விமர்சனம்! விளக்கம்!! விமர்சனம் : காட்சியை அடிப்படையாக கொண்டே நோன்பை ஆரம்பிக்கவும், முடித்து கொள்ளவும் ஹதீஃத் ஆதாரம் இருக்கும்போது கணக்கீட்டிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? ஹாஸிப் முஹம்மது, சென்னை. விளக்கம் : நபி(ஸல்) காலத்தில் அனைத்தும் காட்சியை அடிப்படையாக கொண்டுதான் செய்யப்பட்டது. தொழுகை நேரங்கள் சூரியனின் காட்சியை அடிப்படையாக கொண்டு தொழப்பட்டன. (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலைநிறுத்துவீராக! இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக, ஃபஜ்ரு தொழுகை […]
தலையங்கம்! பிட்காயின் வைத்திருந்தால் சிறை தண்டனை… மத்திய அரசு கொண்டு வரப்போகும் புதிய சட்டம்?! பிட்காயின் என்ற தலைப்பில் அக்டோபர் 2020ல் தலையங்கம் எழுதி இருந்தோம். இந்த வணிகம் முறையற்றது என்றும் இதில் ஈடுபடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லை என்றும் எச்சரித்து இருந்தோம். இதில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து “குட்ரிட்டன்ஸ் தமிழ்” வலைதளத்தில் செய்திகள் வெளியிட்டு எச்சரித்துள்ளது. வாசகர்கள் பயன்பெற இந்த செய்தியின் சுருக்கம், இந்த இதழில் எமது தலையங்கத்தில் பிரசுரித்துள்ளோம். வாசகர்கள் படித்து பயன்பெறுமாறு கேட்டுக் […]
பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்… இப்னு ஹத்தாது பொதுவாக ஐந்து வருடங்களுக்கொரு முறை இந்திய மக்கள் சந்திக்கும் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏமாற்றிப் பிழைப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் – அரசியல் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படி? அவர்களின் வாக்குச் சீட்டுக்களை கவர்வது எப்படி? என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் புரோகிதர்களில் இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று சொல்லுவதற்கு யாரும் இல்லை எல்லோரும் இன்றைய சாக்கடை அரசியலில் ஊறிய மட்டைகள்தான். ஆட்சியைப் பிடிக்கும் […]
இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட சமுதாயம்!! நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! முஹிப்புல் இஸ்லாம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம் : உண்மையான இஸ்லாம் மக்களை விட்டும் அந்நியமானதேன்? “இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல்”-என்பதை நாம் பரவலாய் வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக்கிறோம். வரவேற்கத்தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோமாய் மாறிவிடாமல்-நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கப்படுகிறதா? இல்லையே! ஒருசில வியங்கள் நீங்கலாய்….”? இஸ்லாமிய மார்க்கமானது பெயர்தாங்கி முஸ்லிம்களால், […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 67 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த […]
இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? அபூ அப்துல்லாஹ் தொடர் – 7 மறு பதிப்பு : புரோகிதத்தை குருபக்தியை வளர்ப்ப தன் மூலம் மவ்லவிகளின் மூளை சலவை செய்யப்பட்டு, மனிதக் கற்பனைகள் நிறைந்த பிக்ஹு – சட்ட நூல்களை வேத வாக்குகளாக நம்பி தாமும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுக்கும் மிகமிக ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் அவலத்தைச் சென்ற தொடரில் பார்த்தோம். அனைத்து வழிகேடுகளுக்கும் காரணம் புரோகிதமே! இன்று முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து சீர்கேடுகளுக்கும் அடிப்படைக் காரணம், […]
சிந்திப்பவர்களுக்காக… அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம் நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், … வானத்திலிருந்து அவன் (ஏக இறைவன்) தண்ணீரை இறக்கி, அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும்… சிந்திக்கக்கூடிய மக்களுக்கு (இறைவனது வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (இறைநூல்:2:164) மனிதன் தான் வாழும் பூமியில் தன்னை உள்ளடக்கிய மனிதக் கூட்டம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது? என்பதை சிந்திக்க வேண்டிய காலம் இது. நீங்கள் உங்களுக்கு வெளியில் […]
பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுவோம்! S.H. அப்துல் ரஹ்மான் அன்பு சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும், முஸ்லிம்கள் அனைவர் மீதும் இறைவன் நிதானத்தையும், பொறுமையையும், தொழுகையையும் ஏற்படுத்துவானாக. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (படைத்தவனிடம்) உதவி தேடுங்கள், எனினும், நிச்சய மாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (இறைநூல் : 2:45) நம் சகோதரர்களிடம் இல்லாத ஒன்று இறைவன் தொழுகையுடன் இணைத்து வலியுறுத்திய ஒன்று தான் பொறுமை. ஆனால் நம்மிடம் அது […]
நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. பிப்ரவரி மாத தொடர்ச்சி….. அவர்கள் தண்ணீர் கேட்கும் போதெல்லாம் சீழ் போன்ற தண்ணீர் கொடுக்கப்படும் அதை முகத்துக்கு அருகே கொண்டு செல்லும்போது முகத்தில் சதைகள் கருகி அதில் விழும். அதை அவன் குடித்தால் அவனது குடல்களெல்லாம் துண்டு துண்டாகி அவனது பின் துவாரத்தால் வெளியேறும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி) அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கிவிடும் உருக்கிய செம்பு போன்ற […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஆண்களும், பெண்களும் அடக்கப்பட்டிருக்கும்போது கப்ருஸ்தானில், ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் கப்ருஸ்தான் வர தடை இருக்கிறது. அந்நிய ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், பெண்களுக்கு தடை இருக்கிறது. அதேபோல் அந்நிய பெண்கள் அடக்கப்பட்டிருந்தும் ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்பட காரணம் என்ன? தெளிவு : சிந்தனையின் அடிப்படையிலான நல்ல கேள்வி இது! அந்நிய ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், பெண்களுக்கு தடை இருக்கிறது என்று கூறுகிறீர் கள். அந்நிய பெண்கள் அடக்கும் செய்யப்பட்டிருக்கும் அதே கப்ருஸ்தானில் ஆண்கள் மட்டும் […]
தலையங்கம்! இறையடிமை ஆகுவோம்! பூமி பெரும் அதிர்ச்சியாக, அதிர்ச்சி அடையும்போது, இன்னும் பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது, அதற்கு என்ன நேர்ந்தது என்று மனிதன் கேட்கும்போது, அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்… உம்முடைய இறைவன் வஹீ(இறைச் செய்தி) 5லம் அதற்கு அறிவித்ததாக! அந்நாளில், தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, மக்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அதனை அவர் கண்டு கொள்வார்…. மேலும், எவன் ஓர் அணுவளவு […]
மக்களை மயக்கும் ஜனநாயகம்! அபூ பாத்திமா ஜனநாயகம்! மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களே ஆட்சி செய்யும் பெருமை மிக்க ஆட்சி மக்களாட்சி – ஜனநாயக ஆட்சி என பெருமையாகப் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கும் இதில் பெரியதொரு மயக்கம் இருக்கவே செய்கிறது. மக்கள் சுதந்திரமாகச் செயல்படுத்துவதாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நடப்பதோ வேறு! பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி நடக்கும் ஆட்சி என்று கூறுவது உண்மையில் மிக மிகச் சிறுபான்மையினரின் விருப்பப்படி நடக்கும் ஆட்சியாகவே இருக்கிறது. காரணம் ஜனநாயகம் எனும் […]
படைத்த இறைவனையே அஞ்சுங்கள்! ஷரஹ் அலி, உடன்குடி. இறை நம்பிக்கை கொண்டோரே! (படைத்த இறைவன்) அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (மறுமை) நாளைக்காக ஒவ்வொருவரும் எதைத் தேடி வைத்துள்ளார் என்பதை, அவர் கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்கின்றவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (அல்குர்ஆன் : 57:18) அவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள் : எவர்கள் அல்லாஹ்வை மறந்துவிட்டு இருக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அதனால், அவர்கள் தங்களையே மறந்து விடும்படி அல்லாஹ் செய்தவிட்டான். அவர்கள்தாம் பாவிகளாவர். […]
சமுதாயத்தை கல்வியில் தலை நிமிரச் செய்வோம்! அஹ்மது இப்ராஹீம், பளியங்குடி. இன இழிவு நீங்க இஸ்லாம்தான் தீர்வு என முழங்கிய பெரியாரின் அந்த வார்த்தைகளையே பேராசிரியர் கீ.வீரமணியின் தி.க. மற்றும் பெரியார் தி.க. போன்ற அத்தனை பகுத்தறிவுவாதிகளும் இந்த உண்மை தாழ்த்தப்பட்ட மக்களைப் போய் சென்றடையவிடாமல் திட்டமிட்டு மறைத்து விட்டனர். தொடர்ந்து மறைத்தும் வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களுடைய இன இழிவுகளை பற்றி எந்தக் கவலையும் படாமல் மத்திய மாநில அரசுகள் தரும் இட ஒதுக்கீட்டை அடைவதிலேயே […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 66 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த […]
படைத்தவனை மறுப்பது பகுத்தறிவு ஆகுமா? அப்துர் ரஹ்மான் அன்புச் சகோதரர்களே உங்கள் மீது படைத்த இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஏற்படட்டும். அவனே மனிதனைப் படைத்தான். (இறைநூல்: 55:3) இறைவனே உங்களை படைத்தான். அல்லாஹ் (ஏகன் இறைவன்) தான் உங்களைப் படைத்தான், பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான், அவனே பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இறைநூல் : 30:40 மனிதர்களில் பலருக்கு இதில் சந்தேகம் : இறைவன் உண்டா? கண்ணால் பார்க்காமல் […]
சாட்சியாளர்கள் …. அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம், திருச்சி. நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சாட்சியாளர்களே…. இந்த பூமியிலே மனித உருவம் பெற்று வருவதற்கு முன்னரே நாம், சாட்சியம் அளித்திருக்கிறோம். (இறைநூல் : 7:172) மேலும் கலிமாவை (ஷஹாதத்) மொழிந்து இஸ்லாத்தை தன் வாழ்வியலாக மாற்றிக்கொள்ளும் ஒவ்வொருவரும் சாட்சி கூறியவர்களெ… முஸ்லிம்களாகிய அனைவரும் தினந்தோறும் சாட்சி சொல்லக்கூடியவர்களாகவும், சொல்லக்கூடியவர்களுக்கு சாட்சிகளாகவும் இருக்கிறோம். நம்மைச் சுற்றி இருப்பவைகளுக்கு நாமும். நமக்கு அவைகளும் சாட்சிகளாக இருக்கின்றன. இறைநெறிநூலில் தூதர்கள் சமூகத்திற்கு சாட்சியாகவும் அவருக்கு […]
இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? அபூ அப்துல்லாஹ் தொடர் – 6 மறு பதிப்பு : பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைக் கலப்பது போல் இந்தப் புரோகித மவ்லவிகள் குர்ஆன், ஹதீதுக்கு முரணான மார்க்க முரணான மூடச்சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும், உஸ்தாது(ஆசிரியர்) குருட்டு பக்தியையும் வஞ்சகமாக சிறுவர், சிறுமியர்களின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதித்து விடுகிறார்கள் என்ற விபரத்தைத் தொடர் ஐந்தில் விளக்கி இருந்தோம். அவர்களின் வஞ்சகப் புத்தி அத்துடன் முடிந்து விடுவதில்லை. மேலும் தொடர்கிறது. இவர்களின் அரபி […]
முஸ்லிம்களில் தூய்மையாளர் யார்? அபூ உஸ்மான், சென்னை. உலகத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் அனைவரும் தங்களை முஸ்லிம் என்று மட்டுமே அழைத்துக் கொள்ளவேண்டும். வேறு எந்தப் பெயரையும் வைத்து இந்த உலகத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதை குர்ஆனின் பல வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உதாரணத்திற்கு ஒரு வசனம் பாருங்கள். எவர் அல்லாஹ்வின் பாதையில் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகின்றாரோ அவரை விட […]
நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜனவரி மாத தொடர்ச்சி … நரகத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகள் : நரகத்தில் கடுமையான விஷமுள்ள மிகப் பெரிய பாம்பகள், தேள்கள் இருக்கும். அது ஒருமுறை கொட்டினால் நாற்பது வருடங்கள் வரை அதனுடைய வேதனை இருக்கும். மேலும் நரகத்தில் “புக்த்” என்ற உயர் ரகமான பெரிய ஒட்டகத்தின் அளவு பாம்புகள் இருக்கும். அவற்றில் ஒன்று தீண்டினால் அதனுடைய கடுமையான வேதனை நாற்பது ஆண்டுகள் வரை […]