அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர். காய்ச்சல் எதனால் உண்டாகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? நரகத்தின் வெப்பக்காற்றால் உண்டாகிறது. அப்துல்லாஹ்பின் உமர்(ரழி), புகாரி : 5723 தொற்று நோய் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது என்ன? தொற்று நோய் என்பது கிடையாது என கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), புகாரி : 5717 சொர்க்கச் சோலைகளை யாருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்? நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ் சுவனங்களை வாக்களித்துள்ளான். அல்குர்ஆன் : 9:72 எது சிறந்த தர்மம் என […]

இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளில் முஸ்லிம்கள் அங்கத்தினர்களாக இருக்கலாமா? அபூ தஸ்னீம், குவைத் இன்றைய நவநாகரீக உலகில் அரசியல்வாதிகளுக்கு உள்ள அடையாளம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற சிறப்பு அம்சங்கள்தான் தகுதியாக கருதப்படுகிறது. இவை மூன்றும் இல்லையென்றால் அரசியல் உலகிலேயே அரசியல்வாதிகள் ஆச்சரிய கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள். நேர்மை என்ற வார்த்தைக்கு இன்றைய அரசியலில் இடம் கிடையாது. நேர்மையானவர்கள் அரசயிலில் புகுந்தால் பிறகு நாட்கள் செல்லச் செல்ல பன்றியோட சேர்ந்த கன்றுகளாகத்தான்ட இருக்க நேரிடும். ஒவ்வொரு வழிமுறைக்கும் சாக்கடை […]

ஐயம் : “மார்க்கத்தை மறைப்பவர்களை சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்” என்று குர்ஆன் கூறுகிறதே. அவ்வாறு சபிப்பவர்கள் யார்? ஆதாரத்துடன் தெரிவிக்கவும். தாவூது இப்ராஹீம், மதுரை. தெளிவு : குர்ஆன் கூறும் அந்த வசனத்தை முதலில் காண்போம். நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும், அதன் நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும், யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்”. அல்குர்ஆன் : 2:159 சபிப்பவர்கள் யார் என்பது தங்களுக்கேற்பட்டுள்ள ஐயம். தமது குடும்பத்திலுள்ள தாய். தந்தை, மனைவி, மக்கள், […]

தலையங்கம்! விவசாயம்! அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்திலிருந்து மழை பொழியச் செய்து. அதிலிருந்து உங்கள் உணவுக்காக கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான். (இதை) நீங்கள் தெரிந்துகொண்டே இருக்கும் நிலையில், அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22) மேலும் பார்க்க : (அல்குர்ஆன்: 80:24 To 32) தான் படைத்த உயிரினங்கள் அனைத்தும், உயிர்வாழத் தேவையான உணவைப் பெறுவதற்கான அடிப்படையை, அகிலங்களைப் படைத்த ஒரே இறைவன் கொடுத்துவிட்டான். அவற்றிலிருந்து தேவையானதைப் பெற்றிட […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் -5 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : மக்களை ஏமாற்றி, வஞ்சித்து வழிகெடுத்து வயிறு வளர்க்கும் புரோகிதர்களின் திறமை பற்றி ஓர் அறிஞரின் அமுத மொழியை மே 2004 இதழில் பார்த்தோம். அதையே மீண்டும் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம். திறமை என்பது எள்ளளவும் தேவைப்படாத தொழில் புரோகிதத் தொழில் ஒன்றுதான். புரோகிதன் மூடனாக இருக்கலாம். ஒழுக்கத்தில் சீரழிந்தவனாக இருக்கலாம். பால்வினை நோய் உள்ளவனாக இருக்கலாம்” ஆயினும் புரோகிதத் தொழில் […]

புரோகித அரபி மதரஸாக்களுக்கு மாற்றாக…. உடனடித் தேவை ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழகம் முஹிப்புல்  இஸ்லாம் மதரஸா கல்வியின் அவலட்சணம்! இஸ்லாம் முறையாக போதிக்கப்படவில்லை. அரபு மொழியும் சரியாகப் போதிக்கப்படவில்லை. அதுதான் போகட்டும். இந்த அரபு மதரஸாக்களில் ஓதியவர்கள் புரோகித தொழில் நீங்கலாய் எந்த வேலையும், தொழிலும் செய்ய தகுதியற்றவர்களாய் மதரஸாக்களிலிருந்து வெளி வருகிறிார்கள். இப்படி எந்த கோணத்தில் அலசினாலும் சரி, ஆராய்ந்தாலும் சரி, மதரஸா கல்வியின் அவலட்சணம் அம்பலமாகிக் கொண்டேயிருக்கும். மாபாதகத்திற்கு மேல் மாபாதகம் : முஸ்லிம் […]

தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 65 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்….. அபூ ஹனிபா, புளியங்குடி யஃஜூஜ்  மஃஜூஜ்  கூட்டத்தார்  வந்த   பிறகும்  ஹஜ்ஜும்,  உம்ராவும்  நடைபெறுமா? நவழீன கால மார்க்க அறிஞர்கள் என்று சொல்லப்படுகின்ற அல்லாமா இக்பால், மவ்லானா மவ்தூதி இம்ரான் ஹூசைன் போன்றோர்கள் யஃஜூஜ், மஃஜூஜ் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஃத்களுக்கு இதுவரை யாரும் கொடுத்திராத நவீன விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள். அவர்களுடைய விளக்கங்கள் சரியானதா? தவறானதா? அவர்களின் விளக்கங்களை ஏற்க மறுக்கும் நம்மைப் போன்றவர்களிடம், அவர்கள் வைக்கும் கேள்விகளையும், அதற்கான வைக்கும் கேள்விகளையும், […]

இறைவாக்கு உண்மையாகும்…. ஷரஹ் அலி, உடன்குடி மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள முயலவில்லையே! (இறைநூல் : 4:78) நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது ஆகும். உலக அழிவு நாள் விஷயத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று உங்களிடம் சொல்லப்பட்டபோது உலக அழிவு நாள் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாதே நாங்கள் அதை ஒரு வெற்று ஊகமாகவே கருதுகிறோம். நாங்கள் அதை ஏற்பவர்கள் அல்லர் என்று கூறுபவர்கள் உள்ளனர். (இறைநூல் : 45:32) […]

அறிந்து கொள்வோம்!   மர்யம்பீ, குண்டூர். நரகத்தின் வேதனை எப்படி இருக்கும் என அல்னனளலாஹ் கூறுகிறான்? நிச்சயமாக அது வாழ்வதற்கும், வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்,  (25:66) இறை நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் எப்படிப்பட்டது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? சிறைச்சாலை. (முஸ்லிம் : 5663) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? அண்டை வீட்டாருக்கு தொல்லை தரக்கூடாது, விருந்தாளியை கண்ணியப்படுத்த வேண்டும், நல்லதை பேசவும் அல்லது வாய்மூடி இருக்கவேண்டும். […]

நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. (1) ‘ஜஹன்னம்’  (2) ‘லனா’ (3) ‘அல்ஹுத்தமா’ (4) ‘அஸ்ஸஈர்’ (5) ‘ஸகர்’ (6) ஜுரைஜ்(ரஹ்) தஃப்சீர் தபரீ, தப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:1032,1033) என்றெல்லாம் பல பெயர்களைக் கொண்டு அழைக்கக்கூடியதும், ஒதுங்கும் இடங்களிலேயே மிக மிகக் கெட்ட இருப்பிடமானது (2:126,206, 3:12,151, 162,197, 4:97,115, 8:16, 9:73, 11:98, 13:18, 14:29, 16:29, 18:29, 19:75, 22:72,  […]

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : 1. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலுக்கு (தானே) பொறுப்பாளியாக இருக்கிறான்.  (அல்குர்ஆன் : 52:21) அணுவளவு நன்மை செய்தோர் அதன் பலனைக் கண்டுகொள்வார். அணுவளவு தீமை செய்தோர் அதன் கேட்டையும் கண்டுகொள்வார் (99:7,8) உங்களுக்கு அவனை (அல்லாஹ்வை) அன்றி உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாருமில்லை நீங்கள் (இதனை) சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 32:4) எச்சுமையானாலும் (தனது சுமையை அன்றி) மற்றெவரின் சுமையையும் சுமந்து கொள்ளமாட்டான். (53:33) இக்கருத்து குர்ஆனின் […]

தலையங்கம்! நீதி தென்படுகிறது! நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த விசாரணையின் போக்கில் நீதி தென்பட்டுக் கொண்டிருப்பதில் திருப்தி அடைந்ததால் உருவான தலையங்கம் இது! எமது மே 2020 இதழில் “அமல்களின் சிறப்புகள்” ஆய்வுத் தொடரில் தப்லீக் ஜமாஅத்தினரின் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தான் கொரோனா வைரஸ் நோய் அதிகமாகப் பரவியதாக சில ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தி, பொய் என்பதை எழுதி இருந்தோம். ஊடகங்களின் பொய் செய்திகளை முன் வைத்து, “ஜாமியத் உலமாயே […]

எனதருமை முகநூல் இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு! அஹமது இப்ராஹீம்,  புளியங்குடி சமீப காலமாக சில வெறி பிடித்த சங்கிகள் நாத்திகர்கள் என்ற போர்வையில் இஸ்லாமிய மார்க்கத்தையும் அல்குர்ஆனையும் நமது உயிரினும் மேலான ரஹ்மத்தன்லில் ஆலமீனாகிய நபி(ஸல்) அவர்களையும் நம்மால் தாங்கமுடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகளைக் கொண்டும் மிகவும் கடுமையான வசைச் சொற்களைக் கொண்டும் முகநூலில் பதிவிடுகிறார்கள். இவ்வாறான நிராகரிப்பவர்கள் திட்டும்போது நாம் என்ன செய்ய வேண்டும் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கீழ்க்கண்ட அல்குர்ஆன் […]

வேற்றுமையில் ஒற்றுமை காணமுடியுமா? அஹமது இப்ராஹீம், புளியங்குடி ஜனநாயக இந்தியாவில் சமயம், மொழி, இனம் என்ற பிரிவுகளில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். எல்லோரும் ஒத்துக்கொள்வது மாதிரி அரசியல் அமைப்பு சட்டத்தை நிறுவி மக்கள் ஜனநாயக சமயசார்பற்ற இந்தியா என்று அழைக்கப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின் மூலம் இந்திய மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியர்களின் தாரகமந்திரமாக ஒலிக்கலாம். ஆனால் இந்தியாவில் வசிக்கக்கூடிய முஸ்லிம்கள் பல பிரிவுகளை அமைத்துக்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் ஒன்று […]

மிஸ்வாக் (பல் துலக்குதல்) சையித் முபாரக், நாகை நாம் மறந்த சுன்னாவில் ஒன்றுதான் மிஸ்வாக் செய்வது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தினமும் பலமுறை மிஸ்வாக் செய்பவர்களாக இருந்தார்கள்; அதை வலியுறுத்தியும் இருக்கிறார்கள். “பல் துலக்குவது பற்றி நான் மிகவும் அதிகமாக வலியுறுத்தியுள்ளேன்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) மரண வேளையில் : நபியவர்கள், தமது மரணத் தருவாயில் இருந்தபோது கூட பல் துலக்க நாடினார்கள் என்பதிலிருந்து மிஸ்வாக்கின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். (நபியவர்கள் […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

மனிதர்களே உங்களை படைத்த  ஒரே இறைவனை மட்டும் வணங்க மாட்டீர்களா? S.H. அப்துர்ரஹ்மான் மனிதர்கள் யாரை மட்டும் வணங்க வேண்டும்? “மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் (ஒரே) இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமும், (தூய்மையும்) உடையோராகலாம். (2:21) இறை நூலில் தெளிவாக படைத்த ஒரே இறைவனை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் நாத்திகர் தவிர மனிதர்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் மனிதர்களிடம் அதில் நேர்மையில்லை. படைத்தவன் […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் – 4 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லு  பாரீர்! புரோகித மவ்லவிகளில் ஆகக் கடைநிலையிலுள்ள புரோகிதர்கள், செத்தவர்களின் பெயரால் என்ன என்ன நாடகங்கள் நடத்துகிறார்கள், எத்தனை ஏமாற்றுப் பித்தலாட்டங்களைச் செய்கிறார்கள். மக்களிடமிருந்து காசு பிடுங்க எத்தனை வேஷங்கள் போடுகிறார்கள், எத்தனைக் கற்பனை கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை மடையர்களாக்கி ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள். கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எத்தனை பொய் தர்காக்களை, […]

புரோகித அரபி மதரஸாக்களுக்கு மாற்றாக…. உடனடித் தேவை ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழகம் முஹிப்புல்  இஸ்லாம் சர்ச்சைகள் : மதரஸாக்கள் குறித்த சர்ச்சைகள் இந்திய தேசத்தில் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் நேரம் இது! சகோதர சமயத்தவர்கள் மதரஸாக்கள் பற்றி பல்வேறு கோணங்களில் வினாத் தொடுக்க தொடங்கியுள்ளனர். விதண்டாவாதங்களை ஒதுக்கி அவர்களின் நியாயமான ஐயங்களைத் தெளிவுபடுத்துவது முஸ்லிம்களின் நீங்காக் கடமையாகும். அதற்குமுன், மதரஸாக்கள் பற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிதல் அவசியமாகும். வேரூன்றி விடுதல் : இந்தியாவில் […]