ஐயமும்! தெளிவும்!!   ஐயம் : குளிப்பு கடமையானவர் – குளத்தில் – குளிக்கலாமா? எந்த முறையில் குளிக்க வேண்டும்? ஹதீஸ் ஆதாரத்துடன் விபரம் தேவை?  குளத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும ஆடு – மாடுகள் (மிருகங்கள்) குளிக்கின்றன. மேற்கொண்டு பெண்கள் மாதவிடாய் துணிகள் உட்பட கழுவுகின்றனர். E. ஜாபர் அலி, கத்தார்.

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-7  விளக்கத்தை அறிவது என்றால் என்ன? தமிழ் அகராதியில் விளக்கங்காணுதல் என்பதற்கு ஆராய்ந்தறிதல் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.  புரியாதிருந்த ஒருவிஷயத்தை சுய ஆய்வுக்குப் பிறகோ அல்லது பிறரது விளக்கத்திற்குப் பிறகோ புரிந்து கொள்ளுவதை “விளங்குதல்” அல்லது “விளக்கத்தை அறிதல்” என்று சொல்லப்படும். அறியாதிருந்த ஒருவிஷயத்தை அறிந்து கொள்ளுவதைக் கூட விளங்குதல் என்று சொல்லப்படுவதில்லை.

அபூபக்கர், பேட்டவாய்த்தலை     ” எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?)     திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறி பிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான்…”.     (அல்குர்ஆன்’ 35:8)

நபித் தோழரின் வாழ்க்கையில் நடந்தவை….

எம்.பீ.ரபீக்அஹ்மத்.     நபிமொழிகள் மற்ற மனிதர்களின் மொழிகளை விட முற்றிலும் மாறபட்ட, வேறுபட்ட மொழிகளாக இருக்கின்றன. நபிமொழிகள் எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும், அது தனி மொழியாக, தனிமை வாய்ந்த தனிப்பட்ட மொழியாக பளிச்சிடுகின்றது.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : என் அகவை 70. என் பள்ளிப் பருவத்திலிருந்தே பல இஸ்லாமியத் தோழர்களுடன் ஆத்மார்த்தமாகப் பழகி இருக்கிறேன். அரசுப் பணியிலிருந்த காலத்திலும், பணியின் நிமித்தம் நெல்லை பேட்டை தொடங்கி சென்னை இராயப்பேட்டை (அமீர் மகால்) வரை எனக்குத் தோழர்கள் இருந்தனர், இருக்கின்றனர். மனித நேயத்திற்கும் மத நல்லிணக்கத்துக்கும் அந்த இஸ்லாமிய நண்பர்கள் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றனர். அவர்களுடன் நான் மசூதித் தொழுகைக்குச் சென்றுள்ளேன். என் இஸ்லாமியத் தோழர்கள் பலர் எங்களுடன் ஆலயங்களுக்கு வந்து […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-6  3:7 வசனத்தின் சரியான பொருள்: அவன்தான் (இந்) நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான (ஒரே பொருள்)வசனங்கள் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும் எஞ்சியவை பல்பொருள் பெறத்தக்கவை (தீர்க்கமற்றவை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள் குழப்பங்களை நாடு, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத்தேடி அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால் இவற்றின் உண்மைக் கருத்துக்களை (முடிவு-Final Verdict) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார். அறிவில் தேர்ந்தவர்களோ “நாங்கள் இவற்றில் […]

 உண்மையான ஷரீஅத் சட்டம் அல்குர்ஆனே! இதனை பின்பற்றியே தீர்ப்பு வழங்க வேண்டும்! மண்டபம் M. அப்துல் காதர் அகில உலக மக்களுக்கும் ஒரே இறைவனான வல்ல இறைவன் மனிதனை படைத்து தூய வாழ்க்கைநெறி வாழ்வதற்கு அருள் மறையாம் அல்குர்ஆனையும் அகிலத்தின் அருட்கொடை இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களையும் இவ்வுலகிற்குத் தந்தான். மனித வர்க்கம் நல்வழியில் வாழ்ந்திட இரண்டைப் பின்பற்றுங்கள், வழி தவற மாட்டீர்கள் என்ற உயர்வான கொள்கையினை முன்னிறுத்தி இஸ்லாமிய மார்க்கம் உலக மெங்கும் சுடர்விட்டு பிரகாசிக்கிறது. […]

S. ஹலரத் அலீ, ஜித்தா. ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் இட்ட அழகிய பெயர் “முஸ்லிம்கள்’. இந்த முஸ்லிம்களின் கூட்டமைப்பிற்கு நபி(ஸல்) அவர்கள் வைத்த பெயர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’. இதனை தவிர்த்து வேறு எந்தப் பிரிவுப் பெயர்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் அங்கீகரிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள்-இவர்களுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டு கால கட்டத்தில் கூட இஸ்லாத்தின் பெயரால் தனி ஜமாஅத் எவரும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று தவ்ஹீது பேசும் […]

 இஸ்லாமிய ஒற்றுமையியல் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம் நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! முஹிப்புல் இஸ்லாம்

 அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஜனநாயக ஆட்சி முறை என்றால் மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பப்படி ஆட்சி நடத்துவதாகும். மக்களில் பெரும்பான்மையினர் கல்வியறிவற்றவர்களாகவும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு வாழ்பவர்களாகவும், எளிதில் ஏமாறுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இல்லை என்றால் தங்களின் விலை மதிப்பற்ற பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் இழக்க முன் வருவார்களா?

 அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்….. ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணியா? மாநாடா? எதார்த்தம் என்ன? ததஜவினர் 2010 ஜூலை 4-ல் சென்னைத் தீவுத்திடலில் ஒடுக்கப்பட்டோரின் பேரணி என்றும் மாநாடு என்றும் பல மாதங்களாக அறிவிப்புச் செய்து வருகிறார்கள். கவுன்ட்டவுன் நடத்தி வருகிறார்கள்.

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-5 அரபி இலக்கண இலக்கியம் அவசியமா? அதற்கு முன்பு, அல்குர்ஆனிலுள்ள முஹ்க்கமாத் வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமே இல்லை. எனவே மார்க்கத்தை விளங்கிக் கொள்ள அவை அவசியமென்று ஒருசாரார் கூறி வருவது மிகவும் தவறான கூற்று என்பதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம். காரணம்: முஹ்க்கமாத் வசனங்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலமான 23 வருடங்களில் தெளிவாக தத்துவ ரீதியிலும் (Theoretically)  நடைமுறை (Practically) […]

M.S. கமாலுத்தீன், பெங்களூர்.     எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜல்) இந்த உலகத்தில் எத்தனையோ கோடி மனித சமுதாயங்களை படைத்திருக்கிறான். தன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தவர்களை கண்ணியப்படுத்தியிருக்கிறான். வரம்பு மீறியவர்களை அழித்திருக்கிறான். ஆனால் உலக இறுதிநாள் வரை நடுநிலையான சிறந்த சமுதாய மக்கள் என்று திருகுர்ஆனில் புகழ்ந்து சொல்கிற சமுதாயம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி வருகிற முஸ்லிம் சமுதாயம்தான்.

 குறிப்பு : குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து விளங்க முற்பட முன்னர் எழுதப்பட்ட கடிதமாகும் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ்ரத்ஜீக்கு எழுதப்பட்ட கடிதம் ஹிஜ்ரி 10.2.1398 பெருமதிப்புக்குரிய ஹஜ்ரத்ஜீ அவர்களின் உயர் சமூகத்திற்கு, ஷாஹுல் ஹமீது (அபூ அப்தில்லாஹ்) பணிவுடன் எழுதியது. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நலம். நலமே நாட்டம்.

மறுபதிப்பு : கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அகில உலக அளவில் தப்லீஃக் பணி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே: இந்தப் பணி மூலம் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களிடையே ஓரளவு மறுமலர்ச்சி ஏற்பட்டு வருவதையும் யாரும் மறுக்கமாட்டார்கள்.

ஐயமும்! தெளிவும்!! மனைவியை ‘தலாக்’ என்றோ ‘முத்தலாக்’ என்றோ கூறிய பின்னர் மீண்டும் சேர்த்துக்கொள்வது கூடுமா? [PDF]

ஐயமும்! தெளிவும்!! சுவர்க்கவாசி ஆண்களுக்கு ஹூருல்யின் என்ற கண்ணழகிகள் உண்டென்றால் சுவர்க்கவாசியான பெண்களின் நிலை என்ன?[PDF]

பாவ மன்னிப்பு : மூமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! நீங்கள் (மறுமையில்) வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 24:31) தினமும் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி