அனைத்து அகிலங்களையும் படைத்து அணுவளவும் பிசகாது பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக நிர்வகித்து வரும் இணை, துணை, இடைத்தரகர் இல்லாத எல்லாம் வல்ல ஏகனான இறைவன், மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பும் போதே தெள்ளத் தெளிவாகக் கட்டளையிட்டே அனுப்பியுள்ளான். அது வருமாறு: “”நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு(ஒரே) நேர் வழி வரும் போது என் வழியைப் பின்பற்றுவோருக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” எனக் கூறினோம்.(2:38)

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம்! கருத்தரங்கம்! நாள் : ஹிஜ்ரி 21.04.1434 (03.03.2013) ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (அல்லாஹ் நாடினால்) இடம் : மதீனா மஸ்ஜித், ஆசாத் வீதி, செந்தண்ணீர்புரம், திருச்சி-620 004. 94429 14198

ஐயம்: வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுவ தற்கு முன் பயான் செய்வதற்கு இமாம் இல்லாத போது குர்ஆனுடைய ஒரு சூராவை ஓதிவிட்டு தொழுகையை நடத்தினால் அத்தொழுகை ஜும்ஆவாக நிறைவேறுமா? இஸ்மாயீல், தமாம். தெளிவு: குத்பாவுக்குப் பகரமாக குர்ஆனில் ஒரு சூராவை ஓதினால் அதுவே போதுமானது என்பதில் என்ன சந்தேகம்? நபி(ஸல்) அவர்கள் தமது ஜும்ஆவின் குத்பாவில் குர்ஆனுடைய சூராவை ஓதியிருப்பதாக பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

பஷீர், புதுக்கோட்டை பார்வை : சமீபத்திய டெல்லி பாலியல் வன்முறைச் சம்பவம் தொடர்பான போராட்டமும், அதற்கு முன் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்களும் நமது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. டெல்லியில் நடந்த ஒரு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள்… இப்படி பல தரப்பினரும் கருத்துகளை பதிவு செய்து தம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். RSS பிரமுகர்கள், பெண்ணியவாதிகள் என்று பலரும் மரண தண்டனை கோரி கொடி பிடிக்கின்றார்கள். […]

S.N.K வேதனை மேல் வேதனை: உலகெங்கும் இஸ்லாத்தை ஏற்றதாய் பெயர் பண்ணிக் கொண்டு வாழும் பரம்பரை பெயர் தாங்கி முஸ்லிம்கள்! இஸ்லாத்தை ஏற்ற பெயர் தாங்கிகள் பெரும்பான்மையினர், இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாகக் கொள்ளவில்லை. இஸ்லாமிய முலாமில், இஸ்லாம் அல்லாத, இஸ் லாத்திற்கு நேர்முரணான வழிகேடுகளே, இஸ்லாமாக அரங்கேறி வருவதுதான் வேதனைக்கெல்லாம் வேதனையான வேதனை.

விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விளக்கப்பட்டுள்ளன: அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல், சுதந்திரமாகப் பழகுதல். இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்: “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.” (அஹ்மத்)

மனிதன் பெற்றுள்ள அறிவு மிகமிக அற்பமானது என்று இறைவாக்கு பனூ இஸ்ராயீல்: 17:85 கூறுகிறது. ஆம்! தன்னை ஈன்றெடுத்த தாயையோ, தந்தையையோ சுயமாக அறிந்து கொள்ள முடியாத, அடுத்த வினாடி தனக்கு என்ன நடக்கும் என்பதையே அறிய முடியாத அற்பமான அறிவைத்தான் மனிதன் பெற்றிருக்கிறான். அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஐம் புலன்களும் அற்பமானவையே! குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கேட்க முடியாத, பார்க்க முடியாத, நுகர முடியாத, தொட்டறிய முடியாத, சுவைக்க முடியாத ஐம்புலன்களைக் கொண்டவனே மனிதன். கேட்டல், பார்த்தல், […]

எஸ்.ஹலரத் அலி, ஜித்தா டிசம்பர் 2012 தொடர்ச்சி…. நபி(ஸல்) அவர்களின் துஆவிலும் செவிச் சிறப்பைக் காணலாம். அல்லாஹ்வே என்னைக் கடன் தொல்லை மற்றும் வறுமையிலிருந்தும் நீக்குவாயாக! எனது கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் உன் வழியில் அதிகப் படுத்துவாயாக. யஹ்யாபின் ஸாத்(ரழி)முஅத்தா. செவிப்புலன் ஏன் சிறப்புப் பெறுகிறது என்று ஆய்வு செய்தால் ஓர் உண்மை விளங்கும். பொதுவாகக் கண்களால் பார்க்கும் சக்தியை அல்லாஹ் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுத்துள்ளான். ஆனால் செவி ஒன்றுதான் ஐந்தறிவு என்ற மிருக நிலையில் […]

MTM முஜீபுதீன், இலங்கை டிசம்பர் 2012 தொடர்ச்சி … உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஓர் தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார்; அவருக்கு செவி கொடுப்பீர்களாக! (உபாகமம்: 18:15) உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப் பதையயல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (உபாகமம் : 18:18)

இவ்வுலக வாழ்க்கை அற்பமான தற்காலிகப் பரீட்சை வாழ்க்கை; மறு உலக வாழ்க்கையே அசலான நித்திய வாழ்க்கை. பரீட்சையில் வெற்றி பெறுகிறவர்கள் நிரந்தரமாக இன்பம் அனுபவிக்கும் சுவர்க்கத்தை பெறுவார்கள். தோல்வியுறுகிறவர்கள் நிரந்தரமாகக் கடும் வேதனைகள் அனுபவிக்கும் நரகத்தை அடைவார்கள் என்பது தன்னந்தனியனான ஏகன் இறைவன் அளித்துள்ள இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆன் கூறும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த உண்மை நாம் வாழும் இந்தப் பூமிப் பந்தை இதர கோளங்களோடு ஒப்பிடும் போது நாம் வாழும் பூமி ஒரு […]

ஜமாஅத் அல் முஸ்லிமீன்! [PDF]

M.S.கமாலுத்தீன், பெங்களூர். ஓராண்டுக்குத் திட்டமிட வேண்டுமா? பயிர் செய்; பத்தாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மரங்களை நடு; நூறாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மனிதர்களை உருவாக்கு; – சீனப் பழமொழி.

உஸ்மான் இப்னு சல்மான் இவ்வுலகில் முஸ்லிமாக இருக்கின்ற நமக்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று அல்லாஹ் கூறவில்லை. நமக்கென கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என ஐந்து கடமைகளை வகுத்துள்ளான்: கட்டுப்பாட்டுக்குள் வாழ வேண்டுமென்றுதான் அல்லாஹ் முன்னைய நெறிநூல்களையும், குர்ஆனையும் அனுப்பி அதைக் கற்றுத் தருவதற்கு நபிமார்களையும் அனுப்பி வைத்தான். ஆனால் ஷைத்தானுடைய சூழ்ச்சியால் ஏதாவது ஒரு விஷயத்தில் ஷைத்தானுடைய வலையில் முஸ்லிம்களும் சிக்கித் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நபிமார்களின் வாரிசுகள் என்போர் பிறை வி­ஷயத்தில் கவனம் செலுத்துவார்களா? [PDF]

M.T.M முஜீபுதீன், இலங்கை நவம்பர் 2012 தொடர்ச்சி … நூஹ்(அலை) அவர்களின் வரலாற்று உண்மைகளும், அக்காலத்தில் இடம் பெற்ற பிரளயம் சார்ந்த விபரங்கள் இந்து, யூத, கிறித்தவ வேதத் தொகுப்புகளில் கூட்டல், குறைவுகளுடன் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் அவ்வேதத் தொகுப்புகள் களங்கப்பட்டுக் காணப்படுவதாகும். முஸ்லிம்கள் முன்னைய நெறிநூல்களை விசுவாசித்தாலும் பின் அவை மனிதக் கரம் பட்டு மாசடைந்துள்ளதால் அவற்றை ஏற்பதுமில்லை நிராகரிப்பதுமில்லை. அல்குர்ஆன் அருளப்பட்ட பின் முன்னைய நெறிநூல்கள் அல்லாஹ்வினால் இரத்துச் செய்யப்பட்டுவிட்டன. ஆகவே உண்மை வரலாறுகளையும், […]

அபூ அப்தில்லாஹ் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த மனித குலத்தை ஒரு சுயநல சிறுபான்மைப் பிரிவினராகிய மதகுருமார்கள் மற்றும் அரசியல் குருமார்கள் எண்ணற்ற மதங்களாக, ஜாதிகளாக, இசங்களாக, அமைப்புகளாக, இயக்கங்களாக, பிரிவுகளாகப் பிரித்து, அற்ப உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். மதங்களை விட்டும், ஜாதிகளை விட்டும் மனித குலத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று முழக்கமிட்டுச் செயல்படுகிறவர்களும் உலகியல் பட்டம், பதவி, பேர் புகழ், அற்ப உலகியல் ஆதாயங்கள் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாலும், தங்களின் அற்பமான அறிவையே எல்லையாகக் […]

பிறை நாள்காட்டியின் அத்தியாவசியம் குறித்த ஆய்வு மற்றும் கருத்தரங்கம்!! நாள்:  14.11.2012 இடம்: L.KS. மஹால். (அரிஸ்டோ) 2,திண்டுக்கல் ரோடு, திருச்சி தொலைபேசி:0431-2415859

விமர்சனம் : கூட்டு குர்பானி தொகையாக இதர இயக்கங்கள், அமைப்புகள் எல்லாம் பங்குக்கு நிர்ணயிக்கும் தொகையில் நீங்கள் மிகக் குறைவாக ⅔ பங்குத்தொகை மட்டுமே அறிவிக் கிறீர்களே, உங்களுக்கு எப்படிக் கட்டுப்படியாகிறது. குறிப்பிட்டு வரும் பங்குகளைச் சரியா கக் கணக்கிட்டு குர்பானி மாடுகள் வாங்கி குர்பானி கொடுக்கிறீர்களா? நொண்டி, கூன் குருடு, கன்று, கிழடு எனத் தகுதியற்ற பிராணிகளைக் கொடுக்கிறீர்களா? பல சகோதரர்களின் தொலைபேசி விமர்சனம்.

அபூ அப்தில்லாஹ் சத்தியத்தினுள்ளே மனிதக் கற்பனைகள் நுழையும்போது அது கருத்து வேறுபாடுகளாக உருவெடுக்கிறது. அது இறுதியில் ஒன்றுபட்ட மனித சமுதாயத்தைப் பல மதத்தவர்களாக, அவர்களையும் பல கூறுகளாகப் பிரித்து விடுகிறது. ஆதம்(அலை) காலம் முதல் இன்று வரை இதுவே தொடர் கதையாக இருக்கிறது.

MTM. முஜீபுதீன், இலங்கை அக்டோபர் மாதம் தொடர்ச்சி… அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ்(அலை) அவர்களை நோக்கி) “”(எனது செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத் தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?” என்று கேட்பான். அதற்கு நூஹ். அவர்கள், “”ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)”