பஷீர் அகமது, புதுக்கோட்டை. நாம் பரபரப்பான வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கிறோம். பொருளாதார தேடலுக்கு நேரம் அதிகம் தேவைப்படுகிறது. வாரத்தில் கிடைக்கும் ஒரு நாள் ஓய்வை கூட கல்யாணம், விருந்து என்று ஓடி விடுகிறது. அவ்வப்பொழுது நடக்கும் உறவினர் வீட்டு மவுத் நிகழ்வுக்கு கூட, நம்மில் பலர் ஏதோ வருகை பதிவேட்டில் Attendenace கையயழுத்து போடுவது போல போய் தலையை காண்பித்துவிட்டு ஓடி வந்து விடுகிறார்கள். மனித நேயங்களை தொலைத்து, வாழும் வாழ்க்கைக்கு நாம் பழகி விட்டோம். அதனால் […]
இப்னு ஹத்தாது இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன. ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து […]
அபூ அப்தில்லாஹ் கேப்டன் அமீருத்தீன் ஆகஸ்ட் 2009-ல் பதிப்பித்த “”நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் “மைனர்’ பெண்ணை மணந்தார்களா? என்ற சிறிய நூலை ஆய்வுக்காக அனுப்பி இருந்தார்கள். அந்நூலில் புகாரீ, முஸ்லிம் முதல் பெரும்பாலான ஹதீஃத் நூல்களிலும், வரலாற்று நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தகவலை விமர்சித்து-மறுத்து நடுநிலையாளர்கள் மறுக்க முடியாத வரலாற்று ஆதாரங்களைத் தொகுத்துத் தந்திருந்தார். கடந்த 1000 வருடங்களாக இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என மார்தட்டும், ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா எனப் பெருமை […]
இப்னு ஹத்தாது அந்நஜாத் 1986 ஏப்ரலில் ஆரம்பித்ததிலிருந்து மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என பெருமை பேசும் மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. அவர்களைப் பற்றிய விமர்சனங்களே அந்நஜாத்தில் பெரும்பாலும் இடம் பெற்றுவருகின்றன. கடந்த 27 வருடங்களாக இந்நிலையே நீடித்து வருவதால் அந்நஜாத் வாசகர்களில் சிலர் விரக்தியுற்று, எப்போது பார்த்தாலும் ஒரே புரோகிதர், இடைத்தரகர் என்று முஸ்லிம்கள் பெரிதும் மதித்துப் போற்றும் மவ்லவிகளை மிகக் கடுமையாக விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கி றீர்களே! மார்க்கத்தில் சொல்வதற்கு வேறு விஷயங்களே […]
MTM. முஜீபுதீன், இலங்கை ஆகஸ்ட் 2012 தொடர்ச்சி … சாதி வேறுபாடு : அவர்களை வேறுபட்ட தொழில் செய்தல் வேண்டும் எனப் பிரித்து உழைக்கும் ஒரு மக்கள் பிரிவினரை பிராமணரின் அடிமைகளாக 5000 வருடங்கள் பின்வரும் சுலோகத்தைக் காட்டி வைத்துள்ளீர்களே! திராவிடர்களே! அபின் உண்ட மயக்கத்தில் இருக்காது அவதானியுங்கள். சூத்திரர்களின் உடமைகளை பிராமணர்கள் பறிக்கலாம். ஏனெனில், அவர்கள் சூத்திரர்களின் எஜமானர்கள். (மனுதர்மம் : 8:47)
அல்குர்ஆனைப் புறக்கணிக்கும் சமுதாயம்! (பார்க்க 25:30) இறுதித் தூதர்(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு: ஒரு காலம் வரும், இஸ்லாத்தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது; குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மை தவறியவர்களைக் கொண்டே நிரம்பியிருக்கும். அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே (கோழிகள் குஞ்சுகளைப் பொரிப்பது போல்) பொரிச்சி வெளிவரும். […]
அபூ அப்தில்லாஹ் பல வருடங்களுக்கு முன்னர் அல்பகரா:2:4 இறைவாக்கு “”உமக்கு அருளப்பட்டுள்ளதையும், உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றையும் அவர்கள் நம்புகிறார்கள்” என்றும் “”அவர்களே தம் இரட்ச கனின் நேரான வழியில் இருப்பவர்கள், வெற்றியாளர்கள்” என 2:5 இறைவாக்கிலும் அல்லாஹ் சொல்லியிருப்பதை எடுத்து எழுதி, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஒரு நபி வந்து அவர் மீது நம்பிக்கைக் கொள்வதாக இருந்தால், முக்கியமான இந்த இடத்தில் “உமக்குப் பின்னர் அருளப் படுவதையும் அவர்கள் நம்புவார்கள்” என்று நேரடி யாகத் தெளிவாக […]
கே.எம்.எச். இதோ அஹ்லுஸ் சுன்னா ஏடு தனது ஆகஸ்ட் 2012 பக்கம் 56ல் தரும் ஆதாரம்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அல்லது நபி தோழர்களின் காலத்தில் இமாமத்(பணி) செய்வதற்கு மாத சம்பளம் தரப்படவில்லை. ஆனால் இன்று இமாமத் செய்வதற்கு மாத சம்பளமும், தராவீஹ்(?) சிறப்பு தொழுகை நடத்துவதற்கு சிறப்புக் கூலியும், பாங்கு மற்றும் இகாமத் சொல்வதற்கு மாதாந்திர சம்பளமும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சம்பளம் வழங்கப்படுவதால்தான் அக்காரியம் சீராக நடக்கிறது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத இந்த […]
பிரிவுகளின் உடும்புப் பிடியில் சிக்கியிருப்போரே! ஆழ்ந்து சிந்திப்பீர்! பிரிவுகளால் நாசமே! மோசம் போகாதீர்! சுன்னத் ஜமாஅத் பிரிவார் அரங்கேற்றும் மெகா – மாபாதகங்கள்! பிரிவுகள் விட்டு உடன் விலகிடுவீர்! அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை!
அபூ அப்தில்லாஹ் அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நட்டத்தில் இருக்கிறான்; ஆயினும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற் செயல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொரு வர் அறிவுரைக் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (103:1-3)
விமர்சனம்: குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவதில் சஹாபாக்களின் விளக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் நமது அறிவைக் கொண்டு சுயமாக விளங்கக் கூடாது? அப்படி விளங்குவது வழிகேட்டில் விட்டுவிடும் என்று அஹ்லே ஹதீஸ்காரர்கள் மற்றும் ஸலஃ பிகள் கூறுகிறார்கள். இதற்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா? இது சஹாபாக்களை தக்லீது செய்வது போல் ஆகாதா? விளக்கவும். B. சகாபுத்தீன், திருச்சி-26.
MTM. முஜீபுதீன், இலங்கை ஜூலை 2012 தொடர்ச்சி … மதத்தின் பெயரால் பேய், பிசாசு, இறந்த ஆவிகள் மீதான மூட நம்பிக்கைகள்: சிலைகளை தெய்வமாக வணங்கும் சமுதா யங்களிடையில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதன்படி ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனது உயிர் அல்லது ஆத்மா அல்லது ரூஹு அவன் செய்த நன்மை தீமைக்கு அமைய இந்த பூமியில் பல சேட்டைகளைச் செய்தபடி சுற்றித் திரிவதாக ஒரு நம்பிக்கை. இதன்படி சில இறந்த மனிதர்களின் ஆத்மா ஆவியாக […]
அல்லாஹ்வின் ஒருமை அறிவியல் Science of One-ness of Allah இஸ்லாத்தின் இலட்சியம்: வாழ்வு முழுவதும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!
மகத்துவமிக்க ரமழான் மாதத்தின் மையப் பகுதியில் நாம் இருக்கிறோம். இந்த ரமழான் மாதத்தின் சிறப்புப் பற்றி சர்வ வல்லமை மிக்க இணை, துணை, இடைத்தரகர் இல்லாத ஏகன் அல்லாஹ் வாழ்வியல் வழிகாட்டி நூல் குர்ஆனின் 2:185 வசனத்தில் இவ்வாறு கூறி தெளிவுபடுத்துகிறான்.
அபூ அப்தில்லாஹ் 1999 நவம்பர் & டிசம்பர் , அல்முபீன் இதழில் சர்வதேச பிறையை ஏற்கக்கூடாது. தத்தம் பகுதியில் பிறை பார்த்தே நோன்பை ஆரம்பித்து முடிக்க வேண்டும் என்று எழுதி இருந்தார் தவ்ஹீத் மவ்லவி, அதற்கு முன்னர் 1997 நவம்பர் அல்ஜன்னத் இதழில் அப்போதைய அதன் ஆசிரியராக இருந்த இதே தவ்ஹீத் மவ்லவி, அவரது பெயரிலேயே ஓர் அறிவிப்புச் செய்திருந்தார். அதில் அப்போதைய 11 தவ்ஹீத் மவ்லவிகள் (JAQH & TNTJ) அனைவரும் ஐந்து அமர்வுகளில் அலசி […]
ராசிக் அலீ, திருச்சி குறுகிய வட்டம்: மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்து வோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயங்களில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர் உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கின்றான். அவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (60:8,9)
அபூ அப்தில்லாஹ் கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு!! என்று ஒளவைப் பாட்டிக் கூறியுள்ளார். ஆக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவு மிகமிக அற்பமான அறிவு, (குர்ஆன் 17:85) இந்த அற்பமான அறிவைக் கொண்டு உலகளவில் அல்ல, அண்ட சராசரங்களை விட மிகமிக அதிகமான முழுமையான அறிவுள்ள ஏகன் இறைவனுடன் போட்டி போட முடியுமா? அற்பமான அறிவுடைய மனிதனின் ஆய்வில் உருவானதுதான் ஜனநாயகம். ஜனநாயகம் என்றால் மக்களில் அதிகமானோரின் விருப்பப்படி நடைபெறும் ஆட்சி என்று பொருள்.
திருகுர்ஆனைப்பற்றி விஞ்ஞானிகள்! PDF