ஏக இறைத்தன்மையும்! ஏக இறைவணக்கமும்! S.H. அப்துர் ரஹ்மான் ஏக  இறைத்தன்மை! அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவனின் திருப்பெயரால்  துவங்குகிறேன். தூதரே! நீர் சொல்லுங்கள், அந்த இறைவன் ஒருவன் மட்டுமே. அந்த ஒரே இறைவன் எந்த தேவையும் இல்லாதவன். அந்த இறைவன் (எவரையும்) பெறவு மில்லை; எவராலும் பெறப்படவுமில்லை.  அவனுக்கு பெற்றவர்களோ, குழந்தைகளோ இல்லை; அன்றியும், அந்த  ஒரே இறைவ னுக்கு  நிகராக  எவரும்  இல்லை.  (112:1-4) ஏக இறைவனை மட்டும் வணங்குவது எப்படி […]

அல்லாஹ்வின் அருளும் கிருபையுமாகிய அல்குர்ஆன்! N. அலி, கல்லிடைக்குறிச்சி ஏக  இறைத்தன்மை! முஸ்லிம்களாக வாழக்கூடிய நாம் அல் லாஹ்வின் அருளையும், கிருபையும் மன தார விரும்புகிறோம். அதேசமயம் அதை பெறுவதற்கு நம்முடைய செயல்பாடுகளில் முறையான முயற்சி இல்லை நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் அல்லாஹ்வின் அருளையும், கிருபையையும் மிக தூரமாக வைத்து அழகு பார்க்கின்றோம். அல்லாஹ் வின் அருளும், கிருபையும் முஸ்லிம்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆம்! முஸ்லிம் களின் வீடுகளில் பாதுகாப்பு பெட்டகங் களில் பொக்கி­மாக பூட்டி வைக்கப்பட்டி […]

அன்று அல்லாஹ்வுடைய பள்ளி!  இன்று சுன்னத்வல் ஜமாஅத் பள்ளி! அபூ உவைஸ் ஹஜ்ரத்மார்களை கண்மூடி பின்பற்றி அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கும் எனது அருமை சமுதாயத்தவர் களே! என்று உண்மையை உணரப் போகிறீர் கள்? அன்று அல்லாஹ்வின் இல்லமாம் பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது. ஒருமித்த குரலில் இறை இல்லம் தகர்க்கப் படுகிறது என நாம் அனைவரும் ஆர்ப்பரித் தோம். இன்னுயிர் பல ஈந்தோம். எனினும் ஒரே இறைவனை மட்டும் வணங்கக் கட்டப்பட்ட வல்ல அல்லாஹ்வின் பள்ளி வாசல் […]

மார்க்கம் மிக மிக எளிதானது!  நூருல் அமீன் இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங் களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்த வில்லை.  (அல்குர்ஆன் 22:78) அல்லாஹ் இவ்வசனத்தில் இஸ்லாத் தில் எந்தவித சிரமத்தினையும் ஏற்படுத்த வில்லை என்று கூறுகின்றான். மனித சமுதா யம் மிகவும் சுலபமாக பின்பற்றக் கூடிய ஒரு அழகிய வாழ்க்கை நெறியினை தான் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இஸ் லாத்தில் மிக முக்கியமான கட்டாய கடமை யான தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, ஜகாத் போன்றவற்றை […]

பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் : இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்ச யமாக அல்லாஹ் பொறுமையுடையவர் களுடன் இருக்கின்றான். 2:153,45 இந்த வசனங்களின் மூலம் சோதனைகளைத் தாங்கிக் கொள்வதற்கு ஏற்ற வழி! பொறு மையும், தொழுகையும் ஆகும் என்பதை அல்லாஹ் இங்கு விவரிக்கின்றான். அதனால்தான், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனையால் துக்கம், துயரம், ஏற்படுமானால் உடனே தொழுகைக்கு விரைந்து செல்வார்கள். (ஹுதைஃபா பின் […]

தலையங்கம் : இயக்க போதையில் இஸ்லாமிய இளைஞர்கள்! இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் ஏதாவது ஒரு இயக்க போதையில் வீழ்ந்து விடாமல் அவர்களை சத்திய இஸ்லாத்தில் நிலைபெறச் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். தற்போது உள்ள கால சூழலில் குழப்பமான இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல இயக்கங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு அழகிய வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டு மக்களை அழைக்கிறார்கள்.  ஆனால் அப்படி அவர்களைப் பின்பற்றி செல்லும்பொழுது தனது இயக்கத்தின் அடிமைகளாக அந்த இளைஞர்களை மாற்றுகிறார்கள். […]

முஸ்லிம்களே ஒன்றுபட்டு! ஒரே அமீரின் கீழ் செயல்படுவோம் வாருங்கள்! அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 1444 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் அமைத்து, நடத்திக்காட்டி, நமக்காக விட்டுச் சென்ற “ஜமாஅத்துல் முஸ்லிமீன்‘ சமூக அமைப்பில் முஸ்லிம்கள் தங்களுக் கிடையேயுள்ள வேற்றுமைகளை மறந்து இணைந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதுபற்றிய தெளிவுகளை 1991 வருடங்களில் அந்நஜாத்தில் வெளியிட்டிருந்தோம். மறந்துவிட்ட சகோதர சகோதரிகள் மீண்டும் உணர்வு பெற அக்கட்டுரையை மீண்டும் இந்த இதழில் இடம் […]

இஸ்லாமிய மற்றும் கிறித்துவ ஒற்றுமை ஓங்கட்டும்! அஹமது இப்ராஹிம் நமது தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நல்ல நண்பர்களாக இருந்த, இருக்க வேண்டிய கிறித்துவ சகோதரர்களை தங்கள் இயக்கத்தை வலுப்பெற வைக்க இயக்க வெறிபிடித்த புரோகிதர்கள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தூண்டு வதற்காக வேண்டுமென்றே விவாதம் என்ற பெயரில் மார்க்கத்திற்கு விரோதமாக கிறித்தவர்களை வம்புக்கிழுத்து விவாதித்து முஸ்லிம்களுக்கு விரோதியாக்கியது போதாதா? ஏற்கனவே பயங்கரவாத பா.ஜ.க. ஆட்சியில் கிறித்துவர்களும், முஸ்லிம்களும் சொல்லொண்ணா துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். இதில் இரு […]

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு! K.M.H. .அபூ அப்தில்லாஹ் இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் பெரும் பகுதியினர் “தக்லீத்‘ என்ற பெயரில் மரியாதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு, குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணானவற் றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழிதவறிச் செல்வதால், “தக்லீத்‘ தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம். குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரண்பட் டிருப்பவை மார்க்கமாகி விட்டதற்கான முக்கிய காரணங்களை நாம் கவனிப்போம். பரீட்சையில் “காப்பி‘ அடிப்பதே “தக்லீத்‘! அவர்கள் சொல்லைக் கேட்டு, அவற்றில் அழகானதைப் பின்பற்றுவார்கள்; அல்லாஹ் […]

சாலை மறியல்: ஓர் பெரும் பாவம் மற்றும் அல்லாஹ்வின் சாபம்! அஹமது  இப்ராஹிம் கும்பலாகக் கூடி சாலையில் அமர்ந்து மனி தர்களுக்கும், வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு செய்வதை எல்லாம் வல்ல அல் லாஹ் தடை செய்கின்றான். ஆதாரம்: அல்குர் ஆன் 29வது அத்தியாயம் 29வது வசனம், 7வது அத்தியாயம் 86வது வசனம் மற்றும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அழகிய நற்போதனைகள் அடங்கிய நபிமொழிகளின் தொகுப்பு நூலான புகாரீ என்ற நூலில் 2465வது நபிமொழியாக இடம்பெற்றுள்ள […]

மனிதகுலத்தின் ஒளிவிளக்கு திருகுர்ஆன்! எம்.பி. ரபீக்  அஹ்மத் உலகில்  மனிதர்களிடம் பிரபலமாக இருக்கும் மதங்கள் நான்கு, மார்க்கம் ஒன்று. 1. கிறிஸ்துவ மதம், 2. யூத மதம், 3.இந்து மதம், 4.புத்த மதம், 5. இஸ்லாமிய மார்க்கம். இன்னும் சில சிறிய மதங்கள் இருக் கின்றன. அவைகள் உலகில் பிரபலமான மதங்களாகவோ அதிக மக்கள் பின்பற்றக் கூடிய மதங்களாகவோ இல்லை. மேலே சொல்லப்பட்ட நான்கு மதங்களில் புத்தமதம் தன்னை ஒரு மதமாக சொல்லிக் கொள்ள வில்லை. அந்த […]

இமாம்களின் நிலையில் மாற்றம் வருமா? அன்சர் சரீப் பின் R.A. மாலிக் (ஆகவே மூஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்க மாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்ப தில்லை   (அல்குர்ஆன் 7:55) மேற்கூறிய வசனத்தில் இறைவனிடம் பிரார்த்தனையை பணிவாகவும், அந்தரங்க மாகவும் (அதாவது நம் உள்ளமும் அல்லாஹ்வும் மட்டும் அறிவது போல்) தான் செய்ய வேண் டும் என்று அல்லாஹ் மிக தெள்ளத் தெளிவாக கூறிவிட்டான். இதில் நாம் வரம்பை மீறக் […]

அழைப்புப் பணி செய்வதென்பது அல்லாஹ்வின் சிபத்தாகும்! அபூ இஸ்ஸத், இலங்கை பரிசுத்த குர்ஆனில்  சுமார் ஆயிரம் வசனங்கள், நன்மையை ஏவுவது தொடர்பாகவும், சுமார் ஆயிரம் வசனங் களை தீமையைத் தடுப்பது தொடர் பாகவும், வந்துள்ள நன்மையைக் கொண்டு ஏவி, தீமையை விட்டும் தடுத்து, நரகத்தைப் பற்றி எச்சரித்து, சொர்க்கத்தின் பக்கமாக வாருங்கள் என்று அழைப்புக் கொடுக்கும் சிபத்து அல்லாஹ்வைச்  சார்ந்ததாகும். ஆக, அல்லாஹ்வும் “தாயீ‘ ஆக பெரும் அழைப்பாளனாக இருக்கின்றான் எனவே அழைப்புப் பணி செய்வதென் பது  […]

முஸ்லிம்கள் யாரை பின்பற்றவேண்டும்? இந்துக்கள் தங்களது சமய சாமியார் களையும் கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார் களையும் பின்பற்றுவதைப் போன்று முஸ்லிம்களும் சம்பளத்திற்காக மார்க்கப் பணியாற்றும் மவ்லவிமார்களைத்தான் பின் பற்ற வேண்டுமா என்பது பற்றி திருகுர்ஆன் என்ன உத்திரவிடுகிறது என்பது பற்றி ஆய்வு செய்யும் பதிவு இது: அல்குர்ஆன் 36:21 வசனம் தங்களைப் போன்ற அப்பாவிகளுக்காகவே எல்லாம் வல்ல அல்லாஹ்வால் இறக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகம் ஊட்டுகின்றோம். உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்: இன் னும் […]

எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி, பின்னர் அதில் உறுதியாக இருந்தோரின் சிறப்புகள் எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. (எனினும்) நிச்சயமாக  எங்கள் இரட் சகன் அல்லாஹ்தான் என்று கூறி, பின்னர், (அதன்மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார் களே அத்தகையோர் அவர்களின் மீது மலக்கு(கள் எனும் வானவர்)கள் (மரண வேளையில்) இறங்கி (அவர்கள் செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் அஞ்சாதீர்கள், பயப்படாதீர்கள், (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் பற்றி) கவலையும்படாதீர்கள். நீங்கள் […]

ரமழான் இரவுத் தொழுகை! K.M.H.  அபூ அப்தில்லாஹ் மவ்லவிகளால் “தராவீஹ்‘ என்று அறி முகப்படுத்தப்படும் ரமழான் இரவுத் தொழுகை, நபி(ஸல்) அவர்களால் தொழுது காட்டப்பட்டதும், உமர்(ரழி) அவர்கள் பிந்திய இரவில் தொழுததும், முந்திய இர வில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாகத் தொழக் கட்டளையிட்டதும் 8+3=11 ரகாஅத்துகள் மட்டுமே என்பதற்கு மறுக்க முடியாத ஆதா ரங்களை அந்நஜாத், 1986லிருந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது. அதை மறுத்து இந்த மவ்லவிகள் இதுவரை ஆதாரப்பூர்வமான எந்த ஹதீதையும் தர வில்லை. அதற்கு […]

சந்திர காலண்டர்! அஹமது இப்ராஹீம் 1400 ஆண்டுகளுக்கு முன் ஃபஜ்ர் தொழுகை நேரம் அறிய கிழக்கு வெளுக் கின்றதா என வானத்தை நபி(ஸல்) அவர்கள் பார்த்து அறிந்து தொழுதார்கள். கிழக்கு வெளுக்கு முன் ஸஹர் சாப்பிட்டார்கள்! வானத்தில் சூரியன் மறையும்போது நோன்பு  திறந்தார்கள். பள்ளிவாசல் முற்றத்தில் ஒரு குச்சு ஒன்று நட்டி அதன் நிழல் சாய்வதைப் பார்த்து ளுஹர் அஸர்  தொழுதார்கள். அருமைத்  தம்பி  அவர்களே! இப்படிப்பட்ட நபிவழியை விட்டு விட்டு கடிகாரத்தைப் பார்த்து தொழுவதும் நோன் […]

தலையங்கம் : இஸ்லாமிய பிரிவினை இயக்கங்களினால் சமுதாயத்திற்கு வரப்போகும் பேராபத்து! இந்தியாவிலுள்ள இந்து மதத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான ஜாதிப் பிரிவுகளை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நன்றாக திட்டமிட்டு இன்றுவரை இந்துத்வா சங்பரிவாரக் காவித் தலைவர் கள் தங்களது அயராத உழைப்பால் இந்து என்றும் RSS என்றும் BJP என்றும் ஒரே கூடாரத்திற்குள் கொண்டுவந்து மத்தியில் ஒரு பெரும் மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்து மறுபடியும் இந்துத்வா ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இதே பாணியினை மேலும் கடைபிடித்தால் வருங்காலங்களில் தொடர்ந்து […]

வெற்றி வேண்டுமா?  ஒரே ஒரு நிபந்தனை! அப்துந் நாஸர் அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன். முஸ்லிம்களுக்கு எங்கு பார்த்தாலும் அடிதான். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி கிடைப்பது போல் முஸ்லிம்களுக்கு எங்கு சென்றாலும் அடிதான். பிற சமூகத்தவரிடம் முஸ்லிம்களைப் பற்றியுள்ள பயம் இல்லாமல் போய்விட்டது. எந்த பிரச்சினைகள் நடந்தாலும் பாதிப்பு முஸ்லிம்களின் சொத்துக்கும், உயிருக்கும்தான். ஒவ்வொரு பிற சமூகத்தினரும் தம்மால் இயன்றளவு முஸ்லிம்களுக்கு […]

பெருநாள்  ஜகாத்  ஃபித்ரா! நோன்புப் பெருநாளன்று வழங்கப் பட வேண்டிய தர்மத்தை ஃபித்ரு என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா என்றும் கூறுவர்) இது கட்டாயமாக செய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்‘ என்ற பதத்தையே  பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு : “எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே அந்த தர்மத்தை கொடுத்து விடுகின்றாரோ, அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க ஜகாத் ஆகும். எவர் தொழு கைக்கு […]