நீதித்துறை அன்றும்! இன்றும்!! இன்று தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை, வாங்கப்படுகின்றன! நூறு வருடங்களுக்கு முன்னர் வெள்ளையர் ஆட்சியில் ஒரு கொலை வழக்கு. கோடி- கண்ட கோசுப் பிள்ளை என்பவர், தன் மருமகன் மீராசா ஏவிவிட்ட தேவர் ஒருவரால் வெட்டிச் சாய்க்கப்பட்டார். காரணம்? அன்றைக்கு ரூபாய் 2½ லட்சம் பெருமானமுள்ள ஒரு தங்க, வைர நெக்லசை அன்றைய இங்கிலாந்து ராணிக்கு அன்பளிப்பாகத் தந்தவர் கோசுப்பிள்ளை. அவருக்கு நான்கு பெண் மக்கள், ஆண் வாரிசு இல்லை. தன் மூத்த மகளை தன் […]

மவ்லவிகளே, ஆலிம்களே, அல்லாமாக்களே இது எமது கடமை என்ற கடமை உணர்வுடன் எச்சரிக்கிறோமா! ஏற்பதும், நிராகரிப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் நானை மறுமையில் இந்த எச்ச ரிக்கையை உங்கள் வசம் சேர்த்துவிட்டோம் என்பதற்கு நீங்கள் சாட்சி சொன்னால் போதும். கடந்த ஆயிரம் வருடங்களாக அகில உலக மக்களுக்கும் சொந்தமான, அனைத்து மக்களின் இறைவனான அல்லாஹ், ஒட்டுமொத்த மனிதர்களுக்காக, குறிப்பாக அறிவு குறைந்த மக்களுக்காக தெள்ளத் தெளி வாக நேரடியாக விளக்கி அருள்புரிந்து இறக்கிய ருளிய மனித சமுதாயத்திற்கே […]

இப்து ஹத்தாது ஆதம் நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்தே மார்க்கம் அறிந்த மேதைகள் -அறிஞர்கள்-ஆலிம்கள் என்று பெருமை பேசும் ஐந்து சதவிகிதம் கூட தேறாத ஒரு சின்னஞ்சிறிய கூட்டம் மதகுருமார்கள் என்றப் பெத்தப் பெயரில் இருந்து வருகிறது. இந்தச் சின்னஞ் சிறு கூட்டம் 95 சதவிகித பெருங்கொண்ட மக்களை அவாம்கள் பாமரர்கள் என இழிவுபடுத்தி, அதற்கும் ஒருபடி கீழேபோய் அவர்களை கீழ்ஜாதி, தாழ்த்தப்பட்டவர்கள் என மேலும் இழிவுபடுத்தி அவர்களை தங்களின் அடிமைகள் போல் நடத்தி வருகின்றனர். பெருங்கொண்ட மக்களும் […]

S. சதீஸ்குமார், செல் : 95781-63832 துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவது அவசியமாகும். அதாவது மனித வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம் என்பதும், இக்கருத்தின் அடிப்படையில் நபிகள் தான் இஸ்லாத்தை தோற்று வித்தவர் என்று கூறுவதும் தவறான கருத்தாகும். இறைவனின் முன்னிலையில் மனிதன் முழுமையாக அடிபணிதல் வேண்டும். மேலும் இறைவன் முன்னால் நமது சொல்கள், செயல்கள் அனைத்திற்கும் பதில் தருவதற்காக அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவோம் எனும் […]

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

அபூஃபாத்திமா நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த 1947லிலிருந்து ஜனநாயக ஆட்சி, போலி ஜனநாயக ஆட்சி, பணநாயக ஆட்சி, குண்டர் நாயக ஆட்சி என முன்னேறி(?) இப்போதும் மீண்டும் மனுநீதி ஆட்சியை, அரசு அரியணையில் அமர்த்தியுள்ளோம். ஜனநாயக ஆட்சி பெரும் செல்வந்தர்களை மேலும் மேலும் செல்வந்தர்களாக்குவது, ஏழை மக்களை மேலும் மேலும் ஏழைகளாக்குவது என்ற சித்தாந்த அடிப்படையிலானது என்பதைப் பார்த்து வருகிறோம். மனுநீதி ஆட்சியோ அதிலும் ஒருபடி மேலே போய் மேல் ஜாதி என்ற பெயரில் ஆட்சி அதிகாரத்தைக் […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்-நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நோக்கம் : 3 விளக்கம் : 4 துல்கஃதா – துல்ஹஜ் : 1408 ஜூலை – 1988

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்-நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நோக்கம் : 3 – விளக்கம் : 6 ஸபர் : 1409 – செப்டம்பர் – 1988

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்-நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நோக்கம் : 3 – விளக்கம் : 8 ரபிஉல் ஆகிர் : 1409-நவம்பர்-1988

ஐயம் : இஸ்லாமி ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து ஒரு பொருளை விற்கலாம்? பிஷ்ரூல் ஹாஃபி, சென்னை. தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை, நாணயம், உள்ள (நல்ல) வியாபாரி, நபிமார்கள், சிந்திக்கீன்கள் ஸாலிஹீன்களுடன் (மறுமையில்) இருப்பார். அபூ ஸயீத், இப்னு உமர்(ரழி) திர்மிதீ, தாரமீ, தாரகுத்னீ, இப்னு மாஜ்ஜா, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர்கள். (எவர் தமது வியாபாரத்தில்) இறையச்சம், பயபக்தி, பரோபகாரம், […]

அபூ அப்தில்லாஹ் ஆதத்தின் சந்ததிகளை நேர்வழிக்குக் கொண்டு வர அகிலங்கள் அனைத்தையும் படைத்து, மனித குலத்தையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் காலத்திற்குக் காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அப்படி இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டுமொத்த நபிமார்களும், இறைவன் ஒருவனே, இணை, துணை, தேவை, இடைத்தரகர்கள் இல்லாத தனித்தவன் என்றே மக்களுக்குப் போதித்தனர். இறைத்தூதர்கள் அனைவரும் அந்த ஒரே இறைவனல்லாத அவனது படைப்புகளில் எதற்கும், எவருக்கும் ஒருபோதும் அடிபணியக் கூடாது, அவர்களின் வழிகாட்டல்படி நடக்கக் கூடாது. அச்செயல் […]

gospel_of_barnabas

M.T.M முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2015 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் படைப்பான மலக்குகள் (வானவர்கள்) மீது நம்பிக்கை : வானங்கள், பூமி, மற்றும் மனிதன், அறிந்த, அறிந்துகொள்ள முடியாத சகலவற்றையும் படைத்துப் பரிபாலிப்பவன் ஏக இறைவன் ஆவான். இவை பற்றிய பல செய்திகளை இறைநெறி நூல்கள் மூலமாக மனிதன் அறிந்தே வைத்துள்ளான். எனினும் முன்னைய இறைநெறி நூல்களில் மனிதனின் தப்பும் தவறுமான கருத்துகள் நுழைந்து வழக்கிழந்த வேதங்களாக்கப்பட்டதால் அல்லாஹ் முழுமை பெற்ற இறுதி இறை நெறியாக அல்குர்ஆனை இறக்கி […]

இப்னு ஹத்தாது அந்நஜாத் வாசகர்களான அன்புச் சகோதரர்கள், சகோதரிகளாகிய அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). உங்கள் அனைவருக்கும் ஒரு தெளிவான, நேரடியான எச்சரிக்கை விடுவது அவசியம் என்ற நன்நோக்குடன் இரண்டு சம்பவங்களை உங்கள் அனைவரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அந்நஜாத் ஜூலை, செப்டம்பர் 2014 இதழ்களில் சூனியம்-சிஹ்ர் மற்றும் பீ.ஜையும்! சூன்யமும்!! என்ற இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றதை அறிவீர்கள், இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பு விடுத்தவர் நமக்கு அறிமுகமானவரோ, அந்நஜாத் சந்தாதாரரோ […]

பின்னர், நாம் வானவர்களை நோக்கி ஆதமுக்குப் பணிந்து ஸுஜூது செய்யுங்கள் என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்தான். ஆணவமும் கொண்டான். இன்னும் அவன் நிராகரிப்போரை சார்ந்தவனாகி விட்டான். (2:34) மேலும், அல்லாஹ்வையே, வணங்குங்கள். அவனுடன் எதனையும் இணையாக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கி உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவனாக, பெருமை உடையவனாக இருப்பவனை […]

விமர்சனம் : கோட்டாறு முனாழராவில் தங்களை ஆலிம் இல்லை என்று கூறி வெளியேற்றி விட்ட கோபத்தில்தான் ஆலிம்களை வெறுக்க ஆரம்பித்ததாக அல்ஜன்னத் நவம்பர் 2014 பக்கம் 35ல் எழுதி இருக்கிறார்களே? விளக்கம் : “”தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி” என்ற நூலை அவர்கள் வெளியிட்ட ஆரம்பத்திலேயே இப்படியொரு விமர்சனம் வந்து நாம் அப்போதே அவர்களின் அபத்தங்களை அம்பலப்படுத்தி இருந்தோம். பொதுவாக ஆணவம், அகங்காரம்,வீண் பெருமை கொண்ட இந்த மவ்லவிகள் 7:146 இறை வாக்குக் கூறுவது போல் குர்ஆன் வசனங்களையே […]

அபூ அப்தில்லாஹ் அந்நஜாத் 1986 விமர்சனம் : எங்கள் ஊரில் ஒரு ஹாபிழ் பணத்துக்காகத் தான் தராவீஹ் தொழ வைக்கிறார்! பணம் வாங்காத ஹாபிழ் ஒருவரை உடனே அனுப்பவும்! இப்போது தொழவைப்பவரை நாங்கள் அனுப்பி விடுகிறோம். எல்லா ஊர்களுக்கும் ஹாபிழ்கள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் ஊதியம் வாங்காமல் தான் ஆசிரியராக சேவை செய்கி றீர்களா? A.K அப்துஸ்ஸுபுஹான், மெயின் ரோடு, லெப்பைக்குடிகாடு. விளக்கம் : ஹாபிழ்கள் தான் தராவீஹ் தொழ வைக்க வேண்டும் என்று நாங்கள் […]

  குறிப்பு : இந்த ஆக்கம் நஜாத் முதல் இதழி லேயே பீ.ஜையின் கூடப் பிறந்த சகோதரர் காலம் சென்ற பி.எஸ்.அலாவுதீன் அவர்கள் எழுதியது. அவர் அளித்த வாக்குறுதிப்படி கடந்த 29 வருடங்களாக அந்நஜாத் தனது கடமையைப் பெரும் சிரமத்துடன் தொடர் கிறது. தனது சகோதரர் அளித்த வாக்குறுதியை தம்பி பீ.ஜை. நிறைவேற்றுகிறாரா? நீங்களே முடிவு செய்யுங்கள்! மவ்லவி அலாவுத்தீன், தொண்டி “ஏகத்துவத்தை நம்பியிருப்பவர்களே! நீங்கள் அல்லாஹ்விற்க்காக சத்தியத்தை நிலை நிலை நிறுத்துவோராய், நீதிக்கு சான்று சொல்வோராய் ஆகிவிடுங்கள். […]

விமர்சனம் : முஸ்லிம்களிடையே நிறைந்து காணப்படும் ஷிர்க், குஃப்ர், பித்அத்களைக் கடுமையாகச் சாடுகிறார். வரதட்சணைக் கல்யாணம், பெண் வீட்டுச் சாப்பாடு, திருமணச் சடங்குகள் இவை அனைத்தும் மாற்று மதக் கலாச்சாரங்கள், மஹர் கொடுத்து மணம் முடிப்பதும், மாப்பிள்ளை வலீமா விருந்து கொடுப்பதும் தான் நபிவழி என்று பகிரங்கமாகக் கூறி வருகிறார். அவரது இந்தக் கொள்கைக்கே மாறாக அப்படி நடக்கும் அனாச்சாரத் திருமணங்களில் கலந்து கொள்கிறார். பெண் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுகிறார். இது என்ன கொள்கை? விளக்கம் : […]

M.T.M முஜீபுதீன், இலங்கை அக்டோபர் 2014 தொடர்ச்சி…… இதேபோல் ஏனைய திருநாமங்களும் அல்லாஹ் ஒருவன். அவனுக்கு நிகராக எவையும் இருக்க முடியாது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக அவதானியுங்கள். 2. அல்லாஹ் அவ்வல் – (முதலானவன் -ஆதி) 3. அல்லாஹ் ஆகிர் – (முடிவானவன்-அந்தம்) 4. அல்லாஹ் பாரீ – (உருவாக்குபவன்) 5. அல்லாஹ் பாத்தின் – (முடிவானவன்-அந்தம்) 6. அல்லாஹ் பதீவு – (முன்மாதிரி இன்றி படைத்தவன்) 7. அல்லாஹ்வு பர்ரு – […]