இதோ ஓர் ஜிஹாத்! அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம், திருச்சி ஜிஹாத் … இக்கட்டுரை விளக்கமல்ல… வேறு கோணப் பார்வை… இது ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்… அல்லாஹ் ஒரு பெண்ணை ஜிஹாத் செய்ய நாடியிருந்தான். அவளும் அல்லாஹ் வின் பாதையில் அவனது பொருத்தத்தை நாடி அறப்போரில் (ஜிஹாத்) பயணமானாள். மணித்துளிகள் சேர்ந்து நாளானது, நாட்கள் கைகோர்த்து வாரங்களாயின, வாரங்கள் சில சேர்ந்து மாதங்கள் என காலம் உருண்டோடியது. அவள் மேற்கொண்ட ஜிஹாதில் பலர் அவளோடு […]
சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும் எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை. நவம்பர் மாத தொடர்ச்சி…. இனி உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான் : அல்லாஹ்(மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி “சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அவர்கள் “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா? என்று கேட்பான். மக்கள் “எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், எதனை முன்னிலைப்படுத்தி என்னிடம் உதவி தேடுங்கள் என அல்லாஹ் கூறுகிறான்? பொறுமையை கொண்டு. அத். 2:45 பிர்அவ்னின் கூட்டத்தாரை எப்படி அழித் ததாக அல்லாஹ் கூறுகிறான்? கடலை பிளந்து மூழ்கடித்ததாக கூறுகிறான். குர்ஆன் : 2:50 இறுதி நாளையும், நம்பிக்கை கொண்டு நல்லறம் புரிபவரின் கூலி யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? தன்னிடம் இருப்பதாக கூறுகிறான். குர்ஆன் : 2:62 ஷைத்தான் விரும்புவது எது என அல்லாஹ் கூறுகிறான்? மது, சூதாட்டம் மற்றும் தொழுகையை தடுப்பது. அத். 5:91 […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதை ஆயிஷா(ரழி) அவர்கள் தடுத்துள்ளதாக சில மவ்லவிகள் கூறுகின்றனர். மேலும் பள்ளிவாசலுக்கு வந்து ஃபர்ளு தொழ வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இல்லை என்றும் கூறுகின்றனரே, இது சரியான சட்டமா? ஜஃபருல்லாஹ், சென்னை. தெளிவு : இந்தக் கூற்று தவறானது. “பெண்களின் செயல்களை நபி(ஸல்) அவர்கள் பார்த்தால், பனீ இஸ்ரவேலர்களின் பெண்கள் தடுக்கப்பட்டது போல, (நமது) பெண்களையும் பள்ளிக்கு வருவதை தடுப்பார்கள்” என அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்களின் […]
தலையங்கம்! வேலைவாய்ப்பு! வேலைவாய்ப்பு என்ற தலைப்பைப் படித்தவுடன் வேலை வாய்ப்பு செய்திகள் வெளியாகி இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். இது அதுவல்ல! தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் மத்திய மற்றும் தமிழக அரசும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் இழைக்கும் அநீதி ஒன்று நீதிமன்றத்தின் கதவைத் தட்டி இருக்கிறது. ஊட்டியிலுள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்று 2015ஆம் ஆண்டு கெமிக்கல் புராஸசிங் பிரிவில் 140 காலி பணியிடங்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கான எழுத்துத் தேர்வில் தமிழகத்திலுள்ள ஒட்டப்பிடாரம் […]
இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் – 3 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : புரோகித மவ்லவிகளின் கல்நெஞ்சம் பாரீர்! எல்லாம் வல்ல ஏகன் மனிதனைப் படைத்த ஆரம்ப காலத்திலிருந்தே அவனுக்கென்று ஒரு சரியான-நேரான வாழ்க்கை நெறியைக் கொடுத்துள்ளான். அந்த ஒரே வாழ்க்கை நெறியை நடைமுறையில் செயல்படுத்திக்காட்ட காலத்திற்குக் காலம் தனது தூதர்களை அனுப்பி தனது கண்காணிப்பில் (52:48) செயல்பட வைத்து அந்த வாழ்க்கை நெறியை படிப்பறிவே அற்ற பாமரனும் விளங்கும் வகையில் மிகமிக எளிதாக்கியுள்ளான். […]
இஸ்லாமிய இறையியல் படைத்தவனும், படைப்பினங்களும்…. படைத்தவனை மட்டும் ஒரே இறைவனாகக் காட்டும் இஸ்லாம்! முஹிப்புல் இஸ்லாம் மறு பதிப்பு : நபிமார்கள் அனைவரும் இறையடியார்களே! நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே! வல்ல அல்லாஹ் இதிலிருந்து எந்த நபிக்கும் விலக்களிக்கவில்லை. இதை வல்ல அல்லாஹ் இறுதி, இறைவேதத்தில் இடம்பெறும் நபிமார்கள் பெயர்களைக் குறிப்பிட்டே கோடிட்டுக்காட்டி உள்ளான். அந்த ஏகன் அல்லாஹ்வின் நல்லருளால், முந்தய ஆய்வில் இதை இந்திய முஸ்லிம்கள் சிந்தனைக்கு கொண்டு வந்துள்ளோம். இறைவனால் இறுதி இறைத்தூதராக தெரிவு […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 63 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் […]
இஸ்லாம் பார்வையில் வரவு, செலவு, சிக்கனம், சேமிப்பு… M.A. ஹனிபா அக்டோபர் தொடர்ச்சி….. பகுதி – 4 : அல்லாஹ்வே உணவளிப்பவன் : “எத்தனையோ உயிரினங்கள் அவை தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்வே உணவளிக்கின்றான். அவன் செவியுறுபவன், நன்கு அறிந்தவன்.” (அல்குர்ஆன்: 29:60, மேலும் பார்க்க : 11:6)ஷ எந்தவோர் உயிரினமாக இருந்தாலும் அதற்கு அல்லாஹ்வே உணவளிக்கிறான். மனிதனின் இம்மை வாழ்க்கைப் பயணம் ஒரு சாண் வயிறுக்கு உணவு தேடலிலிருந்து தான் துவங்குகிறது. “இரு […]
இயக்கவாதிகளுக்கு மீண்டும் ஓர் வேண்டுகோள்! அஹமது இப்ராஹிம், புளியங்குடி எனது அன்பான தவ்ஹீத் இயக்கங்களின் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழகத்தில் உண்மையான இஸ்லாம் எதுவென்றே தெரியாமல் ஹனஃபி. ஷாஃபி என்ற இரு வழிகெட்ட மத்ஹபுகள் அத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற மார்க்க விளக்கமில்லாத ஓர் அரசியல் கட்சி இவைகள் மட்டும்தான் இஸ்லாம் என நம்பி நாங்கள் வாழ்ந்து வந்தோம். ஆனால் உண்மையல்லாத இந்தப் போலியான மத்ஹபு மார்க்கத்தில் […]
சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும் எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. செப்டம்பர் மாத தொடர்ச்சி… சுவர்க்கத்தில் கடுமையான குளிரும் இல்லை: அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து மகிழ்ந்தவண்ணம் இருப்பார்கள். கடுமையான குளிரையும் அதில் அவர்கள் காணமாட்டார்கள். (76:13) குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்ட வேண்டிய தேவையும் இல்லை. (27:7, 28:28) வெள்ளிக்கிழமை தோறும் சுவர்க்கத்திலுள்ள கடைத்தெரு : சுவர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுவர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது […]
துன்பங்கள் துயரங்கள் ஏற்படும்போது…. கோட்டூர் கலீல் நமக்கு ஏதாவது துன்பம் அல்லது துயரம் ஏற்படும்போது, அதாவது நம் பள்ளிவாசல்கள் கயவர்களால் இடிக்கப்பட்டது போல், NRC/ CAA போன்ற கொடூர சட்டங்கள் அராஜக அரசுகளால் கொண்டு வருவது போல், ஆதாரங்களின் அடிப்படையில் உங்களுடையதுதான். ஆனால் அவர்கள் எங்களுடையது என்று சொல்கிறார்கள். அதனால் அவர்களிடம் கொடுத்து விடுவோம் என்ற அநீதியான தீர்ப்புகள் போன்ற துன்பம், துயரம் ஏற்படும்போது, ஆர்ப்பாட்டம் பண்ணு… போராட்டம் பண்ணு… கடிதம் எழுது…. ஈமெயில் அனுப்பு… திருச்சியை […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், ஸபவு வாசிகளுக்கு அல்லாஹ் அனுப்பிய பெருவெள்ளத்தின் பெயர் என்ன? அல்அரீம். அல்குர்ஆன்: 34:16 எவர்கள் வேதனையில் முன் நிறுத்தப்படுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வின் வசனங்களை தோற்கடிக்க முயற்சிப்பவர்கள். அல்குர்ஆன் : 34:38 அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான் என்று யாரை கூறுகிறான்? நிராகரிப்பர்களாகவே மரணிப்பவரை. அல்குர்ஆன் : 47:34 அற்ப அளவும் அநீதி செய்யப்படமாட்டார்கள் என யாரை அல்லாஹ் கூறுகிறான்? எவர்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை. […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : 1. நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். தஜ்ஜால் ரஷ்யாவில் ஒரு மலையில் இருப்பதாகவும் அந்த பகுதி, உயர செல்லும் வான ஊர்திகள் காணாமல் போவதாக சொல்கிறார்கள். உண்மையா? யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தை ஒடுக்கத்தான் நபி துல்கர்னைன் சைனா நாட்டில் மிக உயர்ந்த சுவர் எழுப்பினார்கள் என்ற செய்தியும் உண்மையா? சித்திக், அடியக்கமங்கலம், திருவாரூர். தெளிவு : தஜ்ஜால் ரஷ்யாவில் இருப்பதாக தாங்கள் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் கூட அதைப் பற்றி கருத்து தெரிவிக்க […]
தலையங்கம்! பிட்காயின் (BITCOIN) வலைதளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிட்காயின் (BITCOIN) மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? முஸ்லிம்கள் இதில் பங்கேற்கலாமா? என்பது போன்ற வினாக்கள் நம்மில் பலரிடம் தோன்றி, அதன் தொடராக சர்ச்சைகள் ஏற்பட்டு, “கூடும் – கூடாது’ என்ற (ஹலால், ஹராம்) ஃபத்வாக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையை இன்று காணமுடிகிறது. இது சம்பந்தமாக மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கவனிப்போம். அதற்கு முன், பிட்காயின் (BITCOIN) பற்றியும் அதன் நடப்புகள் பற்றியும் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். அவற்றை தெரிந்து […]
தொடர் – 2 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லுகள் : எல்லாம் வல்ல ஏகன் இறைவன் மனிதனைப் படைத்து அவனுக்கென்று ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்துள்ளான். அந்த ஒரே வாழ்க்கை நெறியை மனித வர்க்கத்திற்கு நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட இறைத்தூதர்களை காலத்திற்குக் காலம் அனுப்பி வைத்தான். அவர்களுக்கு நேர்வழியைக் காட்டும் நெறிநூல்களையும் அருளினான். இறுதி நெறிநூலான அல்குர்ஆனை அவனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளி அதைத் தெளிவு படுத்தும் பொறுப்பை தானே […]
இஸ்லாம் பார்வையில் வரவு, செலவு, சிக்கனம், சேமிப்பு… M.A. ஹனிபா பகுதி – 1 “நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரானதின்பாலே வழிகாட்டுகின்றது. நல்லறங்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக மாபெரும் கூலி உண்டு என நன்மாராயம் கூறுகின்றது. (அல்குர்ஆன்: 17:9) “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாகவும் அளவோடும் வழங்குகின்றான். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்ளும் சமூகத்திற்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன” (அல்குர்ஆன்: 30:37, மற்றும் 17:30) “நெருங்கிய உறவினருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவரவர் உரிமையை வழங்குவீராக! […]
அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 62 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் […]
பெண்கள் பள்ளிக்கு வரலாமா? முஹம்மது ஹனீபா, திருச்சி. பெண்களுக்கு ஆத்மாவே இல்லை என்று சொல்லி கொண்டிருந்த காலத்தில், பெண்களை போகப் பொருளாகக் கொண்டிருந்த மக்கள் மத்தியில், பெண்களுக்கு சொத்துரிமை, திருமண ஒப்புதல் உரிமை, திருமண ரத்து உரிமை, போரில் கலந்து கொள்ளும் உரிமை, வாரிசுரிமை போன்ற இன்ன பிற உரிமைகளை தரப்படாத அந்த காலத்தில், அல்லாஹ் தன் இறுதித் தூதர் மூலமாக ஆண்களுக்கு நிகரான அனைத்து உரிமைகளையும், உயர்வையும் வழங்கினான். சுபஹானல்லாஹ்! அல்லா நீதி தவறாதவன் என்று […]
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்! அப்துல் ஹமீத், திருச்சி உலகில் இஸ்லாத்தின் பெயரால் இனிமேல் நடைபெறவிருக்கின்ற சம்பவங்களை இறைநெறி நூல் புனித குர்ஆனிலிருந்தும், அவற்றிற்கான விளக்கங்களை அல்லாஹ் (ஜல்) அறிவித்தபடி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஸஹீஹான ஹதீஃதுகளிலிருந்தும் அறியும் நோக்கோடு, சென்ற இதழில் தஜ்ஜாலைப் பற்றி ஐயமும், தெளிவும் பகுதியில் எழுதியிருந்தோம். அதன் தொடர்பாக தஜ்ஜாலைப் பற்றிய இன்னும் சில செய்திகளையும், யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தார் பற்றிய செய்திகளையும், இன்ஷா அல்லாஹ். இப்போது அறிந்து கொள்வோம். யஃஜூஜ் […]