ஐயம் : சுப்ஹு தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும்போது, சுன்னத்து தொழலாமா? ஜைனுல் ஆபிதீன், இளங்காகுறிச்சி தெளிவு : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அறி வித்துள்ளார்கள். சுப்ஹு தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்பொழுது சுன்னத்துத் தொழுகை இரண்டு ரகாஅத்துகளைத் தொழ ஒருவர் ஆரம்பித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரது ஆடையைப் பிடித்திழுத்து, சுப்ஹு தொழு கையை நான்கு ரகாஅத்துகளாக்க நீர் கருதுகிறீரோ? என்று கேட்டார்கள். (அஹ்மத்) கைஸ் பின் உமர்(ரழி) கூறுகிறார்கள். நான் சுப்ஹு தொழச் சென்றேன். […]

அபூ அப்தில்லாஹ் இறுதி இறைநூல் அல்குர்ஆன் கூறுகிறது, கவனமாகப் படியுங்கள். (நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுதே அவர்கள் நேர்வழியை அடைவார்கள். (குர்ஆன் : 2:186) இந்த குர்ஆன் வசனம் அல்லாஹ்வை மட்டுமே நம்ப வேண்டும், மனிதர்களில் யாரையுமே நம்பக் கூடாது, நேர்வழியை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கவேண்டும். அவன் பதிலளித்துள்ள குர்ஆன் […]

in அறிவியல்  எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7. பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும்  மரணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வில் மரித்தவை மண்ணோடு மக்கிப் போவதும் இயற்கையாக நடந்து கொண்டே இருக்கிறது. உயிரினங்களில் மனிதன் மட்டுமே இறந்த உடலை முறையாக எரித்தோ அல்லது புதைத்தோ அடக்கம் செய்கிறான். வனங்களிலும் நீர்நிலைகளிலும் வாழும் உயிரினங்கள் இறந்தபின் மண்ணோடு மண்ணாகக் கலந்து மறைந்து போகின்றன. மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரையிலான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கி […]

அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா? அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதி காலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும், தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள், மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மை யான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். யா அல்லாஹ்! எனது சமூகத் திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை […]

இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் “”கல்கி அவதாரம்” குறித்து அவர் பூமியில் குழப்பங்களும், கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பார் எனவும் நம்பப்படுகிறது. இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை. ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார். யார் அவர்? ஓர் ஆய்வுப் பார்வை, எப்போது வருவார் கல்கி அவதார்? ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும் கடைசி அவதாரமான கல்கி, இறைத் தூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதா வார். இதை நான் சொல்லவில்லை. […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி.திருச்சி-7.  அல்லாஹ் படைத்த இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், அதன் தோற்றம் குறித்து விடைதெரியா மர்மங்கள் ஏராளம். பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் பகுதி (Dark Energy)73% கரும் சக்தியானது மனிதக் கண்ணுக்கு புலப்படாமலும் என்னவென்று விளங்க முடியாமலும் “ அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது. அதைப்போன்று அடுத்து மர்மமானது, பிரபஞ்சத்தின் கால் பகுதியாக 23% இருக்கும் (Dark Matter) “ கரும் பொருள்” இன்னும் புதிருக்குள் புதிரான நியூட்ரினோ துகள்கள் பிரபஞ்சத்தின் […]

MTM. முஜீபுதீன், இலங்கை செப்டும்பர் 2015 தொடுர்ச்சி…… துல்கிப்லு(அலை) இவர் ஓர் அல்லாஹ்வின் அடியானும், நபியாக வும் இருந்தார். இன்னும், நபியே! நினைவு கூர்வீராக! இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல் கிஃப்லை யும் இவர்கள் எல்லோரும் நல்லோர்களில் உள்ளவரா கவே இருந்தனர். (அல்குர்ஆன்: 38:48) யூனுஸ்(அலை) இவர் அல்லாஹ்வின் நல்ல அடியானும், இறைத் தூதருமாவார். அவர் பற்றி அல்குர்ஆனில் 37:139-149, 21:87-88. இல்யாஸ் (அலை) இவர் அல்லாஹ்வின் நல்ல அடியானும், இறைத் தூதரும் ஆவார். இல்யாஸ்(அலை) அவர்கள் சிலை […]

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே, சகோதரிகளே நமது ஈமானின்-இறைநம்பிக்கையின் எதார்த்த நிலையை மீள் பரிசோதனைச் செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம். இன்று உலக ளாவிய அளவில் முஸ்லிம்கள் கடும் துன்பத்திற்கும், கஷ்ட நஷ்டத்திற்கு, பெரும் உயிரிழப்பிற் கும் ஆளாகி வருகிறோம். இன்றைய முஸ்லிம் களின் வாழ்க்கை நரக வாழ்க்கையை நினைவு படுத்துவதாக இருக்கிறது. நம் தாய் நாடான இந்தியாவில் மட்டும் முஸ்லிம்கள் இத்துத்வா வெறியர்களால் கொடுமைப் படுத்தப்படவில்லை உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்கள் பல வகைகளில் பெரும் கொடுமைக்கும், […]

M.S. அபூ பக்கர் மேலும் பொறுமையைக் கொண்டும் தொழுகை யைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமா கவே இருக்கும். (அல்குர்ஆன் : 2:45) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155)

MTM முஜீபுதீன், இலங்கை ஜூன் 2015 தொடர்ச்சி…… இப்ராஹீம் (அலை) நிச்சயமாக இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தான். (அல்குர்ஆன் : 37:83)  அன்றியும், திடமாக நாமே “நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவத்தை (நபித்துவத்தை)யும் இறைநெறி நூல் களையும் ஏற்படுத்தினோம். (அவர்களில்) நேர் வழி பெற்றவர்களும் உண்டு. எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக பாவிகளாக இருந்தனர். (அல்குர்ஆன் : 57:26)

அபூ அப்தில்லாஹ் சவுதி மன்னர் அவர்களே, இளவரசர்களே, மந்திரிப் பிரதானிகளே, அறிவியல் வல்லுநர்களே, அறிஞர்களே அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). உங்கள் அனைவரிடமும் எமது ஒரு கனிவான அதிமுக்கிய வேண்டுகோள்! எமக்கும், உங்களுக்கும், அல்லாஹ் நாடும் அவனது நல்லடியார்களுக்கும் அவனது நேர்வழியை (6:153) காட்டியருள துஆ செய்தவனாக இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.

முஹிப்புல் இஸ்லாம் இறை ஒருமையின் தனித்துவம் : படைத்தவன் ஏகன் அல்லாஹ், படைப்பினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன்; வேறுபட்டவன். “அல்லாஹ் ஒருவன்’ என துவங்கும் அல்லாஹ்வின் ஒருமை, ஒரே இறைவ னான அல்லாஹ்வுக்கு நிகராய், ஒப்பாய் இணை யாய் எவரும், எதுவும் இல்லை என்று நிறைவு பெறச் செய்திருப்பது காண்க. அல்குர்ஆன் : 112:1-4 அல்லாஹ்வின் அருளுரை இதை மானுடத்திற்குக் கற்றுத் தருகிறது. ஏற்றோர் இவ்வத்தியாயத்தைக் கசடறக் கற்பதும் அதன் பிரதிபலிப்பாய் வாழ்வை அமைத்துக் கொள்வதும் கட்டாயக் கடமை. […]

இப்னு ஹத்தாது அல்குர்ஆன் பறைசாற்றுகிறது, கவனமாகப் படியுங்கள்! “”நீங்கள் (என் உபதேசத்தை) புறக்கணித்தால் (எனக்கு இழப்பு ஒன்றுமில்லை) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் (சம்பளம்) கேட்கவில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்!” (என்று நூஹ்(அலை) கூறினார். (10:72) இப்ராஹீம்(அலை), யாஃகூப்(அலை) இரு வரும் தம் குமாரர்களுக்கு உபதேசித்தது, “”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்காக இம் மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள் ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக் […]

ந.அப்துல் ரஹ்மான், ஹாங்காங் தமிழகத்தில் இருந்து சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸ் சுட்டுக் கொன்றதற்கு எதிர்வினையாக தமிழ்நாட்டில் ஆந்திர வங்கியின் கிளைகளும், ஆந்திராவைச் சேர்ந்த பல் பொருள் அங்காடிகளும் தாக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து முகநூலில் தமிழ் தேசியவாதிகள் என்ற பெயரில் எழுதுபவர்களின் பதிவுகளில் திராவிட அரசியல் கட்சிகள் மீதும், அதன் தலைவர்கள் மீதும் இனவாத முத்திரை குத்தி கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கை காண்கிறோம். திராவிடர் கழகத்தின் தாலி அகற்றும் போராட்டத்துக்கு எதிர் வினையாக […]

மழையையும் இறக்கினோம்! இரும்பையும் இறக்கினோம்!

அபூ அப்தில்லாஹ் சூரியனும் சந்திரனும் துல்லிய கணக்கின்படியே சுழல்கின்றன என்று உறுதி கூறும் குர்ஆன் வசனங்களின் அப்பகுதிகள் வருமாறு. சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே (சுழல்கின்றன. (6:96) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங் களையும் (தன்) கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்தான். (7:54) ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறியும் பொருட்டு அதற்கு (சந்திரனுக்கு) பல படித்தரங்களை உண்டாக்கினான். (10:5)

ஐயம் : 60 வயதுப் பெண் தூரத்து உறவுக்கார ஆண் (அண்ணன் உறவு) உடன் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? M. ஜலாலுதீன், சென்னை. தெளிவு : செல்லக்கூடாது. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் கொண்டு ஈமான் கொண்ட பெண் அவளுக்கு மஹ்ரமான (திருமணம் முடிப்பதற்குத் தகுதியற்ற தகப்பன், உடன் பிறந்தவன்) துணையில் லாமல் ஓர் இரவு, ஒரு பகல் தூரம் பயணம் செய்வது ஹலால் ஆகாது. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி.

இப்னு ஸதக்கத்துல்லாஹ் பொய்(யன்) புதிதாக இதுவரை எதையும் செய்ய வில்லை; இனியும் செய்யப் போவதில்லை! 34:49 கடந்த 17.04.15 அன்று தமிழ்நாட்டு தறுதலைகள் ஜமாஅத் துணைத் தலைவர் அண்ணன் சையது இபுறாஹீம் மத்ஹபை பின்பற்றுவது இறை மறுப்பே! அவதூறுகளால் எழுச்சி பெறும் ஏகத்துவப்படை! என்ற இரு தலைப்புகளில் ஜுமுஆ உரையாற்றியிருந்தார், அதில் சில விஷயங்களை மேற் கோள்காட்டி மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் வேண்டுகோளை ஏற்று சிந்தித்தேன். மனதில் சில […]

S.ஹலரத் அலி, திருச்சி சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டுமே ஆழிசூழ் உலகாக அழகுடன் விளங்குகிறது. மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் உள்ளது. நிலத்தில் வாழும் கோடானுகோடி உயிரினங்கள் உருவாவதற்கு ஆதாரமான ஜீவநீர் ஆதியில் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் பல்வேறு பதில்களைக் கூறி வந்தது. நாலரைக் கோடி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி, எரிமலைகளால் சூழப்பட்ட நெருப்பு கோளமாக இருந்தது. இதிலிருந்து வெளியான நீராவியும், […]

அபூ அப்தில்லாஹ் H. அப்துல் கபூர் என்ற சகோதரர் தேதியிடாத ஒரு நான்கு பக்கக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அபூஹுரைரா, அப்துல்லாஹ் இப்னு முகஃபல், அபூ சுஃப்யான், முஆவியா, யசீது (ரழி-ம்) போன்றோர் முஸ்லிம்கள் அல்ல யஹூதிகள் என்றும் இமாம் புகாரீ(ரஹ்) அவர்களையும் யஹூதி என்று வர்ணித்தும், பல குர் ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்தும் பக்கங்களை நிரப்பியுள்ளார். ஹதீஃத்களை நிராகரிக்கும் இவரும், இவரைப் போன்றோரும் யஹூதிகள் எழுதி வைத்துள்ள சில நூல்களை உருப்போட்டுக் கொண்டு […]