ஐயம்: ஷைத்தானை கழுதைகள் பார்க்க முடியும் என ஹதீஸில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறுகிறார். அப்படி இருந்தால் தயவு செய்து அந்த ஹதீஸை தெரிவிக்கவும். முகமது அன்சாரீ, திருச்செந்தூர்.
A.கமால் உசேன், திருச்சி. இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் என்ற முழக்கத்துடன் சுமார் 25 ஆண்டுகளையும் கடந்து அந்நஜாத் தொடர்ந்து வெளியாகி வருவது யாவரும் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ். அந்நஜாத் இதழின் துவக்க கால நிர்வாகிகளில் சிலர் மதரஸாக்களில் ஓதி பட்டம் வாங்கிய ஆலிம்கள் என்பதையும் யாவரும் அறிவார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸபாவிலிருந்து அஹமது நிஜாத் வரை! S.ஹலரத் அலி, ஜித்தா
நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்! அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடையும் படைப்பினங்கள் முஹிப்புல் இஸ்லாம்
MTM.முஜீபுதீன், இலங்கை ஆகஸ்டு தொடர் : 11 1400 ஆண்டுகளுக்கு முன் வேதக்காரர்களான யூதர்களும், கிறித்தவர்களும் தமது இறைத் தூதர்களை தமது மார்க்க விசயங்களில் எல்லை கடந்து கடவுளின் தரத்திற்கு உயர்த்தினர். பின் அல்லாஹ்வுக்கு வழிபாடு செய்வது போல் இறைத்தூதர்களை வழிபட்டனர். அதற்கு மேலதிகமாக ஈசா(அலை) அவர்களின் சீடர்கள், பாதிரிகள், சந்நியாசிகள் விசயத்திலும் எல்லை மீறினர். அவர்கள் பாவங்களிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் என நம்பினர். ஈசா(அலை) ஒன்றை ஆகுமாக்கினால் அதை பாதிரிகள் ஆகாததாக்குவார்கள். அப்போது உண்மையோ அல்லது […]
தமிழகத்தைக் கண்ணீரற்றத் தமிழகமாகக் காண அவாவுறுவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஆசைப்படுவதாகவும், அதற்காகவே பாடுபடுவதாகவும் அறிவித்துள்ளார். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஒரு முயற்சி வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்காகக் கடும் உழைப்பு, அதற்குரிய சரியான முறையான வழியில் அமைய வேண்டும். திருச்சியிலிருந்து சென்னை சென்று சாதிக்கப் போகிறேன் எனக் கூறும் ஒருவன் வடக்கே சென்னை செல்லும் தொடர் வண்டியில் ஏறாமல், தெற்கே நாகர் கோவில் செல்லும் தொடர் வண்டியில் ஏறி பிரயாணித்தால் அவன் தனது இலட்சிய […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: அல்லாஹ்வை அவன் என்று சொல்வது ஏன்?
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: இணையற்ற அல்லாஹ் உருவம் உள்ளவனா? அல்லது உருவம் அற்றவனா? விரிவாக ஆதாரத்துடன் விளக்கவும். இப்னு மசூத், கடையநல்லூர்.
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: ஹரம் ஷரீஃபில் நபி வழிக்கு மாற்றமாக 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்தப்படுவது ஏன்? 8+3(or) 12+3 என்று இங்கு தொழும் தொழுகைகள் தஹஜ்ஜுதைக் குறிக்குமா? அல்லது நோன்புகாலச் சிறப்பு தொழுகை என்றாகுமா? A.Aநஸீர் , அய்யம்பேட்டை.
M.S. கமாலுத்தீன் நபி(ஸல்) அவர்களால் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபர்களில் முதல் நபர் அபூபக்கர் (ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொல்லிக்கொண்டிருந்த ஆரம்ப கால கட்டத்தில் பலரும் தயங்கும்போது தைரியமாக இஸ்லாத்தை ஏற்று தன்னுடைய செல்வங்களையெல்லாம் அதை செலவழித்தவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். இதை இந்த ஹதீஸின் மூலம் நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களை அல்லாஹ்வின் நேசராக்கி வைக்கிறார்கள்.
K.S.H. அபூ அப்தில்லாஹ் (ஜித்தா) நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம், கண்ணியப்படுத்துகின்றோம் என்று கூறியே,”பித்அத்’ ஆன மீலாது, மெளலூது போன்ற மார்க்க முரணான செயல்கள் புரோகித ஆலிம்களால் அரங்கேற்றப்படுகின்றன; நபி(ஸல்) அவர்கள் மேல் கொண்ட முஹப்பத் (பிரியம்)தால் “பரக்கத்” (அபிவிருத்தி), “ஷபாஅத்” (பரிந்துரை) கிடைப்பதற்காகவே மெளலூது ராத்தீபுகள் எனப்படும் ஷிர்க்கான அரபி பஜனைப் பாடல்கள் இல்லங்கள் தோறும் இசைக்கப்படுகின்றன. இதுபோன்ற மீலாது, மெளலூது மார்க்கத்தில் இல்லாத “பித்அத்’கள் என விளங்கிக் கொண்டவர்கள் கூட, “”ஹஜ்ரத்” “”பெருமானார்,” “அண்ணல்’, “நாயகம்’ […]
Dr.A.முஹம்மது அலி, Ph.D., 1. நிச்சயமாக நாம் ஆதமுடைடய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். …….நாம் படைத்துள்ள பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம். (அல்குர்ஆன் 17:70)
H.நூருல் அமீன், ALAIN.UAE இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 22:78)
இஸ்லாத்தில் இடையில் புகுந்து கொண்ட இடைத்தரகர்களான – புரோகிரதர்களான மவ்லவிகள் முன்னோர்களின் பெயரால் புகுத்தியுள்ள மூட நம்பிக்கைகள், அநாச்சாரங்கள் இவற்றில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் பெரும் முயற்சியில் விஷயம் தெரிந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் அயராது பாடுபடுவது நீங்காத கடமையாக இருக்கிறது.
இறை நம்பிக்கையின்மை மனித வர்க்கத்தின் மீதும் சமுதாயங்கள் மீதும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மார்க்கத்திலிருந்து அகன்று அல்லது அதைப் புறக்கணித்து வாழும் சமுதாய மக்களிடையே அநீதியும், தன்னலமும், ஒருவரை ஒருவர் நம்பாத நிலையுமே நிறைந்து காணப்பெறும். இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களின் இயல்பும் இவ்விதமே காணப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மார்க்க நடைமுறைகளும் பண்புகளும் தாம் தனி மனிதர்களுடையவும் சமுதாயங்களுடையவும் ஒழுக்க மேம்பாட்டை உறுதி செய்யத் தக்கவை. இறைவன் மீதும் மறுமையிலும் நம்பிக்கையுடையவர்களே, அவர்கள் இறைவனின் திருப்தியைப் […]
ஐயம்: நானும் எனது நண்பனும் இங்கே அடுத்தடுத்த வீட்டில் வேலை செய்து வருகிறோம். என் நண்பனுடன் எனது அரபிக்கு ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதனால் எனக்கு எனது நண்பனுடன் கதைக்க வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் இருவரும் அரபிக்குத் தெரியாமல் கதைத்துக் கொண்டிருந்தபோது அரபி பார்த்து விட்டார். இனிமேல் நாங்கள் கதைக்க மாட்டோம் என எங்கள் இருவரிடமும் குர்ஆனைத் தொட்டு சத்தியம் செய்யச் சொன்னார். நாங்களும் கதைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டோம். […]
ஐயம்: நான் மாற்றுமத பெண்ணை விரும்புகிறேன்; மாற்றுமத பெண்ணை திருமணம் செய்யலாமா? அந்தப் பெண் இஸ்லாத்திற்கு வர தயாராக இருந்தும் எனது வீட்டில் ஏற்க மறுக்கிறார்கள். இந்நிலையில் நான் என்ன செய்வது? முஜாஹிதீன், தம்மாம்.
21-ம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய நிலை கவலை தரத்தக்கதாக இருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதும் தினசரி நிகழ்ச்சியாக இருப்பது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொண்டு இரத்தம் சிந்திக் கொண்டிருப்பதும் அன்றாடம் செய்தித்தாள்கள் மூலம் அறியும் அவலங்களாகும்.
ஐயம் : நபி(ஸல்) இரவுத் தொழுகை 8+3 என தொழுதிருக்க ஓர் ஆலிம் 8+3 போக விடிய விடிய நஃபில்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம் என்று கூறுகிறார். அவ்வாறு தராவீஹ் (தஹஜ்ஜுத்) தொழுத பின் பல நஃபில்கள் தொழலாமா? ராஹிலா, உசிலம்பட்டி.
ஷம்ஸுள்ளுஹா ரஹ்மானி நோன்புப் பெருநாளன்று வழங்கப்பட வேண்டிய தர்மத்தை “ஃபித்ரு” என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா – என்றும் கூறுவர்) இது கட்டாயமாகசெய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்” என்ற பதத்தையே பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு:-