சொர்க்க தோழி மாத இதழ் ஆசிரியர் சா.அப்துர்ரஹீம் தமிழக முஸ்லிம்களிடையே புரையோடிக் கிடந்த மூட நம்பிக்கைகளையும், அனாச்சாரங்களையும் முதன் முதலாக எடுத்துச் சொல்லி எச்சரித்தவர். ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடியுங்கள் என்று எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தபோது, குர்ஆனாகிய அல்லாஹ்வுடைய கயிற்றை எல்லோரும் ஒற்றுமையாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று ஆதாரத்துடன் விளக்கியவர். அவதூறுகளையும், எதிர்ப்பு களையும் காலடியில் போட்டு மிதித்தவர். குர்ஆனும், நபிவழியும் மட்டும்தான் இஸ்லாம் என்று முப்பது வருடங்களாக ஓங்கி ஒலித்தவர். சமாதி வழிபாடும், […]
பஷீர் அஹமது 1. நாம் ஒவ்வொருவரும் மார்க்க கல்வியை கற்று ஆலிமாக மாற வேண்டும். 2. சம்பளம், கூலி வாங்காமல் மார்க்க பணி செய்ய வேண்டும். 3. நமக்கு தெரிந்த மொழியிலாவது அன்றாடம் அல்குர்ஆனை வாசிக்க வேண்டும். 4. எந்த இயக்கத்திலும், சங்கத்திலும் சேராமல், எந்த மஹல்லாவில் வசிக்கி றோமோ அந்த மஹல்லாவையே தமது ஜமாஅத்தாக ஏற்க வேண்டும். 5. கலிமா சொன்ன எல்லா முஸ்லிம்களையும் சக முஸ்லிம் சகோதர, சகோதரிகளாக கருத வேண்டும். மார்க்கத்தை பிழையாக […]
ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி தான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா? வாசகர், போன் மூலம். தெளிவு: ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவர்கள் கணவன் மனைவியாக இருந்தா லும் தனித்தனியாக […]
விமர்சனம் : புரோகிதர் ஒருவர் அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில், சுன்னத்தை பேணும் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறினார் அதற்கு அவர் கூறிய குற்றச்சாட்டு களும், அதற்கு நம் விளக்கமும். விளக்கம் : முதல் குற்றச்சாட்டு : “அவர் ஒரு பித்அத்வாதி” (மார்க்கத்தில் இல்லாத நூதன அனாச்சாரங்களை செய்தவர் பித்அத்வாதியாக கருதப்படுவார்) காலமெல்லாம் பித்அத்களை மார்க்கமாக, மக்களிடம் அறிமுகம் செய்த புரோகிதர்களை அடையாளம் காட்டியதால் அவரும் “”பித்அத்”வாதியாக சேர்க்கப்பட்டார் போல் தெரிகிறது. […]
அபூ அப்தில்லாஹ் மதகுருமார்களின் ஆதிக்கம்: ஆதி மனிதன் ஆதத்திலிருந்து இன்று வரை எத்தனை மதங்கள் தோன்றியுள்ளனவோ அந்த அத்தனை மதங்களிலும், இஸ்லாமிய மதம் உட்பட மதகுருமார்களின்-மதபோதகர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் பின்பற்றும் அனைத்து மக்களும் இந்த மதகுருமார்களை கடவுளுக்கு மிகமிக நெருக்கமானவர்கள்; அவர்களின் ஆதரவு இல்லாமல் கடவுளின் பொருத்தமோ, மோட்சம் என்ற சுவர்க்கமோ அடைய முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள். இந்த மதகுருமார்களை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர். அவர்களை சந்நிதானம், காட் ஃபாதர், காட் […]
N.அலி, கல்லிடைக்குறிச்சி. பில்லி, சூனியம் ஒரு பித்தலாட்டம் என்ற நூலில் 2:102ம் வசனத்தின் நேரடிப் பொருள் பல குர்ஆன் வசனங்களுக்கு (பார்க்க 10:77, 7:118-120, 20:69, 52:13,14,15) முரண்படுகிறது என்று கூறி இலக்கணப்படி மாற்றுப் பொருள் கொடுக்க இடமிருக்கிறது என்றும் அவ்வாறு பொருளும் செய்து வரிக்கு வரி விளக்கம் கொடுத்திருக்கிறார் அந்நூலின் ஆசிரியர் பீ.ஜை. அவர் என்ன காரணம் கூறி மாற்றுப் பொருள் கொடுத்தாரோ அதே காரணங்கள் இவருடைய மொழிப் பெயர்ப்பிலும் நிறைந்து காணப்படுகின்றன. அதாவது முரண்பாடுகள். […]
ஹஜ் பெருநாளன்று பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே குர்பானி என்று சொல்லப்படுகிறது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில் இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான். “உமது இறைவனுக்காக தொழுது, மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக!” (அல்குர்ஆன் 108 :2) என்று அல்லாஹ் கூறுகிறான். “ஹஜ் பெருநாள் தினத்தில், அறுத்துப் பலியிடுவதை விடச் சிறந்த அமலை ஒருவன் செய்துவிட முடியாது. அந்தப் பிராணியிலிருந்து சிந்துகின்ற இரத்தம் அல்லாஹ்விடம் […]
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அந்நஜாத் மாத இதழ் 1986 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து பல சிரமங்களிடையே, கடுமையான எதிர்ப்புக்களிடையே, கொலை மிரட்டல்களிடையே, விஷமத்தனமான அவதூறுகளிடையே, ஓயாத கடுஞ்சொற்களிடையே, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையே, தபால் துறை அநீதிக்கிடையே கடந்த 31 வருடங்களாக எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் பேருதவியாலும் பெருங் கிருபையினாலும், அந்நஜாத் நின்றுவிட வேண்டும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு, விருப்பத்திற்கிடையே இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அல்ஹம்துலில்லாஹ். இத்தனை இடர்பாடுகளுக்குக் காரணம்? […]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அந்நஜாத் ஆசிரியர் K.M.H அபூஅப்தில்லாஹ் அவர்கள் 12.07.2017 புதன்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் நடந்த சாலை விபத்தில் வபாத் ஆகிவிட்டார்கள் என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். K.M.H அபூ அப்தில்லாஹ் அவர்களுடைய மஃபிரத்திற்காக துஆ செய்ய உங்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு நஜாத் அலுவலர் தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் தொலைபேசி எண்: 8825184161
ஐயம் : “ஜின்” இனத்தைப் பற்றி விவரிப்பதோடு, இப்லீஸுக்கும் ஷைத்தானுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்க! (முஷ்தக் அஹ்மத், பம்பாய்) தெளிவு : மனிதரைப் போல் ஜின்னும் ஓர் இனத்த வராவார். இப்லீஸ் இந்த இனத்தவனாவான். ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று நாம் மலக்கு களிடத்தில் கூறியதை (நபியே!) நீர் நினைத்துப் பாரும்) இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸஜ்தா செய்தார்கள். அவனோ ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அதனால் தன் இறைவனுடையக் கட்டளைக்கு மாறு செய்து விட்டான். (18:50) […]
அபூ ஃபாத்திமா அல்குர்ஆனில் 16 இடங்களில் அல்லாஹ் “”உலில் அல்பாப்” என்று கூறி இருக்கும் உண்மையான ஆலிம்கள் அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கும் கட்டளைக்கு அணுவளவும் மாறாமல் அப்படியே அடிபணிவார்கள். அவர்கள் 36:21, 2:79,174,175, 31:6 இன்னும் இவை போல் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரி லாகி, குர்ஆன் போதனைகளுக்கு முரணாக தங்கள் கைகளால் இஜ்மா, கியாஸ், லாஜிக், பாலிஸி, பிக்ஹ், தஃப்ஸீர் என்ற பெயர்களால் கற்பனைக் கட்டுக் கதை களை எழுதி வைத்துக் கொண்டு, […]
எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 Why Don’t Monkeys Talk Like Us? கடந்த வார (9-Dec.-2016) அறிவியல் ஆங்கில இதழ்கள் மற்றும் இணையதளங்களில் “குரங்கு ஏன் நம்மைப்போல் பேசுவதில்லை” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. பரிணாமக் கொள்கைப்படி குரங்கிலிருந்து வந்த மனிதனால் பேசமுடிகிறது. ஆனால் குரங்கால் பேச முடியவில்லை. இதன் முக்கிய காரணம் என்ன? என்பதே அந்த ஆய்வு. http://advances.sciencemag.org/content/2/12/e1600723.full டார்வினின் கருத்துப்படி அனைத்து உயிரினங்களும் ஒரு செல்லிலிருந்து பிரிந்து விரிந்து, பரிணாம வளர்ச்சி […]
அபூ அப்தில்லாஹ் அல்லாஹ்வின் அருளினால் தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிகேடுகளிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஹதீஃதை மட்டும் 3:103 இறைக் கட்டளைப்படிப் பற்றிப் பிடிக்க முன் வந்த சகோதர்களில் சிலர் மீண்டும் ஸலஃபி, அஹ்லுல் குர்ஆன் என இரண்டு வழிகேடுகளில் சிக்கியுள்ளனர். அவற்றில் ஸலஃபி வழிகேட்டைப் பற்றி இங்கு ஆய்வு செய்வோம். குர்ஆனைப் பாமரர்களாக இருந்தாலும், படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்களாக இருந்தாலும், மதரஸாவில் ஓதிய மவ்லவியாக இருந்தாலும், நேரடியாகப் படித்து விளங்க முடியாது. ஸலஃபிகள் விளங்கியபடிதான் விளங்க […]
நிகாருன் நிஷா சித்தீகிய்யா, கோவை. அருள்மிகு மாதமான ரமழான் ஒட்டுமொத்த மனித குலம் நேர்வழி பெறுவதற்கான பொக்கிஷமான வாழ்வியல் நெறிமுறைகளை உள்ளடக்கிய உன்னத வேதமான திருமறை திருக்குர்ஆன் இறங்கிய மாதமாகும். வேதாகமங்களும், தவ்ராத், இன்ஜில், ஜபூர் ஆகிய வேதங்களும், அந்தந்த நபிமார்களுக்கு ஒரே தடவையில் மொத்தமாக அருளப்பெற்றன. ஆனால் குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டிலிருந்து முதல் வானத்திலிருக்கும் பைத்துல் இஜ்ஜா (மதிப்புமிக்க இல்லம்) என்ற இறை இல்லத்திற்கு மொத்தமாக அருளைப் பெற்றது ரமழான் மாதத்தில்தான். […]
MTM முஜீபுதீன், இலங்கை ஜூன் 2017 தொடர்ச்சி…. இப்ராஹீம்(அலை) அவர்களும் அவர்களின் சந்ததியில் வந்த இறைத் தூதர்களும் தமது சமுதாயத் தினருக்குத் தொழுகையைக் கடமையாக்கி இருந்தனர். மேலும் அவதானியுங்கள் மரியமின் மகன் ஈசா (அலை) அவரகள் குழந்தையாக இருந்த நிலையில் தமது சமுதாயத்தினரிடம் கதைத்தச் செய்தியை : நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை யாக இருக்கிறேன். அவன் எனக்கு நெறிநூலைக் கொடுத்திருக்கிறான்; இன்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கிறான். இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) […]
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அரபகத்தில் நிறைவு பெற்ற தூய இஸ்லாமிய மார்க்கம் நடை முறைப்படுத்தப்படும்போதே இந்தியாவின் தென் பகுதிக்கு கடல் மார்க்கமாக இஸ்லாம் வந்துவிட்டது என்பதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன. ஆக முழுமைபெற்ற இஸ்லாம் இந்தியாவின் தென்பகுதிக்குக் குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டிற்கு ஆரம்ப நிலையிலேயே அறிமுக மாகிவிட்டது. இஸ்லாம் ஆரம்ப நிலையிலேயே அறிமுகமானது போல் அல்குர்ஆனும் நம் நாட்டிற்கு அது இறக்கப்பட்ட அரபு மொழியில் அறிமுகமாகித்தான் இருக்கும். குர்ஆன் ஆரம்ப காலத்திலேயே தமிழகத்திற்கு அரபு மொழியில் […]
செய்யது அஹமது. பூமியில் குழப்பம் செய்யாதீர்கள் என்று அவர் களிடம் சொன்னால் நிச்சயமாக நாங்கள் (மத) நல்லிணக்கம் ஏற்படுத்துகிறவர்கள், சீர்திருத்தவாதி கள் என்று சொல்கிறார்கள். 2:11 அப்படியில்லை அவர்கள் குழப்பவாதிகள்தான். (பசுத்தோல் போர்த்திய புலிகள்தான்) 2:12 அவர்கள் (தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்ட அஞ்சும்) கோழைகள். 9:56 (இந்) நயவஞ்சகர்கள் உங்களிடம், நிச்சயமாக “”முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று சாட்சி சொல் கின்றனர். (சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாத) இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய் தான் சொல்கின்றனர் என்று அல்லாஹ் […]
ஐயம் : நான் இலங்கை வங்கியில் கொஞ்சம்பணம் முதலீடு செய்துள்ளேன். எனது பணத்திற்கு ஒரு சிறிய தொகையை வருட முடிவில் சேர்க்கிறார்கள். அப்படி சேர்த்த பணம் எனக்கு ஹலாலாகுமா? அதனை நான் என்ன செய்வது? .நிஸார், ரியாத். தெளிவு: இன்றைய நிலையில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்திற்கு மேல் அதிகமாகப் பெறும் பணம் வட்டியே ஆகும். வட்டி எந்த நிலையிலும், எப்படி வந்தாலும் ஹராமாகும் என்பது ஹதீஃத்களின் சாரமாகும். (ஆதாரம் […]
இப்னு தைக்கத்துல்லாஹ் நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்களிடம் காரிஜிய்யாக்கள் பற்றி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர் களா? என்று கேட்டோம். அதற்கு அபூசயீத்(ரழி) அவர் கள், காரிஜிய்யாக்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பின்வரு மாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் கிளம்புவர். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களது தொழுகை கம்மியாக இருக்கும். (அந்த அளவுக்கு அவர்கள் அதிகமாக […]
மு.முகமது ஹனீஃப், திருச்சி நாடு, இனம், மொழி, குலம், கோத்திரம் என்று மனிதன் தனக்குள் வேறுபடுத்திக் கொள்வதெல்லாம் அவனை அடையாளம் காண வேண்டும் என்பதற்காக என்பதை அறியாமல் உயர்வு தாழ்வு கற்பிப்பது, பச்சை குத்திக் கொள்வது, தன் கோலத்தை மாற்றிக் கொள் வது, சவுரிமுடியை எப்போதும் தரித்திருப்பது, பெருமையாக நடப்பது, எப்போதும் மொட்டை போட்டுக் கொள்வது, பெண்கள் மொட்டையடிப்பது, ஆடையணிந்தும் அங்கங்கள் வெளியில் தெரியுமாறு பெண்கள் நடப்பது, மகரம் இல்லாதாருடன் பெண்கள் பயணிப்பது, மாற்றுமத கலாச்சாரத்தை அப்படியே […]