மே 2018 ஷஃபான் – ரமழான்-1439 தமிழ்நாடும்! காவிரி நீரும்!! காவிரி நதி நீர் பகிர்மானம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. 24 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த தீர்ப்பு இது. கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீரின் அளவை இத்தீர்ப்பு இன்னும் குறைத்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்த மேலாண்மை வாரியம் அமைப்பதை பாஜக அரசு தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு வாழ்வா? சாவா? எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. […]

ஜூன் 2016 ­  ஷஃபான்-ரமழான் 1437 அந்நஜாத்தின் பணி தொடரவேண்டிய அவசியம்! அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அந்நஜாத் மாத இதழ் 1986 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து பல சிரமங்களிடையே, கடுமையான எதிர்ப்புகளிடையே, கொலை மிரட்டல்களிடையே, விஷமத்தனமான அவதூறுகளிடையே, ஓயாத கடுஞ் சொற்களிடையே, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையே, தபால் துறை அநீதிக்கிடையே கடந்த 31 வருடங்களாக எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் பேருதவியாலும் பெருங்கிருபையினாலும், அந்நஜாத் நின்றுவிட வேண்டும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு, விருப்பத்திற்கிடையே இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுக்கே […]

ஜூலை 2016 ரமழான்-­வ்வால் 1437 ஈத் சிந்தனை! சமுதாயத்தைப் பிளவுடுத்தும் அதிகாரம் நபிமார்களுக்கும் இல்லை! இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் ஆலிம்கள் எனப் பெருமை பேசும் மவ்லவிகளாலும், அவர்களது முகல்லிது பக்தர்களாலும் காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுக்கப்பட்டு, அவர்களது பள்ளிக்குப் போகக் கூடாது, அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்காத ஒரேயயாரு ஆலிமையும் காட்டமுடியாது. குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுக்கப்படாத ஒரேயயாரு பிரிவையும் பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்தப் பிரிவினர் அனைவரும் இந்த ஃபத்வாவுக்கு உட்பட்டவர்களே! சமுதாயத்தைதப் […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் -3 அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : மேலும் ஆராய்வோம்! இந்த வசனம் சம்பந்தமாக இன்னும் தெளிவாக ஆராய்ந்து அறிவதற்கு முயற்சிப்போம். காரணம் இந்த வசனத்தின் தெளிவான விளக்கத்தை நாம் அடைந்து கொள்வது. அல்குர்ஆனின் இதரஅனைத்து வசனங்களையும் பிரித்தறிந்து கொள்வதற்கும். “முஹ்க்கமாத்” வசனங்களைத் தெளிவாகப் புரிந்து செயல்படுத்துவதற்கும். அது நமக்குப் பெரிதும் உதவும். இந்த 3:7 வசனத்திலிருந்து, இரண்டு வகையான வசனங்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி நமக்குத் […]

A. பஷீர் அகமது, புதுக்கோட்டை பிப்ரவரி 2018 தொடர்ச்சி… ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு டிகிரி படிப்பும் (7 years Alim degree course) தகுதியுடைய ஆலிம்களை உருவாக்க முடியாது. அந்த படிப்பு நீங்கள் மதீனாவில் போய் படித்து வந்தாலும் சரியே. கோர்ஸ் என்பது எப்படி படிப்பது என்பதை மட்டுமே சொல்லிக் கொடுக்கும் How to Learn  என்பது மட்டுமே கோர்ஸ் மூலமாக கிடைக்கும். அதாவது வழிகாட்டுதல் மட்டுமே கிடைக்கும். நீங்கள் தான் […]

ஐயம் : நாளின் ஆரம்பம் இரவா? பகலா? என்பதை விளங்கிக் கொள்வதற்கு கூட லைல் லயல் நஹார் யவ்ம் இவைகளை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும் மட்டுமல்ல அரபு இலக்கணம் அறிந்தாக வேண்டும் இந்நிலையில் பாமரர்களுக்கு குர்ஆன் விளங்கும் என்று அந்நஜாத் கூறுவதை ஏற்க கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. குர்ஆன் சுன்னாவிற்கு சுயவிளக்கம் புதுவிளக்கம் கொடுக்கிறார்கள் புரோகிதர்கள் என்கிறீர்கள் அவர்களின் மொழியாக்கம் இல்லாமல் குர்ஆனை விளங்க முடியாதே! என்ன சொல்கிறீர்கள்?  M.அபூநபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : நாளின் ஆரம்பம் […]

விமர்சனம் : பல்பொருள் தரும் “முத்தஷாபி ஹாத்” வசனங்களின் உண்மை பொருளை அல்லாஹுவே அறிவான். ஆனால், அண்ணனின் தர்ஜுமாவில் “அல்லாஹு விற்கு இணையாக கல்வியில் தேர்ந்தவர் களும் விளங்கிக் கொள்வார்கள்” என்கி றாரே அது பற்றிய விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். அல்லாஹுவுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹு குர்ஆனில் ஏன் கூறவேண்டும்? என்று கேள்வி வேறு எழுப்புகிறார். முத்தஷாபிஹாத் வசனமாக எந்த வசனத்தை கூறலாம்? வார்னர் நதீர், நாகர்கோவில் விளக்கம் : முத்தஷாபிஹாத் வசனங்களை பற்றி […]

அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! M. அப்துல் ஹமீத்  தொடர் : 35 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம்பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ­வ்வால் பிறை, ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் […]

புளியங்குடி அபூ கனிபா இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதும், சித்திரவதை அனுபவிப்பதும், உரிமைகள் பறிக்கப்படுவதும் அவர்கள் கைகளால் தேடிக்கொண்டதே. எப்படி? அல்குர்ஆன் 12:106 வசனம் சொல்கிறது அவர்கள் இணைவைப்பவர்களாக (ஷிர்க்) இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. எப்படி ஷிர்க் வைக்கிறார்கள் ? அல்குர்ஆன் 9:31 வசனம் சொல்கிறது அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்க ளாக்கிக் கொள்கின்றனர். இன்று முஸ்லிம்கள் தங்களின் […]

இறைநேசர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன்:10:62 ஆர்.எஸ்.எஸ். பீ.ஜே.பி. வளர்வதற்கு காரணம் இயக்க வெறியர்களே! பெயர் தாங்கி இயக்க முஸ்லிம்களே!! தேவை இல்லாத ஒரு குழப்பத்தை இந்த முஸ்லிம் இயக்க வெறியர்கள் உருவாக்க நினைக்கிறார்கள். 2 எம்.பி. சீட்டு இருந்தவனை இன்று நாட்டையே ஆளும் அளவிற்கு ஆக்கியது இந்த முஸ்லிம் இயக்கவாதிகள் தான். அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல்தான். எதிர்ப்பில்தான் எதுவும் வளர்ச்சியடையும் என்ற உண்மை தெரியாதா? ஆர்.எஸ்.எஸ். […]

தப்லீக், தரீக்கா போன்ற ஜமாஅத்துகளில் இருப்பவர்கள் மன்ஸில், அஃமாலே குர்ஆனி, துஆஉல் வளாயிஃப், அல்முன் ஜியாத், மஸ்னூன் துஆக்கள் இன்னும் இது போன்று துஆக்கள் தொடர்பாக உள்ள பற்பல புத்தகங்களை படிப்பதோடு அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான துஆக்களையும், தஸ்பீஹ்குகளையும் தங்களுடைய கஷ்டங்கள், நோய்கள் மற்றும் இன்னபிற எல்லாவிதமான தேவைகளும் நிறைவேறுவதற்காக ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் ஓதிவருவார்கள். குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய சகோதர சகோதரிகள் இதற்கு நேர்மாற்றமாக இது போன்ற புத்தகங்களில் கூறப்பட்டுள்ள […]

நம்மில் பலர் பிறை பார்ப்பது என்றால் மாத கடைசி தேதியில் மட்டும் மேற்கே பார்ப்பது என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். உண்மை அதுவல்ல. நபி(ஸல்) காலத்தில் மாதம் முழுவதும் தினமும் அஹில்லாக்களை பார்ப்பார்கள் அதிலும் ரமழான் மாதத்திற்கு முந்தய மாதம் முழுவதும் மற்ற மாதங்களை விட கவனமாக பார்ப்பார்கள் என்பதை இந்த ஹதீஃத் உறுதி செய்கிறது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ­ஷஃபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட பிறகு […]

  எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7 அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வாழும் முஸ்லிம்களுக்கு சுவனம் பரிசாகக் கிடைக்கும் என்று இறைவன் வாக்களிக்கின்றான். அந்த மகத்துவம் மிக்க சுவனத்தில்…. ”தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும்……..”     – அல் குர்ஆன். 47:15 உயர்ந்த சுவனத்தில் பரிசாக கொடுக்கப்பெரும் பாலும்,தேனும், மதுவும் எப்படி எதனால் உருவாக்கப்படுகின்றது என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அதே சமயம் இவ்வுலகில் மனிதர்களுக்கு […]

ஏப்ரல் 2018 ரஜப் -­ ஷஃபான்-1439 உலகளவில் முஸ்லிம்கள்! உலகளவில் இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும், முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கோடு இஸ்லாத்திற்கு எதிராக உள்ள பல நாடுகள் களம் இறங்கி இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளில் தீர்வு காண அந்நாடுகளின் அரசுகளுக்கு உதவுவதாகவோ அல்லது மக்களுக்கு உதவுவதாகவோ என்று ஏதேனும் சாக்குபோக்குக் கூறி உள்ளே நுழைகின்றனர். பல இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் […]

மே 2016 ரஜப் -­ ஷஃபான் 1437 ஜனநாயக தேர்தல் முறை! தமிழகத்தில் மே 16 அன்று சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரும் பான்மை மக்கள் யாரை ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்பதே ஜனநாயகம். இது மனிதக் கற்பனையில் உதித்த ஒரு வழிகேடே அல்லாமல் நேர்வழி இல்லை. பெரும்பான்மை மக்கள் சத்தியத்தை நேர்வழியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கோணல்வழிகளை, வழிகேடுகளைத்தான் நேர்வழியாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று குர்ஆன் 6:116 முதல் எண்ணற்ற […]

ஏப்ரல் 2016  ஜ. ஆகிர் – ரஜபு 1437 தேர்தலில் முஸ்லிம்களின் கடமை என்ன? K.M.H. அபூ அப்தில்லாஹ் எதிர்வரும் மே 16 அன்று தமிழகத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் சட்டசபைகளின் தேர்தல் நடை பெற இருக்கிறது. அதற்குரிய கெடுபிடிகள், பேரங்கள், பெட்டி மாற்றங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த நிலையில் முஸ்லிம்களின் கடமை என்ன? குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து செயல்படக் கடமைப்பட்டி ருக்கிறார்கள். மனிதகுலத்திற்கென்று மனிதனைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் கொடுத்தது இறையாட்சி தான். […]

மார்ச் 2016 ஜ.அவ்வல்-ஜ.ஆகிர் 1437 அரசுகள் ஏன்? மனிதகுலம் தோன்றியதிலிருந்து ஒரே சமுதாயமாகவும், ஒரே தலைமையின் கீழும் வளமாக வாழ்ந்து வந்தது. ஷைத்தான் தனது சபதத்தை நிறைவேற்ற (பார்க்க : 2:36,38,39, 7:11-25, 15:31-44) மனித சமுதாயத்தில் புகுந்து அவர்களை வழிகெடுத்து அவர்களில் மிகப் பெரும்பாலோரை நரகில் தள்ளி வருகிறான். இறைவனும் மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்தத் தொடர்ந்து தனது தூதர்களை மனிதகுலத்திலிருந்தே தேர்ந்தெடுத்து மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டச் செய்தான். ஆயினும் ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகும் ஷைத்தான் […]

எஸ்.ஹலரத் அலி,- திருச்சி அல்லாஹ் படைத்த பெரும்படைப்புகளில் மனிதப்படைப்பு ஒன்றாகும்.எல்லா படைப்புகளையும் படைத்து இறுதியில் களிமண் சத்திலிருந்து ஆதி தந்தை ஆதம் (அலை) அவர்களை  படைத்தான். அவர்களிலிருந்து ஹவ்வா (அலை), இப்படி ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து மனித வர்க்கம் பல்கிப் பெருகியது. பிறக்கும் குழந்தைகள் சில நேரம் ஆணாகவும், சில நேரம் பெண்ணாகவும் பிறப்பதற்கு என்ன காரணம்? அன்று மதீனாவில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்னும் யூத மதகுரு, ஆண,பெண் குழந்தை பிறப்பு குறித்து […]

. தொடர் – 6 தோழர் ஹம்துல்லாஹ் நாம் “”அல்லாஹ்வின் திருநாமங்கள்” என்ற தொடரில் இதுவரை “அல்லாஹ்’ என்ற சொல்லை உபயோகிப்பதற்கு முன் ஏகஇறைவன் “ரப்பு’ என்ற அன்றைய அரேபியர்களிடையே புழக்கத்திலிருந்த சொல்லைக் கூறியே தன்னை அறிமுகப் படுத்தினான். அறிமுகப்படுத்துகிறான் என் பதை திருக்குர்ஆன் கூற்றுகள் மூலம் கண்ட றிந்தோம். சுமார் நான்கு இறை அறிவிப்பு (வஹி)களுக்கு பின் ஐந்தாவதாக அருளப்பட்ட “”அல்-பாத்திஹா” (பொருள் : அறிமுகம், முகவுரை) என்ற ஏழு வசனங்களை தனி சிறப்பு மிக்க […]

விமர்சனம் : அந்நஜாத் மார்க்கப் பணிக்கு கூலிகூடாது என்கிறது அதே நேரத்தில் மார்க்கப் பணிக்கு கூலி வாங்கும் கூட்டம் “”அல்குர்ஆன் 2:273” ஆதாரம் காட்டி, நியாயப்படுத்துகிறார்களே! கூலி கூடுமா? கூலி கூடாதா? வார்னர் நதீர், நாகர்கோவில் விளக்கம் : பொய்யுரைப்பதில் மன்னர்கள், அண்டப் புளுகர்கள், ஆகாசப் பொய்யர் கள், மக்களை வழிகெடுப்பதில் இந்த மவ்லவிகளை விடக் கேடுகெட்டவர்கள் இந்த உலகில் காணப்படும் ஏனைய அனைத்து மக்களின் மதகுருமார்களிலும் யாரும் இல்லை! காரணம் அவர்களில் யாரிடமும் இறையளித்தப் பாதுகாக்கப்பட்ட […]