மனம் திறந்த மடல்… அன்புள்ள கொள்கை சகோதரனுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். நீ எல்லாவிதமான பாக்கியங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இஸ்லாமை தங்கள் மார்க்கமாக ஏற்றுக் கொண்ட நம் சகோதரர்கள் மீது பாச உணர்வோடும் கவலையோடும் நாம் தெரிந்து கொண்ட நேரான வழி அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் தமிழகத்தில் பிரச்சாரப் பணியைத் துவங்கினோம். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் இந்த அறப்பணியில் ஈடுபட்டு, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமெனவும் வணக்க வழிபாடுகளில் […]
அபூ ஃபாத்திமா அவன்தான் எழுத்தறிவில்லா மக்களிடம் அவனு டைய வசனங்களைப் படித்துக்காட்டி, அவர்க ளைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர் களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார் கள். அவர், அவர்களை நன்மையைக் கொண்டு ஏவு வார். இன்னும், தீமையை விட்டும் அவர்களை […]
L.M.A. முகம்மது புகாரி, திருச்சி. செல்:9942611130 அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நம் மைப் படைத்துப் பரிபாலிக்கும் ஒரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. தற்காலத்தில் வரதட்சணை என்பது கிட்டத்தட்ட அனைத்து மதத்தவரிடமும் காணப் படும் ஒரு சமூகத் தீங்காக உள்ளது. ஆனால் இஸ் லாம் என்பது மதமல்ல, அது உண்மையான ஒரே கடவுளால் அனைத்து மனிதர்களுக்கும் அருளப் பட்ட ஒரே வழிகாட்டல், மார்க்கம் என்று சொல் கின்ற முஸ்லிம்களிடமும் இந்த வியாதி பரவியிருக் […]
முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மிகக் கடுமையான சோதனைக்கு உலகம் முழுவதும் உள்ளாக்கப்பட் டிருக்கிறார்கள். இந்தக் கடும் சோதனைகள் முஸ்லிம்கள் தங்கள் கைகளால் தேடிக்கொண்ட வையே அல்லாமல் வேறு யாரும் இதற்குக் காரண மல்ல என்று பல இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். இத்தனைக்கும் முஃமின்களைக் காப்பாற்றுவது, முஃமின்களுக்கு உதவி செய்வது எனது கடமை என்றும் அல்லாஹ் கூறியுள்ளான். அப்படியானால் உலகளாவிய அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கடும் துன்பங்களுக்கு அவர்கள் உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருக்கிறார்களே […]
அபூ அப்தில்லாஹ் (இஸ்லாமிய) மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந் தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகை யால், எவர் மனித ஷைத்தான்களை(தாஃகூத்) நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ; அவர் அறுந்துவிடாத கெட்டி யான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண் டார்; மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (2:256) அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால், நிராகரிப் பவர்களுக்கோ (வழிகெடுக்கும்) மனித […]
விமர்சனம் : நீங்கள் மனநோயாளி-பைத்தியம் மூடன் என ததஜ தலைவராலும் பக்தர்களாலும் செய்தி வலைதளத்திலும் வாய்மொழியாகவும் பரப்பப்படுகின்றதே. நீங்கள் மனநோயாளியா? பைத்தியமா? மூடரா? தொலைபேசி விமர்சனம். விளக்கம் : அல்ஹம்துலில்லாஹ்! நபிமார்களுக்கு காஃபிர்களான புரோகிதர்களைக் கொண்டு கிடைத் தப் பட்டமே நமக்குக் கொடுக்கப்படுவது கொண்டு அல்குர்ஆனிலுள்ள இறைச் செய்தியைப் பெரும் பான்மை மக்களின் ஆதரவைப் பெறும் தீய நோக்கு டன் வளைத்துத் திரித்து மறைக்காமல் உள்ளது உள்ளபடி நாம் கூறுகிறோம். நேர்வழியை மட் டுமே மக்கள் மன்றத்தில் […]
ஐயம் : ஷைத்தானை கழுதைகள் பார்க்க முடியும் என ஹதீஃதில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறுகிறார். அப்படி இருந்தால் தயவு செய்து அந்த ஹதீஃதை தெரிவிக்கவும். முகமது அன்சாரீ, திருச்செந்தூர். தெளிவு : இரவில் நாய் குலைப்பதையும் கழுதை கத்துவதையும் செவியேற்றால், அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டுப் பாதுகாவல் தேடுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவை நீங்கள் பார்க்காததை (ஷைத்தானை)ப் பார்க்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபீர்(ரழி), நூல் : அபூதாவூது.
– நல்லூர் செல்வன் டாக்டர் ஷாகிர் நாயக் சில மாதங்களுக்கு முன் தீவிரவாதி, பயங்கரவாதி என்ற அடை மொழியுடன் இணைத்து இந்த பெயரை உச்சரிக்காத இந்திய மீடியாக்களே இல்லை என்று சொல்லலாம். இப்போது, இந்தியாவில் இவருடைய ISLAMIC REASEARCH FOUNDATIONக்கு தடை, இதன் பின்னணியில் இருப்பவர்கள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய விரோத அரசியல்வாதிகள் இதற்கு காரணம். இவருடைய நிகழ்ச்சிகளில் கூடும் கூட்டம். அங்கே எழுப்பப்படும் கேள்விகள், அவற்றுக்கு தரப்படும் அறிவுபூர்வமான, ஆணித்தரமான பதில்கள், அதன் விளைவாக இஸ்லாத்தை […]
இப்னு ஸதக்கத்துல்லாஹ் அல்லாஹ்வின் அருளை (இஸ்லாத்தை இன வாதம் பேசும்) நிராகரிப்பாக மாற்றி, தங்கள் சமுதாயத்தை அழிவுக் கிடங்கில் இறக்கிவிட் டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? 14:28 அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு (தங்கள் பக்கம் மக்களைத்) திருப்புவதற்காக (இன உணர்வை) அவனுக்கு சமமாக்குகிறார் கள். (அவர்களிடம்) நீங்கள் சொல்லுங்கள். நீங் கள் (இவ்வுலகில் சில காலம்) சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (கடைசியில்) நீங்கள் போய்ச் சேரப்போவது நரகத்தில்தான் என்பது உறுதி. (என்று சொல்லுங்கள்) 14:30
இப்னு ஹத்தாது (இதையும் எண்ணிப் பாருங்கள்; கஃபா என்னும்) அந்த ஆலயத்தை நாம் மக்கள் ஒன்று கூடும் இட மாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கி னோம். இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இட மாக ஆக்கிக் கொள்ளுங்கள் (என்றும் நாம் சொன் னோம்) இன்னும், என் ஆலயத்தைச் சுற்றி வருபவர் கள், தங்கி இருப்பவர்கள் ருகூஉ செய்பவர்கள். ஸஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காக நீங்களிருவரும் தூய் மையாக வைத்திருக்கவேண்டும் என்று இப்ராஹீமி டமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி […]
இப்னு ஸதக்கத்துல்லாஹ் கடவுளைப் பற்றிச் சரியான ரீதியில் ஆராய்ந்து முடிவுக்கு வந்துவிட்டால் மறுமை சொர்க்கம், நர கம் என்பதெல்லாம் நம்புவதற்கு மிகச் சாதாரணமா னவையே. இது ஒரு வழி. மற்றொரு வழியாகவும் சொர்க்கம், நரகம் உண்டா? என்பதை உறுதிப்படுத் தலாம். அதுதான் கப்ர் வாழ்க்கை என்பது; கப்ரைத் தோண்டிப் பார்த்தால் யாருமே வாழ்வதைப் பார்க்க முடியாது. கப்ர் வாழ்க்கை என்பதைச் சரி யான முறையில் புரிந்து கொள்ள வேண்டியது அவசி யம். நல்லவர் கெட்டவர் அனைவரும் கப்ர் […]
அபூ ஃபாத்திமா தக்வாவைப் பற்றி அல்குர்ஆனில் தக்வா என்று பதினைந்து (15) இடங்களிலும் முத்தக்கூன் என்று (6) ஆறு இடங்களிலும் முத்தக்கீன் என்று நாற்பத்தி மூன்று (43) இடங்களிலும் தக்வா-பயபக்தி பற்றி நேரடியாக அல்லாஹ் கூறியுள்ளான். அதேபோல் இருபத்தியயாரு(21) இடங்களில் ஃகெளஃப்-அச்சம் பற்றிக் கூறியுள்ளான். இவையன்றி ஃகாஃப் என்று ஆறு(6) இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான். இப்போது கூர்ந்து கவனியுங்கள்! 21 இடங்களி லுள்ள ஃகெளஃபுக்கும், 6 இடங்களிலுள்ள ஃகாஃபுக்கும் மிகச் சரியாக அச்சம், இறையச்சம் எனத் தமிழில் […]
நல்லூர் செல்வன் பூமியில் (எல்லோருக்கும் பொதுவாக) ஏற் படுகின்ற அல்லது உங்களுக்கு (மட்டும் தனிப் பட்ட முறையில்) இறங்குகின்ற எந்த (இன்ப) துன்பமானாலும் அதனை நாம் ஏற்படுத்து வதற்கு முன்பு அது (எப்போது எங்கே, எப்படி ஏற்படும். எப்போது எங்கே, எப்படி முடியும் என்பது) குறித்து விதி ஏட்டில் எழுதி வைக்கா மல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ் விற்கு (கஷ்டமான காரியம் இல்லை) மிகவும் எளிதானதாகும். 57:22 கார் குண்டு வெடிப்பு, பைக் குண்டு வெடிப்பு, […]
MTM முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2017 தொடர்ச்சி…… இஸ்லாம் என்ற சொல்லுக்குச் சாந்தியளித் தல், அமைதியளித்தல், கீழ்ப்படிதல், அடிபணி தல், சரணடைதல், கட்டுப்படுதல், ஒப்படைத் தல், இறைவனுக்கு மட்டுமே வழிபடுதல் என் பன இதன் சொற்பொருள் எனலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை எல்லா இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் ஆணையின் படி இஸ்லாம் மார்க்கத்தினையே போதித்தனர். அல்குர்ஆன் இஸ்லாம் மார்க்கம் பற்றி பல இடங்களில் கூறுவதை அவதானியுங்கள். நிச்சயமாக […]
சென்ற இதழில் 10 அறிஞர்கள்+11 மூடர்கள் = 21 மூடர்கள் இதுவே ஜனநாயகம் என்றும் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் இன்றைய அரசியல் என்றும் எழுதி இருந்தோம். இன்றைய தமிழக அரசியலில் இவை நூற்றுக்கு நூறு அரங்கேறி வருகின்றன! என்பதை மறுப்போர் உண்டா? ஹிந் துக்களுக்கு ஓர் இறைவன், யூதர்களுக்கு ஓர் இறை வன், கிறித்தவர்களுக்கு ஓர் இறைவன். இப்படி ஒவ் வொரு மதத்தினருக்கும் ஓர் இறைவன் என்று மதங் களை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுரு மார்கள் […]
அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்… பின்பற்றக்கூடாத பள்ளி இமாமுண்டா? அபூ அப்தில்லாஹ் கடமையான ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்து டன் (கூட்டுத் தொழுகை) தொழுவது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டச் செயல். தக்கக் காரணமின்றி ஜமா அத்தை விட்டுத் தனித்துத் தொழக்கூடாது என்பதற்குப் பல ஹதீஃத் ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றையும் மற்றும் பல விபரங்களையும் 90 ஜனவரி முதல் செப். &அக். வரை மிக விரிவாக எடுத்து வைத்துள்ளோம். குறிப்பாக ஜூன் 90 இதழில் இமாமின் தொழுகை கூடாமல் போனா […]
இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர். மறுமையை (நம்ப வேண்டிய விதத்தில்) நம்பா மல், நமது வசனங்களைப் பொய்யாக்கியவர்களின் விருப்பு, வெறுப்புகளைப் பின்பற்றாதீர்கள். அவர் கள் தம் இறைவனுக்கு (தங்களையே) சமமாக்கிய வர்கள். 6-150 காரிஜியா என்றால் புரட்சியாளர் என்று பொருள். இவர்களின் கொள்கை என்னவென்றால், ஒட்டகப் போரிலும் ´ப்பியூன் போரிலும் கலந்து கொண்ட அனைவரும் காஃபிர்கள், தலைவர்களை எதிர்த்துக் கலகம் செய்யலாம். கொலையும் செய்ய லாம், பெரும் பாவம் செய்பவர்கள் காஃபிர்கள். இந்த நம் கொள்கையை ஏற்காதவர்களைக் கொல்ல […]
MTM முஜீபுதீன், இலங்கை ஜனவரி 2017 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவன் தனது குழந்தை பிற்காலத் தில் தனது சொத்தில் அல்லது உணவில் பங்கு கொள்ளும் என பயந்து குழந்தையிலேயே அதைக் கொலை செய்யமாட்டான். அக்குழந் தைக்கு அல்லாஹ் அதன் உணவை நிர்ணயித்து வைத்திருப்பான் என்று, அக்குழந்தையை அன்பும் ஆதரவுடனும் பெற்று வளர்ப்பான். அதுபோல் பெண் குழந்தைகளைச் சிசுவில் கொலை செய்யமாட்டார்கள். அப்பெண் குழந்தைக்குரிய வாழ்வாதாரங்களை இறைவன் வழங்குவான் என முழுமையாக நம்புவான். அல்குர்ஆனின் […]
இம்ரான் ஹுசைன் பெண்கள் முகத்தை மூடுவது, நிகாப் வாஜிபோ, சுன்னாவோ அல்ல என்பதை உறுதிப்படுத்தும் 10 குர்ஆன் சுன்னா ஆதாரங்கள் மற்றும் முகம் மூடுவதால் ஏற்படும் விபரீதமும். நிகாப் அணிதல் தொடர்பில் பல வாதப் பிரதி வாதங்கள் சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாரார் நிகாப் அணிவது “”வாஜிப்” கட்டாய மானது என்று கூறுகின்றனர். ஏனையவர்களோ அது கட்டாயமானதல்ல என்ற கருத்தைக் கொண்டுள் ளனர். கட்டாயமில்லை என்கிற கருத்தைக் கொண் டவர்களே முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மை யாக […]
அபூ அப்தில்லாஹ் இறை நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு (தூதரே) கூறும் : அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். அதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்பவற்றை இறைவன் மிக அறிந்தவன். (அந்நூர் : 24:30) இறை நம்பிக்கையுள்ள பெண்களிடம் (தூதரே) கூறும் : அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த் திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங் களைப் பேணட்டும். தங்களின் அழகு அலங்கா ரத்தை அதிலிருந்து வெளிப்படக் கூடியதைத் தவிர (வேறு […]