விமர்சனம் : அந்நஜாத் வாசகர்களில் ஒரு கூட்டம் தான் இன்று “அஹ்லே குர்ஆன்” காரர்களுடன் இணைந்திருக்கிறார்கள் இது அந்நஜாத்தின் சுய சிந்தனையாளர்களை உருவாக்கும் பணிக்கு கிடைத்த தோல்வி என்கிறேன். ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? அபூ நபீல், தேங்காய்பட்டணம் விளக்கம் : நிகழ்கால நடப்பின் மீதான தங்க ளின் ஐயம் அருமையான சிந்தனை! ஏற் பதா? மறுப்பதா? என்பதை குர்ஆன், ஹதீஃத் கொண்டு பார்ப்போமா! இந்நிகழ்வை, சுய சிந்தனையாளர்களை உருவாக்கும் எமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கருதுகிறோம். எப்படி […]

ஐயம் : குர்ஆனை மிகவும் எளிதாக நாம் ஆக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 54:17) எளிதாக்கப்பட்ட குர்ஆனை விளங்கிக் கொள்ள அதன் மொழியாக்கம் (தர்ஜுமா) மட்டும் போதுமா? இல்லை அதன் விரிவாக்கமும் (தப்ஸீர்) தேவையா? அபூ நபீல், தேங்காய்பட்டணம் தெளிவு : எளிதாக்கப்பட்ட குர்ஆன் வசனங்களை விளங்கிக்கொள்ள மொழியாக்கம் போதுமானதே. வசனங்களை விளக்குவதற்கு அல்லாஹ்வால் அங்கீகாரம் பெற்றவர் கள் அழகிய முன்மாதிரியை பெற்றுள்ள (33:21) அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே. எளிதாக்கப்பட்ட வசனங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் […]

பழங்களின் பல்சுவைக்கு காரணியான மழை… உமிழ்….நீர்! (Water may be key  to understanding  sweetness!) எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7 …..பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சை தோட்டங்களையும், விளை நிலங்களையும்,  கிளைகள் உள்ளதும், இல்லாததுமான பேரீச்சையையும் அவனே உண்டாக்கினான்.  (இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை, வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கிறோம். நிச்சயமாக, இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.     – அல் குர்ஆன்.13:4. […]

ஐயம் : ஒளூ செய்வதற்கு முன் பல் விளக்குவது நபிவழி. ஒளூ செய்து சுத்தம் செய்த பிறகு தொழுகையில் நிற்கும்பொழுது மீண்டும் மிஸ்வாக் செய்கிறார்கள் சிலர்; செய்துவிட்டு நஜீஸான குச்சியை தன் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு தொழுகி றார்கள். இதற்கு ஆதாரம் உண்டா? னி.அபூ நபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : நடைமுறையிலுள்ள சிலருடைய பழக்கத்தைப் பற்றி கேட்டுள்ளீர்கள். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் : அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் படுக்கச் செல்லும் முன்பும், படுக் […]

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. சத்தியத்தைப் போதனை செய்வோர் அதனை நிலைநிறுத்துவதற்கான மூலாதார அளவுகோலாகக் கொண்டது பெரும்பான் மையை அல்ல. அன்று முதல் இன்று வரை உள்ள பெரும்பாலான மனிதர்கள் சத்தியத்தை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு மூலாதார அளவுகோலாகக் கொண்டது பெரும் பான்மையையே. அதனால்தான் கடந்த காலங்களில் பெரும்பாலான மனிதர்கள் இறை தூதர்களான மனிதர்களில் புனிதர்களான நபிமார்கள் மனிதர்களின் சுய விருப்பங்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும் நடைமுறைகளுக்கும் பிரதேச வணக்க வழிபாடுகளுக்கும் முரணாக அவர்களது உள் ளம் விரும்பாத ஒன்றை […]

ஆய்வுத் தொடர் – 8 அபூ அப்தில்லாஹ் ஆகஸ்ட் தொடர்ச்சி….. 3:7 வசனத்தின் சரியான பொருள் : அவன்தான் (இந்)நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான (தெளிவான) வசனங்கள் இருக்கின்றன. இவை தான் இந்நெறிநூலின் அடிப்படையாகும். மேலும் எஞ்சியவை பல பொருள் பெறத்தக்கவை (தீர்க்கமற்றவை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள் குழப்பங்களை நாடி, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத் தேடி அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால் இவற்றின் உண்மைக் கருத்து களை (முடிவு –  Final […]

தொழும்போது முன்னால் தடுப்பு வைப்பது பற்றி தெரிந்து கொள்வோம்! கு. நிஜாமுதீன் உங்களுக்கு முன் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும்போது யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரை தடுக்க வேண்டும். அதை அவர் தடுத்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் ஷைத்தானாவார் என்பது நபிமொழி. (புகாரி : 509) தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படும் கெடுதியை பாவத்தை அறிந்தால் அவருக்கு குறுக்கே செல்வதற்கு பதில் நாற்பது நாட்கள் நின் றுக் கொண்டிருப்பது அவருக்கு […]

ஆங்கிலேயர் போட்ட தேதிகோடு (IDL) இஸ்லாமிய அடிப்படையா? S.H. அப்துர் ரஹ்மான், திருச்சி அன்பு சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சந்திரனை கணக்கிட்டு காலண்டர் போட்டு அதன் அடிப்படையில் அமல்கள் செய்து வருகின்றோம். கணக்கீடு நவீன அறிவியல் உலகில் மனிதர்களால் முடிந்த வரை துல்லியமான முறையில் கணக்கிட முடியும். (அல்லாஹ்வின் துல்லியம் என்பது இறுதியானது) அதன்படி கணக்கிட்டு வருகிறோம். இதற்காக உலக நடைமுறையில் உள்ள தேதிக்கோடு IDL உலக நேரம் UTC ஆகிய உலகம் நியமனம் செய்த அளவீடுகளை […]

ஒரு திறனாய்வு! தொடர் : 39 M. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் தமிழாக்கமும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல் திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… பக்கம் 381,382 மற்றும் 383ல் பாதி வரை ஹதீஃத் எண் 14ம் அதனைத் தொடர்ந்து பல விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. […]

 MTM. முஜீபுதீன், இலங்கை அந்நஜாத் வாசகர்களின் கவனத்திற்கு எதிர்பாராத விதமாக ஜூலை 2017லிருந்து இத்தொடர் வெளிவரவில்லை. இன்ஷா அல்லாஹ் இனிமேல் தொடர்ந்து வெளிவரும்.  ஜூலை 2017 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை.” “என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக” 20:14 என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். (புகாரி : 597) இறைவனை […]

எல்லா பிரிவினை இயக்கங்கள், ஜமாஅத்துகளை விட்டும் தப்பி ஓடுங்கள்..  MTM. முஜீபுதீன், இலங்கை ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகையில், அல்ஃபாத்திஹா ஸூராவை ஓதுவது கடமையாகும். அதில் அல்லாஹ் கடைசியாக குறிப்பிடும் மூன்று வசனங்களையும் அறிவதும் அவசியமாகும். அதில் நீ என்னை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல என்று ஓதி முடிக்கிறோம். இதில் ஐந்தாவது, ஆறாவது வசனங் களை கவனியுங்கள். அது “நீ […]

அபூ ஹனீபா, புளியங்குடி அல்லாஹ்விற்காக எவர் ஒருவர் பள்ளி வாசல் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான். (புகாரி 450) இன்றைக்கு இயக்கங்களை, மத்ஹப்பை வளர்க்க அல்லாஹ்வின் பெயரை சொல்லி இயக்க, மத்ஹப் பெயர்களில் பள்ளிவாசல்களை கட்டுகிறார்களே, கட்டுவதற்காக நன்கொடை கொடுக்கிறார்களே, அவர்களுக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் மாளிகை கட்டுவானா? அல்லது நரகத்தில் மாளிகை கட்டுவானா? எது உண்மை? அல்லாஹ்வின் பள்ளிவாசல் எது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்? மத்ஹப் பள்ளிவாசல்கள் : […]

N.  அலி, கல்லிடைக்குறிச்சி ஆகஸ்ட் மாத தொடர்ச்சி… சென்ற இதழில் லிபாசுத் தக்வாவின் சிறப்புகளையும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் பார்த்தோம். இந்த இதழில் லிபாசுத் தக்வாவுடன் தொடர்புடைய வி­யத்தைப் பார்ப்போம். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அஞ்சக் கூடியவர்கள் அறிஞர்கள்தாம் (ஆலிம்கள் தான்) 35:28 மேற்கண்ட குர்ஆன் வசனத்தைக் காட்டி ஆலிம்கள்தான் அஞ்சுவார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. மேடைகளிலும் முழங்கப்படுகிறது. இதன் மூலம் லிபாசுத் தக்வா ஆலிம்களுக்குத்தான் சாத்தியம் என்ற தோற்றம் முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது உண்மை என்ன? […]

செப்டம்பர் 2018 துல்ஹஜ் 1439 – முஹரம் 1440 பேரிடர் சூழல் முன்பெல்லாம் மழையோ, வெயிலோ, காற்றோ, குளிரோ குறிப்பிட்ட மாதங்களில் சீதோஷ்ண நிலை சொல்லி வைத்தாற் போல் அந்தந்த மாதங்களில் வந்து போய்க் கொண்டிருந்தது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நிகழ் காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்புக்களைக் கணக்கில் கொண்டால், முந்தைய காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை எனக் கூறி விடலாம். சமீப காலமாக பருவகாலம் மாறிக் கொண்டிருப்பது அச்ச உணர்வைத் தந்து கொண்டிருக்கிறது. கலி […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இயக்கங்கள் கூடாது, தனிப்பள்ளிகள் கூடாது அது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயல் என்றால் தனிப் பெருநாளும் கூடாதல்லவா? அதில் கலந்து கொள்வதும் தவறல்லவா? அதுவும் சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலல்லவா? அதை எப்படி சரி காண்கிறீர்கள்? அபூ நபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : பெருநாள், பெருநாள் அல்லாத நாளில் கொண்டாடுவதை நாம் சரிகாணவில்லையே! பிரிவினர்களின் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதைப் பற்றி தங்களுக்கு ஐயம் இருப்பது போல் அடுத்த கேள்வியின் வாயிலாகத் தெரிகிறது. எனவே […]

அல்லாஹ்வின் அழகிய சொல்லே என்றென்றும் உண்மையானது! நம்பிப் பின்பற்றத் தகுந்தது! சத்தியமானது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்று “மெய்யானவன்” எனும் பொருள் கொண்ட “ஹக்” என்பதாகும். 6:62, 10:30, 32, 18:44, 20:114, 22:6,62, 23:116, 24:25, 31:30 அவன் என்றென்றும் உண்மை மாத்திரமே பேசுபவன். நிச்சயமாக(க் குர்ஆனாகிய) இது உம்முடைய இறைவனால் அருளப்பெற்ற உண்மை அடங்கிய நெறிநூலாகும். 6:114 நிச்சயமாக (இந்த) உண்மை உம்முடைய இறைவனிடமிருந்தே வந்திருக்கிறது. எனவே நீர் (இதில்) […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? அபூ அப்தில்லாஹ் ஜூலை தொடர்ச்சி….. உதாரணமாக, “அலக்’ என்ற அரபிப் பதத்திற்கு இரத்தக்கட்டி என்ற பொருளும், ஒட்டி தொங்கிக் கொண்டு உறிஞ்சும் ஒன்று என்ற பொருளும் இருக்கத்தான் செய்தது. அன்றைய அரபி அறிஞர்களுக்கு இரத்தக் கட்டி’ என்று பொருள் கொள்வதே மிகச் சரியாகத் தெரிந்தது. ஆனால், இன்று அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யமும், மனித உடற்கூற்று துறையில் பாண்டித்யமும் உள்ளவர்கட்கே இரத்தக்கட்டி என்ற பொருள் தவறானது. ஒட்டித் தொங்கிக் கொண்டு உறிஞ்சும் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், 1. பிர்அவ்னின் கூட்டத்தார் நல்லுபதேசம் பெற அல்லாஹ் எவ்வாறு சோதித்ததாக கூறுகிறான்? பஞ்சத்தினாலும், விளைச்சலில் குறைவை ஏற்படுத்தி சோதிப்போம் என கூறுகிறான். 7:130 2. அல்லாஹ் சந்திரனை ஒளியிழக்கச் செய்து சூரியனை வெளிச்சமாக்குவது ஏன் என அல்லாஹ் கூறுகிறான்? பகலை வாழ்(வாதாரத்தைத் தேடு)வதற்காக. அல்குர்ஆன் : 78:11 3. ஏக இறைவனை மறுத்த இஸ்ராயிலின் மக்கள் யார் யாரால் சபிக்கப்பட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? தாவூத்(அலை) மற்றும் ஈஸா(அலை) அவர்களால் சபிக்கப்பட்டார்கள். […]

கணிப்பீடு! கணிப்பீடு!!! கணிப்பீடு!!! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “சந்தேகம்’ என்பதற்குத் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை 49:12 அது போன்றே சந்தேகங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுமானம், அன்னளவு, யூகம் தோராயமானது. குத்துமதிப்பு போன்றவற்றுக்கும் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை என்பதனை பரிசுத்த அல்குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது. உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத வி­யங்களை நீர் பின்பற்ற வேண்டாம். 17:36 பாவி ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்கமாக விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். 49:06 இன்னும் […]

பிறை பற்றி! ஆலிம்களிடம் (மார்க்க அறிஞர்களிடம்) ஒரு அவாமின் (பாமரனின்) கேள்வி? M. சையித் முபாரக் நாகை. பால் கொடுக்கும் தாய்மார்கள் நோன்பு பிடிப்பது பற்றிய சட்டத்தில் ஐந்துவித கருத்துகள் ஆலிம்கள் மத்தியில் இருக்கின்றனவாம். பிறைப் பற்றியும் இரு கருத்துகள் இருக்கின்றன. 1. தத்தமது பகுதி பிறை, 2.பிறை பார்த்த தகவல் முன்பே கணக்கிடப்பட்ட  நேரத்தில், அதே நேரத்தில் சூரிய, சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்படியிருக்கும்போது பிறைக் கணக்கீடு முறையும் சரியாகத்தானே இருக்கும். அதனை ஏற்று ஒரே […]