அபூ அப்தில்லாஹ் 1.பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் (ரஃயல் ஐன் 3:13) என்று நேரடியாகக் கூறும் குர்ஆன் வசனமோ, ஹதீஃதோ இருக்கிறதா? 2.ஹதீஃதில் மேகமூட்டம் என்றிருக்கிறதா? மறைக்கப்பட்டால் என்றிருக்கிறதா? (பார்க்க 10:71) ஃகும்ம, ஃகுப்பிய, ஃகும்மிய இந்த அரபி பதங்களின் நேரடி தமிழ் பதங்கள் என்ன? 3.நபி(ஸல்) அவர்கள் பிறை 29 அன்று மாலை மறையும் பிறையை மேற்கில் பார்க்கச் சொன்னார்களா? அல்லது தினசரி பார்க்கச் சொன்னார்களா? 4.மாத ஆரம்ப நாட்களில் மாலையில் பார்க்கும் பிறை மறையும் […]

முஹிப்புல் இஸ்லாம் நோக்கம் : அல்லாஹ் தூயவன். அல்லாஹ் அருளிய மார்க்கம் தூய்மையானது. அல்லாஹ் அருளிய தூய வடிவில் நபிமார்கள் அனைவரும் இஸ்லாத்தை நிலைநாட்டியுள்ளனர். இஸ்லாமிய அழைப்புகளில் நபிமார்கள் இஸ்லாத்தின் தூய்மையைப் பிரதிபலித்தனர். அல்லாஹ்வின் விரோதி, ஃபிர்அவ்ன் மனித இனத்துக்கும் கொடிய விரோதியே! ஃபிர்அவ்ன் வரை இஸ்லாம் தூய வடிவில் சேர்ப்பிக்கப்பட்டு விட்டது. அந்தக் கொடியவனுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பிலும் இஸ்லாத்தின் தூய்மை அப்பட்டமாய் நிலை நாட்டப்பட்டுள்ளது.

இன்றைய முஸ்லிம்கள் ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கட்டாயக் கடமைகளில் பெரிதும் பின்தங்கி இருந்தாலும் அவர்களில் சிலருக்கு அல்லாஹ் பெரும் செல்வத்தைக் கொடுத்துத்தான் இருக்கிறான். ஆயினும் அச் செல்வந்தர்கள், தங்கள் செல்வத்தில் ஏழை எளியவர்களுக்குரிய பங்கைக் கணக்கிட்டுக் கொடுப்பதில்லை. முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களின் ஜகாத்தை முறையாக முழுமையாகக் கணக்கிட்டுக் கொடுத்தால், முஸ்லிம் சமுதாயத்தில் ஏழைகளோ, தேவையுடையவர்களோ இல்லை என்ற நிலையே உருவாகும்.

விமர்சனம் : தப்லீக் ஜமாத் என்றால் என்ன? இதனுடைய குறிக்கோள் என்ன? சாதாரண மக்களும் ஜமாஅத்தில் செல்பவர்களும் இது தான் இஸ்லாம்; இதுதான் நபி(ஸல்) அவர்களின் வேலை என்று கருதுகிறார்கள். டெல்லி மர்கஸில் ஒரே கூட்டம். கரண்ட் பில் யார் கட்டுவது என்றே தெரியவில்லை என்று மிக பிரமாண்டமாக சொல்கிறார்கள். இவர்களுக்கு யார் அமீர்? இதனுடைய நோக்கம் என்ன? தப்லீக் ஜமாஅத்தால் என்ன நன்மை, என்ன தீமை? இஜ்திமா என்று நடத்துகிறார்கள். அதில் என்ன செய்கிறார்கள். அதனால் […]

 மெளலவி நூஹ் மஹ்ழரி அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம் உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா […]

MTM. முஜீபுதீன், இலங்கை மே 2013 தொடர்ச்சி … நாங்கள் ஒரு நாள் அபூபக்ர்(ரழி) அவர்களின் இல்லத்தில் உச்சிப் பொழுதில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூபக்ர் அவர்களிடம் “”அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது தலையை மூடியவண்ணம், நம்மிடம் வருகை தராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாற்றமாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர்(ரழி) அவர்கள், “”என் தந்தையும் என் தாயும்(நபி) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஏதோ (முக்கிய) விஷயம் தான் அவர்களை […]

இன்று நம் இந்திய நாடு மட்டுமல்ல உலகமே கையூட்டிலும், ஊழல்களிலும் மிதக்கின்றது என்று சொல்வது மிகைப்பட்ட சொல் அல்ல. ஒரு காலம் இருந்தது. அன்று கீழ் மட்டத்திலுள்ள அரசுப் பணியாளர்களிடம் மட்டுமே இந்த இரண்டும் காணப்பட்டன. ஆனால் இன்றோ பிரதம மந்திரி, முதன்மந்திரி, மந்திரி, முன்னணி ஆட்சி அதிகாரிகள், நீதித்துறை, காவல்துறை, அனைத்து அரசுத் துறைகள் என காற்றுப்புகா இடங்களிலும் கையூட்டும், ஊழலும் நுழைந்துள்ளன என்று சொல்லும் அளவிற்கு இவை தலை விரித்து ஆடுகின்றன.

இப்னு ஹத்தாது இதோ இறைவனின் உறுதி மொழிகள் : தைரியத்தை இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; முஃமின்களாக இருப்பின் நீங்களே மேலோங்குவீர்கள். (3:139) நம் தூதர்களையும், நம்பிக்கையாளர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம். முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமையாகும். (10:103) இறை நம்பிக்கையாளர்களான அவர்களுக்கு உறுதியாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான். (22:38) ……முஃமின்களுக்கு உதவுதல் நம்மீது கடமையாகும். (30:47)

ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானது – ஹராம்!                               அபூ அப்தில்லாஹ் இறை நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு (தூதரே) கூறும் : அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். அதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்பவற்றை இறைவன் மிக அறிந்தவன். (அந்நூர் : 24:30)

 “குலா”  மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும்  அதே கணவனை மணப்பது கூடுமா? ஆத்தூர்.G.S சுல்தான்ஜி, காமராஜனார் சாலை, ஆத்தூர் (சேலம்) 9994112503 முதலில் “”குலா” என்பதற்கான விளக்கத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். கணவன், மனைவியருக்கிடையே ஏற்பட்டுவிட்ட பிணக்கைப் போக்கி சமாதானம் செய்து வைக்க முற்படும் இரு வீட்டார் சார்பான நடுவர்கள் சமாதானம் செய்து வைக்க முயலும் போது கணவன் சமாதானத்துக்கு முன்வந்த போதும் மனைவி அதை ஏற்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அல்லாஹ்வின் வரம்புக்குள் நிலைத் […]

MTM. முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2013 தொடர்ச்சி … அபூஹுரைரா(ரழி) கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும்போது, “”நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் குப்ரின்(இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்” என்று சத்தியம் செய்த இடம் என்றார்கள். “”பனூ ஹாஸிமுக்கும் பனூ முத்தலிபுக்கும் எதிராக “”நபி(ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும் வரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்ய மாட்டோம்” என குறைஷி குலத்தாரும் […]

இன்றைய அறிவியல் உலகில் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கி இரண்டு கால் மனிதன் இரண்டு கால் மிருகமாக மாறி வருகிறான். இன்னும் நேரடியாகச் சொல்வதாக இருந்தால் மிருகங்களை விட கேடுகெட்ட நிலைக்கு இன்று மனிதன் ஆளாகியுள்ளான். இந்த உண்மையை இணை, துணை, இடைத்தரகர் இல்லா ஏகனான இறைவன் தனது இறுதி நெறிநூல் குர்ஆனின் அஃராஃப் : 7:175-179 இறைவாக்குகளில் உறுதிப்படுத்துகின்றான்.

அபூ அப்தில்லாஹ் 02.02.2013 சனியன்று திருச்சியில் சைபுத்தீன் ரஷாதிக்கும் ஜைனுல் ஆபிதீன் உலவிக்கும் இடையில் ஒரு விவாதம் இடம் பெற்றது. அதில் சகோ. சைபுத்தீன் ரஷாதி இஜ்மா குர்ஆன், ஹதீஃதுக்குப் பிறகு மூன்றாவது ஆதாரமாக இருக்கின்றது என்றும் சகோ. ஜைனுல் ஆபிதீன் இஜ்மா மார்க்க ஆதாரம் இல்லை என்றும் வாதிட்டனர். ஆரம்பத்தில் பீ.ஜை. இஜ்மா மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதற்கு ஆதாரமான குர்ஆன் வசனங்களை எடுத்து வைத்தவர் பின்னர் அதில் உறுதியாக நில்லாமல், இஜ்மாவின் பேரால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை […]

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை செய்யப் பணித்தல்! தீமையைத் தடுத்தல்! முஹிப்புல் இஸ்லாம்

இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை. முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது. அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக […]

இஸ்லாமிய ஆய்வு மற்றும் வெளியீட்டு மையம், ஏர்வாடி 2002 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹிஜ்ரி 1423 ரஜப் மாதத்துடைய 29ஆவது நாள். அன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் டெல்லியில் 12 நிமிடமும் லிபியாவில் 22 நிமிடமும் பிறை இருந்தது. எனவே 2002 அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹிஜ்ரி 1423 ஷஃபான் மாதத்தின் முதல் தேதியாகும். ஷஃபான் மாதத்தின் 14வது நாள் பெளர்ணமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இது கீழ்க்கண்ட நாடுகளில் தெரியும்.

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் புத்தகம்   ஆய்வுத் தொடர் : 20 – M.அப்துல் ஹமீது, திருச்சி. “திருக்குர்ஆனின்  சிறப்புகள்” எனும் தலைப்பில் சில சூராக்களை (குறிப்பாக யாசீன் சூரா) சிலாகித்து பல விஷயங்களை ‘அமல்களின் சிறப்புகள்” புத்தகம் எழுதியிருக்கிறது. அவற்றில் மிகைப்படுத்தப்பட்டு பல விஷயங்கள் உள்ளன. அப்புத்தக ஆசிரியருக்கு மிகைப்படுத்தப்பட்டவைகள் உறுத்தலாக இருந்திருக்கும் போல் தெரிகிறது. எனவே எழுதுவதை எல்லாம் எழுதிவிட்டு ஒரு சில குறிப்பையும் தருகிறார். ஆசிரியரின் அக் குறிப்பாவது:

விமர்சனம்: மார்ச் 2002  அந்நஜாத் இதழில் வந்த விளக்கங்களுக்கு விமர்சனம்.’ 1. ஷவ்வால் முதல் நாள் பெருநாள் கொண்டாடித்தான் தீரவேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. 2. அதற்கு மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் நடைமுறை. அதனால் தான் தொழக்கூடாத மாதவிடாய் பெண்கள், தக்க காரணமின்றி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் ஈத்கா வருமாறு கட்டளையிட்டார்கள்.

விமர்சனம்: அபூ அப்துல்லாஹ்வும், பி.ஜே.யும் தங்கள் சொந்த ஊகங்களாலும், வாதங்களாலும் தான் மிர்ஸா குலாமை நபி இல்லை என்று சொல்கிறார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் எதுவும் அவர்கள் சொல்வதில்லை என இங்கு சில காதியானிகள் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையிலேயே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லையா? தெளிவுபடுத்தவும்.மிர்ஸா குலாமை நபி என்று சொல்ல காதியானிகள் என்னதான் ஆதாரம் தருகிறார்கள்? அவர்களுடைய போலி முகத்திரையை கொஞ்சம் கிழித்துக் காட்டுங்களேன். அவர்களுடன் அடிக்கடி கருத்தரங்கங்கள் நடத்தியதில் தாங்கள் பெற்ற படிப்பினை என்ன? […]

அபூஃபாத்திமா இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணனாதாகும், என்று சொன்னவுடன், தக்லீது செய்யக் கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீதுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது, மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக் கூடாது. அந் நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் தக்லீது ஆகும் என்று உடனே சொல்லி […]