அல்குர்ஆன் ஆல இம்ரான்: 3:102 இறைக் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து, அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்ள வேண்டிய முறைப்படி பயபக்தி கொண்டு முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க விரும்பும் அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, திட்ட மாகத் துல்லியமாக எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி 1433 வருடத்திய ரமழான் மாதம் 20.07.2012 வெள்ளியன்று ஆரம்பித்து 17.08.2012 அதே வெள்ளியன்று 29 நோன்புகளுடன் முடிவடைகிறது. 18.08.2012 சனி 1433 வருடத்திய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள். அன்று தான் நோன்புப் பெருநாள் தினம்.

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!  ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா?

விமர்சனம்: இந்திய தேசிய லீக், தாருல் இஸ்லாம் ஃபவுண்டே­ன் டிரஸ்ட் போன்றோர், சாதிவாரி கணக்கெடுப்பில் மதம் இஸ்லாம் என்றும் சாதி முஸ்லிம் என்றும் மட்டுமே பதிவு செய்யுங்கள் எனப் பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதற்கு மாறாக தமுமுக, ததஜ அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகையும் பெற மதம்: முஸ்லிம் என்றும், சாதி 1.தக்னி, 2.தூதுகோலா, 3.லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், 4.மாப்பிள்ளா இந்த நான்கு பிரிவுகளில் ஒன்றையும் குறிப்பிடுமாறு […]

மதகுருமார்கள் மரியாதைக்குரியவர்களா?PDF

விரலைச் சுட்டிக்காட்டுவதே நபி வழி! ஆட்டுவது நபி வழி அல்ல PDF

நிம்மதி இல்லையே ஏன்? இன்று உலகம் சகலவிதமான பேரிடர்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறது. மக்களுக்கு நலன் பயக்கும் காற்று, மழை, வெயில் போன்றவை இன்று மக்களுக்கு பெருங் கேட்டை விளைவிக்கின்றன. இவை அல்லாமல் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை, கொடும்புயல், கடல் சீற்றம் இன்னோரன்ன பேரழிவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இன்றைய சூழ்நிலையைக் கவனித்தால் மனித குலம் அமைதியற்ற, சஞ்சலங்கள் நிரம்பிய நிலையில், விலைவாசியின் கடுமையான ஏற்றத்தால் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களும், நடுத்தர மக்களும் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைக் […]

 அல்லாஹ்வின்  அளப்பெரும் கிருபையால் அந்நஜாத் தனது இலட்சியப் பயணத்தை உங்கள் அனைவரின் முழு ஆதரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் அந்நஜாத்தால் எடுத்து வைக்கப்பட்ட குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம். மனித அப்பிராயங்களுக்கும், ஊகங்களுக்கும் மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்ற தெளிவான  கொள்கையை ஏற்றுக் கெரள்ளும் காலம் கனிந்து வருகின்றது. இந்தக் காலக்கட்டத்தில் கொள்கைச் சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.

விமர்சனம்: அந்நஜாத் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக (கால் நூற்றாண்டு) சுய சிந்தனையாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே செயல்படுகிறது. ஆயினும் இது நாள் வரைக்கும் அதன் இலக்கை அடைய முடியவில்லை. எனவே தான் ஒவ்வொரு விஷயத்திலும் சமுதாயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இயக்கங்கள், சங்கங்கள், கழகங்கள் என்ற பெயர்களில் பிளவுபட்டுக் கிடக்கிறோம். உதாரணத்திற்கு பிறை விஷயத்தில் 1. கணினி கணக்கீடு அடிப்படையிலும் 2. சர்வதேச அடிப்படையிலும் 3. நேரடியாக (Naked eye) பார்த்து

ஐயம்: ஷரீ அத் சட்டதிட்டங்களுக்கு சுயேட்சையாக விளக்கம் கொடுப்பது “”இஜ்திஹாத்”, எந்த ஒரு பிரச்சனைக்கும், முன்னாள் சட்டமேதைகளான நமது மேன்மைக்குரிய இமாம்கள் செய்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் ஷரீ  அத்தை விளங்கிக் கொள்வதே “”தக்லீத்” என்று மரியம் ஜமீலா அவர்கள் எழுதியுள்ளார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? M.A.ஹாஜி முஹம்மது நிரவி

அபூ அப்தில்லாஹ் குர்ஆன், ஹதீஃதில் அணுவளவும் ஆதாரமில்லாமல் தங்களைத் தாங்களே மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்க விற்பன்னர்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என 4:49, 53:32 இறைக் கட்டளைகளுக்கு முரணாக தம்பட்டம் அடிப்பவர்கள், இந்த வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடு கெட்டவர்கள், அதிலும் குறிப்பாக மற்ற மதங்களின் குருமார்களை விட கேடுகெட்டவர்கள் என்பதற்கு வாழ்வியல் வழிகாட்டி இறுதி நெறிநூல் அல்குர்ஆனிலிருந்தே பல வசனங்களை எடுத்துக்காட்டி 1984லிலிருந்து நிலைநாட்டி வருகிறோம். பெருங்கொண்ட முஸ்லிம்களால் எமது இந்தக் கூற்றை […]

M.T.M முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2012 தொடர்ச்சி … காலத்தை ஏசுவது பாவமாகும்: அன்றும் இன்றும் அநேகமான மக்கள் மரணம், விபத்துகள், நோய்கள், தொழில் நஷ்டங்கள் போன்றவற்றுக்கு உட்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் எனது கெட்ட நேரம், எனது கெட்ட காலம் எனக் கூறுவதைக் காணலாம். ஒரு செயற்பாட்டை மேற்கொள்ளும்போது நேர சோதிடம் பார்க்கின்றனர். ஒரு குறித்த செயற்பாடு தவறிவிடின் நேரத்தைத் திட்டுகின்றனர். இவ்வாறு காலத்தை திட்டுவது கூடாது என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அல்லாஹ்வின் […]

M.சையித் முபாரக், நாகை. சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் பல வரம்புமீறல்கள் நடைபெற்று வருகின்றன. அதில் பாங்குக்குமுன் திக்ர், ஸலவாத்து கூறுதல்; ஜமாஅத் தொழுகைக்குப் பின் கூட்டு துஆ செய்தல்; வாரம் ஒருநாள் இஷா தொழுகைக்குப் பின் கூட்டு திக்ர் எனும் பெயரில் சப்தமிட்டு திக்ர் செய்தல், பல பெரியார்கள் பெயரில் மெளலிது ஓதுதல் போன்றவற்றை நாம் முன்னரே அறிவோம். (பார்க்க: 7 : 55,205)

நாத்தீக பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு…. நோபல் பரிசு-2011-பிரபஞ்ச விரிவு ஓர் ஆய்வு அல்குர்ஆன் இறைவனின் வார்த்தை-உறுதிப்படுத்தும் ஆய்வின் முடிவுகள்: ஜாஃபர் சித்தீக், கம்பம் நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உடலியல், இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கான 5 துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு 1969ஆம் ஆண்டு முதல் ஸ்வீடன் நாட்டுத் தேசிய வங்கியால் ஆல்ஃபிரட் நோபல் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது.

படைப்பின ஒருமைப்பாடே இஸ்லாத்தின் இலட்சியம் இஸ்லாம் கண்ட படைப்பின ஒருமைப்பாடு மானுட ஒருமைப்பாட்டை உள்ளடக்கியதே! முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடு: உம்(மா)த்: சமுதாயம் ஒருமை; உமமுன்: சமுதாயங்கள் பன்மை. மனிதப் பார்வையில் மற்ற படைப்பினங்கள் அஃறிணையே! மனிதர்களுக்கு அஃறிணையாகத் தெரியும் மற்றப் படைப்புக்களை அல்லாஹ் உங்கள் போன்ற சமுதாயங்களே! (காண்க. அல்குர்ஆன்: 6:38) என்று உயர்திணையாக அல்லாஹ் உயர்த்திக் காட்டுவது ஏன்? மனிதர்கள் கூடுதல் கூர்மையுடன் ஆழ்ந்து சிந்தித்தல் அவசியம். சமுதாயமாய்த் திகழவேண்டிய மனிதர்களே, குறிப்பாய் முஸ்லிம்களே! […]

மு.கதிஜத்துல் சாரா M.Sc., கிழக்கு தாம்பரம் அல்லாஹ் கூறுகிறான் காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான(நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒரு வருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர் கள் நஷ்டத்திலில்லை) அல்குர்ஆன். அத். 103

ஐயம்: சிலர் தம்மைத் தாமே ஏசிக் கொள்கின்றனர். சிலர் தமது மக்களைச் சபிக்கின்றனர். சிலர் அல்லாஹ் தமக்குத் தந்துள்ள சொத்து முதலியவற்றை சபிக்கின்றனர். இவ்வாறு ஏசுவது, சபிப்பது சந்தர்ப்பத்தில் அப்படியே நடந்துவிடும் என்று கூறுகிறார்களே! அது உண்மையா? ஹதீஸின் அடிப்படையில் பதில் தரவும். எம்.பி.அப்துர்ரஹ்மான், இளங்காகுறிச்சி.

அணு உலைத் திட்டம் ஆரம்பிக்கும்போது எதிர்ப்புக்காட்டாது ஆதரித்தவர்கள், ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பால் பாதிப்புள்ளாகி பெரும் உயிர் நட்டம் ஏற்பட்டதிலிருந்து பல்லாண்டுகளாகப் பல்லாயிரம் கோடி செலவில் கூடன்குளத்தில் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு மின் உற்பத்தித் தொடங்கும் நேரத்தில் அதைச் சுற்றியுள்ள மக்கள் அதை இழுத்து மூடச் சொல்லியும், அளவில்லா மின்வெட்டின் காரணமாக

M.T.M முஜீபுதீன், இலங்கை ஜனவரி 2012 தொடர்ச்சி: மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி! அன்று அரபு நாட்டில் ஒருவனுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் அனேகமானோர் மூடத்தனமான வழிகளினாலே நிவாரணங்களை மேற்கொண்டனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்ய வில்லை. போலிச் சிலைகளுக்கு நேர்ச்சை செய்தனர்; சூன்யகாரர்களிடம் சரணடைந்தனர்; சோதிடர்களை நம்பினர்; தாயத்துகளை அணிந்தனர்; சகுனம் பார்த்தனர்; இது போன்ற போலி நம்பிக்கைகளினால் பகைமையை வளர்த்தனர். சில சமூகத்தவர்கள் பெண் பிள்ளைகள் […]

Google GmailYahoo MailHotmailAOL MailAny email     S.ஹலரத் அலி, ஜித்தா. அல் குர்ஆனின் வழியில் அறிவியல்… இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து, இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  அல்குர்ஆன். 30:9