புரசை மவ்லவி இவற்றையும் மறுப்பாரா? ஹம்துல்லாஹ் ஜமாலி வாசக நேயர்களே! ஜூன் இதழில் சென்னை தோழர் அபூஹாமிது எழுதி வெளிவந்த முல்லாக்களின் கிஸ்ஸாவில் “இமாம்களை அவமதிப்பதும், மக்களைக் குழப்புவதும் யார்?” என்ற ஆக்கத்தை படித்திருப்பீர்கள். அதில் புரசை மவ்லவியின் கப்ஸாக்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் விமர்சித்திருந்தோம். இவ்விதழில் புரசை மவ்லவி அக்கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்தும், விமர்சித்தும் எழுதியிருந்த கடிதத்தைக் கண்டீர்கள் (பக்கங்கள் 62 முதல் 66). இக்கடிதத்தில் தான் அவ்விதம் கூறவில்லை என ஓரிடத்தில் கூறுகிறார். அதே […]
ஆதாரப்பூர்வமான சரித்திர ஏடுகளிலிருந்து….. “AMAMA’ சுன்னத் வல்-ஜமாஅத் என தங்களை அழைத்துக் கொள்ளும் பிரிவார் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றியே ஆகவேண்டும். அவர்களே உண்மை முஸ்லிம்கள். இதனைப் பின்பற்றாதவர்கள் உண்மை முஸ்லிம்களல்லர் எனக் கூறி வருகின்றனர். நான்கு மத்ஹபுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவது தான் குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றியதாக – பற்றிப் பிடித்ததாக – ஆகுமென நம்பிச் செயல்பட்டு வருபவன் நான் என புரசை மவ்லவி நிஜாமுத்தீன் போன்றோரும், அவரது முல்லா சகாக்களும் கூறி வருகின்றனர். இவர்களது […]
ஆஷூரா தினத்தைப் பற்றிய கதையளப்புகள்! ஹாபிஸ் மிஸ்பாஹி முஹர்ரம் எனபதற்கு “புனித மிக்கது” என்பது பொருள். இதன் புனிதத்திற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைந்திருக்கிறது. அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ரமழானுக்குப் பின் நோன்புகளில் மிக்க விசேஷமான நோன்பு ஷஹ்ருல்லாஹ்-அல்லாஹ்வின் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்லான தொழுகைக்குப் பின் மிக்க விசேஷமான தொழுகை இரவுத் தொழுகையாகும். (முஸ்லிம்) அபூ கதாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆஷூரா தினத்தன்று நோற்கப்படும் ஒரு நோன்பானது, அல்லாஹ் […]
ஹதீஸ்களில் இடைச்செருகலானவையும், பலகீனமானவையும் – அபூரஜீன் தொடர்: 3. 25. “எனது தோழர்கள் எல்லாம் நட்சத்திரங்களைப் போன்றோரேயாவர். அவர்களில் எவருடைய சொல்லை நீங்கள் ஏற்று நடப்பினும் நேர்வழியடைந்து விடுவீர். இவ்வறிவிப்பை இப்னு உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக “நாஃபிஉ’வின் வாயிலாக இப்னு அப்தில் பர்ரு” பதிவு செய்துள்ளார்கள். மேலும் இதைப் பதிவு செய்த அவர்களே “நாஃபிஉ”விடமிருந்து இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் நம்பகமற்றவர் என்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். “நாஃபிஉ”விடமிருந்து இதைத் தாம் கேட்டதாகக் கூறும் “ஹம்ஸா” என்பவர் […]
நபிவழியில் நம் தொழுகை தொடர் : 42 அபூ அப்தீர்ரஹ்மான் சென்ற இதழின் தொடர் : “பித்அத் முதலிய தவறுகள் செய்யும் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதன் நிலை: * ஒருமுறை ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அத்தகையவருக்குப் பின்னால் அவருடைய “பித்அத்” அவரிடமே இருக்கும் நிலையில் தொழுவீராக! என்றார்கள். ஹிஷாமுபின் ஹஸ்ஸான்(ரஹ்), முஸ்னத் ஸயீதுபின் மன்சூர்) * ‘அதிய்யுபின் கியார்” என்பவர் உஸ்மான்(ரழி) அவர்கள் […]
குர்ஆனின் நற்போதனைகள்: தொடர்:17 அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே! ஏ. முஹம்மது அலி, எம், ஏ.,பி.எட்.,எம். பில்., 1. (நபியே!) நீர் கூறும்! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். (3:31) 2. (நபியே!) நீர் கூறுவீராக. நீங்கள் எனக்கு வழிபட்டு நடப்பீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான். (48:16) 3. அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள். அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவன். (58:13, 33:33) 4. நீங்கள் இறை நம்பிக்கையுடையோர் (மூஃமின்)களாயின் […]
ஹதீஸ் பெட்டகம் தொடர் :4 ஏ. முஹம்மது அலி. எம்.ஏ.பி.எட்,எம்.பில். ஹஜ்ஜின் சிறப்பு: ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும், மெலிந்த ஒட்டகங்களின் மீதும் வெகு தொலைவிலிருந்து உம்மிடம் வருவார்கள். (22:27) அரஃபாத்திலிருந்து திரும்பும் போது “மஷ்அருல் ஹராம்” என்னும் இடத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்) செய்யுங்கள். உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். (2:198) ரசூல்(ஸல்) கூறினார்கள்: வானவர்(மலக்கு)களிடம் அல்லாஹ் அரபாவில் கூடியிருக்கும் ஹாஜிகளைக் காட்டி (சிலாகித்துக்) கூறுகிறான். புழுதிபடிந்த, கலைந்த […]
இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்! (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையேப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3) அல்லாஹ்(ஜல்) வின் இவ்வேத வசனத்தின் கருத்தின்படி நாம் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும் அவனால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்களை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்பி பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக நாம் பகிரங்கமான வழிகேட்டிலேயே ஆகிவிடுவோம். வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் […]
ஹதீஸ்களின் இடைச்செருகலானவையும், பலகீனமானவையும் தொடர் :2 அபூரஜீன் இப்பகுதியில் ஹதீஸ்களைப் பற்றி இடைச்செருகலானவை, பலகீனமானவை என்று விமர்சிக்கப்படுவதெல்லாம் “முஹத்தீஸீன்” -ஹதீஸ் கலா வல்லுநர்களே அன்றி நாம் அல்ல. விமர்சனத்திலும் நமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏற்கனவே இமாம் தஹபீ, இமாம் ஹாபிழ் இப்னுஹஜர்(ரஹ்) ஆகியோர் முறையே மீஜானுல் இஃதிதால், தஹ்தீபு அகிய நமது நூல்களில் அறிவிப்பாளர்களைப் பற்றி விமர்சித்துள்ள விமர்சிப்பை அடிப்படையாகக் கொண்டே ஹதீஸ்கள் விமர்சிக்கப்படுகின்றன. 16. “தன்னை அறிந்தவன் தனது ரட்சகனை அறிவான்” இது அடிப்படையில்லாத ஓர் […]
தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பது இஸ்லாமியக் கடமையல்லவா? Er. H. அப்துஸ்ஸமது B.E., M.Sc.(Eng) சென்னை உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கத் தலைபடும்போது தன்மையை ஏவுவது எத்துணை அத்தியாவசியமோ அத்துணை இன்றியமையாதது தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பதும், இப்பணியை செம்மையாக செய்துவரும் அந்நஜாத்தை அதற்காகவே விமர்சிக்கவும், வெறுக்கவும், ஒதுக்கவும் முன்வருகின்றனர். நம் சகோதரர்கள். ஆலிம்களைக் குறை கூறுகிறது, வசைப்பாடுகிறது என்றும் சமுதாயத்தில் குழப்பத்தையும், பிரிவினையையும் உருவாக்கும் ஆக்கங்களையேத் தருகின்றது என்றும் தனிப்பட்டவர்கள் மாத்திரமல்லாமல், நன்னோக்கோடு இயங்கும் இயக்கங்களும் விமர்சிக்கின்றன. நன்மையை […]
முல்லாக்களின் கிஸ்ஸா இமாம்களை அவமதிப்பதும், மக்களை குழப்புவதும் யார்? அபூ ஹாமிது, சென்னை. மத்ஹபுகள் இன்றியமையாதவை என்ற தம் முரட்டு வாதத்தை நிலைநாட்ட நாடி, அல்லாஹ் நல்கிய திருக்குர்ஆனுடைவும், அவனது திருத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வழிமுறைகளுடையவும் ஆற்றலையும் தரத்தையும் தாழ்த்தி, “மக்காச்சுடர்” ஆசிரியப் பெருந்தகை சுலைமான் பாக்கவி அவர்கள் எழுதியவைகளை மறுத்தும், உண்மையை விளக்கியும் சென்ற இதழில் எழுதினோம். இமாம்களை அவமதிப்பவர்கள் என்றும் குழப்பவாதிகள் என்றும் நம்மை மக்கள் நம்பும் படி செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்பவர்களில் […]
சிறப்பின் சிகரம் முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்(ஜல்) மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் (தாமாக) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்” (22:75) ஒருக் குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் நாட்டில் எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரிலும் அல்லாஹ்(ஜல்) ஒருவரை மட்டும் தன் (இறைத்)தூதராய் தெரிவு செய்கிறான். (இறைத்)தூதுத்துவம் என்பது இறைவனால் அருளப்படுவது அன்றி, மனித முயற்சியால் பெறப்படுவதன்று. (இறைத்)”தூதுத்துவம்” அருளப்படுவதன் மூலம் இறைவனால் இறைத் தூதர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள். மனித சமுதாயத்தில் முதல் மனிதர் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய பள்ளிகளில் கிடைக்கும் நன்மையில் ஏற்றத் தாழ்வு இருப்பதாகக் கூறப்படும் ஹதீஸின் நிலை என்ன? ரஜின் அஹ்மத், சென்னை தெளிவு : “எனது இப்பள்ளியில் தொழும் ஒரு தொழுகையானது இதரப் பள்ளிகளில் தொழும் 1000 தொழுகைகளை விட சிறப்பானதாகும். எனினும் மஸ்ஜிதுல் ஹராம் நீங்குதலாக” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்) ஆகவே இவ்வறிவிப்பின்படி மஸ்ஜித் நபவியில் தொழுவதைவிட மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது சிறப்புமிக்கது […]
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவான வேதமும் உங்களிடம் வந்துள்ளது(5:15). இந்த வசனத்தில் பேரொளி என்பது எதைக் குறிக்கிறது? நபி(ஸல்) அவர்களை ஏன் குறிக்காது? எம்.ஏ.ஹாஜி முஹம்மது, நிரவி அல்ஹம்துலில்லாஹ்! தங்களைப் போன்றோர் குர்ஆனை புரட்ட ஆரம்பித்து விட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள இறைவசனத்தை முழுமையாக பார்ப்பீர்களேயானால் பேரொளி எது என்பது தெளிவாகிவிடும். குர்ஆனே குர்ஆனுக்கு தப்ஸீர் (விளக்கம்) என்பதை மறந்துவிடாதீர்கள். இப்போது முழு ஆயத்தைப் பாருங்கள். வேதமுடையவர்களே! நிச்சயமாக உங்களிடம் நம்முடைய தூதர் […]
நபி வழியில் நம் தொழுகை தொடர்: 40 அபூ அப்திர் ரஹ்மான் “என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) சென்ற இதழின் “இமாமைப் பின்பற்றித் தொழுவோர் எந்தச் செயலிலும் இமாமை முந்துவது கூடாது” எனும் தலைப்பின் தொடர் : * ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தொழுகை முடிந்தவுடன் எங்களை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு இமாமாக இருக்கின்றேன். ஆகவே நீங்கள் […]
குர்ஆனின் நற்போதனைகள்: தொடர்: 15 அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே! ஏ. முஹம்மது அலி, எம்.ஏ.,எம்.பில்., 1. நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டு இறங்கி விடுங்கள்: என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறவுரைகள்) வரும்போது யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தைகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (என ஆதிமனிதர் ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பூமியில் இறக்கப்பட்ட போது அல்லாஹ் உரைத்தது) (2:38) 2. நிச்சயமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திலும் “அல்லாஹ்வையே வணங்குங்கள்; “ஷைத்தானை […]
ஹதீஸ் பெட்டகம் தொடர்: 2 A. முஹம்மது அலி M.A., B.Ed., M.Phill 4. ஜகாத்துல் பித்ர்: நீங்கள் விரும்ப கூடியவற்றிலிருந்து செலவு செய்கின்றவரை நீங்கள் நன்மையை அடையவே முடியாது. (3:92) முஸ்லிமான அடிமை, அடிமையல்லாதவன், ஆண், பெண், சிறியவர், பெரியவர், இளைஞர் அனைவர் மீதும் நோன்பு(பெருநாளன்று தரவேண்டிய பித்ரு) தர்மத்தை ரசூல்(ஸல்) அவர்கள் (பர்ளு) கடமையாக்கினார்கள். பேரித்தம் பழத்திலிருந்து ஒரு “சாஉ” அல்லது கோதுமையிலிருந்து ஒரு “சாஉ” பித்ர் தர்மம் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள். மற்றொரு அறிவிப்பின்படி : ஈத்(பெருநாள்) தொழுகைக்கு […]
யா அல்லாஹ் ! புலவர்.செ. ஜஃபர் அலி,பிலிட்., நாகப்பட்டினம். அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் நம்முடைய தேவைகள் அனைத்தையும் இறைவனிடமே முறையிடக் கூடியவர்களாக இருக்கின்றோம். தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும், உனக்கே நாங்கள் அடிப்பணிகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவித் தேடுகிறோம்; எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக” என்று பணிவுடன் இறையஞ்சுகிறோம். (1:4,5) படைத்தவனிடம் தானே படைப்பினங்கள் இரு கையேந்த வேண்டும் அதுதான் முறையுங்கூட! முறையான இறையஞ்சுதல் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுவது உறுதி! நம்முடைய முறையீடுகள் தூய்மையானதாகவும்-உள்ளத் […]
மத மாற்றம்! அபூ அப்துல்லாஹ் 21ம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் உலகெங்கும் “இஸ்லாம்” பற்றிய சிந்தனை உணர்வு மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. அதுவும் 19-ம் நூற்றாண்டில் தோன்றிய கம்யூனிஸம் பற்றி மக்கள் நம்பிக்கை இழந்தப்பின் அவர்களிடையே இஸ்லாமிய சிந்தனை ஏற்ப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில் மக்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். இதனை செய்திப் பத்திரிக்கைகள் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்துடன் தங்கள் இதழ்களில் இடம் பெற செய்து வருகின்றனர். […]
சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனாலும்! அபூ ஃபாத்திமா உண்மையிலேயே சிந்தனையாளர்களான இவர்களுக்கு சென்ற இதழில் பார்த்ததுப் போல் இந்த தடுமாற்ற நிலை ஏன் ஏற்ப்பட்டது என்பதை விரிவாகப் பார்ப்போம். இகாமதுத்தீன்” என்றால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் என்று இவர்களுக்குத் தவறாகப் போதிக்கப்பட்டு விட்டது. இந்த தவறான போதனை காரணமாக இவர்களது சிந்தனையெல்லாம் உலகிலுள்ள நாடுகளின் ஆட்சிகளைப் பிடிப்பதிலேயே சுழன்று வருகின்றது. அது விஷயமாக எந்த ஒரு நாட்டிலாவது எதாவதொரு முயற்சி நடந்தாலும் அது இவர்களை பெரிதும் […]