ஐயமும்! தெளிவும்!! ஐயம் : அக்டோபர் 2019 இதழ் 32 பக்கத்தில் அலாஸ்காவிற்கும், கனடாவிற்கும் இடையில் கிப்லா மாறவதாகக் கூறுகிறீர்கள். இரு நாடுகிளின் கிப்லாவின் திசைகள் எது? ஹாஸிக் முகம்மது, சென்னை தெளிவு : கிப்லாவின் திசைகள் சர்வதேச தேதிக்கோட்டில் மாறுவதாக ஹிஜ்ரி கமீட்டி கூறி வந்தது. அதனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு பார்த்தபோது அது உண்மை இல்லை என்று தெரிய வந்தது. உண்மையில் அலாஸ்காவிற்கும், கனடாவிற்கும் இடையே உள்ள நேர்கோட்டில் மாறுகின்றது. அதுதான் சரியான இயற்கை யான தேதிக்கோடு ஆகும். […]
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் மார்ச் 2020 ரஜப்- ஷஃபான் 1441 தலையங்கம்! அமல்களின் சிறப்புகள்… அறிந்து கொள்வோம்… ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!! இறைவனின் பார்வையில் இருந்து வீழ்ந்துவிட்ட இஸ்லாமிய சமூகம் மறுமலர்ச்சி பெற ஒரு வெற்றி ஃபார்முலா!! இஸ்லாம் சொல்லும் தேசப்பற்று! உங்கள் இறைவனிடமிருந்து வந்த பெரும் சோதனை! கைக்கூலியின் விபரீதங்களும்! அதை ஒழிக்க வேண்டுகோளும்!! சுவர்க்கம் என்பதும் மறைவான இறைநம்பிக்கையில் உள்ளதாகும்! ஷ *********************************************** தலையங்கம்! சீரழியும் உத்திரபிரதேசம்! உத்திரபிரதேசத்தில் யோகி […]
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் பிப்ரவரி 2020 ஜமாஅத்துல் ஆகிர் – ரஜபு 1441 தலையங்கம்! முஸ்லிம்களின் போலி ஒற்றுமை வெற்றியைத் தராது! “மனித யூகம் மார்க்கம் ஆகாது! அமல்களின் சிறப்புகள்… ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!! ஸலவாத் ஏன் கூறவேண்டும்? சுவர்க்கம் என்பது மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்! அறிந்து கொள்வோம்… இஸ்லாமியக் கொள்கை விளக்கம… அழைப்புப் பணி! படிப்பினை… ஷ ********************************************************* தலையங்கம்! எம் தாய் நாட்டின் அவலம்! எம் தாய்நாடு இந்தியா, தன்னுடைய […]
நபி வழியில் நம் தொழுகை தொடர்: 46 அபூ அப்திர்ரஹ்மான் என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) ஜும்ஆ பிரசங்கம் சுருக்கமாகவும், தெளிவாகவும் இலக்கிய நயத்தோடும் இருத்தல். *ஒரு முறை அம்மார்(ரழி) அவர்கள் எங்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் இலக்கிய நயத்துடன் ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள். அவர்கள் மிம்பரில் இருந்து இறங்கியவுடன் நாங்கள் அவர்களை நோக்கி, தாங்கள் சிறந்த வகையில் சுருக்கமாக பேசி விட்டீர்கள். சற்று விரிவாக பேசி […]
குர்ஆனின் நற்போதனைகள் : அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே! தொடர்: 21 A. முஹம்மது அலி பகுதி 7 நபி(ஸல்) அவர்களுக்கே எச்சரிக்கை! 1. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் ஊகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் பொய்யான கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். (6:116) 2. நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நன்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், […]
ஹதீஸ் பெட்டகம் தொடர் : 7 A. முஹம்மது அலி, அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு எதிலும் சிரமம் தரவில்லை. எவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறாரோ அவருக்கு அழகான நற்கூலி இருக்கிறது. இன்னும் நமது கட்டளைகளில் (சிரமமற்ற) இலகுவானதை அவருக்கு நாம் கூறுவோம். (18:88) எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ அவருடைய காரியத்தை அவன் (அல்லாஹ்) எளிதாக்குகிறான். (65:4) என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! (20:26) அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை […]
மனிதன்! புலவர் செ. ஜஃபர் அலி, பி, லிட், நாகப்பட்டினம். மனிதன் என்பவன் மாசுமருவற்றவனும் அல்லன்; மாசே உருவானவனும் அல்லன்; இவ்விரண்டுக்கும் இடைப்பட்டவனாகவே மனிதன் படைக்கப்பட்டான். இவண், “மனிதன்” என யான் குறிப்பிடுவது ஆண், பெண் இருவரையும் தான். மனித இனத்தைப் பற்றி திருக்குர்ஆன் துணைக் கொண்டு ஆய்வதே இக்கட்டுரையின் விழுமிய நோக்கமாகும். உலக அளவில் நொடிக்கு நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவில் மட்டும் ஒன்றரை நொடிக்கு ஒருக் குழந்தைப் பிறக்கிறது. இன்று உலகின் மொத்த மக்கள் […]
வல்லாண்மைக் (FASCISM) கட்சியின் வெறி உருவம். அபாயம் அண்மித்து விட்டது: விசுவ ஹிந்து பரிஷத்தின் திட்டங்கள் தடை செய்யப்படாமல் நடந்தேற விட்டு விடப்பட்டாலோ, அன்றி ஜனநாயக அறசியல் கட்சிகளுக்காக விசுவ ஹிந்து பரிஷத் விரித்துள்ள வலையில் அவை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தாலோ நம் பாரத நாடும் வருங்காலத்தில் (மேற்கூரிய) அவ்வழியிலேயே நடைப்போட நேரிடும் என்பதை எளிதாக உணரமுடியும். இந்த ஆபத்து உடனடியாக அல்லவெனினும் வெகு அண்மையில் நிகழவுள்ள சாத்தியமும் கவலைக்குரிய விளைவுகளை அண்மையில் நிகழவுள்ள சாத்தியமும் கவலைக்குரிய விளைவுகளைக் […]
ஆதாரம் அவர்களே தருகிறார்கள்! இப்னு ஹத்தாது மதரஸாக்களின் கல்வி முறை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைக்கப்பட வில்லை. ஆலிம்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் மவ்லவிகளுக்கு உண்மையான மார்க்க ஞானம் இல்லை; அவர்கள் தங்களை மார்க்கத்தின் ஏகபோக உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொள்ள தகுதியும் உரிமையும் இல்லை; அவர்கள் சில வருடங்கள் மதரஸாக்களில் தங்கியிருக்கும் காலக்கட்டத்தில் அவர்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டு குருட்டு பக்தர்களாகி, முன்னோர்களின் குர்ஆன், ஹதீஸுக்கு முரணான போக்குகளை எல்லாம் மார்க்கமெனக் கண்மூடி நம்பிச் செயல்படுகின்றனர்; […]
ஐயமும் தெளிவும் ஐயம் : உடல் சுத்மாயிருந்து உடை சுத்தமில்லாமல் இருந்தால் தொழுவதுக் கூடுமா? உவைஸுல்கர்னி, அல்கோபார் தெளிவு : தொழுகைக்கு உடல், உடை, இடம் ஆகியவை சுத்தமாயிருத்தல் வேண்டும். உமது ஆடைகளை நீர் சுத்தப்படுத்திக் கொள்வீராக!” (74:4) இந்த வசனத்தின் அடிப்படையில் ஆடைகள் பரிசுத்தமாயிருத்தல் அவசியம் என்பது தெளிவாகிறது. *ஒரு முறை ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் நான் எனது மனைவியுடன் கலந்துறவாடும் சமயத்தில் அணிந்துள்ள ஆடையில் தொழுவதுக் கூடுமா? என்று அவர் கேட்கும் போது (நான் அதைக்) கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு […]
தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பதும் இஸ்லாமியக் கடமையல்லவா? தொடர்-4 H. அப்துல் சமது உபைதா பின் தாபித்(ரழி) அவர்களின் அறிக்கையின் படி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடமிருந்து பெற்ற உறுதிமொழியில் மற்றும் பல விஷயங்களோடு கீழே குறிப்பிடப்படுவது ஒரு முக்கிய அம்சமாக உட்ப்படுத்தப்பட்டிருந்தது என அறிகிறோம். …..நாங்கள் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்(வையும் அவனது மார்க்கம்) சம்பந்தப்பட்ட காரியங்களில் எங்களைக் குறை கூறுபவர்களின் வெறுப்பைச் சட்டை செய்யமாட்டோம்’ என்று எங்களிடம் உறுதிமொழி பெற்றார்கள். (முஸ்லிம், புகாரீ) பிரச்சார மேடை முதல் […]
நபி வழியில் நம் தொழுகை தொடர் : 46 அபூஅப்திர் ரஹ்மான் என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) ஜும்ஆவுக்கு முன் பின் சுன்னத்தான தொழுகையின் விபரம்: ஜும்ஆ தொழுகைக்கு முன்னால், சுன்னத்து என்ற அடிப்படையில் தொழுவதற்கு எதுவுமில்லை. ஆனால் இமாம் மிம்பரில் ஏறிய பிறகு வருவோர் உள்பட அதற்கு முன்னால் வந்தவர் அனைவரும் “தஹிய்யத்துல் மஸ்ஜித்” என்னும் பள்ளியின் காணிக்கைத் தொழுகை 2 ரகாஅத்துக்கள் தொழுதுக் […]
நாஸ்திக நண்பர்களே! நாசத்தை தவிர்ப்பீர்!! தொடர் : 11 கே.எம். ஹெச், அபூ அப்தில்லஹ் செப்’89 இதழில், நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைக் கூறி இருந்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும், மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாரரும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள், ஆஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி […]
குர்ஆனின் நற்போதனைகள் தொடர் : 20 அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே: A. முஹம்மது அலி வழிபடாதீர்கள்; பின்பற்றாதீர்கள்; 1. நம்பிக்கை (ஈமான்) கொண்டோரே; காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டால், அவர்கள் உங்களை உங்கள் குதிகால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (இறை நம்பிக்கையிலிருந்து ) திரும்பி விடுவீர்கள் (3:149) 2. நீங்கள் வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிபடாதீர்கள் (26:151) 3. நம்பிக்கை (ஈமான் கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவினரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின் […]
ஹதீஸில் இடைச்செருகலானவையும்! பலகீனமானவையும்!! (48) ‘நீங்கள் உலமாக்களை (சன்மார்க்க அறிஞர்களைப்) பின்பற்றி நடவுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தாம் இவ்வுலகத்தின் தீபங்களாகவும் மறுமையின் விளக்காகவும் இருக்கின்றனர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (X) இதை அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக “தைலமி” அவர்கள் தமது “முஸ்னதுல் பிர்தவ்ஸ்” எனும் நூலில் இடம் பெற செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் காஸிமு பின் இப்றாஹிம்’ என்பவர் இடம் பெற்றுள்ளார், “இவர் சரியான பொய்யர்’ என்பதாக தாருகுத்னீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவே […]
ஐயமும், தெளிவும் ஐயம் : சில அவசியத்தை முன்னிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு திருமணம் செய்து கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறதா? அந்நஜாத் வாசகர், வாணாதிராஜபுரம். தெளிவு : முறைப்படி மார்க்க அடிப்படையில் நிக்காஹ் செய்து விட்டு, அவசியத்தை முன்னிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவுத் திருமணம் செய்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஐயம்: தப்லீக் தஃலீம் கிதாபுகளில் இது செய்தால் இத்தனை நன்மை, இது செய்தால் இத்தனை பாவம் என்பதாக பட்டியல் போட்டு காட்டப்பட்டுள்ளதே இவ்வாறு ஒன்றை எதிர்ப்பார்த்து அமல் […]
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! *தவ்ஹீத்வாதிகளால் வெளியிடப்பட்ட “தர்கா முரசு” என்ற புத்தகத்தில் ஆலிம்களையும் அவ்லியாக்களையும் கேலிசித்திரங்களாக வரைந்தும், கிண்டலான வாசகங்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளதே! இதுதான் தவ்ஹீதை போதிக்கும் முறையா? கே. சர்புதீன், பெருவளநல்லூர். இன்று ஆர்வமாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களில் பெரும்பான்மையினரைப் பிடித்துள்ள ஒரு மயக்கம் பற்றி வினா எழுப்பியுள்ளீர்கள். அந்த மயக்கத்தைப் போக்க மிக நீண்டதொரு தெளிவான விளக்கத்தைத் தர நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்று அந்தச் சகோதரர்கள், தங்களில் ஏற்ப்பட்டுள்ள மயக்கம் காரணமாக செய்யும் தவறுகள் குர்ஆன், ஹதீஸை முறையாகவும் […]
அவ்லியாக்களை அவமதிக்காதீர்! பரங்கிப்பேட்டை, கு. நிஜாமுத்தீன், பொட்டல் புதூர் M.A. ஹனீபா. இஸ்லாத்தின் இனிய சகோதர சகோதரிகளே….! தமிழகத்தில் சத்தியப் பிரச்சாரம் துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகிவிட்டன. இந்த குறுகிய காலத்தில் ஆயிரம் வருடங்களாக ஆழக் குழிதோண்டி புதைக்கப்பட்ட எத்தனையோ உண்மைகள், நியாயங்கள், வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு விட்டன. கற்றுவிட்டோம் என்று தம்மை தாமே விளம்பரப் படுத்திக் கொண்ட மெளலவி கும்பலிடம் மார்க்கத்தை அடமானம் வைத்து, மாதாமாதம் பாத்திஹா, கந்தூரி, உரூஸ் என்று வட்டிக்கட்டிக் கொண்டு தான் இருந்தோம். […]
இவர்கள் உலமாக்களா? உளறும் மாக்களா? தெள்ளத் தெளிவாக தெரியும் உண்மையை மறைப்பவனைப் பார்த்து நாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறான் என்போம். அதாவது உண்மையை மறைக்க முயல்பவனுக்கு இக்கூறு சரியாகலாம். ஆனால் எதனையும் மறைக்காமல் அப்படியே எடுத்துரைத்து விட்டு அதற்கு விளக்கமளிக்கையில் மாற்றிச் சொல்பவர்களை என்னென்று விளிப்பது. இங்கு நமக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு இடையன் தன்னிடமுள்ள ஒரு ஆட்டை விற்க சந்தைக்கு சென்று கொண்டிருந்தான். அவன் ஒரு அறிவிலி. எனவே அவனை ஏமாற்றி […]
ஐயமும், தெளிவும் ஐயம்: நபி(ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் அவர்களின் நிழல் கீழே விழுவதில்லை காரணம் அவர்களுக்கு மேகம் குடை பிடித்துக் கொண்டிருந்தது என்று கூறுகிறார்களே இது உண்மையா! பி.ஷாஹுல் ஹமீது, கோவை. தெளிவு: தாங்கள் கூறுவதுபோல், நபி(ஸல்) அவர்களின் நிழல் பூமியில் விழுவதில்லை என்பதற்கும், இவ்வாறே அவர்கள் மணலில் நடந்து சென்றால் பாதம் பூமியில் பதிவதில்லை. பாரையில் அவர்கள் நடந்து செல்லும் போது பாதங்கள் அதில் பதியும் என்றெல்லாம் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கூறப்படும் கூற்றுக்கள் அனைத்தும் கப்ஸாவும், […]