமை? எது நிம்மதி? என்று தெரியாததால் இந்த கேள்வி எழுகிறது. மேலும் இப்போது (20Ks) இளமையிலேயே நிம்மதியை காணமுடியவில்லை. பின்பு முதுமையில் எங்கு காண்பது? என்று பேசப்படுகிறது, கேட்கப்படுகிறது. ஆம்! உண்மைதான். இளமையில் நிம்மதியை தொலைத்தவர்கள் தான் இன்று (20Ks) ஏராளமானோர். அதற்கு காரணம் நவீன (Fast Food) உணவு முறைகளும், அலோபதி மருந்து மாத்திரைகளும் ஆகும். முதுமை என்பது எது? சுமார் 40 வயதை கடந்துவிட்டால் […]
அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன், குண்டூர் 1. ஈமானின் அம்சங்கள் எத்தனை? அவை யாவை? 1. அல்லாஹ்வை நம்புவது, 2. மலக்குமார் களை நம்புவது, 3. இறைநூலை நம்புவது, 4. நபிமார்களை நம்புவது, 5. மறுமையை நம்புவது. அல்குர்ஆன் 2:177 2. வானங்கள், பூமியுடைய சாவிகள் யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? தன்னிடம்இருப்பதாககூறுகிறான். அல்குர்ஆன் 42:12 3. பெண்களை விவாகரத்தை எந்த காலத்தில் செய்ய அல்லாஹ் கூறுகிறான்? மாதவிடாய்இல்லாதகாலத்தில். அல்குர்ஆன் 65:1 4. அல்லாஹ் […]
சுவை எனும் நஞ்சு! அ. நஜ்முத்தீன் சமீப காலமாக உணவு வணிகமும் (RESTARENT) மற்றும் உணவகங்களில் சாப்பிடுவதும் பெருகிவிட்டது. முன்பெல்லாம் பெரும் நகரங்களில் வசிக்கக்கூடியவர்களிடம் மட்டுமே இருந்த இந்த பழக்கம் இப்போது கிராமங்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உணவு வணிகம் பெருகிவிட்டது. மேலும் உலகிலுள்ள அனைத்து வகையான பெரும்பாலான உணவுகளும் தமிழகத்தில் உணவகங்களில் கிடைக்கிறது. முன்பெல்லாம் (70s,80s,90s) காலத்தில் வாழ்ந்தவர்களால் சுவை இல்லாத, ஆரோக்கியத்திற்கு கேடான, மற்றும் சுகாதார முறைப்படி செய்யப்படாத உணவுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் […]
எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர் எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது. எனவே (நன்மையைத் தருவதும் தீமையைத் தடுப்பதும் அவன்தான் என்று) ஒருவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை கொள்கிறார் எனில்; அவருடைய உள்ளத்தில் நேர்வழி (பற்றிய சிந்தனை)யை அல்லாஹ் உதிக்கச் செய்கிறான். (இதனால் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப் பட்டதைப் பொருந்திக் கொண்டு பொறுமையுடனிருக்க) அவன் வழிகாட்டுகின்றான். (64:11) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். எந்த […]
எங்கே இருக்கிறது சகோதரத்துவம்? M. சையத் முபாரக், நாகை நபித்தோழர்களும் நாமும் : முன்பு ஒரு காலம்: நீ யாரோ? நான் யாரோ என சிறு சிறு குழுவாகப் பிரிந்திருந்த, சின்னஞ்சிறு பிரச்சனையைக் கூட பூதாகரமாக்கி சண்டையிட்டு பகைமை பாராட்டிய மக்களை இஸ்லாம் ஓரணியில் திரட்டி சகோதரர்களாக மாற்றி ஒற்றுமையை மிளிரச் செய்தது. ஆனால், இப்போது உறவு முறையில் சகோதரர்கள் கூட சிறு சிறு பிரச்சனை காரணமாக சகோதரத்துவத்தையே குழி தோண்டிப் புதைக்கின்றனர். தமது குழந்தைகளுக்கு மட்டுமே […]
அழியாத உடலும்! அழியாத ஞானமும்! குர்ஆன் 50:4 மற்றும் கார்பன்-14 (Carbon Decay) கதிரியக்கக் குறைவு! எஸ். ஹலரத் அலி, திருச்சி. 1991ஆம் ஆண்டு, ஆஸ்திரியா, இத்தாலி எல்லையில் உள்ள ஆல்ப்ஸ் பனி மலையின் 10,000 அடி உயரத்தில் உள்ள “ஓட்ஸி பள்ளத்தாக்கில்” ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டது. அது ஓட்சி “பனி மனிதன்” என்று பெயரிடப்பட்டது. உடல் மக்கவில்லை, உக்கவில்லை, அரிக்கப்பட வில்லை. ஆனாலும் இறந்த மனிதனின் தோல், தசை, உறுப்புகள், உடை, கருவிகள் எல்லாம் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : நபி(ஸல்) அவர்கள் ஹயாத்துந் நபியா? நமது சலாம் சலவாத்துகளை அவர்கள் அறிகிறார்களா? தெளிவு : நபி(ஸல்) அவர்கள் ஹயாத்துந் நபி என்றதொரு தவறான குருட்டு நம்பிக்கையை ஒரு சிலர் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக உண்டாக்கி வைத்துள்ளனர். அல்குர்ஆன் 3:144, 39:30 ஆகிய வசனங்கள் தெளிவாக மரணித்துவிட்டார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன. நபி(ஸல்) அவர்கள் மரணித்தவுடன் நபித்தோழர்களில் சிலருக்கு நபி(ஸல்) அவர்கள் மரணிப்பவர்கள் அல்லர் என்ற சந்தேகம் இருந்தது. அப்போது அபூபக்கர் சித்தீக்(ரழி) […]