Y.ஹனீஃப், திருச்சி. “”வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் நெறிநூல். செயல்களில் சிறந்தது முகம்மது நபி (ஸல்) அவர்களின் செயல் முறை” என்ற தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருக்க முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேற்கண்ட தாரக மந்திரத்தை ஏற்றுக் கொள்கிறார்களே அன்றி நடைமுறைப்படுத்துவதில் புறம் காட்டி பின் வாங்கி தனது பின்னங்கால் புட்டத்தில் அடிபட ஓடவே செய்கிறார்கள்.

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.

  ஐயம் : “நல்லடியார்களான ஆண்களுக்கு மறுமையில் ‘ஹுருல் ஈன்கள்’ கொடுக்கப்படுவார்கள்” என்பது உண்மையா?உண்மையென்றால் நல்லடியார்களான பெண்களுக்கும் ‘ஆண் ஹுருல் ஈன்கள்’ உண்டா? கணவனும், மனைவியும் சுவர்க்க வாசியாக இருக்கும் போது, கணவன் மட்டும் ஹுருல் ஈன்களிடம் உல்லாசமாக இருந்தால் மனைவி என்ன நினைக்க கூடும்? இம்மையில் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்களை மறுமையிலும் அல்லாஹ் சேர்த்து வைப்பானா?

  நாட்டின் பெரும்பான்மையினர் விரும்பி தேர்ந்தெடுக்கும் ஆட்சியே என பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஆட்சியில் அமரும். எவரும்,மக்கள் சொல்வது போல் நாட்டின் பெருன்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. தேர்தலில் பெரும்பாலும் மக்கள் தொகையில் 50% க்கும் குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளும் பல வேட்பாளர்களைக் கொண்டு சிதறடிக்கப்படுகிறது. M.L.A., M.P., பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பெறும் வாக்குகள், அவரை எதிர்த்த மற்ற வேட்பாளர்கள் அனைவரின் வாக்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிகக் குறைவாகவே இருக்கும். இறுதியில் […]

இன்றைய தேவை! இப்னு சித்திக்,  கடையநல்லூர்இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலனம் செய்து வரும் அல்லாஹ் மனித சமுதாயத்தை பலவீனமான நிலையிலேயே படைத்துள்ளான்.     அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகின்றான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (திருகுர்ஆன் 4:28)

2.10.2000 ஆவது வருடத்தில் ஏர்வாடி ஜாக் மர்கஸில் வைத்து தற்போதைய TNTJ யினருடன் பிறை விவாதம் நடைபெற்றது. தத்தமது பகுதி பிறை என்ற கருத்தில் டி.என்.டி.ஜெ வினரும், சர்வதேச பிறை என்ற அடிப்படையில் ஜாக் ஏர்வாடி மர்கஸ் சார்பிலும் விவாதம் நடைபெற்றது.

     1960லிருந்து 1982வரை சுமார் 23வருடங்களாக நாமும் மற்ற முஸ்லிம்களைப் போல் ஆலிம்கள், அல்லமாக்கள், மவ்லானாக்கள், மவ்லவிகள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் இந்த இடைத்தரகர்களிடம் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கத்தான் செய்தோம். அவர்கள் சொல்லுவதுதான் மார்க்கம் என்று உறுதியாக நம்பித்தான் இருந்தோம். ஆனால் அல்லாஹ் அருள் புரிந்து அவனது இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனை பொருள் அறிந்து சுய சிந்தனையுடன் படிக்க ஆரம்பித்த பின்னரே பெரும் மனப்போராட்டத்திற்கு ஆளானோம்.

ஐயம் : காஃபிர்களின் இறப்பு செய்தியைக் கேட்டால் “”இன்னாலில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறலாமா?  கடையநல்லூர், சேமலப்பை, இக்பால், (கேம்ப், ஜித்தா)

அபூ முஹம்மது நஜ்ம், ஏர்வாடி …. என்று மாறும் யா அல்லாஹ்! உன்னுடைய சத்திய வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து சொல்லும் போது

அபூ ஆயிஷா அல்- உம்ரா, ஏர்வாடி (நெல்லை) அறியாமையா? அல்லது அறிந்துகொண்டே கண்மூடித்தனமாக புரோகித மவ்லவிகளைப் பின்பற்றி நரகத்தின் வாயிலுக்கு கூட்டம், கூட்டமாக செல்ல வேண்டும் என்று! கண் இருந்தும் குருடர்களாக, செவி இருந்தும் செவிடர்களாக, அறிவிருந்தும், சிந்திக்காதவனாக, செல்ல விரும்புகிறானா மனிதன்?

எம்.கே.தீன், திருச்சி முஸ்லிம்களே! திருகுர்ஆன் வசனங்கள் இறைவனிடமிருந்து அந்தந்தக் காலகட்டங்களில், ஜிப்ரயீல் என்கிற வானவர் மூலம், நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவை என்பது, அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இறங்கிய வசனங்களை துணியிலும், தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் எழுதி வைத்து, பிற்காலத்தில் அவை, ஒன்றாகத் தொகுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்வும்-வாக்கும் என்று அழைக்கப்பெறும் ஹதீஸ்கள், யாராலும் எதிலும் எழுதி வைக்கப்படாமல் இருந்து வந்தன.

முஹிப்புல் இஸ்லாம் “எவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் பிளவுண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்… அவர்களுக்கே தாம் மகத்தான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105)

 தர்கா நாயகர்களின் (அவ்லியாக்களின்) பெயரால் அரங்கேறும் அனாச்சாரங்கள்

  K.M.H. இறைவன் ஒருவன் இருப்பானேயாகில் இந்த உலகில் நடக்கிற பஞ்சமா பாதங்களை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறான்? எந்தவொரு நல்ல உள்ளமும், தீமைகள் நடக்கக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த முற்படும் போது, இறைவன் எப்படி கண்டுங் காணாதது போல் இருக்க முடியும்? அப்படியொரு இறைவன் இருக்க முடியாது, நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய சந்தேகம்; ஏன் இது அவர்களின் வாதமும்கூட.

விமர்சனம்: பெரியார், வீரமணி, டாக்டர் கோவூர் போன்றவர்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டுமிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம்,  என்று சவால் விட்டதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? S. அப்துல்லாஹ், திருச்சி – 8

மர்ஹும் (ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் ‘முஸாபாஹா’ செய்வதும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்த வரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைகளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், ‘முஸாபாஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது?” என்று சென்னையைச் சேர்ந்த சகோதரர் நூர் முகம்மது அவர்களும், மதுரை நரிமேட்டைச் சேர்ந்த கலீபா குலாம் ஹுஸைன் சுஹரவர்தீ என்பவரும் கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு விளக்கமாக இந்தக் கட்டுரை […]

இந்த ஹைடெக் தவ்ஹீது மத்ஹப் இமாமுக்கும் மற்ற 4 மத்ஹபு இமாம்களுக்கும் உள்ள வேறுபாடுகளை இந்த அட்டவணையில் காணலாம். மற்ற 4 மத்ஹபுகள் 1. இமாம்கள் மறைந்து 200 ஆண்டுகளுக்குப் பின் அந்தந்த மத்ஹபுகள் தோன்றின 2. பிரதான இமாம் தனிதனி குட்டி அமைப்புகளை ஏற்படுத்தவில்லை. 3. சொல்லுக்கும் செயலுக்கும் மிகப்பெரும் மாறுபாடு இவர்களிடமில்லை. 4. தான் என்ற பெருமை அகம்பாவம் இவர்களிடம் மிகப்பெரும் அளவில் இல்லை. 5. அல்லாஹ் ரசூலின் பயம் பிரதானம். 6. உலக […]

அபூ சுமையா, நாகை. கண்களிரண்டும் மூடிக் கொள்கின்றன – மீண்டும் திறவா வண்ணம். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”. சகப்பு மாற்றுகிறார்களோ என்னவோ அதற்குள் கசாப்புக் கடைக்கு ஆள் போகும். மளிகைக் கடைக்கு வேறொரு ஆள் பறக்கும். பண்டாரியைத் தேடிக்கொண்டு வரச் சொல்லிப் பல குரல் எழும்பும். வழியின்றி வேதனைகளை அனுபவித்து ஓய்ந்து போனவனை மண் மூடிக் கொண்ட பின், கூடி அமர்ந்து உண்டிட!.. என்ன கேவலம்! சாப்பிட வேண்டியதுதான். ஆண்டான்டு அழுதாலும் மாண்டவன் மீள […]

தடுமாறும் ததஜ (TNTJ) [PDF]

உண்மை பேசுக!  இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களு டைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு அவற்றில் அவர் கள்  என்றென்றும்  இருப்பார்கள்.  (5:119) நேர்மையாக பேசுக!