அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்கவர்களா முல்லாக்கள்? அபூ அப்தில்லாஹ் ஏப்ரல் தொடர்ச்சி… “…நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் களில், அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் ஆலிம் கள் (அறிஞர்கள்)தாம்…” அல்குர்ஆன் 35:28 இந்த இறைவாக்கை ஓதிக்காட்டி மவ்லவி கள். ஆலிம்களாகிய நாங்கள்தான் அல்லாஹ்வை முறைப்படி அஞ்சுபவர்கள். எனவே மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் அதிகாரம் எங்களுக்கே உண்டு என வாதிடுவர். இங்கும் அவர்கள் பொய்யே உரைக்கின்றனர். இந்த இறைவாக்கு மவ்லவிகள், ஆலிம்கள் அத னால் அல்லாஹ்வை முறைப்படி அஞ்சுபவர் கள் எனச் சொல்லவில்லை. […]