அபூ அப்தில்லாஹ் மனித சமுதாயம் ஆரம்பத்திலிருந்தே செய்து வரும் மாபெரும் குற்றச் செயல், அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இணை, துணை, மனைவி மக்கள், தேவை எதுவுமே இல்லாத தன்னந்தனி யனான ஏகன் இறைவனுக்குப் படைப்பினங்களை இணையாக்கும் (´ர்க்) கொடிய செயலாகும். இப் பெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட் டேன் என்று அல்குர்ஆன் 4:48,116 ஆகிய இரு இடங்களில் திட்டமாகக் கூறிக் கடுமையாக எச்சரிக் கிறான். இணை வைப்பது (´ர்க்) என்றால் அல்லாஹ்வுடன் மலக்குகள், ஜின்கள், மனிதர்கள், […]
என்றோ ஓர் அறிஞன் “”10 அறிஞர்களுடன் 11 மூடர்கள் இணையும்போது 21 பேரும் மூடர் களாகி விடுகிறார்கள்.இதுவே ஜனநாயகத் தத்துவம்” என்று ஜனநாயகத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல் இன்னொரு அறிஞர் “”அயோக்கியர் களின் இறுதிப் புகழிடம் அரசியல்” என்று முன் மொழிந்துள்ளார். இந்த இரண்டு அறிஞர்களின் கூற் றுகள் இன்று 100% நிறைவேறிக் கொண்டிருக் கின்றன என்பதை பாராளுமன்ற, சட்டசபை நிகழ்வுகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நாட்டிலுள்ள தாதாக்கள், சாராய வியாபாரி கள், விபச்சார விடுதிகள் […]
ஐயம் : பெண்கள் பர்தா அணிவதில் முகத்தை மூட வேண்டுமா? அல்குர்ஆன் அத்:33, வசனம்59ல் தமது முந்தானைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக என்று இருக்கிறது. விளக்கம் தேவை. யூ. மரியம் பீ, குண்டூர், திருச்சி. தெளிவு : உங்களின் இந்த ஐயத்திற்கு விளக்கமாக இந்த இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் ஹதீஃத்கள் அனைத்தையும் நீங்கள் நேரடியாகப் படித்து விளங்கினால் உங்களின் ஐயம் தீர்ந்துவிடும்.
அதிரை முஜீப் யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல என்ற அடைமொழியு டன் உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் ஒரு லட்சம் பேர் ஆப்பிரிக்கா விலும் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு […]
MTM முஜீபுதீன், இலங்கை டிசம்பர் 2016 தொடர்ச்சி…… அவன்தான் இரவில் உங்களை மரிக்கச் செய் கிறான். இன்னும் நீங்கள் பகலில் செய்பவற்றை யயல்லாம் அறிகிறான். மீண்டும் உங்களைக் குறிப்பிட்ட தவணை முடிவதற்காக பகலில் எழுப்புகிறான் பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது. அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன்: 6:59-60) எல்லா உயிருள்ள உயிரற்ற படைப்புகளை யும் படைத்த அல்லாஹ், எல்லாவற்றையும் அறிந்தே வைத்துள்ளான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. […]
எஸ்.முஹம்மது சலீம், ஈரோடு. கடந்த 08.11.2016 செவ்வாய் அன்று இரவு எட்டு மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று இந்திய பிரதமர் அறிவித்தவுடன் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை காணமுடிந்தது. மேலும் இந்த அறிவிப்புத் தொடர்பாக மக்கள் பற்பல விமர்சனங்களைச் செய்துகொண்டு தங்களது நேரங்களை கழித்து வருகிறார்கள். தொலைகாட்சிகளிலும் இது சம்பந்தமாக வரும் செய்திகளை ஆர்வத் தோடு பார்த்தும் வருகிறார்கள். ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் இவ்வாறு பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் […]
அபூ அப்தில்லாஹ் இறைவனல்லாத உயிருள்ளவை, உயிரற்றவை மனிதன் உட்பட அனைத்தும் படைக்கப்பட்டவையே! குறையுள்ளவையே! ஒரு நேரத்தில் ஆணி லிருந்து வெளிப்படும் இந்திரியத் துளியிலிருக்கும் கோடிக்கணக்கான அணுவைப் போன்ற ஒன்றிலிருந்து இறைவனால் படைக்கப்பட்டவன்தான் மனிதன். இவ்வுலகில் சோதனைக்காகப் படைக் கப்பட்டுள்ளான். அவனுக்குக் கொடுக்கப்பட் டுள்ள அழிந்துபடும் இவ்வுலக வாழ்க்கை மிகமிக அற்பமானது. நிரந்தரமான மறு உலக வாழ்க்கை யோடு ஒப்பிடும் போது சில மணித் துளிகள் அல்ல, சில நிமிடங்கள் அல்ல, சில வினாடிகள் கூட தேறாது. மனிதனுக்குக் […]
இன்றைய அறிவியல் உலகில் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கி இரண்டு கால் மனிதன் இரண்டு கால் மிருகமாக மாறி வருகிறான். இன்னும் நேரடியாகச் சொல்வதாக இருந்தால் மிருகங்களை விட கேடுகெட்ட நிலைக்கு இன்று மனிதன் ஆளாகியுள்ளான். இந்த உண்மையை இணை, துணை, இடைத்தரகர் இல்லா ஏகனான இறைவன் தனது இறுதி நெறிநூல் குர்ஆனின் அஃராஃப் : 7:175-179 இறைவாக்குகளில் உறுதிப்படுத்துகின்றான். சுமார் 1450 வருடங்களுக்கு முன்னர் அன்றைய அஞ்ஞான காலத்தில் அரபு நாட்டு மக்கள் எப்படிப் பட்ட அராஜக, […]
மஹ்மூத் அல்ஹஸன் கோட்டார் நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம்; அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஃத்களையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்களால் அடையாளம் காட்டப் பட்ட குர்ஆன், ஹதீஃத்களை மட் டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா? நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. அறிவுடை யோரைக் கூட தடுமாற வைக்கும் சாமர்த்தியம் நிறைந்த போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்வி இது? சற்று விரிவாகவே […]
டிசம்பர் 2016 ஸஃபர்-ரபீவுல் அவ்வல் 1438 வேதங்கள் செல்லுமா? அரசு சார்பாக பிரதமர் நரபலி நரேந்திர மோடி 08.11.2016 இரவு 500/-, 1000/- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததிலிருந்து நடுத்தர, ஏழை மக்கள், அன்றாடம் காய்ச்சிகள் படும் நரக வேதனைகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அந்தளவு நெருப்பில் கிடந்து துடிக்கும் புழுக்களைப் போல் துடியாகத் துடிக்கிறார்கள். நாளை மறுமையில் அடைய வேண்டிய நரக வேதனையை இங்கேயே மாதிரிக்கு அனுபவிக்கிறார்கள். ஆயினும் மோடியின் மோடி மஸ்தான் வேலை […]
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : அந்நஜாத் டிசம்பர் இதழ் பக்.3-ல் இயக்கங்களின் பெயரால், இணை(ஷிர்க்்) வைக்கின் றனர் என்கிறீர்கள். மெளலவிகளை, இயக்கத் தலை வர்களை தக்லீத் செய்கிறார்கள் என்று சொன்னால் சரி. மாறாக இணை(ஷிர்க்்) வைக்கின்றனர் என்று சொல்வது சரியா? M.அபூ நபீல், தேங்காய்பட்டணம் விளக்கம் : மார்க்கத்தில் எமது சுய கருத்தைப் புகுத்துவதை விட்டும் அல்லாஹ் எம்மைக் காப்பா னாக. குர்ஆன் கூறும் கருத்தையே கூறுகிறோம். குர்ஆன் 9:31 வசனத்தைப் படித்துப் பாருங்கள். கிறித்தவர்கள் தங்களின் […]
ஐயம் : புத்தாண்டு வாழ்த்துக் கூறலாமா? அன் பளிப்புகள், இனிப்புகள், உணவுகள் பரிமாறலாமா? M. அபூ நபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : முஸ்லிம்கள் ஹிஜ்ரி புத்தாண்டையே கொண்டாட அனுமதி இல்லை! முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு கொண்டாட்டத் தினங்கள் மட் டும்தான். ஒன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம். இரண்டாவது ஹஜ்ஜு பெருநாள் கொண் டாட்டம். இந்த இரண்டு கொண்டாட்டங்கள் அன்றி இதர கொண்டாட்டங்கள் அனைத்தும் பித்அத்-வழிகேடு நரகில்-கொண்டு சேர்க்கும். மீலாது கொண்டாட்டம் பித்அத்-வழிகேடு நரகில்-சேர்க்கும். நபி(ஸல்) அவர்களின் மீலாதைக் […]
S.M.அமீர், நிந்தவூர், இலங்கை அன்றைய கால உயர் குலமாகக் கருதப்பட்ட “”கிப்தி” குலத்தில் பிறந்தவன் எவனோ! தப்ஸீர் இப்னு கஸீர் 6:738 * அக்கால மக்களில் சிறந்தவர்களாக இருந்த இஸ்ரவேலர்களை தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதி கீழ்த்தரமான வேலைகள் கொடுத்து கொடுமைப்படுத்தியவன் எவனோ! * நிச்சயமாக அந்நேரம் பூமியில்(தன்) ஆதிக்க வலிமை மிக்கவன் எவனோ! (10:83, 20:24,43) * தன்னுடைய ஆட்சி அஸ்தமிப்பதற்கான அறிகுறியாக ஜெருசலத்திலுள்ள பைதுல் மக்திஸில் இருந்து புறப்பட்டு வந்த நெருப்பு ஒன்று இஸ்ரவேலர்களின் இல்லங்களை விட்டுவிட்டுத் […]
N. மஹபூப் பாஷா, வில்லிவாக்கம். 1. மனிதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துரைக்க அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட நபிமார்கள், என்னை இந்த வகையில் சோதனையாக்கு. இந்த அளவுக்கு எனக்கு கஷ்டத்தை கொடு எனக் கேட்டதில்லை. ஆனால் அல்லாஹ்வாகவே மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்திடவும், சோதனையை பொறுத்துக் கொள்பவராகவும் காட்டவே அனைத்து நபிமார்களுக்கும் பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தினான். 2. ஆதம்(அலை), ஹவ்வா(அலை) ஆகிய இருவரையும் பிரித்து பல ஆண்டுகள் கழித்துத்தான் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவர்கள் எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டார்கள் என்பது தெள்ளத் […]
M.S. அபூ பக்கர், அதிரை உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லாவகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்து விடுகிறது; அவருக்கு (வலுவில்லாத) பலஹீனமான சிறு குழந்தைகள்தாம் இருக்கின்றனர். இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக்காற்று அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை […]
பெருவெள்ளம் கற்றுத் தரும் பாடம்… அபூ அப்துல் ரஹீம் சென்ற நவம்பர் இறுதியிலும், டிசம்பர் ஆரம்பத் திலும் பெருவெள்ளம் தமிழகத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது. ஏழைகளிலிருந்து, நடுத்தர வர்க் கத்திலிருந்து, பெரும் பெரும் செல்வந்தர்களி லிருந்து, ஜாதி, மதம், இனம், மொழி, இன்ன பிற எவ் வித வேற்றுமையும் இல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலுள்ள, மனித குலத்தினர் நரக வேதனை போல், பெரு வெள்ளம் அளித்த வேதனையை அனுபவித்தனர். அவர்களின் பரிதாப நிலைகளை ஊடகங்கள் மூலம் அறிந்த தமிழகத்தின் […]
பெருவெள்ளம் கற்றுத் தரும் பாடம் : அபூ அப்தில்லாஹ் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி இன்னும் பல நகரங்களை வெள்ளத்தில் மிதக்க வைத்து, எல்லாம் வல்ல இறைவன் மனித குலத் திற்குப் பல பாடங்களைப் புகட்டியிருக்கிறான். அவற்றில் ஒன்று கோடிக்கணக்கில் பல தலைமுறை களுக்குச் செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு பெருமையடிக்கும் செல்வந்தர்கள் பெறவேண்டிய பாடமும் ஒன்று. செல்வத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியும் என்ற இறுமாப்பில் இருந்த செல்வந்தர்களை வயிற்றுப் பசிக்கு ஒரு பொட்ட லம் […]
பெருவெள்ளம் கற்றுத் தந்த பாடம் : இப்னு ஹத்தாது நாத்திகர்களின் அடிப்படைக் கொள்கை-விதி என்ன தெரியுமா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வெளிரங்கமான ஐம்புலன்களுக்குள் அடங்குபவை மட்டுமே உள்பொருள், ஐம்புலன் களுக்குள் அடங்காதவை இல்பொருள் என்பதே நாத்திகச் சித்தாந்தம். அந்தச் சிந்தாத்தப்படி இறை வன் அவர்களின் ஐம்புலன்களுக்குள் அடங்குவ தாக இல்லை. அதனால் இறைவனே இல்லை என்ற அறிவீனமான வாதத்தை வைக்கிறார்கள். ஐம்புலன்களுக்குள் அடைபடாத எத்தனையோ உண்மைகள் இருக்கின்றன. அவற்றை இந்த நாத்தி கர்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள். அதற்கு மாறாக […]
நாத்திக விஞ்ஞானிகளே! நாத்திகர்களே!! 6-வது அறிவை முறையாகப் பயன்படுத்த முன்வாருங்கள்! நாத்திகர்களின் அடிப்படைக் கொள்கை-விதி என்ன தெரியுமா? மனிதனுக்குக் கொடுக்கப்பட் டுள்ள வெளிரங்கமான ஐம்புலன்களுக்குள் அடங்குபவை மட்டுமே உள்பொருள், ஐம்புலன் களுக்குள் அடங்காதவை இல்பொருள் என்பதே நாத்திகச் சித்தாந்தம். அந்தச் சிந்தாத்தப்படி இறை வன் அவர்களின் ஐம்புலன்களுக்குள் அடங்குவ தாக இல்லை. அதனால் இறைவனே இல்லை என்ற அறிவீனமான வாதத்தை வைக்கிறார்கள். ஐம்புலன்களுக்குள் அடைபடாத எத்தனையோ உண்மைகள் இருக்கின்றன. அவற்றை இந்த நாத்தி கர்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள். […]
விரல்நுனி ரேகையில் அல்லாஹ்வின் ஆதார் அடையாளம் (Unique Identification Data) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் — எஸ் ஹலரத் அலி — திருச்சி-7 அல்லாஹ் படைத்த மனித மிருக தாவர வர்க்கங்கள் அனைத்தும் பிரத்தியேக தனித்தனி அங்க அடையாளங்களுடனேயே சிருஷ்டித்துள்ளான் நமது பார்வைக்கு ஒன்றுபோல் இவை தெரிந்தாலும் ஒவ்வொரு ஜீவனும் தனித்த அடையாளங்களுடனே படைக்கப்பட்டுள்ளன இந்த அடையாளங்கள் இருப்பதால்தான் பறவைகள் விலங்குகள் தங்கள் இணைகளை அறிந்து ஒரு கூட்டமாக சமுதாயமாக வாழுகின்றன பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும் தம் இரு […]