“தக்லீது!” – ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா மறுபதிப்பு : இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும், என்று சொன்னவுடன், “தக்லீது” செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது; மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. அந்நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது. காரணம் இவை எல்லாம் “தக்லீது” ஆகும் என்று உடனே சொல்லிவிடுகிறார்கள். தக்லீது செய்யாமல் நடப்பதாக […]

இஸ்லாத்தின் பார்வையில் சோதனை! முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு : வாழ்க்கை  ஓர்  மனித  கண்ணோட்டம் : வானங்களையும், பூமியையும் அவனே (அல்லாஹ்) ஆறு நாட்களில் படைத்தான். மேலும் அவனுடைய சிம்மாசனம் (அர்ஷ்) நீரின் மீதுள்ளது. உங்களுள் எவருடைய செயல்கள் மிக சிறந்தவை என அவன் உங்களைச் சோதிப்பதற்காக (இவற்றைப் படைத்தான்)  ஹூது11:7 மனிதர்கள்  வாழப்  பிறந்தவர்கள்! வாழ்க்கை வாழ்வதற்கே! வழக்கமாய் மனிதர்கள் அனைவரும் வாழ்க்கை குறித்து கொண்டிருக்கும் பொது கருத்து. எது வாழ்க்கை? எப்படி வாழ்வது? என்பதில்தான் […]

உங்கள் தேர்வு! (கோபம்) ­ சரஹ் அலி, உடன்குடி மறு பதிப்பு : (இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான்.  (அ.கு. 3:134) பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பாவிட் டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழவேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சக பணியாளனாக, மாற்று மதத்தைச் […]

வானம் பூமியை படைத்தது ஒரே இறைவனா? பல கடவுள்களா? S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்” “ஒரே இறைவனா? பல இறைவனா?” என்பது மனிதர்களின் ஆன்மீக சிந்தனைகளின்  மையக்  கேள்விகளில்  ஒன்று. இதற்கான  பதில் ஒரே  இறைவன்தான் : 1. இந்து வேதங்களில் “ஏகமேவ அத்விதீயம்” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது “ஒரே ஒன்று, அதற்கு  இணையாக  இன்னொன்றில்லை”  2. “இஸ்லாத்தில் அந்த இறைவன் ஒருவனே” […]

இந்தியாவில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பின்பற்றுவது சுன்னத் வல் ஜமாத் கொள்கையா? அல்லது சிஆ கொள்கையா? எஸ். ஹலரத் அலி, திருச்சி. இந்தியாவில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பின்பற்றுவது சுன்னத் வல்ஜமாத் கொள்கையா? அல்லது சிஆ  கொள்கையா? என்ற கேள்வியை எவர் கேட்டாலும்… உடனே புள்ளி விபரத்துடன் பதில் கிடைத்துவிடும். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றுவது “சன்னி” எனச் சொல்லப்படும் சுன்னத் வல்ஜமாத் கொள்கை தான் என்று ஆக்ரோமான பதில் வரும். ஆனால் இந்திய முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கை […]

மரணம் வரமா அல்லது சாபமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலகில் அன்றாடம் புதிது புதிதாக பல நவீன கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் இப்போது AI, AIG, AIS  வரை  வந்துவிட்டன. AI என்றால்; Artificial Intelligence மனித மூளையைப் போன்று செயல்பட வைக்கும் செயற்கை  நுண்ணறிவு  கணினி.  உதாரணம் :  Google Translate & Chat GPT. AIG  என்றால் Artificial Intelligence  General. பொது  செயற்கை  நுண்ணறிவு கணினி, உதாரணம் :  ரோபோ மனிதன் செய்யக்கூடிய […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர் 1. நிச்சயமாக வானங்களும், பூமியும் பிரிப்பதற்கு முன் எவ்வாறு இருந்தன? இணைந்திருந்தன.   அல்குர்ஆன் 21:30 3. வானத்தின் வாசல்களை எதைக் கொண்டு திறந்துவிட்டதாக இறைவன் கூறுகிறான்? கொட்டும்  நீரால்.   அல்குர்ஆன் 54:11 4. இப்றாஹீம்(அலை) அவர்கள் நிச்சய மாக நான் நீங்கள் வணங்குபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன் என யாரிடம்  கூறினார்கள்? தன்தந்தை, தனது சமூகத்தினரிடம். அல்குர்ஆன் 43:26,27 5. குதித்துப் பாயும் நீர் எங்கிருந்து வெளிப்படுகிறது என்று […]

என்னை  பின்பற்றுங்கள்!! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இவ்வுலகில் இப்போது (2025வரை) சுமார் 800 கோடி பேருக்கு மேல் மக்கள் வாழ்கின் றார்கள். இதற்கு முன்பு பல கோடிக்கணக் கான மனிதர்கள் வந்தார்கள், வாழ்ந்தார்கள், மறைந்தார்கள். இதில் பிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனும் உண்டு, இவ்வுலகை ஆட்டிப் படைத்த ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியும் உண்டு. உலகில் பெரும் பகுதிகளை வென்ற மாவீரன் அலெக்சாண்டரும் உண்டு, பல அமெரிக்கா அதிபர்களும் உண்டு, அண்ணல் காந்தியடிகளும் உண்டு, சுமார் நூற்றுக்கு மேற்பட்ட […]

நாய்கள் செல்ல பிராணியா? M. சையத் முபாரக், நாகை இப்பிரபஞ்சமும் அதிலுள்ள படைப்புகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதே. அதில் வேறு விதத்தில் பயன்படுகின்ற, நமக்குத் தீங்கு தருகின்ற சிலவற்றை அல்லாஹ் நமக்கு உண்பதற்கும், வளர்ப்பதற்கும் தடை செய்திருக்கின்றான். அதில் ஒன்றுதான் வீடுகளில் நாய் வளர்ப்பதும், அதோடு கொஞ்சி  குலாவி  விளையாடுவதும். இஸ்லாம்  என்ன  சொல்கிறது? “நாயும், உருவப்படங்களும் உள்ள வீட்டில் (இறையருளைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்.  (புகாரி: 5949, முஸ்லிம் 4274) […]

நீங்கள் விதைக்கின்ற விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? எஸ். ஹலரத் அலி, திருச்சி. நீங்கள் விதைக்கின்ற (Seed Germination and growth) விதையைப் பற்றி எப்போதாவது  நீங்கள்  சிந்தித்ததுண்டா? அல்குர்ஆன் 56:63 மனிதன் நிலத்தை பண்படுத்தி உழுது நீர் பாய்ச்சி விதை விதைக்கின்றான். பின்பு மண்ணில் புதைக்கப்பட்ட விதைக்கு என்ன நடக்கிறது என்பது மனிதனுக்கு தெரியாது. இதைத்தான் அல்லாஹ்  சிந்திக்கச்  சொல்கிறான். “நீங்கள் விதைப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? நீங்கள் தான் அதை பூமிக்குள் வளர்க்கிறீர்களா? அல்லது […]

சாட்சிகளில் இறைசாட்சியே மேலானதாகும்!! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் சாட்சியங்களில் பல வகை உண்டு: அவை : 1. மனசாட்சி 2. மனிதர்கள் சாட்சி 3. இறைவன் சாட்சி. மனசாட்சி : மனசாட்சி என்பது வெளியிலிருந்து வரும் கட்டளை அல்ல. நமது உள்ளத்திலிருந்து எழுந்து மூளையின் உத்தரவுப்படி செய்யும் ஒரு  ஆற்றலாகும். சில நேரம் நன்மையை செய்யத் தூண்டும்.சில நேரம் தீயதையும் செய்ய தூண்டும். அதாவது ஒவ்வொருவரின் சூழ்நிலை, சந்தர்ப்பத்தை பொறுத்து மனசாட்சிபடி அவரின் செயல்  வெளிப்படும். மனசாட்சி […]

புத்தகங்களை சுமக்கும் கழுதைகள் யார்? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இவ்வுலகில் இப்போது 800 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கின்றார்கள், அதில் சுமார் 210 கோடி பேர் முஸ்லிம்களாக உள்ளனர். இந்த 210 கோடி முஸ்லிம்களும் குர்ஆன் இறை வழிகாட்டி நூல் என்றும், இறைவனிட மிருந்து அருளப்பட்டது என்பதிலும் 100% சதவீதம்  நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் எல்லா முஸ்லிம்களும் நம்பிக்கை வைத்துள்ள அந்த குர்ஆனை படித்து புரிந்து கொண்டுள்ளார்களா? என்றால் இல்லை.  அதற்கு  காரணம்  மூன்று : 1. […]

தலையங்கம் : தீதும் நன்றும் பிறர் தர வாரா! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) “யாதும் ஊரே  யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர் தர வாரா”  என்பது புறநானூறு  நூல்  கூறும்  கருத்து. நன்மையும் தீமையும் பிறர் தருவதில்லை. ஒருவரின் நற்செயல், தவறான செயல் ஆகியவற்றின் பலன் அவருக்கே வந்து சேரும். அதாவது, நம் வாழ்வில் சந்திக்கும் நன்மை தீமை அனைத்தும் நம்முடைய செயல்களின் விளைவே அன்றி, பிறரால் வருவதில்லை. தமிழ் நூல்களில் சொல்லப்பட்ட “தீதும் நன்றும் பிறர் […]

மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்! – அபூ அப்தில்லாஹ் மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரிந்து முற்றிலும் தெளிவாகிவிட்டது.  (2:256) அன்று மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் மத மாற்றத்துக்கு வெளிநாட்டுப் பணம்தான் காரணம் என்று சொல்லும் மாற்று மதத்தவர்கள், இஸ்லாத்தில் உள்ள இத்தகைய உண்மை நிலையை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். பணத்தையோ, பதவியையோ அல்லது வேறு எதையும் விலையாகக் கொடுத்து மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. அவ்வாறு இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்கும், அவ்வாறு வருவதற்கு […]

படைத்தவனும், படைப்பினங்களும் அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்திய இறுதி இறைத்தூதர்! முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு :  ஆகஸ்ட்   மாத  தொடர்ச்சி… இப்படி அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இணைத்துப் பார்க்கிறோம். இதன் மூலம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கண்ணியப்படுத்துவதாக இந்திய முஸ்லிம்கள் மனப்பால் குடிக்கின்றனர். ஆனால் யதார்த்தம் இதற்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்ள தவறிவிட்டோம். அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றானவர்கள் என்று சித்தரிப்பதே இதை உருவாக்கியோர்கள் உள்நோக்கம் என்பதை உணரத் தவறிவிட்டோம். அல்லாஹ்வுடன், அவனது தூதரையும் […]

அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது; மேலும், ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார் கள். மேலும், குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40) என்பதாக உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். இதில், “”அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது” எனும் தொடருக்கு இரண்டு விதமான பொருள்  கூறப்பட்டுள்ளது. 1. அவர்கள் செய்த […]

இயக்க வெறியால் பிரசாரத்துக்கே தடை! K.M. அப்துல் ஹமீது மறுபதிப்பு :  திருக்குர்ஆன் முக்காலத்தையும் உணர்த்தக் கூடிய இறுதி நெறிநூல். திருக்குர்ஆனையும், நபி வழியையும் அப்படியே ஏற்று நடக்கிறோம் என்று கூறும். நம் சகோதரர்கள் இயக்க விசயத்தில் மட்டும் நாம் பல வருடங்களாக எடுத்துக்காட்டும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைத் தூக்கி எரிந்துவிட்டு, இவ்வுலகில் ஆதாயத்(பணத்)தை பெறவே இயக்கங்களை நிலைநாட்டி  வருகின்றனர். உலகத்தில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நாட்டுக்கு ஒரு அமைப்பு. மாநிலத்திற்கு ஒரு இயக்கம், மாவட்டத்திற்கு ஒரு மன்றம், […]

இயற்கையின் வண்ணங்களுக்கு உயிரூட்டும் மழை நீர்! எஸ். ஹலரத் அலி, திருச்சி. அல்லாஹ்  குர்ஆனில்  கூறுகிறான்… “நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றான். பிறகு, அதன்மூலம் பல நிறங்கள் கொண்ட விதவிதமான கனிகளை நாம் வெளிக் கொணர்கின்றோம். மலைகளிலும் கூட வெண்மை, சிவப்பு, அடர்ந்த கறுப்பு ஆகிய  நிறக்கோடுகள்  காணப்படுகின்றன.    அல்குர்ஆன் : 35:27 வானத்திலிருந்து பொழியும் மழை நீரைக் கொண்டே பலவிதமான நிறங்களைக் கொண்ட பழங்களும், காய்கறிகளும் உருவாவதாக அல்லாஹ் கூறுகிறான். […]

ஜமாத்துல் முஸ்லிமீன்! எஸ். ஹலரத் அலி, திருச்சி. இன்று அந்த “ஜமாத்துல் முஸ்லிமீன்” இல்லை என்பதை காரணம் காட்டி, புகாரி 3606 ஹதீதின்படி முஸ்லிம்கள் தனித்தனியாக மரவேர்களை கடித்து தனித்திருப்பதா? அல்லது ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் முஹல்லா முஸ்லிம் ஜமாத்துடன் இணைந்து ஒன்றாக இருப்பதா? ஹதீத் எதைச் சொல்கிறது? பதில் : புகாரி 3606 ஹதீதில் குறிப்பிடப்பட்ட “ஜமாத்துல் முஸ்லிமீன்” என்பது முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஒற்றுமையையும், ஒரு சட்டப்பூர்வமான தலைமையின் கீழ் இயங்கும்  சமுதாயத்தையும்  குறிக்கிறது. […]

நல்லதொரு குடும்பம்! புலவர் செ.ஜாஃபர் அலி மறு பதிப்பு :  மனிதர்களுள் பெரும்பாலோர், “அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்” என்று வாயளவிலேயே மொழிகின்றனர். அவர்களுடைய செயல்கள் இறை நம்பிக்கையையோ, இறையச்சத்தையோ பிரதிபலிப்பதில்லை. “இம்மை இன்பம்” ஒன்றையே கருத்தில் கொண்டு ஓடியாடி உழைத்து, பொருளீட்டி, மனைவி – மக்களை மகிழ்விப்பதிலும் தம் சுய தேவைகளை–சரீர இச்சைகளை திருப்தி செய்வதிலுமே அதிகமான காலத்தைச் செலவழிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், நம் சமுதாயத்தவர்களில் பலர் சோதிடத்தை நம்புவதிலும், இராகு காலம் –எமகண்டம் பார்ப்பதிலுமே நம்பிக்கை […]