அ.ப.அ. நன்றி கீற்று இணைய இதழ் பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அதிகமுக அரசு முதல் நடவடிக்கையாகச் சமச்சீர் கல்வி பொதுப் பாடத் திட்டத்தை இந்தாண்டு நிறுத்துவதாக அறிவித்துள்ள நடவடிக்கை கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோர் மத்தியிலும் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நானா? நீயா? அரங்கம்! நம் வீட்டுப் பெண்கள் என்ன செய்கிறார்கள்? அ.ப.அகமது, புதுக்கோட்டை “”ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று சொல்வார்கள். குழந்தைகளை உருவாக்கும் பல்கலைக்ககழகம் தாய் என்றும் சொல்வார்கள். மேலும் இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியமான அந்தஸ்தை வழங்குகிறது என்றும் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் எப்படி தமது மனைவி, மக்களிடம் அல்லது தாயிடம் நடந்து கொள்கிறார்கள்?
“”வரலாறு திரும்பும்; இஸ்லாம் மீண்டும் எழுச்சி பெறும்!” ராணி விக்டோரியாவுக்கு லார்ட் மெல்போர்ன் அளித்த பதில்: மெல்போர்ன் என்று சொன்னாலே நமக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற ஒரு நகரமும் அதில் நடந்த கிரிக்கெட் போட்டிகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால் லார்ட் மெல்போர்ன் என்கிற பிரிட்டிஷ் அரசியல்வாதியின் நினைவாகத்தான் அந்த நகரத்துக்கு மெல்போர்ன் எனப் பெயர் சூட்டப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இங்கிலாந்தின் பிரதமராகக் கோலோச்சியவர் தான் லார்ட் மெல்போர்ன் (1779-1848). அவரை பிரிட்டிஷ் பிரதமர்களில் பத்தோடு […]
பிரிவுப் பெயர்கள் கூடாது என்பதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து 2:213, 6:159, 21:92,93, 23:53, 42:14, 45:17 ஆகிய வசனங்களை சமர்ப்பிக்கிறீர்கள். இந்த வசனங்களை ஆழ்ந்து நோக்கிய எனக்கு சில சந்தேகங்கள். 2:213வது வசனத்தில் வேதக்கட்டளை பின் வேறுபாடு கொண்டவர்களைக் கண்டிக்கிறான். நேர்வழி நடக்கும் இயக்கத்தார்கள் முகல்லீது மெளலவிகளைப்போல் வேத வசனங்களில் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையே. இந்நிலையில் அவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்?
குர்ஆனின் நற்போதனைகள்: தொடர்:19 A. முஹம்மது அலி. பகுதி:5 நபியின் கடமையும், நாம் ஈடேற்றம் பெற வழியும். 1. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ-அவர்கள் தங்களிடமுள்ள தெளராத்திலும், இன்ஜீலிலும் அவரது புகழ் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலகுவார்;
3:7 வசன சர்ச்சையில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கு இறுதி நிலை (இறுதி முடிவு) என்றே மொழி பெயர்க்கிறீர்கள்.” இறுதி நிலை என்பதற்கு ஆதாரமாக இப்னு தைமிய்யாவின் கருத்தையும் குர்ஆனின் 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் வரும் தஃவீலையும் எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் சூரந்து யூசுபின் 6:21,36,44,45 ஆகிய வசனங்களில் வரும் “தஃலீல்” என்ற பகத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் இல்லாமல் (பொதுவாக) விளக்கம் என்றே தர்ஜுமா செய்யப்பட்டுள்ளது. இந்த தஃவீல்களின் விளக்கத்தை ஆதாரமாகக் […]
தொடர் : 2 முஹிப்புல் இஸ்லாம், துபை. இந்த நிலையில் இன்றையக் காலக்கட்டத்தில் தர்ஹாக்களை ஒழிப்பதென்பது எத்துனை இக்கட்டானது என்பதை எண்ணிப் பாருங்கள்! தர்ஹாக்கள் முற்றாக ஒழிந்தால்தான் அங்கு நடைபெறும் அனாச்சாரங்களுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சமாதி கட்ட முடியும். இது எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். இந்த தர்ஹாக்கள் துளிர்விடத் துவங்கியக் காலக்கட்டத்தில் “மண்ணறைகள் மேல் கல்லறைகள் எழுப்புவது தவறு என்று அந்த தர்ஹாக்கள் எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டிருந்தால்-முளையிலேயேக் கிள்ளி எறியப்பட்டிருந்தால் தர்ஹாக்கள் இவ்வளவு தூரம் தலைத்தோங்கி இருக்குமா? நன்மை, […]
பெங்களூர் M.S.கமாலுத்தீன் அமைதியின் ஆட்சியின் கீழ் பூமி இருந்த காலம் அது. நிசப்தமே நிரம்பியிருந்தது; மனிதர்களின் வருக்கைக்குப் பிறகு சலசலப்பும் சண் டையும் ஆரம்பித்தன. ஷைத்தானின் சகோதரர்கள் இப்பூமியிலிருந்து அமைதியை அப்புறப் படுத்திட இடைவிடாது முயற்சிக்கிறார்கள். இம் முயற்சியை முழுமையாக முறியடித்து இப்பூமியில் மீண்டும் அமைதியின் ஆட்சியை கொண்டு வர ஏக இறைவன் கொடுத்த வழி முறையே “”அமைதி மார்க்கம் இஸ்லாம்”
அபூ அப்தில்லாஹ் ஷைத்தானின் சபதம் ஆதித் தந்தை ஆதம்(அலை) படைக்கப்பட்டு, மலக்குகளுக்கும் அவர்களுக்குமிடையே போட்டி நடந்தது. அதில் மலக்குகளும், ஜின் இனத்தைச் சேர்ந்த (18:50) இப்லீசும் தோல்வி அடைந்தனர். அதன் காரணமாக மலக்குகளையும், இப்லீசையும் ஆதமுக்குச் சிரம் பணிய அல்லாஹ் கட்ட ளையிட்டான். மலக்குகள் அடிபணிந்தனர். இப்லீஸ் அடிபணிய மறுத்ததோடு ஆணவம் பேசி, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி ஷைத்தான் ஆனான்; நரகவாதியானான்.
அ.ப.அகமது, புதுக்கோட்டை அந்தக் காலத்தில் இந்திய அரசியலில் முஸ்லிம் லீக் என்ற கட்சி ஜொலித்தது. கால ஓட்டத்தில் காணாமல் கரைந்து போய்விட்டது. சிலர் அந்த பேரியக்கத்தை இன்று சின்னக் கடைகளாக நடத்தி வருகிறார்கள். பின்னா ளில் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வு களை தூண்டி பழனி பாபா அரசியல் நடத்தி னார். ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிர்வினை அரசியல் பண்ண எண்ணியதாலோ என்னவோ, அறிவு பூர்வ அரசியலை விட்டுவிட்டு இனவெறி அரசியலைத்தான் அவரால் தமிழகத்துக்கு தர முடிந்தது. அவரின் மறைவுக்குப் […]
தொடர் -9 K.M.H. அபூ அப்துல்லாஹ். நவம்பர் 88 இதழில், இறைவனின் பெயரால் ஒரு சிறிய கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்க வழி ஏற்படுகின்றது. எனவே இறைவனைக் கற்பிப்பது மடமையாகும் என்று நாஸ்திக நண்பர்களின் கூற்றிலுள்ள மடமையைத் தெளிவாகப் பார்த்தோம். மேலும் இதே போல் ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் அவசியமில்லை என்று இந்த நாஸ்திகர்கள் சொல்லுவதில்லை. மாறாக அதில் இவர்களே முன்னணியில் இருக்கின்றனர் என்ற விவரத்தையும் கண்டோம். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் […]
அருள்மறையை அறிந்துகொள்வாராக! அருண்ஷோரி-2. மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்
காலத்தையும், பணத்தையும் செலவிட்டு படித்துப் பட்டம் பெற்ற டாக்டரை நம்பி வைத்தியம் செய்து கொள்வதை ஒப்புக்கொள்கிறீர்கள். அதேபோல் பட்டம் பெற்ற தொழில் புரியும் வக்கீலை நம்பி அவரிடம் வழக்குகளை ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் காலத்தைச் செலவிட்டு, சிரமப்பட்டுப் படித்துப் பட்டம் பெற்ற மவ்லவிகளை நம்பி மார்க்க காரியங்களை ஒப்படைப்பதை மட்டும் நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்? சையது முஹம்மது, சென்னை -10
H. அப்துஸ்ஸமது, BE.,MSc.,(Eng) சென்னை, இங்கே இன்னொரு முக்கிய விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். மேலேக் கூறப்பட்ட மனித இயல்புகளுக்குரிய, நியாயமான – முறையான வரையறைக்குட்பட்ட ஆதிக்கம் அறவே அடங்கி ஒடுக்கப்பட்டு விட்டாலும் இம்மை வாழ்க்கையின் முழு பலனையும் அடைய முடியாது. யோகிகள், சந்நியாசிகள். சூபிகள் இவர்களைப் போல் இம்மை வாழ்க்கையைப் புறக்கணித்து, பற்றற்ற வாழ்க்கையை மேற்க்கொள்வது இஸ்லாத்திற்கு முரணானதாகும்.
குர்ஆனின் நற்போதனைகள்: தொடர் : 6 தொகுப்பு : A. முஹம்மது அலி, M.A., M.PHIL 1. நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (27:45)
மக்காச்சுடரில் “ஹலோ மிஸ்டர் அந்நஜாத்” என்ற தொடரில் எழுதி வருவது பற்றி நீங்கள் ஏன் விரிவான விளக்கம் அளிப்பதில்லை?
அபூ ஃபாத்திமா எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா(அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கின்றான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய்-தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி மார்க்கம்-நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையை போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள், அந்த பல மதங்களிலும் பற்பல பிரிவுகள்-பிளவுகள்-வேற்றுமைகள். மனிதரில் இந்த பிளவுகளும், பிரிவுகளும் ஏற்பட அடிப்படைக் காரணம் […]
H. அப்துஸ்ஸமது, BE.,M.Sc.,(Eng) சென்னை. இனி மூன்றாவது சாத்தியக்கூறு பற்றி ஆராய்வோம். அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிந்திருந்த மேலே குறிப்பிட்ட ஹதீதுகளின் விஷயங்களை அன்றைய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அவர்களது அதிகாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கத் தக்கவனாகக் கருத வாய்ப்பு இருந்திருக்கலாம்.
தொடர்:34 அபூஅப்திர் ரஹ்மான் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)