நேர்முக வர்ணனை : – இப்னு குறைஷ் கடந்த முஹர்ரம் 14 ஹிஜ்ரி 1435 அன்று ஞாயிற்றுக்கிழமை ஜாக் அமைப்பின் சார்பாக சேலம் மாநகரில் பிறை விளக்க மாநில மாநாடு நடத்தப்பட்டது. துல்லியமான சந்திரக் கணக்கீட்டு முறையை சரிகண்டு அதை நடைமுறைப்படுத்தும் ஜாக் உறுப்பினர்கள் தவறாது இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்புக் கொடுக்கப்பட்டது. பிறைகளைக் கணக்கிடுவது தவறானது என்றும் ஜாக்கின் சர்வதேச-சவுதி தேசப்பிறை தான் சரியானது என்றும் கூறி இது சம்பந்தமான கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்கப்படும் என்றும் […]
அபூ ஃபாத்திமா ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ சிலை வழிபாடு, கபுரு-சமாதி வழிபாடு, முக்கடவுள் வழிபாடு, மதகுருமார்கள் வழிபாடு போன்ற நரகத்திற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிபாடுகளிலிருந்து விடுபட்டு இறைவன் அளித்துள்ள (பார்க்க 6:153) ஒரே நேர்வழிக்கு வரும்போது மனதில் உறுதி கொண்டு வாயினால் மொழிய வேண்டிய உறுதி மொழியே அரபி மொழி வழக்கில் கலிமா என்பதாகும். “”அல்லாஹ்” என்று அரபி மொழியில் அழைக்கப்படும் இணை, துணை, தாய் தந்தை, மகன், தேவை, இடைத்தரகு எதுவுமே அற்ற […]
பெங்களூர், M.S.கமாலுத்தீன் “”மக்களாட்சி சீருடன் நடைபெற அதற்கு முழு முயற்சியும் தன்னொழுக்கமும் ஜனநாயகம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளும் விருப்பமும் மக்களுக்குத் தேவை. இதற்குப் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாதபோது அங்கு ஜனநாயகம் வீழ்ச்சி அடையும். மேலும் பெரும் பணக்காரர்களோ, ஆயுத பலம் கொண்டவர்களோ நியாயமாக ஒரு சமுதாயத்தை வழிநடத்தவே முடியாது. ஒரு சமுதாயத்தின் மிகச் சிறந்த மனமாற்றங்கள் மட்டுமே அந்த சமுதாயத்தை வழி நடத்தும்” – ப்ளேட்டோ
அபூ அப்தில்லாஹ் சுரியன், சந்திரன், பூமி மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வந்து சங்கமம் (Conjunction) ஆன நொடியுடன் செல்லும் மாதம் முடிந்து வரும் மாதம் ஆரம்பித்து விடுகிறது. சங்கமம் (Conjunction) ஆனவுடன் புதிய மாதம் பிறந்து விட்டது என்பதில் எங்களுக்குச் சந்தேகமே இல்லை. ஆயினும் முதல் பிறை எங்கள் கண்ணுக்குத் தெரியாததால் (Non visible) அது நாளே இல்லாத சூன்ய நாள். இரண்டாம் பிறையும் கண்ணுக்குத் தெரியாததால் அதுவும் நாளே இல்லாத சூன்ய நாள். இரண்டாம் நாள் […]
விமர்சனம் : எழுத்து வழி பிரச்சாரத்திற்கும் கூலி வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 3 பக்க அளவில் ஆதாரங்களைத் தந்து கடந்த பத்து மாதங்களுக்கு முன் கடிதம் எழுதி இருந்தேன். இதுவரை பதிலளிக்கவில்லையே ஏன்? எஸ்.முஹம்மத் ஸலீம், ஈரோடு.
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் பிறை நாள்காட்டியின் அத்தியாவசியம் பற்றிய…. ஆய்வரங்கம்! கருத்தரங்கம்!! நாள்: 29.12.1434 (03.11.2013) ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை (இன்ஷா அல்லாஹ்)
எந்த மவ்லவியாவது பிரகடனம் செய்யத் தயாரா?
1.சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு இரண்டாவது பகிரங்க அழைப்பு! 2.பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம்!
ஐயம் : தராவீஹ், தஹஜ்ஜத், கியாமுல்லைல், கியாமு ரமழான், வித்ர் இத்தொழுகைகளின் விபரம் தரவும். தராவீஹ் என்ற பெயரால் முன்னிரவில் தொழுவதற்கும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கும் ஆதாரத்துடன் தெளிவாக குர்ஆன், ஹதீஃத் வழியில் விளக்கம் தரவும். அபூபக்கர், சிங்கார், சென்னை-79. தெளிவு : ஹதீஃத் நூல்களில் தஹஜ்ஜத், கியாமுல் லைல், கியாமு ரமழான், வித்ர் போன்ற பதங்கள் மட்டுமே காணப்படுகின்றன. “”தராவீஹ்” என்ற பதத்தை குர்ஆனிலோ, ஹதீஃதிலோ அறவே பார்க்க முடியவில்லை. மேலும் தஹஜ்ஜத், கியாமுல் லைல், கியாமு […]
அபூ அப்தில்லாஹ் கம்யூனிசம், கேப்பிடலிசம், செக்யூரலிசம் போன்ற சொற்றொடர்களை அடிக்கடி நாம் கேட்டு வருகிறோம். ஆனால் “”புரோகிதரிசம்” என்று புதிதாக ஒன்றைக் கூறுகிறீர்களே? என்று சில சகோதரர்களின் உள்ளங்களில் ஐயம் எழலாம். ஆம்! உண்மைதான், இப்போது “புரோகிதரிசம்’ பற்றி மக் களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எப்படி கம்யூனிசம்-பொதுவுடைமைக் கொள்கை, கேட்பிட்டலிசம் முதலாளித்துவக் கொள்கை, செக் யூரலிசம்-சமய சார்பிலாக் கொள்கை என ஒவ்வொன்றும் தனித்தனிக் கொள்கை கோட்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கின்றனவோ அவை போலவே இந்த […]
பெங்களூர், M.S. கமாலுத்தீன் ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந் திருப்பது இறைவனின் அருட்கொடை. அல்லாஹ்வின் அருட்கொடை நிறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த இயற்கை வளங்களைக் கொண்டு ஏற்படும் வளர்ச்சியும் புதிய தொழில் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட வழி வகை செய்யும். இயற்கை வளங்களைச் சரியான முறையில் நம்முடைய தேவைக்குப் பயன்படுத்தியது போக எஞ்சியவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவானியை அபரிமிதமாக அள்ளித் தரும். ஏற்றுமதியில் முன்னிலை பெறும் நாடு சகல துறைகளிலும் சமச்சீரான […]
ஆகஸ்டு 2013 தொடர்ச்சி….. MTM. முஜீபுதீன், இலங்கை பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறியதாவது:- இணைவைப்போரை அன்றைய (உஹதுப் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி(ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹத் மலைக் கண வாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்களைத் தலைவராக நியமித்து, ‘(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர […]
அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி! இது நமது முன்னோர்கள் கூறிய அமுத மொழி. ஆம்! ஆட்சியாளர்கள் நேர்மையாளர்களாகவும், நெறி தவறாமலும் நீதமான ஆட்சி நடத்தினால் நிச்சயமாக மக்களும் நேர்மையாளர்களாகவும், நெறி தவறாமலும் நீதமான வாழ்க்கை வாழும் நிலை ஏற்படும் என்பதில் சந்தேகம் உண்டா? அதற்கு மாறாக இன்றைய ஆட்சியாளர்கள் யார்? அவர்களின் உண்மையான நிலை என்ன? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஐயம் : 10.7.2013 அன்று ஸஹர் நேரத்தில் ஜெயா டி.வி.யில் ஆலிம் பைஜி ஒருவர் உரையாற்றினார். அதில் குர்ஆன் தர்ஜுமாவைப் பார்க்காதீர்கள். உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நபி மூஸா(அலை) அவர்களிடம் மரம் பேசியது. நானே அல்லாஹ் என்னையே வணங்குங்கள் என்றது. நபியவர்கள் அதனை ஏற்கவில்லை. அறிந்தவர்களிடமே கேட்டு விளக்கம் பெறவேண்டும் என்றார். இவ்வாறு மரம் பேசியதாக நிகழ்ச்சி குர்ஆனில் உள்ளதா? R. முஹம்மது பாரூக்,நெல்லை.
S.முஹம்மத் ஸலீம், தொடர்பு எண் : 9842696165: மனிதர்களுக்கிடையே ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை வழங்கக் கூடிய வகையில் அல்லாஹ் குர்ஆனை அருளியுள்ளான். குர்ஆனில் இருந்து அனைத்து விஷங்களுக்கும் விளக்கம் பெறவேண்டிய முஸ்லிம்கள் குர்ஆனை உரிய முறையில் படிக்காமல் இருப்பதன் காரணமாக பல விஷயங்களில் முரண்பட்டுச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். குறிப்பாகப் பிறை விஷயத்தில் கருத்து வேறுபாடுக் கொண்டு தாங்கள் சொல்லும் கருத்து மட்டும் தான் சரியானது என்று அனைத்துத் தரப்பினரும் கூறி வருகிறார்கள். இந்தக் […]
பஷீர் அகமது, புதுக்கோட்டை. திரைகடல் ஓடி திரவியம் தேடு, கப்பலுக்கு போன மச்சான், மாப்பிள்ளை வெளிநாட்டு சபுராளி… இந்தத் தலைப்புகள் தமிழ் முஸ்லிம்களின் சிறு கதை தலைப்புகள் மட்டுமல்ல! நாவல்களும் அல்ல! இவை போன்ற சொற்றொடர்கள் பெரும்பான்மையான தமிழ் முஸ்லிம் குடும்பங்களில் அடிக்கடி புழங்குபவை. மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினரை ஊரில் விட்டுவிட்டு வெளிநாட்டில் போய் வேலை பார்ப்பது, தமிழ்நாட்டு முஸ்லிம்களின் விசயம் மட்டுமல்ல; எல்லா சமூகத்திலும் உள்ள தேசியப் பிரச்சினை என்ற கோணத்தில் இக்கட்டுரையைப் படிக்கத் துவங்குங்கள்! […]
(நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரே) ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) பற்றிப் பிடியுங்கள்; (ஒருபோதும்) பிரிந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்; உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்பிக் குழியின் விளிம்பின்மீது இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (3:103) (பார்க்க: 3:101, […]
ஷரஹ் அலி, உடன்குடி கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் உறுதிமொழிகள் இதோ : “”நிச்சயமாக முஃமின்கள்(யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வையுங்கள். (49:10)
அபூ அப்தில்லாஹ் அல்லாஹ் கூறுகிறான்: “”…. அல்லாஹ் அருளியதிலிருந்து உண்ணுங்கள்; பருகுங்கள், பூமியில் குழப்பவாதிகளாய்த் திரியாதீர்கள்”. (2:60) “”…. ஏனெனில், குழப்பம் உண்டாக்குவது கொலையிலும் கொடியது….” (2:191) குழப்பம் நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் உரிய தென ஆகும் வரை அவர்களுடன் போராடுங்கள்… (2:193)
எஸ்.முஹம்மது ஸலீம், தொடர்புக்கு : 9842696165 இஸ்லாம் மட்டும்தான் விஞ்ஞானத்திற்கு முரண்படாத மார்க்கம் என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களில் மிக அதிகமானோர் விஞ்ஞானம் கூறும் மிகத் துல்லியமான சந்திரக் கணக்கீட்டை மறுத்துக் கொண்டு, பிறையைப் புறக்கண்களால் பார்த்துத்தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் சூரியனை மட்டும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தங்களது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பாரபட்சம் காட்டும் இத்தகையவர்களின் நட வடிக்கை சரிதானா என்பதை குர்ஆன் […]