புரோகிதரிசம்! அபூ அப்தில்லாஹ் கம்யூனிசம், கேப்பிட்டலிசம், செக்யூரலிசம் போன்ற சொற்றொடர்களை அடிக்கடி நாம் கேட்டு வருகிறோம். ஆனால் “புரோகிதரிசம்’ என்று புதிதாக ஒன்றைக் கூறுகிறீர்களே? என்று சில சகோதரர்களின் உள்ளங்களில் ஐயம் எழலாம். ஆம்! உண்மைதான். இப்போது “புரோகிதரிசம்’ பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண் டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எப்படி கம்யூனிசம் பொதுவுடைமைக் கொள்கை, கேப்பிட்டலிசம் முதலாளித்துவக் கொள்கை, செக்யூரலிசம், சமய சார்பிலாக் கொள்கை என ஒவ்வொன்றும் தனித் தனிக் கொள்கை கோட்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கின்றனவோ […]

ஹிஜ்ரிக் கமீட்டி காலண்டரில் உள்ள குறைபாடுகள்… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “ஹிஜ்ரிக் கமிட்டியினரின் வெளியீடாகிய’ ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும் எனும் நூலில், பாகம் நான்கில், “இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள் எனும் உபதலைப்பில்; கிரிகோரியன் காலண்டரைக் குறித்து எழுதுகையில்; “இன்று நஸராக்கள் அவர்களுடைய கிப்லாவாக லண்டன் கிரீன்விச் பகுதியை வைத்திருப்பதால் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரியன் உச்சத்தில் இருக்கும்போது அந்த லண்டன் கிரீன்விச் பகுதியானது […]

கொள்கையும், பிரிவு பெயர்களுமே… முஸ்லிம்கள் பிரிவதற்கு காரணம்! அபூ ஹனிபா குர்ஆன், ஹதீத் மட்டுமே இஸ்லாம்! இன்றைக்கு முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்து செயல்படுவதற்கு காரணம் ஆளாளுக்கு ஒரு கொள்கையை உருவாக்கிக் கொண்டு அதற்கு ஒரு பெயரையும் வைத்துக் கொண்டு செயல்படுவதுதான். குர்ஆன், ஹதீத்களில் தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை கொள்கையாக உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். இப்படி செயல்பட இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி […]

மதரஸாக்களின் கல்விமுறையை மாற்றுவோம்!  அனைவரையும் ஆலிமாக்குவோம்! ஒவ்வொரு முஸ்லிமும் மார்க்க பணி செய்ய முன்வராமல் தான் உண்டு, தன் தொழில் உண்டு என்று ஒதுங்கியதின் விளைவு தான் இன்றைக்கு மார்க்க பணிக்காக ஒரு கூட்டம் பள்ளிவாசலை நாடியிருக்கிறது ஆலிம்கள் என்ற பெயரால்… வீட்டுக்கு ஒருவராவது வாருங்கள் என்று கெஞ்சி அழைக்கக்கூடிய நிலைக்கு இன்றைக்கு இந்த மதரஸாக்களின் நிலை தள்ளப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் யார்? மக்களும், மதரஸா கல்வி முறையும் தான்… இன்றைக்கு மதரஸாக்களில் மார்க்க கல்வியோடு […]

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒற்றுமை… அஹ்மத் இப்ராஹீம்,  புளியங்குடி. இஸ்லாமிய சமுதாய ஒற்றுமை பற்றி பேசாத எந்த இயக்கமும் இல்லை. இதை வலியுறுத்திப் பேசாத எந்த ஜும்ஆ மேடையுமில்லை. ஆனால் உண்மையான ஒற்றுமை எது? எது சாத்தியம் என்பது பற்றி மட்டும் சமுதாயத் தலைவர்களும் முஸ்லிம் மதத் தலைவர்களான மத்ஹபு மற்றும் தவ்ஹீத் முல்லாக்களும் மிகச் சரியாக மறைத்து விடுவார்கள். காரணம் தங்களுடைய தொப்பையை நிரப்பும் வழி அடைக்கப்பட்டு விடும் என்ற அச்சமே. ஒற்றுமைக்கு வழி கூறும் தலைவர்கள் […]

பேய், பிசாசு, ஏலியன் =  ஜின்கள் எஸ். ஹலரத் அலி,   ஜித்தா அல்குர்ஆன் வழியில் அறிவியல்… ஆதி காலத்திலிருந்து இன்றைய அறிவி யல் காலம் வரை மனிதர்கள் பயப்படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான் அதுதான் பேய், பிசாசு. உண்மையில் பேய், பிசாசு உலகில் உள்ளனவா? என்று கேட்டால், “உளன் எனில் உளன், அலன் எனில் அலன்’, “உண்டு என்றால் அது உண்டு… இல்லை என்றால் அது இல்லை…’ என்று கடவுள் நிலைதான் பேய்க்கும் என்றே கூறுவார்கள். இஸ்லாத்தை பொறுத்தவரையில் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் மனிதன் எதில் சூழ்ச்சி செய்கிறான் என அல்லாஹ் கூறுகிறான்? அல்குர்ஆனின் வசனங்களில்.    அல்குர்ஆன் 10:21. அல்லாஹ் யாருக்கு உரிமையை வழங்க கூறுகிறான்? உறவினர், வறியோர், வழிப்போக்கர்.    அல்குர்ஆன் 17:26 அநாதைகளின் சொத்தை எதுவரை நெருங்க வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்? பருவமடையும் வரை நல்லவிதமாகவே அன்றி நெருங்காதீர்கள்.    அல்குர்ஆன் 17:34 வானத்தில் கோள்களை எதற்காக அமைத்தேன் என அல்லாஹ் கூறுகிறான்? பார்ப்போருக்கு அலங்காரமாக தெரிவதற்கு.    அல்குர்ஆன் 15:16 லஃனத் என்றால் என்ன […]

 மூடப்பழக்கங்களும் முஸ்லிம் பெண்களும்! ரா´தா பின்த் ஹமீது இறை மார்க்கமாக இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், மூடப்பழக்க வழக்கங்களும் ஒருபுறம் பரவிக்கொண்டுதான் வருகிறது. என்னதான் குர்ஆன், ஹதீத் புற்று ஈசல் போல் மதரஸாக்கள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் மூலமாகவும், மீடியாக்கள், பத்திரிக்கைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படியாக ஏகத்துவவாதிகள் தங்களின் சேவைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் மூட நம்பிக்கை பற்றி சரியான தெளிவு நமது இஸ்லாமிய சமூகத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் இல்லாத காரணத்தால், தமிழகத்தின் சில பகுதிகளில் காணப்படும் […]

ஐயமும்! தெளிவும்! ஐயம் : தீமையைத் தடுக்க வேண்டும் என்ற நபிமொழிக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்துவதை தவறு என்று கூறமுடியுமா? தெளிவு : அருமையான கேள்வி! இது போன்ற கேள்விகள் கேட்கும் இளைஞர் களை வாழ்த்தி வரவேற்கின்றேன்! நீங்கள் குறிப்பிட்ட நபிமொழி முஸ்லிம் என்ற நூலில் 79வது நபிமொழியாக இடம் பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை இரு பிரிவாகப் பிரிக்கலாம்! மக்கா வாழ்க்கை 13 வருடம்! மதீனா வாழ்க்கை 10 வருடம்! மக்கா வாழ்க்கை நபித் தோழர்களுக்கு ஒரு கொடுமையான வாழ்க்கை! […]

மெளலூது ஓதுவது சரியா? ஸ்.எம்.ரா´தா பின்த் ஹமீது நம்முடைய சமுதாயத்தில் யாருக்கும் அரபி மாதங்கள் தெரிகின்றதோ இல்லையோ. ஆனால் கண்டிப்பாக இந்த மாதங்கள் தெரிகிறது. அதாவது முஹியித்தீன் ஆண்டவர் மாதம், நாகூர் ஆண்டவர் மாதம், மெளலிது மாதம் இப்படி வகைவகையாக தங்களுக்குத் தாங்களே இவ்வாறு பிரித்துக்கொண்டு இஸ்லாத்தில் இல்லாத காரியத்தை செய்து வருகின்றனர். பொதுவாகவே ஒரு காரியம் ஒரு வணக்கமாக கருதப்பட வேண்டுமானால் அந்த காரியம் அல்லாஹ்வாலோ அல்லது நபி(ஸல்) அவர்களாலோ கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும்; அல்லது நபியின் […]

அழைப்புப் பணியின் அவசர அவசியம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. அல்லாஹ் நபிமார்களிடம் நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் வழங்கி (அதன்) பின்னர் உங்களிடம் உள்ள (வேதத்)தை உண்மையாக்கும் (இன்னு மொரு இறைத்) தூதர் ஒருவர் உங்களிடம் வந்தால், அவரின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவருக்கு உதவி புரிய வேண்டும் என்று உறுதிமொழி பெற்றதை எண்ணிப் பாருங்கள். (அப்போது) இதன் பேரில் நீங்கள் எனது ஒப்பந்தத்தை ஏற்று உறுதிமொழிகின்றீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர்கள் (அனைவருமே) […]

ஓதுவோம் வழிகாட்டும் இறைநூலை! நாமறிந்த மொழிகளில்! அமீத் அலி, சேலம். எதை எதையோ வேதமென (நெறி நூலான) சுமந்து திரியும் மானுட உறவுகள் மத்தியில் சத்திய நெறிநூல் அல்குர்ஆன் பொக்கி­மாய் உன்னிடம் இருந்தும், ஓதத் தெரியாதே, நேரமில்லையே என தன்னையே ஏமாற்றிக் கொண்டு, அடுத்த நொடி அல்லாஹ் நாடிவிட்டால், உன் மரணம் கரணம் தப்பாத விதியாகி விடும் என்பதையும் எண்ணி அஞ்சாமல் தைரியமாய், மார்க்கத்தில் சில அறிந்ததே போதுமே! நான் முஸ்லிம் என மார்தட்டி வீதிகளில் திரியும் […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை நவம்பர் மாத தொடர்ச்சி… எனவே அவர்கள் எத்தகையோர் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும், அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் “பொறுமையுடன்’ சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள். அல்குர்ஆன் 22:35 எனவே, “பொறுமையுள்ள’ ஆண்களு(க்கு)ம், (“பொறுமையுள்ள’) பெண்களு(க்கு)ம் அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக் கின்றான். அல்குர்ஆன் 33:35 பின்னர் […]

வேதமில்லாத சமுதாயம்! M.A.ஹனிஃபா, பொட்டல்புதூர் இறைவனின் இறுதி இறை நெறி நூலாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும் திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித் தரமாகக் கூறுகின்றான். இந்தக் அல்குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லா தவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன் 4:82) இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது. (குர்ஆன்:41:42) ஆனாலும், திருக்குர்ஆனின் […]

மிகக் கடுமையான எச்சரிக்கை! K.M.H. அபூ அப்தில்லாஹ் ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களுக்கும், ஷைத்தானாகிய இப்லீஸுக்கும் ஏற்பட்ட மோதலில் ஷைத்தான் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான்; நரகத்திற்குரியவனா வான். அதனால் அவன் ஆதத்தின் மீதும், ஆதத்தின் சந்ததிகள் மீதும் வற்றாத வன்நெஞ்சம் கொண்டான். ஆதத்தையும், ஆதத்தின் சந்த திகளையும் வழிகெடுத்து தன்னோடு நரகில் கொண்டு சேர்க்க சபதம் ஏற்று அல்லாஹ் விடம் உலகம் அழியும் வரை அவகாசம் கேட்டான். (பார்க்க 7:11-25) அல்லாஹ்வும் அவன் கேட்ட இறுதி நாள் வரை சாகா வரத்தை […]

 என்று தெளியுமோ? மார்க்க அறிஞர்களின் மதிமயக்கம்? இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதிகாரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலையீட்டிற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை. 39:3,5:3,3:19,3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 41:33, 18:102-106. இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள் இதை உண்மைப்படுத்தும். ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை மனித அறிவு ஏற்றுக் கொண்டாலும் அதைக்கொண்டு அல்லாஹ்வின் ஒரேயயாரு […]

பாவமும் மன்னிப்புத் தேடுதலு(தவ்பாவு)ம் எம். சையத் முபாரக் நமக்கு வேதனைகளும், துன்பங்களும், கஷ்டங்களும் வருவதற்குக் காரணம் நாம் அல்லாஹ்(ஜல்)வுடைய கட்டளைப்படியும், நபி(ஸல்) அவர்களுடைய வழிமுறைப்படியும் நடக்காது; அதற்கு மாறாக (குர்ஆன், ஹதீத் வழிமுறைகளுக்கு மாறுபட்டு) நடக்கும் காரணத்தினால்தான் என்பதைக் கீழ்க்காணும் வசனங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து விடுவீர்கள். மேலும், உங்கள் வலிமை குன்றி விடும். (அல்குர்ஆன் 8:46) […]

புகை பிடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறதா? ஜி. ஜலாலுதீன் புகை பிடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறதா? புகை பிடிப்பது வெறுப்பிற்கு உரியது என்று ஒப்புக்கொண்டாலும், அதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்று முஸ்லிம்கள் பலர் கருதுகின்றனர். ஆனால், எல்லா வற்றுக்கும் இறைவனாகிய அல்லாஹ், மனிதனுக்கு அளித்த இறுதி வழிகாட்டுதலாகிய குர்ஆன் கூறும் கட்டளைகளின் அடிப்படையில் பார்க்கும்போது புகை பிடிப்பது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று இஸ்லாம் கட்டளையிடுவது தெளிவாக விளங்கும். புகையிலை எனும் விஷம் : புகையிலையில் […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம்,  இலங்கை ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா பின்த் முஸாஹிம்(ரழி) அவர்களுடைய இரண்டு கைகளையும், கால்களையும் கயிற்றால் இறுகக் கட்டி அவனின் முன்னிலையிலேயே முளைகளில் பிணைக்கப்பட்டு வெயிலில் கிடத்தப்பட்டுக் கொடுமையான வேதனைக்கு உள்ளாக்கப்படுபவராக இருந்தார். அப்போதும் அவர் “பொறுமையாகவே’ இருந்தார். இவ்வாறாகக் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவனது கண் முன்னாலேயே அவருடைய உயிர் கைப்பற்றப்பட்டு அவர் மரணத்தைத் தழுவினார். (ஸல் மான் ஃபார்ஸி(ரழி), இப்னு ஜரீர் தபரீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் […]

இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அரஃபா தினம் வெள்ளிக்கிழமையே! எம்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை துல்கஃதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந்தபோது மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள் : ஆயிஷா(ரழி) அறிவித்தார்: நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் துல்கஃதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந் தபோது (துல்கஃதா பிறை 25ல்) புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்ற எண்ணியிருந்தோம். மக்காவை நாங்கள் நெருங்கியபோது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராதவர்கள் கஃபாவை வலம் வந்து ஸஃபா, […]