மீலாது, மெளலூது, மார்க்கம் சொல்வதென்ன? K.M.H. அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : ரபீவுல் அவ்வல் மாதம், நாடெல்லாம் மீலாது விழாக்களும், பள்ளிகளில், வீடுகளில் மெளலூதுகளும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். இவை கொண்டு இறை திருப்தியும், நபி(ஸல்) அவர்கள் ஷபாஅத்தும் (பரிந்துரை) தங்கள் உலகக் காரியங்களில் நலனும், அபிவிருத்தியும் ஏற்படும் என்பது இன்றைய முஸ்லிம்களின் மூட நம்பிக்கையாகும். இவற்றை எல்லாம் மார்க்கமாகக் கொள்ள இவர்களுக்கு ஆதாரங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்பதை நாம் அறியோம். ஆனால் இவையயல்லாம் மார்க்கத்தில் […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 74 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை! சரஹ் அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். மறைமுக தர்மமே மேலானது : நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே, அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது இன்னும் உங்களுக்கு சிறந்தது. தர்மங்களால் இறைவன் உங்கள் தீமைகளை அழித்துவிடுவான். நீங்கள் செய்கின்றவற்றை ஏக இறைவன் நன்கறிந்தவன் ஆவான். (இறைநூல்: 2:271) “உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த […]
வரதட்சணை யாசகமா? ஹராமா? S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தவறுகள் செய்யாமல் இருக்கவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடு ஆகும். இன்னும் நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும், கிருபையையும் உண்டாக்கி இருப்பதும், அவனுடைய […]
குழந்தைக்காக… அஸ்ரப்புத்தீன், திருச்சி அன்புச் சகோதரிகளே! இன்று நாம் உலகில் பல தேவைகளுக்காக பலவித வணக்க வழிபாடுகளிலும், பலவித நேர்ச்சைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இதில் முக்கியமான ஒன்று குழந்தைக்காக, ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி முதல் வருடத்தில் அவளும், அவளது கணவரும், குடும்பத்தார்களும் எதிர்பார்ப்பது குழந்தையை. ஆனால் அவள் குழந்தையை முதல் வருடத்தில் பெறாமல் இருந்தால் அவளைச் சிலர் இந்த கோயிலுக்கு போ, அல்லது ஏர்வாடிக்குப் போய் தொட்டில் கட்டு; நாகூர்க்குப் போய் வெள்ளியால் செய்த குழந்தை வாங்கி […]
இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைத்துக்கொள்ள வேண்டும்? இப்னு சித்தீக், கடையநல்லூர் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைக்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை மிக வேகமாக நம்மிடையே பரவியுள்ளது வருந்தத்தக்கதே! இவ்விதம் நம்மிடையே ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படும்போது நாம் என்ன செய்யவேண்டும், என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுவதைப் பாருங்கள். விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடங்கள் (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்களில் நேர்மையாக அதிகாரம் வகிப்பவர்களுக்கும் வழிப்பட்டு நடங்கள்; […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர். செப்டம்பர் மாத தொடர்ச்சி….. “வழிகெட்டவனை தலைகுப்புற விழுந்தவனுக்கு உதாரணமாக ஒப்பிடுதல்” முகம் குப்புற (மண்ணில்) விழுந்து கிடப்பவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவனா? (67:22) என்கின்றான். அத்துடன், “உத்தம நபித்தோழர்களைச் செழிப்பான தோட்டத்திற்கு ஏக இறைவனான அல்லாஹ் உவமை காட்டும் அழகு பாரீர்” முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது (கொள்கை ரீதியில்) கடுமையனவர்களாகவும், தங்களுக்கிடையே இரக்கம் […]
நபிமார்களின் வாரிசுகளே! சிந்தியுங்கள்!! அப்துன் நஸீர் அன்புள்ள ஆலிம் பெரும் மக்களே! சற்று நடுநிலை வகித்து இந்த கட்டுரையை ஆராய்ந்து படியுங்கள். நாம் எல்லோரும் மெளலவி என்ற பட்டம் நம் பெயருக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவோ அல்லது ஏழு வருடங்கள் சாப்பாடு கிடைக்கிறது என்பதற்காகவோ, மதரஸாக்களுக்கு சென்று ஓதவில்லை. நம் பெற்றோர்களும் அப்படி நினைக்கவில்லை; யாரும் அப்படி நினைக்கவும் மாட்டார்கள். மாறாக நம் பிள்ளைகள் அல்லாஹ்வுடைய வேதத்தை கற்றுத் தேறவேண்டும். நபி(ஸல்) அவர்களின் ஹதீதுகளை தெளிவாக உணர்ந்து […]
தவ்ஹீதுவாதிகளே! கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்! மறு பதிப்பு : எல்லாம் வல்ல இறையோனே! ஏகத்துவத்தைச் சார்ந்தோர்களின் இதயங்களை இணைப்பாயாக! சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் இறைவனுக்காக, இறைவ னின் சமுதாயத்திற்காக ஒன்றுபட்ட இதயங்கள் பதவி, அதிகாரம் போன்றவற்றால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக ஒன்றுபட்ட சமுதாயத்தை பிரித்துவிட்டார்கள்; அன்று இறைவனுக்காக இதயங்கள் இணைந்தன; இன்றோ தலைவர்களுக்காக இணைந்தவர்கள் பிரிந்துவிட்டனர். சத்தியதோழர்கள் இறைவனின் மார்க்கத்திற்காக தியாகங்களைப் புரிந்தார்கள். இன்றைய தினம் தனி நபர் வளர்ச்சிக்காக, வாழ்விற்காக தியாகங்கள் புரிகின்றனர். […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஒருவர் தமது மனைவியை “தலாக்’ என்றோ, “முத்தலாக்’ என்றோ கூறிய பின்னர் மீண்டும் அவள் அவருடைய வீட்டிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வது கூடுமா? ஹைதர் அலீ தெளிவு : ஒரே நேரத்தில் எத்தனை “தலாக்’ சொன்னாலும் அவற்றை ஒரு தலாக் என்பதாகவே கணிக்கப்படும், இவ்வாறு தலாக் கூறப்பட்ட பெண் அவருடைய 3 துஹ்ரு (மாதவிடாய் நீங்கி சுத்தமாயிருக்கும் காலம்) முடியும் வரை எவ்வித நிபந்தனையுமின்றி மீட்டிக் கொள்வது ஆகும். மேற்கூறப்பட்டுள்ள தவணை கழிந்துவிட்டால் திருமண உறவை-நிக்காஹ்வைப் […]
தலையங்கம்! நாம் ஏன் அதில் இல்லை? உலகெங்கும் பாராட்டு! குறிப்பாக இந்தியாவில் ஓர் இளைஞர் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார். நம் பாரதப் பிரதமரும் அந்த இளைஞரை வெகுவாகப் பாராட்டுகிறார். அந்த இளைஞரின் சாதனை என்ன? டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்து விட்டார்! ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அதற்கான சாதனை புரிந்துவிட்டார். யார் அந்த இளைஞர்? அவரின் பெயர் நீரஜ் சோப்ரா. இவர் தங்கம் வென்ற நாளான ஆகஸ்ட் ஏழாம் […]
37வது வருடத்தில் பயணிக்கும் அந்நஜாத் ஹிஜ்ரி 1406ம் வருடம் ஸஃபான் மாதம் (ஏப்ரல் 1986) ஏகத்துவ சிந்தனை கொண்ட சகோதரர்களால் துவக்கப்பட்ட “அந்நஜாத்” மாத இதழ் சத்தியப் பாதையில் அது மேற்கொண்டுள்ள இலட்சிய பயணத்தில் அல்லாஹ்வின் நாட்டத்தினால் 36 வருடம் முடிந்து 37வது வருடத்தில் பயணிக்கின்றது. வல்ல ஏகன் அல்லாஹ்வின் பேருதவியாலும் பெருங்கிருபையினாலும், இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அல்ஹம்துலில்லாஹ். “அந்நஜாத்” மேற்கொண்டுவிட்ட இலட்சிய பயணத்தில் அல்லாஹ்வுக்காக சத்தியத்தை நிலைநிறுத்தும். உண்மைக்கு சாட்சி சொல்லும். […]
ஹிஜ்ரி 1442 முடிவுற்று 1443 பிறந்திருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டிலும் முஸ்லிம்கள் புத்துணர்ச்சி பெற்று மேலும், மேலும் முன்னேறிச் செல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதற்குள்ள ஒரேயயாரு வழி; வேறு வழியே இல்லை; அது அல்லாஹ்வின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அவ னது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவற்றில் அடி பிசகாது நடப்பதே யாகும். ஆனால் ஷைத்தானும், அந்த ஷைத்தா னுக்கு உறுதுணையாகச் செயல்படும் புரோகிதர்களும் முஸ்லிம்களை எப்படியும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியிலிருந்து பிறழச் […]
ஏகன் இறைவனின் வல்லமை பாரீர்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : மனிதன் முன்னேறி விட்டான்; சந்திரனில் கால் பதித்து விட்டதாக சொல்கின்றான்; பல கோள்களுக்கு செயற்கைக் கோள்களை அனுப்ப பெரும் பெரும் ஆராய்ச்சிகள் செய்து வருவதாக சொல்கின்றான். ஒரு சில அணுகுண்டுகள் மூலம் உலகையே அழித்துவிடும் ஆற்றல் பெற்றுள்ளதாக சொல்கின்றான். கணினி யுகத்தில் சாதிக்க முடியாத சாதனைகளே இல்லை என் றெல்லாம் மனிதன் பெருமைப்பட்டுக் கொள்கிறான். தனது ஆற்றலில் அகம்பாவம் கொள்கிறான். தன்னை மிஞ்சிய ஒரு […]
“தக்லீது” – ஓர் ஆய்வு! அபூ ஃபாத்திமா மறு பதிப்பு : ன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும், என்று சொன்னவுடன், “தக்லீது” செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது; மனிதர்களால் தொகுத்து தரப்பட் டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது, மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக் கூடாது. அந்நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது. காரணம் இவை எல்லாம் “தக்லீது” ஆகும் என்று உடனே சொல்லி […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 73 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் […]
குர்ஆனின் நற்போதனைகள்… மனிதன்! ஓர் உன்னத படைப்பு! Dr. A. முஹம்மது அலி, Ph.D., நிச்சயமாக நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். நாம் படைத்துள்ள பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம். (அல்குர்ஆன்17:70) நிச்சயமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4) (அல்லாஹ்) அவனே, தான் படைத் துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; மேலும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். (அல்குர்ஆன் 32:7 மனிதனே! சங்கைமிகு கொடையாளனான உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டிவிட்டது […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர். ஆகஸ்ட் மாத தொடர்ச்சி….. “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போலாவான்” யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கி றாரோ அவர் வானத்திலிருந்து கீழே விழுந்தவரைப் போன்றவர் ஆவார். பின்னர் அவரைப் பறவைகள் கொத்தித் தூக்கிச் சென்று விடுகின்றன, அல்லது காற்று அவரைத் தூரமான இடத்திற்கு அடித்துக் கொண்டு போய் வீசிவிடுகின்ற ஒருவனைப் போல் ஆவான். (22:31) அதாவது, உயிரைக் கைப்பற்றும் வானவர் (ஏக இறையை) […]
இறைவன் தந்த தங்கம் கையில் இருக்கும்போது வட்டியில் விழுவது நிர்பந்தம் ஆகுமா? S.H. அப்துர் ரஹ்மான் அன்பு சகோதரர்களே உங்கள் மீதும் உங் கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதான மும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். பாவங்கள் என்றால் என்ன? பாவங்கள் என்றால் என்ன என்பதை தெரியாமல் நம்மில் பலர் அதைச் செய்து குற்றவாளியாக ஆகிவிடுகின்றனர். எனவே பாவம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பெரும் பாவம் என்றால் என்ன? […]
மார்க்கம் மிக மிக எளிதானது நூருல் அமீன் மறு பதிப்பு : இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்க ளுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 22:78) அல்லாஹ் இவ்வசனத்தில் இஸ்லாத்தில் எந்தவித சிரமத்தினையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகின்றான். மனித சமுதாயம் மிகவும் சுலபமாக பின்பற்றக்கூடிய ஒரு அழகிய வாழ்க்கை நெறியினை தான் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இஸ்லாத்தில் மிக முக்கியமான கட்டாய கடமையான தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, ஜகாத் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்; அவற்றில் எந்தவித கஷ்டத்தையும் […]