அந்நஜாத் ஜனவரி2007

in 2007 ஜனவரி,பொதுவானவை

 

துல்ஹஜ் 1427 – முஹர்ரம் 1428

ஜனவரி 2007

தலைவர்களுக்கு சிலை தேவையா?

மக்களுக்குத் தொண்டு செய்து, அதன்மூலம் மக்களிடையே பிரபலமானவர்களுக்கு, அவர்கள் இறந்தபின், சிலருக்கு அவர்கள் உயிரோடிருக்கும்போதே அவர்களது உருவத்தை சிலையாக வடித்து, பல இடங்களில் நிறுத்தி மாலையிட்டு மரியாதை செய்து வருவதைப் பார்த்து வருகிறோம்.

மாலை, மரியாதை என்பது போல் கால ஓட்டத்தில் அக்கற்சிலைகள் தெய்வங்களாக உயர்வு பெற்று விடுகின்றன. மனிதனின் கால் மிதிபடும் கல் அந்த மனிதனே தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்வதற்கு யார் காரணம்? மனிதனின் அறிவற்ற செயலே இதற்குக் காரணம். தங்களைப் பெரும் பகுத்தறிவாளர்கள் என மார்தட்டிக் கொள்பவர்களும் இதற்கு விதிவிலக்குப் பெற்றவர்களாக இல்லை.

மிதிக்கும் படியும் கல்லுதான்; வணங்கும் சிலையும் கல்லுதான். கல்லை தெய்வமாக வணங்குகிறவன் காட்டுமிராண்டி என வசைபாடியவர்கள். இன்று தாங்கள் மதிக்கும் தலைவர்களை அதே கல்லைக் கொண்டு சிலைகளாக வடித்து மாலை மரியாதை செய்து வருகிறார்கள். இந்தச் சிலைகளே சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தெய்வங்களாக மாறுகின்றன என்ற உண்மையை விளங்காதவர்ளாக இருக்கிறார்கள்.

மனிதன், ஆரம்பத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கத்துடன் சமாதி, பின்னர் கற்சிலை வடித்தல் என்று ஆரம்பித்துப் பின்னர் கற்சிலை வடித்தல் என்று ஆரம்பித்துப் பின்னர் அதுதான் சிலை வணக்கமாக மாறுகிறது என்பதை இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் 71:23 அம்பலப்படுத்துகிறது.

ஆக மனிதர்களாக வாழ்ந்து இறந்தவர்களுக்கு மரியாதை என்ற பெயரால் நிறுவப்படும் கற்சிலைகளே குட்டி, குட்டி தெய்வங்களாக உருவாகி மனிதரிடையே பல தெய்வ வழிபாட்டை உண்டாக்குகின்றன. தங்களை பகுத்தறிவாளர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்கள். இந்த பொய்க் கடவுள்களை ஒழிப்பதற்குப் பதிலாக, இவர்களே மேலும் பொய்க் கடவுள்கள் தோன்ற வழிவகுத்துக் கொண்டு, அகில உலகங்களையும், படைத்து நிர்வகித்து வரும் அந்த ஒரேயொரு இறைவனை மறுக்கும் நாஸ்திகர்களாக ஆகிவிடுகிறார்கள். இவர்களும் மனிதனின் சீரழிவுக்கு புரோகிதர்களைப் போலவே ஒருவகையில் காரணமாகிவிடுகிறார்கள்.

இந்த சிலைகள் இறைவன் மன்னிக்காத, இறைவனுக்கும் இணைவைக்கும் கொடும் செயலை மனித வர்க்கம் பக்தியுடன் செய்ய வைப்பது ஒரு புறம். மறுபுறம் அச்சிலைகளே மனிதர்களிடையே பெரும் கலவரங்கள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒரு சமூகத்தாருக்குப் பெரும் தலைவராகத் தெரியும் ஒருவர். இன்னொரு சமூகத்தாரின் வெறுப்புக்குக் காரணமாக இருக்கிறார். எனவே ஒரு சமூகத்தாரின் சிலையை பிரிதொரு சமூகத்தார் அவமானப்படுத்தும் நிலையும் அரங்கேறி வருகிறது.

அதனால் சிலைகளைப் பாதுகாக்க அவற்றைச் சுற்றி கம்பி வேலி போடுகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். ஆக தலைவர்களின் சிலைகள் சிறைக் கைதியாகவும். அவர்களின் தலைகள் பறவைகளின் மலக்கூடமாகவும் காட்சி அளிப்பதைப் பார்க்கிறோம். சிலைகளை சிறையிலிட்டு பாதுகாப்பு அளித்தும், அவற்றை உடைத்து அவமானப்படுத்துவதும் நிற்பதாக இல்லை.

சமீபத்தில் உ.பி.யில் அம்பேத்கார் சிலையை யாரோ உடைத்து அவமானப்படுத்திவிட்டார்கள். அதனால் மஹாராஷ்டிராவில் பெருங்கலவரம் ஏற்பட்டு, தொடர்வண்டிகள், நூற்றுக்கணக்கான பேருந்துகள், மற்றும் வாகனங்கள் எரிப்பு, உயிர்ச் சேதம் என பல கோடி ரூபாய்கள் நாசமாகியுள்ளன. நாட்டிக் பொருளாதாரம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகின்றன என்று பார்த்தீர்களா? திருச்சி, சீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்ட்டு மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

பலருக்கு ஞாபகம் இருக்கலாம். தலைவர்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கத்துடன் மாவட்டங்களுக்கு அத்தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன். அப்படி ஒரு மாவட்டத்திற்கு ஒரு தலைவரின் பெயரை வைக்கப் போய், அங்கு பெரும் கலவரங்கள் மூண்டன. கோடிக்கணக்கில் பணம் நஷ்டமானதுடன் உயிர்  சேதங்களும் ஏற்பட்டன். அரசு அக்கலவரத்தை அடக்க முடியாமல் தவித்தது. இறுதியில் அந்த மாவட்டத்திற்கு அந்தத் தலைவரின் பெயர் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதுடன், ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, பழைய பெயர்களே மீண்டும் வைக்கப்பட்டன்.

இதே அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இன்னொரு அழகிய முடிவை எடுத்தால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதாக அமையும். அதுவே நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றுவதாகும். தலைவர்களுக்கு மரியாதை செய்வது என்பது, அவர்களின் நல்ல போதனைகளை எடுத்து நடப்பதாகும். அவர்களின் அழகிய செயல்முறைகளைப் பின்பற்றுவதாகும். இதுவே அவர்களை உண்மையில் மதிப்பதாகும். அதற்கு மாறாக அவர்களுக்கு சிலைவடித்து, சிறையிலிட்டு, அவர்களின் தலையை பறவைகளின் மலக்கூடமாக ஆக்குவது உண்மையில் அவர்களுக்கு மரியாதை செய்வதாக ஆகாது.

எனவே நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றுவது, பல தெய்வ வணக்க வழிபாடுகளை ஒழிக்க வழிவகுப்பதோடு, சமூகங்களில் ஏற்படும் சச்சரவுளால் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு பல்லாயிரம் கோடி பொருள் நஷ்டத்தோடு, பொன்னான மனித உயிர்களும் மாய்க்கப்படுவது தவிர்க்கப்பட்ட வழி ஏற்படும், சிலை விரும்பிகள் சிந்திப்பார்களா?

************

ஹஜ் பெருநாள் சிந்தனைகள் :

தியாகத் திருநாள் – இப்னுஹத்தாது

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாட்கள்) மட்டுமே; ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள், இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.

ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் துவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம், ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து, இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாடும் ஒரு நன்னாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது.

அதே போல், நாம் அல்லாஹ்வின் அடியார்கள்; அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து(அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. அல்லாஹ் தன்னுடைய கலீல் – நேசர் என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கும். நபி இப்றாஹீம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.

நபி இப்றாஹீம்(அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே, இளமைப்படுத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிபடவேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையில் அவர்களுக்கிருந்த தெளிவு. அந்த மாபெரும் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு,  தான் கொண்ட ஏகத்துவத்தை நிலைநாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது ‘ரப்’பின் திருப் பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம். அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை, இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. “இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்” (குர்ஆன் 3:95)

இப்றாஹீம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹீம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே இனம் பருவத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாவம் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள்.

“என் அருமைத் தந்தையே! உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயம்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படுநாசத்தில் விழச் செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?” என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார்.” “மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா? குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கின்றாயே!” என்று அதட்டுகிறார்.

நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்து உணவளித்துப் பரிபாலித்து வரும். அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம் “மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை – வெறும். சிலைகளே! இவற்றாலோ, இவற்றிற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர் களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியவர்களின் சிலைகளை வாங்கிக்கொள்ளலாம்” என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் செய்ய ஆரம்பத்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, “நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்” என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.

“இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப் போய்விடு” (குர்ஆன்: 19:46) என்றார்.

ஆதரிப்பார் யாரும் இல்லாமலும், ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும், அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவங்குகிறார்கள் இப்றாஹீம்(அலை) அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவப் பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்சாரத்தை இப்றாஹீம்(அலை) அவர்கள் கைவிடுவதாக இல்லை; துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்துயும் உடைத்தெறிந்து விட்டு, ஒரு பெரிய சிலையின் தோளிலேலே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதைபதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்றாஹீம் என்ற பெயராம், வாலிபனாம், அவன்தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து – இல்லை இழுத்து வ்நது இப்றாஹீம்(அலை) அவர்களை விசாரிக்கின்றனர். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்” என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்” என்று குத்திக் காட்டுகிறார்கள்; (குர்ஆன் 21:60-67) துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ, நடுக்கமோ, இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு சிறிதும் இல்லை. தைரியமாக, நெஞ்சுயர்த்தி, தான் கொண்டுள்ள அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்ற கொள்கைகை, மன்னனிடமே எடுத்துச் சொல்கிறார்கள். முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ்(ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (குர்ஆன் 21:68,69)

நபி இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இதோடு சோதனை முடிந்துவிட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது – தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் – பொட்டல்காட்டில் கொண்டுவிடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம்? என்று சிந்திக்கவில்லை இப்றாஹீம்(அலை) பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை சுட்டிவைத்துவிட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள்.

ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும் பாலைவனத்தில் அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு, நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹீம்(அலை) “எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?” என்ற பாச மனைவியின் கேள்விக்கு, “ஆம்!” என்ற பதிலே இப்றாஹீம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாகும் ஆறுதல் அடைகிறார்கள்.

நாட்கள் செல்கின்றன, கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர், அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமை யினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது. தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்தபட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள். அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே “ஜம்ஜம்” நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அங்கமாகவும், “ஜம்ஜம்” தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கிவிட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை” இன்னும் தொடர்கின்றது.

பச்சிளம் பாலகன் வளர்ந்து ஓடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹீம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒருமுறை நபி இப்றாஹீம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனைத் தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வரமுடியாது என்பதால், இறை உத்தரவு என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அல்லாஹ்விடம் நாட்டம் அது தான் போலும்; அவனது நாட்டத்தை நிறைவுற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயீல்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. “அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளனாகவே காண்பீர்கள்” (குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால் தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அனைத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுறச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனையனும் எந்த அளவு உணர்ந்திருந்தார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதைபதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக் கட்டம்; இப்றாஹீம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பின்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையில் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகின்றார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள்; ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தானை அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியாகப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். “தந்தையோ வயது முதிர்ந்தவர்: நீயோ வாழவேண்டிய வயது, உலக வாழ்க்கையை இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னை பலியிடப் போகிறாரே உன் தந்தை; அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?” தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு, அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் முன்று இடங்களில்  கல் எறிவதை,  ஹஜ்ஜின்  ஒரு  அங்கமாக ஆக்கி  இருக்கிறான் அல்லாஹ்(ஜல்). இறுதியில் இப்றாஹீம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களைக் கீழே முகம் குப்புறக் கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள்.

ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல், அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்கலைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று; எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவித வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட பின், அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான். “ஆகவே, அவ்விருவரும்(இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹீம்) மகனைப்பலியிட முகம் குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை யாஇப்றாஹீம்! என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹீம்-இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.” (குர்ஆன் 37:103-110)

இப்றாஹீம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும் வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால். அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்கமுடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டதால், அந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டதால், அந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டதால், அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு ஈதையே (பெரு நாளையே) அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) இருவராலும் புணர் நிர்மானம் செய்யப்பட்ட கஃபத்துல்லாஹ்வை இடம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்ற இடத்தை (மகாமே இப்றாஹீம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கிவிட்டான். (குர்ஆன் 2:125)

தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான்; நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அவனே நமது எஜமானன், நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும். (நீர்!) கூறும்!

எனது தொழுகை, எனது தியாகங்கள் என் வாழ்வு, என மரணம (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கு.” (குர்ஆன் 6:162)

எந்த ஒரு காரியத்திலும் நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும், இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லாப் பெரும் பெறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிர்பார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக்கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.

அடுத்து, இங்கு இன்னொரு படிப்பினையும் பெற முடிகின்றது. நபிமார்கள், வலிமார்கள், நல்லடியார்கள் இவர்கள் அனைவரும் இறைவனுக்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு, தியாக வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாகத்தான் இறைவனிடத்தில் உயர் பதவிகளையும், இறை திருப்தியையும் பெற்றுக் கொண்டார்கள்; இன்று மக்களுக்கு மத்தியில் பெரிதுபடுத்திக் காட்டப்படும் மாயாஜால வித்தைகள் போன்ற மந்திர தந்திரக் கோழிக்குச் சொந்தக்காரன் வந்து சண்டையிட்டான். உடனே, சாப்பிட்டு எறிந்த எலும்புகளை எல்லாம் சேர்த்து, உயிர் பெற்றுவிடு என்று அந்தப் பெரியார் சொன்ன மாத்திரத்தில் கோழி உயிர் பெற்று எழுந்துவிட்டது என்று கதை சொல்வார்கள். நபி(ஸல்) அவர் களுக்கே பிறரது பொருளை அனுமதி இன்றிச் சாப்பிட உரிமை இல்லை என்றால், இந்தப் பெரியாருக்கு எங்கிருந்து அனுமதி கிடைத்தது? ஹராமைச் சாப்பிட்டவர் எப்படி “கராமத்” காட்ட முடியுமா? ஊரான் வீட்டுக் கோழியை அறுத்துச் சாப்பிட்ட இந்தக் கதையையும். இறைவனுக்காகப் பெற்ற மகனையே அறுக்கத் துணிந்த, இப்றாஹீம்(அலை) அவர்களின் தியாக வரலாற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இறைவன் எதைப் பொருந்திக் கொள்வான் என்று சிந்தியுங்கள்.

நபிமார்களுக்குரிய முஃஜிசாத்தாக இருப்பினும், வலிமார்களுக்குரிய கராமத்தாக இருப்பினும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி. அவர்கள் விரும்பியவுடன் அனுமதி இன்றி, அவர்கள் விரும்பியவுடன் செய்ய முடியாது. “எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் கொண்டு வர முடியாது.” (குர்ஆன் 40:78) மேலும் அவை அவர்களுக்குரிய சாதாரண அடையாளங்களில் ஒன்றே அல்லாமல் இன்று நம்மவர்கள் பெரிதுபடுத்திக் காட்டும் அளவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றவை அல்ல. அவர்களது சிறப்பெல்லாம். அவர்களது ஈமானையும் தகவலையும் வைத்துத்தான். (குர்ஆன் 10:63, 49:13) இந்த மாயாஜாலக் கதைகளை வைத்து அல்ல. இந்தக் கட்டுக் கதைகளைச் சொல்லித்தான் பெரியார்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில்லை. குர்ஆன், ஹதீஃதுக்கு ஒத்த அவர்களின் உண்மையான போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும்.

நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வரலாற்றிலும், அவர்கள் கூர்மையான கத்தியைக் கொண்டு இஸ்மாயீல்(அலை) அவர்களின் கழுத்தை அறுத்தார்கள்; கழுத்து அறுபடவில்லை; அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தில், ஆத்திரமுற்று பக்கத்திலிருந்த பாறாங்கல்லில் கத்தியை ஓங்கி அடித்தார்கள். பாறாங்கல் இரண்டாகப் பிளந்துவிட்டது என்று இங்கும் ஒரு மாயாஜால மந்திரக் கதையை இட்டுக் கட்டியிருக்கிறார்கள்.

கீழ்க்குறிப்பிடப்படும் குர்ஆன் வசனங்களை மீண்டும் ஒருமுறை உற்று நோக்குங்கள்.

ஆகவே அவ்விருவரும்(இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, இப்றாஹீம்(அலை) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்தியபோது, நாம் அவரை யாஇப்றாஹீம் என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஓரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பசுரமாக்கினோம்.” (குர்ஆன் 37:103-107)

சாதாரண அறிவு படைத்தவனும் இவ்வசனங்களைப் பார்த்த மாத்திரத்தில் இப்றாஹீம்(அலை) மகனை முகம் குப்புறக்கிடத்தியவுடன், அல்லாஹ் அவரை அழைத்து விட்டான்; அறுக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை; அப்படிப்பட்ட கதைகளெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தான் என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

உண்மைக்குப் புறம்பான, மாயாஜால மந்திரக் கட்டுக் கதைகளைப் பெரியார்கள் வலிமார்கள் விஷயத்தில் சொல்லிப் பழக்கப்பட்டுவிட்ட ஒரு சாரார். அந்தப் பழக்க தோசத்தில் குர்ஆன் தெளிவாக பறைசாற்றிக் கொண்டிருக்கும், ஒரு சம்பவத்திலும், தங்கள் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிக்கிறார்கள். இங்கு இன்னொன்றையும் கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். குர்ஆனைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்திலேயே இப்படி மாயாஜால மந்திரக் கதைகளை உண்டாக்கியவர்கள், ஆதாரப் பூர்வமில்லாத வலிமார்கள் வரலாறுகளில் எந்த அளவு புளுகு மூட்டைகளை அள்ளி விட்டிருப்பார்கள் என்பதைச் சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகையில் உருவானது தான். செத்த கோழியும் உயிர் பெற்று எழுந்த கதையாகும்.

இவற்றிற்கெல்லாம் மூல காரணம் என்ன என்று பார்க்கும்போது, வலிமார்கள் விஷயத்தில் அளவு கடந்த கட்டுக் கதைகளையும் மாயாஜாலக் கதைகளையும் கட்டிவிட்டு, பாமர மக்களுக்கு மத்தியில் வலிமார்களைப் பற்றி ஒரு “இமேஜை” உண்டாக்கி, சுருங்கச் சொன்னால் குறைஷி காஃபிர்களைப் போல், அவர்களைக் குட்டித் தெய்வங்களாக்கி, அதன் மூலம் சமுதாயத்தில் கபுரு வணக்கத்தை உண்டாக்கி வயிறு வளர்க்க வேண்டும்; பிழைப்பு நடத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும்; அல்லாஹ்ஐஜல்) இந்தக் கயவர்களின் மாய வலையிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காப்பானாக!

 

 

 

 

 

மனிதரில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதுலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றை ஜனங்களுக்குச் சொல்லி) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து அறிவின்றி (ஜனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு”. (குர்ஆன் 31:6)

எவர், அல்லாஹ்(நேர்வழி காட்டல்) நூலில் அருளியவற்றை மறைத்து, அதற்குக் கிரயமாக சொற்பத் தொகையைப் பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் (நரக) நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாகவும் மாட்டான்; அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 2:174)

குர்ஆன் ஹதீஃதுகளுக்கு மாற்றமான, இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலக் கட்டுக் கதைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, குர்ஆன் ஹதீஃதுகளை மட்டும் வைத்துச் செயல்படுவதை இந்த “ஈத்” இலட்சியமாகக் கொள்வோமாக!

***********************

கைக்கூலியின் விபரீதங்களும் அதை ஒழிக்க வேண்டுகோளும் – K.M.H.

குறிப்பு :

இந்த ஆக்கம் 13.9.1968ல் திருச்சியிலிருந்து வெளிவந்த 17வது ஆண்டு மறுமலர்ச்சி வார இதழில் வந்ததாகும். இங்கு இதை எடுத்துப் பிரசுரிப்பதின் நோக்கம் ஒரு பேருண்மையை உணர்த்துவதுயாகும். இன்றைக்கு சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்னரே வரதட்சனை ஒழிப்பு முயற்சியை நாம் மேற்கொண்டும். அதுவும் மூன்று ஊர்களைச் சேர்ந்த 14 நெடுந்தெருக்களிலுள்ள மக்களை தெருவாரியாகக் கூட்டி, கைக் கூலியின் கேட்டைப் புரிய வைத்து, அவர்கள் உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டுக் கொடுத்த சம்மத அடிப்படையில், உருவான சபைக்கு உளப்பூர்வமாகக் கட்டுப்பட்டு நடக்கும் உண்மை முஸ்லிம்களாக இன்றைய முஸ்லிம்கள் இல்லை. அதன்பின்னர் திருமண சபையிலேயே மாப்பிள்ளை மாப்பிள்ளை தகப்பனால், பெண்ணின் தகப்பனார் ஆகியோரிடம் இரண்டு சாட்சிகள், மற்றும் சபையோர் முன்னிலையில் மிகக் கடுமையான எச்சரிக்கைகள் அடங்கிய உறுதி மொழிப் பத்திரத்தில் கைளெழுத்து வாங்கிய பின்னரும், மறைமுகமாக கைக்கூலி கொடுக்கவும், வாங்கவும் கூடிய மிக இழிவானதொரு நிலை காணப்பட்டதென்றால், இந்த முஸ்லிம் சமுதாயத்தின் பரிதாப நிலைக்கு வேறு ஆதாரம் தேடிப்போக வேண்டியதில்லை.

இதற்கு அடிப்படைக் காரணம் அற்ப உலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்ட இந்தப் புரோகித மவ்லவிகளி, குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட மூட நம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் மார்க்கத்தின் பெயரால் போதித்து முஸ்லிம்களை பெரும் வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்வதால் அந்த வழிகேடுகளின் ஒன்றாக இந்த வரதட்சனைக் கொடுமையும் இருக்கிறது. மேலும் முஸ்லிம்கள் மறுமை பயமின்றி வாழ்கின்றனர். மக்களிடையே மறுமை பயத்தை உண்டாக்க அன்று தப்லீஃக் பணிணில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தோம். இது 1963லிருந்து 1982 வரை நீடித்தது. ஆனால் குர்ஆன், ஹதீஃதை துணிந்து நேரடியாகப் படித்து விளங்க முற்பட்டபோதுதான் தப்லீகில் மிக உள்ள நிலையை வகிக்கும் அமல்களின் சிறப்பு என்ற நூலிலுள்ள கட்டுக் கதைகள், கப்ஸாக்கள், கற்பனைகள் எம்மை சிலிர்த்தெழச் செய்தன. அதற்காகப் பலமுறை டெல்லி மர்கசுக்குச் சென்று முறையிட்டு அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, குர்ஆன், ஹதீஃத் மொழிபெயர்ப்புகளை தஃலீம் ஹல்காக்களில் வைக்கும்படி வலியுறுத்திச் சொல்லியும், தப்லீஃ ஜமாஅத்தின் அமீர், மற்றும் முக்கியஸ்தர்கள் அதற்குச் சிறிதும் செவிசாய்க்கவில்லை. அதன் பின்னரே மக்கள் மன்னறத்தில் எமது கருத்துக்களை எடுத்து வைக்க முற்பட்டோம். முஸ்லிம்கள் புரோகிதர்களின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.

எனவேதான் குர்ஆனை, ஹதீஃதைக் கொண்டு முஸ்லிம்களின் உள்ளத்தில் மறுமை பயத்தை ஏற்படுத்தாத வரை அவர் களின் இந்த வழிகெட்ட நிலை மாறப்போவதில்லை என்பதை உணர்ந்தோம். அதற்குள்ள ஒரே வழி முஸ்லிம்கள் தங்களை ஏய்த்துப் பிழைக்கும் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கையுடன், சுய சிந்தனையுடன் நேரடியாக குர்ஆன், ஹதீஃதை படித்து, விளங்கி, புரிந்து செயல்பட முன் வருவதேயாகும். -ஆசிரியர்.

இஸ்லாமிய சட்ட திட்டங்களின் மேன்மைகளையும், உண்மைகளையும் விஞ்ஞானம் நிரூபித்து வரும் இன்றைய உலகில் அவற்றில் சில சிலவற்றை பின்பற்றுவது கொண்டு முஸ்லிம் அல்லாதார் முன்னேற்றம் காணும் இன்றைய தினத்தில், முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமது கொள்கைகளையும் லட்சியங்களையும் விட்டு, மாற்றாரின் கொள்கைகளை மேலாகக் கருதி பின்பற்றுவதின் காரணமாக எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சியுற்றிருக்கின்றோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அவைகளில் ஒன்றுதான் கைக்கூலிப் பழக்கம். நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்து நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை தோன்றிய நபிமார்கள் அனைவரும் பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணமுடித்ததாக வரலாறு உண்டே. ஒழிய கைக்கூலி வாங்கி மணமுடித்ததாக வரலாறு இல்லலே இல்லை. நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டமும் பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணமுடிப்பதையே கடமையாக்கி இருக்கிறது. நபி(ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களில் யாராவது ஒருவர் அல்லது நபி(ஸல்) அவர்களை முழுக்க முழுக்க பின்பற்றி அல்லாஹ்(ஜல்)வின் அன்பையும் நேசத்தையும் பெற்ற இமாம்கள், வலிமார்கள் இவர்களில் யாராவது ஒருவர், கைக்கூலி வாங்கி மணமுடித்ததாக வரலாறு உண்டா என்றால் இல்லவே இல்லை. அப்படியானால் நம்முடைய முன்னோர்களில் யாருமே செய்திராத, நமக்குக் காட்டித்தராக ஷரீஅத்துச் சட்டம் அனுமதியாத ஒரு நவீன பழக்கத்தை நாம் பின்பற்றுகிறோமென்றால், அது அந்நியருடைய பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள ஹிந்து சகோதரர்களிடம் இந்தப பழக்கம் உண்டு. முன்காலத்தில் ஹிந்து மதச் சட்டப்படி தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கு வாரிசு உரிமை இல்லை. ஆகவே திருமண சமயத்தில் கைக்கூலியாகவும், சீராகவும் அந்த பெண்ணுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பது அவர்களின் பழக்கமாகும்; இது நியாயமும் கூட ஆனால் தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கு பங்கு உண்டு என்று நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டம் தெளிவாகக் கூறியிருக்கும் போது, இக்கைக்கூலிப் பழக்கத்தை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன? நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தராத அந்நிய சமூகத்தின் பழக்கமான இக்கைக்கூலி, இன்று நம் சமூகத்தில் வேரூன்றி விட்டதால் ஏற்பட்டுள்ள கெடுதிகள் ஒன்றல்ல. பல; அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவோம்.

சமூக பொருளாதார வீழ்ச்சி!

ஒரு சமுதாயத்தின் பொருளாதார அபிவிருத்தி அச்சமூகத்தின் ஆண்கள் கையில்தான் தங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆண்கள் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், உழைக்கும் ஆர்வமுள்ளவர்களாகவும், ஆற்றலுள்ளவர்களாகவும் இருந்தால் சமூக பொருளாதார நிலை உயரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இக்கைக் கூலிப் பழக்கமானது நமது ஆண்வர்க்கத்தை முழுச் சோம்பேறிகளாகவும், உழைக்கவே லாயக்கற்றவர்களாகவும் ஆக்கிவிட்டது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது முதுமொழி. ஆண்களின் இளம் பிராயத்திலேயே உழைக்க வேண்டும். பொருள் தேடவேண்டும் என்ற ஆர்வம் உண்டானால் தான் அவர்கள் வாலிப பருவத்தில் உழைக்கும் ஆற்றலுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் இக்கைக்கூலி பழக்கத்தால் ஆண்கள் சிறுபிராயத்திலிருந்தே பொறுப்பற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் வளரக் காண்கிறோம். பெண் வீட்டாரிடமிருந்து கைக்கூலியாகக் கிடைக்கும் பணத்தை நம்பியே ஆண்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். இன்று நடக்கும் பெரும்பாலான திருமணங்களை நோட்டமிட்டால், ஒரு வெட்கக் கேடான நிகழ்ச்சியைக் கண்கூடாகக் காணலாம். கைக்கூலியாகக் கொடுக்கும் ரொக்கத்தையும், கல்யாண செலவுக்காக வேண்டிய பணத்தையும், பெண் வீட்டார் எப்பாடுபட்டாவது, பிச்சை எடுத்தாவது சேகரித்து விடும் வேளையில், உழைக்க அருகதையுள்ளவன் நான் என்று மார்தட்டிக் கொள்ளும் ஆண்கள், வீட்டு ரிப்பேர் வேலை, வெள்ளையடித்தல் தனது கல்யாண உடுப்பு, இதர கல்யாண செலவுகள் அனைத்திற்கும் பெண்வீட்டார் கைக்கூலியாகக் கொடுக்கும் பணத்தை எதிர்பார்க்கும் அவல நிலைதான் அது. அவன் பிறந்த மேனியைத் தவிர இதரவை எல்லாம் இந்தப் பாழும் கைக்கூலிப் பணத்தால் ஆனவைகளே. திருமணம் வரை இப்படி சோம்பேறியாகப் பழகிவிட்ட இவன். திருமணத்திற்குப்பின் உழைப்பாளியாக மாறுவான் என்பது எதிர்பார்க்க முடயாத ஒன்று. இதனால்தான் கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாமல், திருமணம் நடந்த குறுகிய காலத்திலேயே அவள் கொண்டு வந்த நகைகளையும் விற்றுச் சாப்பிட்டுவிட்டு, அவளை தாய்வீட்டுக்குத் துரத்தத் துணிந்துவிடுகிறான். அல்லது அவளது தந்தையோ பாட்டனோ உழைத்துச் சம்பாதித்து வைத்த சொத்தை விற்றுக் காலந்தள்ளுகிறான். இக்கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களை நோட்டமிட்டால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் பெரும்பகுதி, முஸ்லிம் அல்லாதாருடைய கைகளுக்கு மாறி இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இக்கைக்கூலி பழக்கம்  நம் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்குமானால், நம் சமூகமே பிச்சைக்கார சமூகமாக மாற நேரிடும் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

விதிவிலக்காக ஒருசிலர் உழைக்க முன்வந்தாலும் கூட அவர்களின் வியாபாரங்களில், விவசாயங்களில், தொழில்களில் அபிவிருத்தியையும் பார்க்க முடிவதில்லை; இதற்குக் காரணம் உண்டு.

எவன் சிருஷ்டிகளிடம் கையேந்துகிறானோ அவனுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் அடைத்துவிடுகிறான் என்று அல்லாஹ்(ஜல்) அருளியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இக்கைக்கூலி அதாவது பெண் வீட்டாரிடம் கையேந்திக் கேட்கும் கெளரவப் பிச்சைக் காசைவிட, மலத்தைச் சுமந்து கூலியாகப் பெறும் காசு எத்தனையோ மடங்கு உயர்ந்ததாக இருக்கும். கைக்கூலிப் பிச்சை வாங்கும் நம் சமூக மக்களின் முயற்சிகளில் எப்படி அபிவிருத்தியைக் காணமுடியும்? அல்லாஹ்(ஜல்) தருவான் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்பவர்களை அவன் வீணாக்குவதுமில்லை; அல்லாஹ்மீது நம்பிக்கை இழந்து படைப்புகளிடம் கையேந்துபவர்களை அவன் உருப்படச் செய்வதுமில்லை.ஆகவே கைக்கூலிப் பிச்சை வாங்கும் மனிதர்களுடைய முயற்சிகளை அல்லாஹ்(ஜல்) உருப்படச் செய்வதில்லை. எந்த அளவு என்றால் கைக்கூலி வாங்குவதற்கு முன் மிகவும் சிறந்த முறையில் நடந்து கொண்டிருக்கும் வியாபாரம் கைக்கூலியாக வாங்கிய பணத்தில், கல்யாண செலவுகள் போக ஒரு சிறிய தொகை வியாபார முதலீட்டில் போய்ச் சேரும். அவ்வளவுதான்! அச்சிறிய தொகை ஏற்கனவே உள்ள பெரிய தொகையையும் அழித்துவிடும். இப்படி ஒட்டாண்டியான பலரை நாம் கண்ணாரப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே கைக்கூலிப் பழக்கம் நம் சமுதாயத்தில் தொடர்ந்து நீடிக்கும் வரை சமூக பொருளாதாரம் நிலை ஒருபோதும் உயரப் போவதில்லை என்பது திண்ணம்.

அடுத்து கைக்கூலி பழக்கம் சமூகப் பண்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள கெடுதிகளைப் பார்ப்போம்.

சமூகப் பண்பாடுகளில் ஏற்பட்டுள்ள விபரீதங்கள்!

சமூகப் பொருளாதார நிலை எப்படி ஆண்கள் கைகளில் தங்கி இருக்கிறதோ, அதே போல் அச்சமூகத்தின் ஒழுக்கப் பண்பாடுகள் பெண்களின் கைகளில் தங்கி இருக்கின்றது. சமூகப் பெண்கள் எப்பொழுது ஒழுக்கமுள்ளவர்களாக, பண்பாடுள்ளவர்களாக, கற்புடையவர்களாகத் திகழ்கிறார்களோ, அப்பொழுதுதான் சமூகத்தின் பண்பாடுகளும் சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இக்கொடிய கைக்கூலிப் பழக்கம், நம் சமூகப் பெண்களுக்கு மத்தியில் பல ஒழுக்கக் கேடுகளை உண்டாக்கிவிட்டது என்பதையுஞ் சொல்லித்தான் ஆக வேண்டும். திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களில் பலர் நாம் முன் விளக்கியது போல், தங்கள் கணவன்மார்களால் தங்கள் பிறந்தகங்களுக்கு விரட்டப்பட்டு வாழ்விழந்து வழி தவறுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இக்கைக்கூலி பழக்கத்தால் அழகிருந்தும், குணமிருந்தும் எல்லாம் இருந்தும், பணம் இல்லாத ஒரே காரணத்தால் திருமணம் செய்து கொடுக்கப்படாது பல வருடங்கள் பல குமர்கள் வீட்டினுள் அடைபட்டிருந்து சீரழிவதையும் நாம் பார்த்துச் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப் பெண்களின் தவறு அவர்களுடைய குற்றமல்ல. சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு ஆணுடைய குற்றமாகும். ஒரு மனிதனை ஒரு அறையில் சில நாட்கள் அடைத்து வைத்துக் கொண்டு, உள்ளே மலம் ஜலம் கழிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டால் அவன் அதை மீறி மலம் ஜலம் கழிப்பது அவனுடைய குற்றம் என்று எப்படிச் சொல்ல முடியும்? அது நிச்சயமாக அடைத்து வைத்தவனுடைய குற்றமாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே சமுதாய ஆண்களால் அநியாயஞ் செய்யப்பட்டு பல வருடங்கள் வீட்டினுள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் தவறு செய்கிறார்களென்றால் அதற்கு நாளை அல்லாஹ்(ஜல்)வுடைய சந்நிதானத்தில் ஆண்கள்தான் பதில் சொல்லியாக வேண்டும். அது மாத்திரமல்ல. அநியாயஞ் செய்யப்பட்ட பெண்களின் பதுஆவிற்கும் ஆண்கள் இவ்வுலகிலேயே ஆளாகித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அநியாயம் செய்யப்பட்டவர்களுடைய பதுஆவிற்கும் அல்லாஹ்வுக்கும்(ஜல்) இடையில் திரை இல்லை என்பது நபி(ஸல்) அவர்களின் அருள்வாக்காகும். ஆண்களால் அனியாயஞ் செய்யப்பட்ட பெண்களின் பெருமூச்சுனுடைய சக்தி இன்று அமெரிக்கா ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல மெகா டன் சக்தியுள்ள அணுகுண்டுகளுக்குத் தானும்  இருக்க முடியாது. அவர்களுடைய பெருமூச்சுகளினால் ஏற்படும் அழிவுகளை இந்த அணுகுண்டுகள் தானும் விளைவித்துவிட முடியாது. இந்தக் கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களின் அவலநிலைகளை நோட்டமிடுபவர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள். சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

இன்று பெண்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள ஒழுக்கக் கேடுகளை நோக்கும்போது, அன்று நபி(ஸல்) அவர்களுடைய கேடுகளை நோக்கும்போது, அன்று நபி(ஸல்) அவர்களுடைய காலத்துக்கு முன் வாழ்ந்த அந்த அய்யா முல்ஜாகிலியா காலத்தின் மக்கள் தங்கள் பெண் மக்களை உயிரோடு புதைத்த கொடுஞ்செயலை நாமும் நெருங்கிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும் இக்கைக் கூலி பழக்கம் இன்னும் சில காலம் தொடர்ந்து நீடிக்குமானால், கருச்சிதைவை ஆதரிக்கும் இந்திய நாட்டிலிருக்கும் நாம், நமக்குப் பிறக்கும் பொன் மக்களை பிறந்த மாத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட துணிந்து விடுவோம் என்பதில் ஐயமில்லை.

ஆகவே முஸ்லிம் சமூக உலமாக்களே, பேச்சாளர்களே, செல்வந்தர்களே, சமூக சேவகர்களே, வாலிபர்களே, வயோதிகர்களே, தாய்மார்களே இதற்கு மேல் காலம் தாழ்த்துவதற்கில்லை. உடனடியாக இது விஷயத்தில் நாம் ஒரு ஐக்கியமான முடிவுக்கு வரவேண்டியது அவசியத்திலும் அவசியமாகும். இந்த அடிப்படையில் திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த உடன்குடி, காலங்குடியிருப்பு, புதுமனை ஆகிய மூன்று ஊர்களையுஞ் சேர்ந்த பதினாறு தெருக்களிலும் தனித்தனியே ஊர்க்கூட்டங்கள் போடப்பட்டு கைக்கூலியின் கேடுகளை விளக்கி, கைக்கூலி வாங்கலோ கொடுக்கவோ கூடாது என்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பின், அந்தத் தெரு முத்தவல்லியையும், இன்னொரு பிரமுகரையும் அங்கத்தினர்களாகக் கொண்ட “முஸ்லிம் சமூக சீர்திருத்த சபை” என்ற ஒரு சபை மேற்படி மூன்று ஊர்களையுஞ் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. 13.4.68லிருந்து மேற்படி அன்று ஊர்களிலும் கைக்கூலி கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்ற ஊர் கட்டுப்பாடு, இச்சபையின் வாயிலாக  வெற்றிகரமாக அமுல் செய்யப் பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தை உறுதியாகவும், சிறந்த முறையிலும் அமுல் செய்வதற்குச் சுற்றியுள்ள ஊர்களிலும் இதேபோல் சபைகள் அமைக்கப்பட்டு ஊர் கட்டுப்பாடு கொண்டு வருவதோடு, எல்லாச் சபைகளினதும்  தலைவர்களையும், காரியதரிசிகளையும் அங்கத்தினர்களாகக் கொண்ட மேல்சபை, அதாவது “முஸ்லிம் சமூக சீர்திருத்த சபை  யூனியன்” ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தோடு ஒவ்வொரு ஜும்ஆவுக்கும் காலங்குடியிருப்பிலிருந்து ஒரு ஜமாஅத் ஒவ்வொரு ஊருக்குப் போய் ஜும்ஆவுக்கு முன் அங்குள்ள முக்கியஸ்தர்களைக் கண்டு விஷயத்தை விளக்குவதோடு. ஜும்ஆவிலும், இது விஷயமாகப் பயான் செய்து, யூனியனில் சேர்ந்து எங்களோடு ஒத்துழைக்குமாறு அழைப்புக் கொடுத்து வருகிறோம். இதுவரை குலசேகரன்பட்டினம், புத்தந்தருவை, சீருடையார்புரம், காயாமொழி, சாத்தான்குளம், குமாரபுரம், செல்லமருதூர், திசையன்வினை, பெட்டைக்குளம், கருமாவிளை ஆகிய ஊர்களுக்கு ஜமாஅத்துக்கள் சென்று வந்திருக்கின்றன. மேற்படி ஊர்களிலெல்லாம் இத்திட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு, தங்கள் ஊர்களிலும் அதற்குரிய முயற்சிகளைச் செய்வதாகக் கூறியிருக்கிறார்கள்.

காயல்பட்டிணத்திலும் இத்திட்டத்தை ஆதரித்தும் இதுவரை சுமார் பத்து நோட்டீஸ்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பொது கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். ஒரு பொது கூட்டத்திற்கு எங்களூர் ஜமாஅத்திற்கும் அழைப்புக் கொடுத்திருந்தார்கள். அங்கு கைக்கூலி ஒழிப்பும் பிரச்சாரக்குழு ஒன்றை அமைத்து மும்முரமாக வேலை செய்து வருகிறார்கள். எல்லாம்வல்ல இறைவன் அவர்களின் முயற்சியை கபூல் செய்து காயல்பட்டினத்திலும் கைக்கூலி தடைச் சட்டம் அமுலுக்கு வர அருள் புரிவானாக. மேற்படி ஊர்களிலும் இன்னும் ஜமாஅத்துக்கள் செல்லாத ஆனால் கைக்கூலி பழக்கமுள்ள இதர ஊர்களிலும் கூட காலதாமதம் செய்யாமல் உடனடியாகக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்து யூனியனில் சேர்வார்களேயானால், அது அவர்கள் சமுதாயத்தின் நலனைக் கருதி செய்த ஒரு அரிய செயலாக இருக்கும். தாலுகா வாரியாக யூனியன்கள் அமைக்கப்பட்டால் மிகவும் நல்லது. யூனியன்கள் அமைக்கப்பட்டால் கள்ளத்தனமாக பணம் கொடுப்பதைத் தடுக்க அதிக வாய்ப்புகள் உண்டாகும்.

ஆகவே இத்திட்டத்தின் அவசியத்தை விளக்கி உலமாக்களும், பேச்சாளர்களும் மக்களுக்கு மத்தியில் பிரசாரங்கள் செய்தும், எழுத்தாளர்கள் பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் எழுதியும், செல்வந்தர்கள் இது விஷயமாக இலவச பிரசுரங்கங்கள் வெளியிட்டும் எங்களோடு ஒத்துழைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் இத்திட்டத்தின் அவசியத்தை உணர என்ன என்ன முயற்சிகள், யார் யார் செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்யும்படி தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். இக்கட்டுரையையும் இன்னும் இதர எழுத்தாளர்கள் எழுதும் இது விஷயமான கட்டுரைகளையும் ஜும்ஆக்களிலும் பொதுக் கூட்டங்களிலும் வாசித்துக் காட்டுவது சாலவும் சிறந்தது.

நமது இந்திய நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினர். அதிலும் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறோம். நம்மை ஒன்றுபடுத்தும் ஒரு முயற்சி நம்மிடையே அவசியத்திலும் அவசியம். இந்த யூனியன் அமைப்புத் திட்டப்படி நாம் இணைவோமேயானால் இன்னும் எத்தனையோ அரிய காரியங்களை நம்மால் சாதித்துக்கொள்ள முடியும். ஆகவே இது விஷயமாகவும் சமுதாய அறிஞர்கள் நன்கு சிந்தனை செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் நம்முடைய இந்த முயற்சியை சமுதாயத்திற்கு நலன்தரும் முயற்சியாகவும். ஆக்கமளிக்கும் முயற்சியாகவும், கேடுகளைக் களையும் முயற்சியாகவும் ஆக்கியருள்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்.

***********************

அர்த்தமில்லாத வார்த்தைகள்! – அபூ மு.நஜ்ம், ஏர்வாடி(நெல்லை)

நாமும் பேசுகிறோம், எழுதுகிறோம், சுன்னத்வல் ஜமாஅத்தும், JAQHக்கும், TNTJயும் இதுபோன்ற மனித கற்பனையில் உருவான மற்ற எல்லா இஸ்லாமிய பெயர் தாங்கி இயக்கங்களும், பேசுகின்றன எழுதுகின்றன. சிந்திக்கவேண்டிய விசையம் என்ன என்று கேட்கிறீர்களா? அங்குதான் உள்ளது நமது சிந்தனையின் மறுப்பக்கம்-மறுப்பக்கம் என்றால் நாங்கள்தான் மார்க்க அறிஞர்கள்? என்று சொல்லக்கூடியவர் களின் அதாவது புரோகித மவ்லவிகளான முல்லாக்களின் வார்த்தைகள் ஒருபக்கம் என்றால்-மறுபக்கம் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மையான அர்த்தமுள்ள வார்த்தைகள். அப்படி என்றால் சிந்தனையின் மறுப்பக்கத்தை நம்முடைய அறிவுக் கண்கொண்டு, மார்க்கம் மட்டுமே நேர்வழிகாட்டும், சிறந்த வழி; அந்த சிறந்த வழி அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்த வழி மட்டுமே; மற்ற எல்லா வழிகாட்டிகளையும் புறக்கணிக்கும் வழியே நமக்கு இம்மையிலும், மறுமையிலும் வெற்றி தரும் சிறந்த வழியாக இருக்கும் என்பதை முஸ்லிம்களாகிய நாம் உணர வேண்டும். ஆக மனித சிந்தனையில் இருபக்கங்களும் குர்ஆன், ஹதீஃத், மட்டுமே மார்க்கம் என்று இருக்க வேண்டும்; வார்த்தைகளில் மிக மிக சிறந்தது அல்லாஹ்வுடைய வார்த்தை மட்டுமே நடைமுறையில் மிக மிக சிறந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சத்திய பாதையும் அர்த்தமுள்ள வார்த்தைகளும் தான்.

அர்த்தமில்லாத வார்த்தைகள்! நாங்கள்தான் மார்க்க அறிஞர்கள்? மவ்லானா, “மவ்லவிகள்” என்று சொல்லக்கூடியவர்களின் வார்த்தைகளே! ஆனால் உண்மையுள்ள மவ்லாவாகிய அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்லும் வார்த்தைகளை பார்ப்போம்; உண்மைகளை, உணர்வோம், “உம்மத்தன வாஹிதா” என்று சொல்லக்கூடிய ஒன்றுபட்ட சமுதாயத்தைய உருவாக்க இன்ஷா அல்லாஹ் பாடுபடுவோம்.

அல்லாஹ்வின் வார்த்தைகள்: இது அல்லாஹ்வின் வழிகாட்டி நூல் ஆகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு (அல்லாஹ்வின் வார்த்தைகள்) நேர்வழிகாட்டியாகும்… (அல்குர்ஆன் 2:2)

நேர்வழி எங்கே உள்ளது? அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய நெறி நூலாகிய திருகுர்ஆனில் உள்ளது; அப்படி என்றால் புரோகித மவ்லவிகள் சொல்லும் குர்ஆன் வசனத்தின் – உண்மை வார்த்தைகள்தான் என்ன? அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்லும் வார்த்தையை பார்ப்போம்.

இன்னும் நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் (நெறி நூலாகிய) கயிற்றை இறுகப்பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்து விடாதீர்கள்; உங்களின் மீது அல்லாஹ் வழங்கிய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் (ஒருவருக்கொருவர்) பகைவர்களாய் இருந்தபொழுது, உங்கள் இருதயங்களிடையே (இஸ்லாத்தைக் கொண்டும்) அன்பும் பிணைப்பை அவள் உண்டாக்கினான்; அவனுடைய அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். (அல்குர்ஆன் 2:103)

என்று தொடரும் அல்லாஹ்வின் அர்த்தமுள்ள வர்த்தைகளைப் படியுங்கள்; சிந்தியுங்கள். இந்த சத்திய நெறி நூலாகிய அல்குர்ஆனின் 3:103, வசனத்தை நாமும் எழுதுகிறோம்; பிரச்சார மேடைகளில் முழங்குகிறோம். இதுபோல் மனித கற்பனையில் உருவான சுன்னத் வல்ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, JAQH, TNTJ மற்றும் இதுபோன்ற இஸ்லாமிய பெயர்தாங்கி இயக்கங்களின், தலைவர்களும், மவ்லானா(?) மவ்லவிகள்(?) என்று சொல்லக்கூடியவர்களும், எழுதுகிறார்கள்; முழங்குகிறார்கள். அப்படி என்றால் அல்லாஹ் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் தத்துவம்தான் என்ன? சிந்திக்க வேண்டிய விசையம். ஆனால் சிந்திக்க கூடிய அறிவுள்ள மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், அல்லாஹு ரப்புல் ஆலமீனின் இந்த சத்திய வார்த்தையின் தத்துவம் புரியவே செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றாலும், இயக்கவாதிகளான – மவ்லவி புரோகிதரர்கள் புரிந்தும் புரியாததைப் போல் நடிப்பார்கள். இவர்கள் மக்கள் மத்தியில் நடித்தால்தான் இயக்கம் நடத்த முடியும். பணம் பண்ணவும் முடியும்; சிந்திப்பவர்கள் சிந்திக்க வேண்டும் சிந்திப்பார்களா?

இந்த “உம்மத்தன் வாஹிதா”, என்று சொல்லக்கூடிய ஒரே சமுதாயமான இஸ்லாத்தில் மவ்லவி அல்லாத பல சிந்தனையாளர்கள் உண்டு என்றாலும், அவர்கள் தங்களுடைய சிந்தனையை இயக்கம் என்ற ஒரு வட்டத்திற்குள்ளே இருந்து சிந்திப்பதால் அவர்களின் சிந்தனைகளும் சுருங்கிவிடுகிறது. இஸ்லாம் என்பது மட்டுமே மாபெரும் உலகளாவிய இயக்கம் என்பதை ஒப்புக் கொள்பவர்களும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன சத்திய வார்த்தையான, குழப்பமான அந்த சூழ்நிலையில் – “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை” அதாவது (ஜமாஅத்தும் முஸ்லிமீன்) என்ற கூட்டமைப்பையும் அதன் தலைவரையும் பற்றி பிடித்துக்கொள்- (ஸஹீஹுல் புகாரி:பாகம்.7 ஹதீஃத் எண்:7084)

என்ற வார்த்தையை சிந்தனையாளர்கள், சிந்திக்காததின் விளைவை, குழப்பமான ரொம்ப, ரொம்ப குழப்பமான நிலையை நாம் கண்டு வருகிறோம். காரணம் அவர்கள் தங்கள் தங்கள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சத்திய வார்த்தைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. மேல் சொல்லப்பட சத்திய வார்த்தையைப் (ஹதீஃத் எண்: 7084) புரிந்து, உலகளாவிய மாபெரும் இயக்கம் இஸ்லாம் மட்டுமே என்று சொல்லக்கூடியவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

 

 

இதுபோல் அல்லாஹ் சொல்லக்கூடிய சத்திய வார்த்தையான… இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்கு நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன்; மேலும் என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது நிரப்பமாக்கிவிட்டேன்; இன்னும் உங்களுக்கு இஸ்லாத்தை(யே நன்) மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்… (அல்குர்ஆன் 5:3)

அல்லாஹ்வுடைய இந்த வார்த்தை இஸ்லாம் மட்டுமே உலகளாவிய பேரியக்கம் என்று சொல்லி கொண்டிருக்கும் நமக்குப் பொருத்தமா? அல்லது தங்கள் தங்கள், மன இச்சைப்படி உருவாக்கிக் கொண்ட இயக்கங்களான சுன்னத்வல்ஜமாஅத் JAQH, TNTJ மனித நீதி பாசறை, இதுபோன்ற மனித கற்பனை இயக்கங்களுக்கு பொருந்துமா? நல்லறிவுடையோர் தவிர இதுபற்றி சிந்திப்பதில்லை என்றே நாம் முடிவுக்கு வரவேண்டியது உள்ளது. அப்படி என்றால் இயக்கவாதிகளான புரோகித மவ்லவிகள் சொல்லும் வார்த்தைகளும், எழுதும் எழுத்துக்களும் அர்த்தமில்லா வார்த்தைகளே! அர்த்தமுள்ள வார்த்தைகள் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மட்டுமே சொந்தமானது என்பது மட்டும் திண்ணம்.

இன்னும் குருடர்களை அவர்களுடைய வழிகேட்டை விட்டு (விலக்கி) நீர் நேர்வழியில் செலுத்த முடியாது; நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்கிறவர்களைத் தவிர (வேறு எவரையும்) நீர் செவியுறச் செய்யமுடியாது. எனவே (நம்பிக்கை கொள்ளும்) அத்தகையோர் தாம் முஸ்லிம்கள். (அல்குர்ஆன்:30:53)

ஆனால் விழி இருந்தும் குருடர்களாக இருக்கும் இன்றைய முஸ்லம் இயக்கவாதிகளான மவ்லவி புரோகிதர்களும், தலைவர்களும் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் அப்பாவி முஸ்லிம்களும் தங்கள் தங்கள் இயக்கங்களை வைத்தே பெருமையடிப்பதை பார்க்கிறோம்.

இன்னும் குருடர்களை அவர்களுடைய வழிகேட்டை விட்டு விளக்கி நீர் நேர்வழியில் செலுத்த முடியாது என்று அல்லாஹ் அவன் தன் சத்திய வார்த்தையால் திருகுர்ஆனில் கொள்வது இறை நிராகரிப்பாளர்களைப் பார்த்து, இணையாளர்களைப் பார்த்து சொன்னாலும், முஸ்லிம்களாகிய நமக்கும் பொருந்தத்தானே செய்யும் காரணம் முஸ்லிம் என்று சொல்லக் கூடிய நம்மவர்களும் வழிகேட்டு கற்பனை இயக்கவாங்களையும், அதனுடைய தலைவர்களையும், புரோகித மவ்லவிகளையும் நம்பி வழிகெட்டுதானே போய்க்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் அந்-நஜாத் தொடர்ந்து அந்-நஜாத்தையும் பின்பற்றாதீர்கள். அந்-நஜாத்தை பின்பற்றுவது வழிகேடு. அல்லாஹ்வுடைய சத்திய வார்த்தையான அல்குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சத்திய உபதேசத்தையும் பின்பற்றுங்கள் என்று தொடர்ந்து எழுதுகிறது. அதன்படி ஈடேற்றம் கொள்ளவும் அதுவும் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் ஈடேற்றம் பெறுங்கள். பெறுங்கள் என்று எழுதி கொண்டும், உற்சாக வார்த்தைகளை சொல்லிக் கொண்டும் இருக்கிறது.

அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கங்களை, நம்பிக்கை கொள்கிறவர்களைத் தவிர வேறு எவரையும் நீர் செவியுறச் செய்ய முடியாது. எனவே நம்பிக்கை கொள்ளும் அத்தகையோர் தாம் முஸ்லிம்கள் அல்லாஹ்வுடைய சத்திய வார்த்தைகளைச் சொல்லி அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கத்தில் மட்டும் நிலைத்திருங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிச் சென்ற “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ மட்டும் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள் என்று நாம் தொடர்ந்து எழுதுகிறோம் பேசுகிறோம். அப்படி என்றால் சத்திய வார்த்தைகள் நாம் சொல்வதா? அல்லது இயக்கத் தலைவர்களும், மவ்லவி புரோகிதர்களும் சொல்லிக் கொண்டும், எழுதி கொண்டும், நாங்கள்தான் உண்மையான முஸ்லிம்கள் என்று மார்தட்டிக் கொண்டும் தங்கள், தங்கள் இயக்கங்களான சுன்னத் வல்ஜமாஅத், தப்லீஃ ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி JAQH, TNTJ மனித நீதி பாசறை, இது போன்ற கற்பனை அமைப்புக்கான கண்டவர்கள் அல்லாஹ்வுடைய வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவர்களா? நிச்சயமாக இல்லவே இல்லை.

அல்லாஹ்வுடைய சத்திய வார்த்தைகளை அப்படியே பின்பற்றுபவர்கள்தான் முஸ்லிம்கள் என்று நெத்தியடி அடிக்கிறான்; அல்லாஹ்வுடைய பயம் இவர்களுக்கு இருக்குமானால், அப்படியே செவியேற்பார்கள் கட்டுப்படுவார்கள். முஸ்லிமாக இருப்பார்கள் – தங்கள் தங்கள் வாய்ஜால வார்த்தைகளால்-உம்மத்தன் வாஹிதா – என்று சொல்லக்கூடிய ஒரே சமுதாயத்தை பிளவுபடுத்தவும் மாட்டார்கள். அடுத்த முஸ்லிம்களைப் பார்த்து கஃபீர் என்று சொல்லவும் மாட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இறை நிராகரிப்பாளர்களை எல்லாம் சத்திய இஸ்லாத்தில் பக்கம் அழைத்தார்கள் சத்திய ஸஹபாக்கள், ஆனால் இன்றோ, இந்த பிரிவினைவாதிகளை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் முஸ்லிம்களை சர்வசாதாரணமாக காஃபிர்கள் என்று மதத்தீர்ப்பு கொடுப்பதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தையை சொல்ல இவர்களுக்கு தகுதி உண்டா? என்றால் இல்லவே இல்லை. இதற்கெல்லாம் காரணம் இந்த மவ்லவி புரோகிதர்களே. இதுபற்றி அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையைப் பார்ப்போம்.

யார் “லாத்” மற்றும் “உஸ்ஸா” ஆகியவற்றின் பெயரால் சத்தியம் செய்தாரோ, அவர் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று கூறட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆனால் இவ்வாறு) சத்தியம் செய்தவரை இறை மறுப்பின் பக்கம் நபியவர்கள் சேர்க்கவில்லை. (நூல்:புகாரி) பாகம் 7, ஹதீஃத் எண்: 6651)

சகோதரர்களே, சகோதரிகளே, பெரியோர்களே, தாய்மார்களே தயவுசெய்து புகாரி ஏழாவது பாகம் 6651, ஹதீஃதுக்கு கீழ் பார்ப்பதோடு, அதன் அடிக்குறிப்பில் (ஃபத்ஹுல்பாரி) விளக்க உரையையும் பார்வையிட வேண்டியது. அடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும் சத்தியவார்த்தையை பாருங்கள். படியுங்கள் சிந்தியுங்கள்:

யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தில் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகின்றார். எதன்மூலம் ஒருவர் நம்மைத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன்மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறை நம்பிக்கை யாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். எவர் ஓர் இறை நம்பிக்கையாளரை இறை மறுப்பாளர்(காஃபிர்) என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். (அறிவிப்பு: ஸாபித் பின்னஹ்ஹாக்(ரழி) அவர்கள் நூல் புகாரி ஹதீஃத் எண்: 6652)

முஸ்லிம்களாகிய நாம் மார்க்கம் சம்பந்தமாகவும் தங்கள், தங்கள் கற்பனை இயக்க சம்பந்தமாக பேசும் போதும், எழுதும் போதும், அல்லாஹ்வுக்கு பயந்து பேசவும், எழுதவும் வேண்டும். என் என்றால் அப்படி தான் மேல் கண்ட நபியின் வார்த்தைகள் நம்மை எச்சரிக்கின்றன. முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமாக எதில் முரண்பட்டாலும் அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத எந்த அமைப்பாக இருந்தாலும் அதை உருவாக்கியவர்களும் அதை பின்பற்றுபவர்களாலும் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் (காஃபிர்) நிராகரிப்பவர்களே! அப்படி என்றால் அடுத்த முஸ்லிம்களைப் பார்த்து மதத் தீர்ப்பு கொடுக்க தகுதியற்றவர்களே இந்த கற்பனை இயக்கவாதிகள்!

நாங்களே அசல் முஸ்லிம்கள் என்று மார்தட்டிச் சொல்லும். JAQH அமைப்பைச் சார்ந்த ஒரு சகோதரர் இடம் என்னங்க நீங்க குர்ஆன், ஹதீஃத் பேசுரீங்க; ஆனால் உங்கள் வாப்பா, சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் தப்லீஃக் ஜமாஅத்தில் இருக்கிறார்களே என்று கேட்டால், அவர் உடனே எங்க வாப்பா காஃபிர் தான் என்று அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் சொல்லிவிட்டார் – அவர் மீது பந்தை எறியும்போது அந்த பந்து நம்மை நோக்கித்தானே வருகிறது என்பதை உணராமல் வார்த்தைகளை விடுகிறார்கள். ஆனால் இதில் என்ன வேடிக்கை தெரியுமா? எப்படி சுன்னத் வல்ஜமாஅத், தப்லீஃக் ஜமாஅத் மனித கற்பனையில் உருவான அமைப்போ, அதேபோல் தவ்ஹீத் புரோகித மவ்லவிகளின் கற்பனையில் உருவான JAQH அமைப்பை சார்ந்தவர்தான் தன் தந்தையைப் பார்த்து காஃபிர் என்கிறார். காஃபிர் என்ற வார்த்தையை சொல்வதற்கு இந்த கற்பனை இயக்கவாதிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது? மேல்கண்டபடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிதந்ததே கூட்டமைப்பு என்று ஒப்புக் கொள்கிறவர்களே முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்தவர்கள். “உம்மத்தன் வாஹிதாவை” ஒரே சமுதாயத்தை நிலை நிறுத்தக் கூடியவர்கள்; மற்றவர்கள் இஸ்லாத்தை பலவாறு பிரிந்தவர்கள்; அவர்களின் வார்த்தைகள் அர்த்தமில்லா வார்த்தைகள், நம்முடைய வார்த்தைகள் அர்த்தமுள்ள வார்த்தைகள். அல்லாஹ் அருள்செய்வானாக. வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

*************

புரோகித மாயை! – இப்னுஹத்தாது

தொடர் : 5

இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் தெள்ளத் தெளிவானது. எளிதானது, படிப்பறிவற்ற பரமரனும் பிறர் படித்துக் காட்டுவதை காதால் கேட்டு விளங்கிச் செயல்பட முடியும் என்பதை அந்த அல்குர்ஆனே பல இடங்களில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு நிலை மீண்டும் இப்புவியில் ஏற்பட்டுவிட்டால், இந்தப் புரோகித மவ்லவிகள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என பிடரியில் பின்னங்கால் அடிபட ஓட்டமெடுக்க நேரிடும். எனவே எப்பாடுபட்டாவது முஸ்லிம்களை தங்கள் தங்கள் பிடியில் சிக்க வைத்து, தங்களின் இவ்வுலக வாழ்க்கையை ஜாம்ஜாம் என நடத்த வேண்டும் என்ற தீராத பேராசையில் புரோகித வர்க்கத்தினரிலுள்ள ஒவ்வொரு பிரிவாரும் கர்மமே கண்ணா இருக்கிறார்கள்.

எப்படியெல்லாம் மக்களை திசை திருப்பி தங்கள் பிடியில் சிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் விதவிதமான கற்பனைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட கற்பனைகளை கட்டுக்கதைகளில் யார் யாருக்கு யார் யாரின் கற்பனைக் கட்டுக் கதைகள் பிடிக்கிறதோ அவர்கள் பின்னால் செல்கிறார்கள். அந்த வகையில் ஒரு கூட்டம் குணம் அஹ்மது மிர்சாவை இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பின்னர் வந்த டம்மி நபியாகவும், இன்னொரு கூட்டம் ரஷத் கலீஃபாவை இறைத்தூதராகவும் ஏற்று வழிகெட்டுச் செல்கிறார்கள் என்று தொடர் 4ல் பார்த்தோம்.

இந்தத் தொடரில் காதியானிகள் அல்குர்ஆனின் எந்தெந்த முஹ்க்கமாத் வசனங்களில் இரண்டாவது பொருளைக் கொடுத்து வழிகெட்டுச் செல்கிறார்கள் என்று பார்ப்போம். அல்குர்ஆனை திறந்தவுடன் இறைவனைப் புகழ்ந்து, அவனை மேன்மைப்படுத்தி, அவனை மட்டுமே வணங்கி அவனிடம் மட்டுமே உதவி தேடுவதாக உறுதி அளித்து, அவனிடம் நேர்வழி காட்டி அருளும்படி வேண்டுகிறோம். நேர்வழியில் நடக்கவும். அது அல்லாத வழிகளிலிருந்து பாதுகாத்து அருளும்படியும் பிரார்த்திக்கிறோம். இது அல்குர்ஆனின் முதல் அத்தியாயம் தோற்றுவாய் ஆகும். அடுத்துள்ள இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே இது (நெறி) நூல். இதில் சந்தேகமே இல்லை. இறைவனை அஞ்சியும் ஆதரவு வைத்தும் தக்வாவுடன் செயல்படுகிறவர்களுக்கு நேர் வழியைக் காட்டும். அந்த தக்வாவுடையவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்கிக் காட்டும்போது, முதன்முதலாக அறிவுக்கு எட்டாத மறைவான விஷயங்களை விசுவாசம் கொள்வார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். இறைவன் அளித்தவற்றிலிருந்து செலவும் செய்வார்கள், என்று கூறிவிட்டு, அடுத்து அவர்கள் உமக்கு அருளப்பெற்ற நெறி நூலையும், உமக்கு முன்னர் அருளப் பெற்ற நெறி நூல்களையும் நம்புவார்கள். “மறுமையையும் உறுதியாக நம்புவார்கள், என்று தெள்ளத் தெளிவாகக் கூறி இருக்கிறார்கள். (பார்க்க அல்குர்ஆன் 22-4)

நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னரும் ஒரு நபி வந்து அவரையும் நம்பிக்கை கொள்வது நம்மீது கடமையாக இருந்தால், அல்லாஹ் இந்த முக்கியமான இடத்தில் குறிப்பாக உமக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கு அருளப்பட்ட வஹீயை நம்பி ஏற்பார்கள் என்று கூறி இருப்பது போல், உமக்குப் பின்னர் வரும் நபிக்கு அருளப்படும் வஹீயையும் நம்பி ஏற்பார்கள் என்று அல்லாஹ் நிச்சயமாகக் குறிப்பிட்டுக் கூறி இருப்பான்.

ஏன் என்றால் எப்படி நம்பிக்கைக் கொண்டால் வெற்றி-ஈடேற்றம் பெற முடியும் என்று அல்லாஹ் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ள இந்த இடத்தில், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபியோ, ரசூலோ வருவதாக இருந்தால் நிச்சயமாக அதையும் குறிப்பிட்டுக் கூறி இருப்பான். அப்படி இங்கு எவ்வித அறிவிப்பும் இல்லை என்று தெளிவாக விளக்கி, இதற்கு காதியானிகளின் பதில் என்ன என்று கேட்டிருந்தோம்.

எமது இந்த விவேகமான கேள்விக்கு அவர்களின் அறிவீனமான பதில் என்ன தெரியுமா? அங்கு ஆகிரத்-மறுமையை உறுதியாக நம்புவார்கள் என்றிருப்பதை திரித்து வளைத்து, இதுதான் நபி(ஸல்) அவர்களுக்கு பின் வரும் நபி பற்றிய அறிவிப்பு என்று பிதற்றி இருந்தார்கள். முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவது என்று சொல்வார்களே அது இதுதான் போலும்.

அடுத்து, அல்குர்ஆன் அத்தியாயம் 61 இறைவாக்கு 6ல் மர்யமுடைய மகன் ஈஸா(அலை) இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன்; நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மைப் படுத்துகிறேன்; எனக்குப் பின்னர் “அஹ்மது” என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் நன்மாராயங் கூறுகின்றேன் என்று கூறியதை(நீர்) ஞாபகமூட்டும்; தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் (தூதர்) வந்த சமயத்தில் இது தெளிவான சூன்யம் என்று அவர்கள் கூறினர்.(61:6) என்று கூறப்பட்டுள்ளது.

இதைப்படித்து உணரும் நடுத்தர அறிவு படைத்த ஒருவரும், இது இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றிய ஒரு முன் அறிவிப்பு என்பதை ஒப்புக் கொள்வார். நபி(ஸல்) அவர்களுக்கு முஹம்மது என்று பெயர் இருப்பதுபோல் “அஹ்மது” என்ற ஒரு பெயரும் உண்டும். அந்த “அஹ்மது” என்ற பெயராலேயே இறுதி நபி பற்றிய முன் அறிவிப்பை ஈஸா(அலை) அறிவிக்கிறார்கள்.

ஆனால், இந்தக் காதியானிகள் மூளை குழப்பிப்போய், இந்த அறிவிப்பு குலாம் அஹ்மது மிர்சாவைப் பற்றியது என்று பிதற்றுகின்றனர். இந்த இறைவாக்கை நடுநிலையோடு படித்துப் பாருங்கள். ஈஸா(அலை) தனக்கு முன்னர் மூஸா(அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தவ்றாத்தை உண்மைப்படுத்திவிட்டு, பின்னர் தனக்கும் பின்வரும் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையே அவர்களின் இன்னொரு பெயரான அஹ்மதைக் கொண்டு முன்னறிவிப்புச் செய்கிறார். “தவ்றாத்” மூஸா(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இன்ஜீல் அறிவிப்புச் செய்த ஈஸா(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பதைக் காதியானிகளும் மறுக்க முடியாது. அப்படியானால் அடுத்து அல்குர்ஆனை பெற்றது யார், இறுதி நபி முஹம்மது என்ற அஹ்மது(ஸல்) அவர்களா? அல்லது குலாம் அஹ்மது மிர்சாவா? குறைந்த பட்சம குலாம் அஹ்மது மிர்சாவா? குறைந்த பட்சம் குலாம் அஹ்மது மிர்சாவுக்கு இறை அறிவிப்பு மூலம் ஒரு நெறிநூல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையாவது இவர்களால் காட்ட முடியுமா? நெறி நூல் கொடுக்கப்படாத ஒரு நபியின் தேவை என்ன? அல்குர்ஆன் பதிந்து பாதுகாக்கப்படுவதற்கு முன் எந்த நபிக்கு அருளப்பட்ட இறை அறிவிப்புகளும் பதிந்து பாதுகாக்கப்படவில். அதனால் ஒரு நபிக்குப் பின்னர் வந்த அடுத்த நபி, முன்னைய நபியின் அதே போதனையை எவ்வித மாறுதலுமின்றி போதிக்கும் நிலையில் இருந்தாலும், அதை இறைவனிடமிருந்து வஹீ மூலம் பெறும் கட்டாயத்திலேயே இருந்தார்கள். காரணம் முன்னைய நபிக்கு கொடுக்கப்பட்ட “வஹீ” – இறை அறிவிப்புகள் பதிந்து பாதுகாத்து வைக்கப்படவில்லை. அதனால் அந்த நபிக்குப்பின் புதிய நபி வரும் கட்டாயம் இருந்தது. அதற்கு மாறாக இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் முஹம்மது என்றும் அஹ்மது என்றும்(ஸல்) பெயரிடப்பட்ட இறுதி நபிக்கு அருளப்பட்டு, அது உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்ட நிலையில், உலகம் அழியும் வரை அதுதான் வழிகாட்டி நூல் என்றும், அதனால் அந்த குர்ஆன் உலகம் அழியும் வரை அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டு வரும் என்றும் அந்த வல்லவனால் உறுதி அளிக்கப்பட்ட நிலையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஒரு நபியோ, ரசூலோ வரவேண்டிய தேவை – அவசியம் என்ன என்பதையாவது இந்த காதியானிகள் சிந்திக்க வேண்டாமா?

முஸ்லிம்கள் இந்தப் புரோகிதர்கள் பின்னால் சென்று அல்லாஹ் இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனின் 3:103ல் சொல்லி இருப்பது போல், நரக விளிம்பில் நின்றாலும், அவர்களில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களை இந்த பாதுகாக்கப்பட்ட இறுதி வழிகாட்டல் நூலின் துணை கொண்டு நேர்வழிக்குக் கொண்டு வந்து விடமுடியும். அதற்காக ஒரு நபியோ, ரசூலோ வரவேண்டிய அவசியமே இல்லை என்ற சாதாரண உண்மை கூட இந்த காதியானிகளுக்கு விளங்கவில்லையா? மிர்ஸா குலாம் அஹ்மதுக்கு புதியதொரு நெறி நூலே, அவருக்கென்று ஒரு புதிய உம்மத்தோ இல்லை என்பதை ஒப்புக் கொள்ளும் காதியானிகள் குலாம் அஹமதை ஒரு டம்மி நபியாக ஒப்புக் கொள்ளும் மர்மம் என்ன? அந்த டம்மி நபியால் ஆக வேண்டியது என்ன?

இந்த முடிச்சை காதியானிகளால் அவிழ்க்க முடியுமா? இது அவர்களின் வழிகெட்ட நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டவில்லையா?

அவர்கள் சிந்தனையற்றக் குருடர்களே என்பதற்கு இன்னும் ஆதாரம் தருகிறோம்; முறையாகச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் டம்மி நபியாக ஏற்றிருப்பது “குலாம் அஹ்மது” என்ற பெயரை உடையவரையே அல்லாமல் “அஹ்மது” என்ற பெயரை உடையவரை அல்ல, “குலாம் அஹ்மது” என்பற்கும் “அஹ்மது” என்பதற்கும் உள்ள வேறுபாடு தெரியாத அறிவற்றவர்கள்தான் காதியானிகள்.

“குலாம் அஹ்மது” என்றால் அஹ்மதின் வேலையாள் அல்லது அடிமை என்ற பொருளையே தரும். உதாரணமாக நம் தமிழ்நாட்டில் சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். குலாம் ரசூல் என்று பெயரிடப்பட்டிருந்தார். அவரது பெற்றோர் அப்படித்தான் பெயரிட்டிருந்தனர். அதாவது இறைவனது தூதரின் வேலையாள் அல்லது அடிமை என்ற கருத்தில்தான் அப்பெயரை அவரது பெற்றோர் சூட்டி இருந்தனர். மற்றபடி அவர் இறைவனின் தூதர்-ரசூல் என்ற தவறான எண்ணத்தில் தங்கள் மகனுக்கு அவரின் பெற்றோர் ஒருபோதும் சூட்டி இருக்க முடியாது. ஏற்கனவே இறுதித் தூதராக அனுப்பப்பட்ட ரசூலின் அடிமை அல்லது வேலையாள் என்ற எண்ணத்தில்தான் சூட்டி இருப்பார்கள். இந்த நிலையில் இறைவனால் அனுப்பப்பட்ட “ரசூல்” நான்தான் என்று அந்த குலாம் ரசூல் வாதிட்டால் அது எந்த அளவு மடத்தனமான வாதமோ, அது போன்றதொரு மடத்தனமான வாதத்தையே குலாம் அஹ்மது மிர்சாவும் அவரது பக்த கோடிகளும் செய்து வருகிறார்கள்.

குலாம் அஹ்மது மிர்சாவின் பெற்றோர்களோ, இறைவனின் இறுதித் தூதராக வந்த முஹம்மது என்றும் அஹ்மது என்றும் பெயரிடப்பட்டவரான அஹ்மதின் வேளையாள் – அடிமை என்ற எண்ணத்தில்தான் பெயரிட்டிருப்பார்கள். ஒருவரின் வேலையாள் என்றோ அடிமை என்றோ பெயரிடும்போது நிச்சயமாக யாரின் அடிமை அல்லது வேலையாள் பெயரிடப்பட்டிருக்கிறதோ அவர் முன்னால் வாழ்ந்தவராகத்தான் இருக்க முடியும். எனவே அல்குர்ஆன் 61:6 கூறும் “அஹ்மது” எனும் பெயர் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களைக் குறிக்குமே அல்லாது, காதியானிகள் டம்மி நபியாக ஏற்றிருக்கும் குலாம் அஹ்மதை ஒருபோதும் குறிக்காது. குலாம் ரசூல் என பெயரை உடைய ஒருவன் தான்தான் ரசூல் என்று அடம்பிடித்தால், அவன் எவ்வளவு பெரிய மூடனாக இருப்பானோ, அதுபோன்றதொரு மூடத்தனத்தையே குலாம் அஹ்மது மிர்சாவும், அவரது பக்தகோடிகளும் செய்து வருகிறார்கள்.

அல்குர்ஆன் 61:6 இறைவாக்கில் ஈஸா(அலை), தனக்குப் பின்னால், இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனை நெறி நூலாகப் பெற்றுக் கொண்டு அஹ்மது எனும் பெயருடைய முஹம்மது(ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருவார்கள் என்று முன் அறிவிப்புச் செய்தார்களே அல்லாமல் அந்த இறுதித் தூதர் அஹ்மது(ஸல்) அவர்களின் வேலையாள் அல்லது அடிமையான குலாம் அஹ்மது மிர்சாவைக் குறித்து முன் அறிவிப்புச் செய்யவில்லை. காதியானிகள் இந்த இறைவாக்கைத் திரித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மேலும் இந்த இறைவாக்கு யாருக்கு இறங்கியது? இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குத்தானே? இதை காதியானிகள் மறுக்க முடியமா? அப்படியானால் இந்த 61:6 இறைவாக்குக்கு 16:44,64 இறைவாக்குகள் செல்வது போல் இறுதி நபி(ஸல்) அவர்கள்தானே விளக்கம் கொடுக்க முடியும். இந்த இறைவாக்கு தனக்குப் பின்னால் வரும் “குலாம் அஹ்மதையே” முன் அறிவிப்புச் செய்வது என்று அந்த முஹம்மது(ஸல்) அவர்கள்தானே தெளிவுபடுத்தி இருக்கவேண்டும்? அதற்கு மாறாக இந்தப் பொய் நபியா விளக்கம் கூறுவது? சிந்திக்க வேண்டாமா காதியானிகள்?

இதுபோன்ற தவறான வழிகளில்தான் தெள்ளத் தெளிவான நேரடியான முஹ்கமாத் வசனங்களை தங்கள் மனம்போன போக்கில் திரித்து வளைத்து முஹம்மது(ஸல்) அவர்களின் அடிமை, வேலையாள் என அவரது பெற்றோரால் பெயரிடப்பட்ட குலாம் அஹ்மது மிர்சாவை டம்மி நபியாக நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டு வருகிறார்கள். அவை அனைத்தையும் வரிசையாக அடுத்தடுத்துப் பார்ப்போம்.

இதற்கு முன்னால் ஒரு முக்கிய நிகழ்ச்ிசயை நினைவுக்குக் கொண்டு வருவது நல்லது என நினைக்கிறோம். அந்நஜாத் ஆரம்பித்த புதிதில் குட்டையைக குழப்பி, மத்ஹபுகளிலிருந்து விடுபட்டு, குர்ஆன், ஹதீஃத் பக்கம் வரும் சகோதரர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க பல சவால்களை விட்டனர். காதியானிகள், அவர்களின் சவாலை ஏற்று குலாம் அஹ்மது மிர்சா நபியல்ல. முன்னால் சென்றுபோன அஹ்மது என்ற நபியின் வேலையாள், அடிமை எனப்பெயரிடப்பட்ட பொய்யன் எனது நிலைநாட்டத் தயார் என அறிவித்தோம். உடனே பின்வாங்கி தங்கள் தங்கள் பத்திரிகைளில் தங்கள் கருத்தை நிலைநாட்டி எழுதி விவாதிக்கலாம் என ஜகா வாங்கினார். அது மட்டுமல்லாமல் ஈஸா(அலை) அவர்கள் மரணித்துவிட்டார்களா? இல்லையா? என்பதைத்தான் முதல் வாதப் பொருளாக எடுக்க வேண்டும். அதன் பின்னரே மஸீஹ்(அலை) அவர்கள் பற்றியும், இறுதி நபி பற்றியும் அதாவது முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி இல்லை என்பது பற்றியும் விவாதிக்க வேண்டும் என்று அடம் பிடித்தனர்.

அவர்கள் கோரிக்கைபடியே “ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை! ஆயினும் மரணிப்பவர்களே” என்ற தலைப்பில் நூல் வெளியிடுவதாக அந்நஜாத்தில் அறிவித்தோம். அப்படியொரு நூல் வெளிவரவே வராது; அப்படி அந்த நூல் வெளிவந்தால், அதிலுள்ள கருத்துக்களை வரிக்குவரி மறுத்துத் தனிநூல் பிரசுரித்து இலவசமாக வெளியிடுவோம் என அவர்களது மாத இதழில் அகம்பாவமாக எழுதி இருந்தனர். அவர்கள் உண்மையிலேயே நேர்வழி நடப்பவர்களாக இருந்தால் அவர்கள் எவ்வாறு எழுதி இருப்பார்கள்?

அந்நஜாத் அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்த நூல் வெளிவரட்டும். அதில் குர்ஆன், ஹதீஃதுக்கு ஒத்த கருத்துக்கள் இருந்தால் ஏற்போம். அல்குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட கருத்துக்கள் இருந்தால் அவற்றை உரிய ஆதாரங்களுடன் தெளிவு படுத்துவோம் என்றே அடக்கமாக வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அதற்கு மாறான அவர்களின் ஆணவ, திமிர்பிடித்த அறிவிப்பே அவர்கள் பொய்யர்கள்; அந்தப் பொய்யை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தப் போதுமானதாகும்.

அவர்களது இதழ் நவம்பர் 88ல் “நஜாத் ஏட்டின் மூட நம்பிக்கைகள!” என்ற தலைப்பில் சவால்விட்டு, நஜாத்தில் அறிவிப்பு வெளியான அந்த நூல் வரவே வராது அன்று அவர்கள் ஆணவமாக, திமிராக எழுதியதற்கு மாறாக, அதே நவம்பர் 88ல் அந்த நூலை வெளியிட்டோம். அதில் “மூட நம்பிக்கையின் மொத்த குத்தகைதாரர்களே காதியானிகள்தான்” என்று குர்ஆன், ஹதீஸின் நேரடிக் கருத்தையே வெளியிட்டு அம்பலப்படுத்தி இருந்தோம். அவர்களைப் போல் சுய விளக்கங்களையோ, கற்பனைகளையோ, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃகளையோ ஆதாரமாக நாம் கொடுக்கவில்லை.

ஆனால் அந்த காதியானிகள் சவால்விட்டு வாக்களித்தது போல், இன்று 18 ஆண்டுகள் உருண்டோடியும். நமது நூலை வரிக்கு வரி பக்கத்துப் பக்கம் அலசி அவற்றில் குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட கருத்து இருக்குமானால், அதை விளக்கி, தனி நூல் அச்சடித்து இலவசமாக இதுவரை விநியோகிக்கவில்லை. அவர்கள் வாக்களித்தபடி தனிநூல் வெளியிடாவிட்டால், அவர்கள் முனாஃபிக்-நயவஞ்சகர்களாக மட்டுமே இருக்க முடியும். நபி(ஸல்) அவர்களின் தெள்ளத் தெளிவான ஆதாரபூர்வமான ஹதீஃத், முனாஃபிக்களின் அடையாளங்கள் மூன்று; அவற்றில் ஒன்று பொய் பேசுவது, இரண்டு வாக்களித்தால் மாறு செய்வது, மூன்று அமானிதத்தை மோசடி செய்வது, பொய்யவர்கள் என்ற அடிப்படையிலும் வாக்களித்து விட்டு மாறு செய்கிறார்கள் என்ற அடிப்படையிலும் காதியானிகள் நயவஞ்சகர்களே! என்று பல முறை எழுதி விட்டோம். அவர்களின் பக்தகோடிகளில் யாரும் ரோசத்துடன் அது பற்றிக் கோட்டால் உடனே அவர்களது இதழில் அவர்களால் சாடுவிட முடித்த இடங்களை மட்டும் எடுத்து தங்கள் சுயவிளக்கங்களைக் கொடுத்து தங்கள் பக்தர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களின் மூடத்தனமாக சுயவிளக்கங்களுக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எமக்கில்லை. மேலும் அவர்கள்; எமது அந்த நூலில் நாம் கிளப்பியுள்ள அத்தனை சந்தேகங்களையும், தங்களின் உருட்டல் பெறட்டல் இல்லாமல், குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மட்டும் கொண்டு, அவர்கள் தங்களின், ஈஸா(அலை) அவர்கள் 2006 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார் என்ற கொள்கையை நிலைநாட்டி அவர்கள் 1988 நவம்பரில் வாக்களித்தபடி தனி நூலாக வெளியிட்டால் மட்டுமே அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்.

ஆனால், அன்று காதியானிகள் ஆணவத்துடனும், அகம்பாவத்துடனும், திமிருடனும் அப்படி ஒரு நூல் வெளிவரவே வராது என்று 1988 ஜனவரியில் வெளியான அறிவிப்பின்படி 1988 நவம்பர் வரை 11 மாதங்கள் பொறுக்காதவர்கள். இன்று நாம் 18 ஆண்டுகளாக எதிர்பார்த்து ஏமாந்தோம். இதற்குப் பின்னரும் அவர்கள் 1988 நவம்பரில் வாக்களித்தபடி தனி நூல் வெளியிட்டு, தங்களின் வாக்குறுதியை – நாணயத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கை எமக்கில்லை என்று அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.

ஆயினும் ஈஸா(அலை) அவர்கள் பற்றி மஸீஹ்(அலை) அவர்கள் பற்றி நபி(ஸல்) அவர்கள் இறுதி நபியே; அவர்களுக்குப் பின் நபியோ, ரசூலோ இல்லலே இல்லை என்பது பற்றி அவர்கள் எந்தெந்த குர்ஆன் வசனங்களைத் திரித்து சுய விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதை மேலும் விரிவாகப் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ்.

அறிவு ஜீவிகளிடமும் ஏனிந்த தடுமாற்றம்? அபூஃபாத்திமா

இலங்கையிலிருந்து S.A. முபாரக் என்ற சகோதரர், அங்கு வெளியாகும் ‘அல்ஹஸனாத்’ என்ற இதழின் அக். நவம். 2006 இதழில் வெளியாகி இருந்த “ரமழான்-ஷவ்வால் கள நிலவரங்கள் மீளாய்வு’ என்ற தலைப்பில் Dr.ஆகில் அஹ்மத் (பிறை ஆய்வாளர் மன்றம் சிரீலங்கா) எழுதி இருந்த ஒரு ஆக்கத்தை நகல் எடுத்து அனுப்பி, அது பற்றிய விளக்கத்தையும் கேட்டு எழுதி இருந்தார். பெரியதொரு ஆய்வை ஒரு முனைவரே மேற்கொண்டுள்ளார் என்ற ஆவலுடன் அதைப் படித்துப் பார்த்தபோது, பெரியதொரு ஏமாற்றவே எஞ்சியது, பிறை விஷயத்தில் இந்த அறிவு ஜீவிகளிடமும் தடுமாற்றமும், அறியாமையையும் நிறைந்து காணப்படுகிறது. எமக்குப் பெரியதொரு ஆச்சரியத்தைத் தந்தது.

பொதுவாக உலகியல் துறைகளில் கற்றறிந்த பேரறிஞர்களிடம் ஒரு பெருங்குறைபாடு உண்டு. அவர்கள் எந்தத் துறையில் படித்துப் பட்டம் பெற்று அறிஞர்களாக இருக்கிறார்களோ அந்தத் துறையில் மட்டுமே ஆற்றலுடையவர்களாக இருக்கிறார்கள். இதர எந்தத் துஐற பற்றிய அடிப்படை அறிவும் அவர்களிடம் இருப்பதில்லை. உதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தில், அரபி மொழியில் படித்து டாக்டர்-முனைவர் பட்டம் பெற்ற ஒருவர், ஓரிடத்தில் ஒரு நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு தொலைபேசி கருவியை இணைத்திருக்கும் இரண்டு வயர்களை, அந்த இணைப்பிலிருந்து நீக்கி, அந்த தொலைபேசியை எடுத்துச் செல்வதற்கு ஒரு எலக்ட்ரீஷியனை அழைத்து வந்ததை நாம் கண்ணால் பார்த்தோம். ஒரு திருப்புளியைக் கொண்டு அந்த இரண்டு திருகாணியை தளர்த்தி அந்த இரண்டு கம்பிச் சரடை நீக்கும் அறிவு கூட அவருக்கு இல்லை.

இப்படித்தான் ஒவ்வொரு துறை அறிஞரும் வேறு துறைகள் பற்றி அறிவிலியாக இருக்கிறார். தான் சம்பந்தப்பட்ட துறையில் தான் எப்படி அறிஞரோ, அதேபோல் மற்ற துறைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்தத் துறை பற்றிய அறிவு நிறையாக இருக்கும் என்று நம்பிச் செயல்படுகின்றனர். அந்த அடிப்படையில்தான் மார்க்கத்துறையில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டால், அவர் அந்த மார்க்கத்துறையில் பேரறிஞரே! எனவே மார்க்கம் பற்றி அவர் சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொள்வதே வழி கேட்டிற்கு அடிப்படைக் காரணம்.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம், மார்க்கத்துறை அல்லாத இதர துறைகள் அனைத்தும் உலகியல் சம்பந்தப்பட்டவை. அந்தத் துறைகளில் ஈடுபடுகிறவர்களின் அடிப்படை நோக்கமே, இவ்வுலகில் பொருளீட்ட வேண்டும், உலக வாழ்க்கையை வளமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே உலகியல் துறைகளை பொருளீட்டுவதற்காக, கற்றுக் கொள்வதற்கோ அவை கொண்டு பொருளீட்டுவதற்கோ மார்க்கம் தடை செய்யவில்லை. எனவே விரும்பியவர் விரும்பிய துறையைத் திகழலாம். அது கொண்டு கைநிறைய பொருளும் ஈட்டலாம். இதர உலகியல் துறைகள் பற்றி அவர் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அந்த அறியாமைக்காக அவர் வெட்கப்பட வேண்டியதும் இல்லை.

ஆனால் மார்க்கத்துறை அப்படிப்பட்ட துறை அல்ல. விரும்பும் குறிப்பிட்ட சிலர் மட்டும் அத்துறையைக் கற்று பட்டம் பெற்று அதில் அறிஞன் ஆகலாம். அது கொண்டு, பொருளீட்டலாம். பிழைப்பாகக் கொள்ளலாம் என்பதற்கு அணுவளவும் அனுமதியே இல்லை. அதற்கு மாறாக உலகில் பொருளீட்ட அவர்கள் விரும்பும் ஏதாவதொரு உலகியல் பொருளீட்ட அவர்கள் விரும்பும் ஏதாவதொரு உலகியல் துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் படித்துப் பட்டம் பெற்று அது கொண்டு பொருளீட்டுவதோடு, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மார்க்கக் கல்வியை மறுமை வளத்திற்காகக் கற்று அதன்படி நடப்பதோடு, அதனை மற்றவர்களுக்கும் எவ்விதக் கூலியையோ, உலகப் பிரதிபலனையோ எதிர்பாராமல் கற்றுக் கொடுப்பது, அவர்கள்மீது கட்டாயக் கடமையாக இருக்கிறது. இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் 103 அத்தியாயத்தின் 3 வசனங்களையும் படித்து, விளங்கியவர்கள் ஒருபோதுமம் இதை மறுக்க முடியாது.

இறைவன் அளித்துள்ள இந்த இயற்கை நியதிக்கு மாறாக, உலகியல் பொருளீட்டும் துறையாக மாற்றிக் கொண்டதாலும், உலகியல் துறைகள் சம்பந்தப்பட்டவர்களும் அதை அங்கீகரித்து, அந்தத் துறை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள். அவர்களின் வழிகாட்டலை ஏற்றுச் செயல்படுவதே உத்தமம் என்ற தவறான நம்பிக்கையில் செயல்பட்டு வருகின்றனர். மார்க்கத்துறை பற்றிய ஞானம் தங்களுக்கு இல்லையே என்று உலகியல் துறைகள் சம்பந்தப் பட்டவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இதன் விபரீதம் இன்று அவர்களுக்குப் புரியாது. ஆயினும் நாளை மறுமையில் அதன் கடுமையான விளைவுகளை அங்கு அவர்கள் சந்திப்பது நிச்சயம்.

அல்ஹஸனாத்தில் வந்த பிறை சம்பந்தப்பட்ட ஆய்வை நாம் படித்துப் பார்த்தபோது இந்த நினைவுகளட எம்மனதில் நிழலாடின. படித்து டாக்டர் பட்டம் பெற்ற Dr.ஆகில் அஹ்மத், இறைவனது கட்டளைகளுக்கு முரணாக மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட புரோகித மவ்லவிகளின் அறியாமைக் கருத்துக்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, தமது ஆய்வை செய்துள்ளார். எனவே தலைப்பிறையை புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிப்பது, முஸ்லிம்களின் நாள் மாலை மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது. அமாவாசை, அதற்கு அடுத்த நாள் வானில் சந்திரன் இல்லை போன்ற மூன்று தவறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தனது ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

புரோகித மவ்லவிகளும், அவர்களது கூற்றை ஆராயாது அப்படியே கண்மூடி ஏற்பவர்களும் பிறையை புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு அவர்களின் அடிப்படையான ஆதாரம் பிறை சம்பந்தமாக “ருஃயத்” “அரா” “தரா” போன்ற பதங்கள் வந்திருப்பதும், நபி(ஸல்) காலத்தில் பிறை புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்கப்பட்டதும் மட்டுமே. அதே சமயம் இந்த பதங்கள் கண்ணால், அறிவால், ஆய்வால், தகவலால், கணக்கால் அறிவது – பார்ப்பது என அனைத்துப் பொருள்களையும் உள்ளடக்கிய சொல்; இதற்கு ஆதாரம் தேடி வேறு எங்கும் போகவேண்டியதில்லை. அல்குர்ஆனிலேயே இந்த பதங்கள் சுமார் 336 இடங்களில் நாம் மேலே விவரித்துள்ள பொருள்களில் வந்துள்ளதைப் பார்க்க முடியும். உதாரணமாக 37:102 இப்றாஹீம்(அலை) தமது மகனின் அடிப்பிராயத்தை-கருத்து – ஆலோசனையை கேட்பதையும் இறைவன் “ஃபன்ழூர் மாதா தரா” என்று இப்றாஹீம்(அலை)கேட்டதாகக் குறிப்பிடுகிறான்.

குறிப்பாகப் புறக்கண்ணால் பார்ப்பதை அல்லாஹ் அல்குர்ஆன் 3:13ல் ரஃயல்ஜன் என்று குறிப்பிட்டே கூறியுள்ளான். மேலும் நபி(ஸல்) பிறை விஷயமாக புறக்கண்ணால் குறிப்பிட்டுக் கூறிய ஒரு ஹதீஃத் கூட இல்லாத நிலையில், அப்படிக் கூறியிருந்தாலும் கூட அல்குர்ஆன் 22:27 தூரப் பிரதேசங்களிலிருந்து ஹஜ்ஜுக்கு மெலிந்த ஒட்டகங்களில் வருவார்கள் என்று குறிப்பிட்டுக் கூறியிருந்தும், இன்று அதற்கு மாறாக ஆகாய விமானம், கப்பல் இதர வாகனங்களில் போவது, இறைவனின் இந்த கட்டளைக்கு முரண் அல்ல; காரணம் மக்கா சென்றடைவது அசலான ஹஜ்ஜுடைய இபாதத்திற்கு உட்பட்டதாக இல்லாதிருப்பது போல், பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதும் அசலான நோன்பு நோற்பதற்கு உட்பட்டதல்ல என்பதையும் சிந்திப்பவர்கள் விளங்க முடியும். அது அசல் வணக்கமாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் அனைவரையும் பிறையை புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிட்டிருப்பார்கள் என்பதையும் பலமுறை தெளிவுபடுத்தி விட்டோம்.

அன்று 1427 ஆண்டுகளுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் பிறையை புறக்கண்ணால் பார்த்துத்தானே முடிவு எடுத்தார்கள். நாம் எப்படி அதற்கு மாறு செய்வது? என்ற அவர்களின் வாதத்திற்கும், இதேபோல் அன்று நபி(ஸல்) அவர்கள் ஐங்கால தொழுகைகளையும் சூரியனை புறக்கண்ணால் பார்த்தே முடிவு எடுத்தார்கள். அதன்படிதான் தொழுதார்கள். அப்படி நீங்கள் தொழுவதில்லையே ஏன்? கடிகாரத்தைப் பார்த்து எப்படி நீங்கள் நேரத்தை அறிந்து தொழலாம் என்று கேட்டு விட்டோம். அதற்கு இன்று வரை சரியான பதில் இல்லை.

அதேபோல் அன்று 1427 வருடங்களுக்கு முன்னர் ஒருவரின் மரணச்செய்தி காலம் தாழ்ந்தே கிடைத்து அவரின், மனைவி காலம் தாழ்ந்த நிலையில் தான் ‘இத்தா’ இருந்தார்கள். அதேபோல் இன்றும் தொலை தொடர்பு தகவலை நீங்கள் ஏற்காமல், அன்றுபோல் இன்றும் அவர் கூடச் சென்றவர்கள் நேரடியாக வந்து காலம் தாழ்ந்து தகவல் சொன்ன பின்னர்தானே நீங்கள் அவரது மனைவியை ‘இத்தா’ இருக்கச் சொல்ல வேண்டும். என்ற கேள்விக்கும் அவர்களிடமிருந்து ஏற்கத் தக்க பதில் இல்லை.

இங்கெல்லாம் தங்களின் சொந்த விளக்கம் வியாக்யானம் மூலம் அன்றைய நபி காலத்து நடைமுறைக்கு மாற்றமாகச் செயல்படுகின்றவர்கள். இன்றைய மிகமிகத் துள்ளியமான கணக்கை ஏற்க மறுப்பதின் அசலான நோக்கம் என்ன? அறியாமையா? அல்லது அவர்கள் எழுதி இருப்பது போல் “புரிந்து கொள்ளாமை அல்லது புரிந்து கொள்ளத் தயாரில்லாமை” என்றே கூறலாமா? தங்களை மெத்தப்படித்த மேதைகள் என எண்ணிக் கொள்கிறவர்கள் சோதிட சாஸ்திரம் – ASTROLOGY வான சாஸ்திரம் – ASTRONOMY, கணிப்பு – EVALUATION கணக்கு – கணக்கீடு – ARITHMETIC, MATHEMATICS இவற்றில் வித்தியாசம் தெரியாமல் கணிப்பையும், கணக்கீட்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வது அறியாமையா? அல்லது ஆணவமா? மக்களைக் குழப்புவது யார்? அதுவும் இன்றி இன்றைய அதி அற்புதமான கணினி கணக்கைப் போய் கணிப்புடன் ஒப்பிடுகிறார்களே இவர்கள் எவ்வளவு பெரிய அறியாமையில் இருக்கிறார்கள் என்பது எமக்கு மெத்த ஆச்சரியத்தைத் தருகிறது. இவர்கள் உண்மையான அறிஞர்களா? என்ற சந்தேகம் மேலிடுகிறது. இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் 1427 வருடங்களுக்கு முன்னர் கடைபிடித்த உலகியல் முறையையே இன்றும் கடைபிடிப்போம் என்று அடம்பிடித்து சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்து, ஒரு வீட்டையே இரண்டு கட்சிகளாகக் கூறுபோடும் அவலம் யாரைக் கொண்டு அரங்கேறுகிறது?

சந்திரன் பூமியைச் சுற்றிவர எடுக்கும் நாட்கள் 29.53059 என்று ஐந்து எண்கள் தசம பின்னத்தில் (DECIMAL) இவ்வளவு துள்ளியமாக – கச்சிதமாகக் கணினி மூலம் அறியப்பட்டுள்ள – பார்க்கப்பட்டுள்ள (ருஃயத்) இந்த நவீன யுகத்தில், அதாவது சந்திரன் தனது முதல் மாத சுற்றை இந்த நாள் இன்ன தேதி, இத்தனை மணி, இத்தனை நிமிடம், இத்தனை வினாடியில் முடித்துக் கொண்டு அடுத்த மாதச் சுற்றை ஆரம்பித்துவிட்டது என திட்டமாகத்  தெரிந்த நிலையில், இன்றும் பிறையைப் புறக் கண்ணால் பார்த்தே ஏற்போம் என்பவர்கள் எத்தனை பெரிய அறிவீனர்களாக இருக்க முடியும்? அன்று நபி(ஸல்) அவர்கள் பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத்தானே முடிவு செய்தார். நபி(ஸல்) அவர்களை அபூ அப்தில்லாஹ் அறிவீனர்(நவூது பில்லாஹ்) என்று கூறுகிறார் பார்த்தீர்களா? என்ற தங்கள் பக்தகோடிகளை ஏமாற்றி திசை திருப்புவார்கள். இன்றுபோல் அன்று நாள், தேதி, மணி, நிமிடம், வினாடி அத்தனையையும் துள்ளியமாக நபி(ஸல்) அவர்கள் துள்ளியமாகத் தெரிந்து வைத்துக்காண்டா பிறையைப் புறக்கண்ணால் பார்க்கும் வரை காத்திருக்கிறார்கள் என்ற எமது கேள்விக்குப் பதில் அளித்துவிட்டு அவர்கள் தங்கள் பக்தகோடிகளை – ஏமாற்றட்டும். அவர்கள் அறிவீனர்கள்தான் என்பதற்கு வானில் சந்திரன் இல்லை என்று ஓரிடத்தில் மட்டுமல்ல இரண்டு இடங்களில் குறிப்பிட்டிருப்பதே போதிய சான்றாகும். இது அல்குர்ஆன் 36:40ல் அல்லாஹ் தெளிவாகக் கூறி இருப்பதற்கு நேர் முரணான கருத்தாகும்.

இந்த அறிவீனமான கருத்தை “பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது” என்று இன்றும் படித்துக் கொடுக்கப்படும் மதரஹாவில் காலத்தைப் போக்கி மவ்லவி பட்டத்துடன் வரும் மவ்லவிகள் சொல்லலாம். ஆனால் ஒரு டாக்டர் – முனைவர், அவர்களின் அந்த வாசகத்தை அப்படியே ஒப்புவிக்கலாமா? அறிந்து கொள்ளுங்கள். சந்திரன் வானில் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குதானும் இல்லாமலும் போகாத அதனது சுற்றுப் பாதையில் சூழலாமலும் இருக்காது. இதுதான் உண்மை, மனிதனது புறக்கண் பார்வையில் பட்டால்தான் சந்திரன் வானில் இருக்கிறது. அது சுழல்கிறது என்பதைவிட அறிவீனமான வாதத்தை இந்தப் புரோகித மவ்லவிகளும், அவர்களது கண்மூடடி பக்தர்களுக்கு மட்டுமே சொல்ல முடியும். சூரியன், பூமி, சந்திரன் இவற்றின் சுழற்சிகளை அறிந்த ஒரு நான்காம் வகுப்பு மாணவனிடம் கூட இந்த அறியாமை இருக்க முடியாது.

சந்திரன் எப்போதும் வானில் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. அதுவும் மனிதன் கண்டுபிடித்துள்ள வேகமான விமானத்தை விட அதிவேகமாகச் சுழல்கின்றது. அதன் ஒரு பகுதி தன்னில் விழும் சூரியக் கதிர்களை அப்படியே பிரதிபலிக்கிறது. அதன் கீழ் பகுதிக்கு அந்த ஆற்றல் இல்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போல், எனவே சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் வரும்போது, அதில் படும் சூரியக்கதிர்களை அப்படியே பிரதி பலிக்கிறது. அதன் கீழ் பகுதிக்கு அந்த ஆற்றல் இல்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போல், எனவே சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் வரும்போது, அதில் படும் சூரியக்கதிர்கள் அந்த சூரியனை நோக்கியே பிரதிபலிக்கிறது. அவை பூமியை எட்டுவதில்லை; அதனால் இருட்டாக இருக்கிறது. அதையே ஹிந்துக்கள் ‘அமாவாசை’ என்கின்றனர். இந்த அடிப்படையில் முதல் மாதத்தை முடித்து இரண்டாவது மாதத்தின் சுழற்சியை ஆரம்பிக்கும் சந்திரன், பூமி உருண்டையாக இருப்பதில் அடிப்படையில் சாய்கிறது.

அப்படி சாயும்போது சந்திரனின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும் சூரியக் கதிர்களின் ஒரு சன்னக் கீற்று பூமியில் படுகிறது. அதையே பூமியிலுள்ளவர்கள் தங்களின் புறக்கண்ணால் பார்க்கின்றனர். அதுவும் அன்று 1427 ஆண்டுகளுக்கு முன்னர் வானம் எவ்வித, மாசு மரு இல்லாமல் தெளிவாக இருந்ததால் அந்தச் சன்னக் கீற்றை துள்ளியமாகப் பார்க்க முடிந்தது. ஆனால் இன்றோ வானம் மனிதர்களின் பயன்பாட்டிலுள்ள தரை, கடல், ஆகாயம் என பலவித வாகனங்கள், வீட்டு வேடிக்கைகள், இன்னும் இவைபோல் பலவித வாயுக்களை வெளியேற்றும் இயந்திரங்கள் இவை காரணமாக வானம் மாசடைந்து (POLLUTED) இருளடைந்து காணப்படுகிறது. எனவே அன்று போல் இன்று பறையின் சன்னக்கீற்றைப் பார்ப்பது இயலாத காரியமாகும். இரண்டாம், மூன்றாம் நாளில்தான் புறக்கண் பார்வைக்கும் தெரியும் அளவில் பெரிதாகின்றது. சந்திரன பூமியைச் சுற்றி சுழல்பதின் காரணமாக அந்தச் சன்னக் கீற்று பெரிதாகி, பெரிதாகி மாதத்தின் சரியான நடுப்பகுதியில் முழு நிலாவாக – பூர்ணசந்திரனாக, பெளர்ணமியாக முழுமை அடைகிறது. இந்த நிலையில் சந்திரனில் படும் சூரியக் கதிர்கள் அப்படியே முழுமையாக பூமியை நோக்கி பிரதிபலிக்கிறது.

சந்திரன் மாதத்தின் நடுப்பகுதியைத் தாண்டியதும் மீண்டும் அதன் திரும்புதல் எதிர்வரிசையில் இருப்பதால் எதிர்பக்கம் படிப்படியாகத் தேய்த்து, மாதத்தின் இறுதி நாளில் மீண்டும் முழு இருட்டாக – அமாவாசையாக ஆகிவிடுகிறது. சந்திரனின் மையப்பகுதி, சூரியன், நேர்கோட்டத் தாண்டியவுடன், அடுத்த மாத கற்றை சந்திரன் ஆரம்பித்து விடுகிறது. வளர்பறை, தேய்பிறை, முழுநிலா, முழு இருட்டு(அமாவாசை) இவை அனைத்தையும் அன்றைய கால மக்களும் அறிந்துதான் வைத்திருந்தனர். ஆனால் அவை எப்படி நிகழ்கின்றன என்பதைத்தான் அறியாது இருந்தனர். ஆயினும் இறைவனின் இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆன் இதை அதி அற்புதமாக அன்றிலிருந்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. இன்றுதான் அவற்றின் உண்மை நிலையை மனிதன் அளித்து வருகிறான். (பார்க்க:10:5, 36:39,40, 84:18)

அன்று நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரஹணத்தை இறைவனின் அத்தாட்சிகளில் உள்ளது என்று தெளிவுபடுத்தி, மக்களிடம் ஏற்பட்ட மூட நம்பிக்கையை அகற்றினார்கள். ஆனால் இன்று சூரியன், பூமி, சந்திரன் இந்த மூன்றும் நேர்கோட்டில் வரும்போது (CONJUNCTION) சூரிய, சந்திர கிரஹணங்கள் ஏற்படுகின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து, சூரியனிலிருந்து வரும் வெளிச்சத்தை பூமியில் விழாமல் சந்திரன் மறைத்தால் இதை சூரிய கிரஹணம் என்றும், அதே சமயம் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து சந்திரனில் விழும் சூரிய வெளிச்சத்தை பூமி மறைத்தால் அது சந்திர கிரஹணம் என்றும் அறிந்து வைத்திருக்கிறோம்.

அது மட்டுமல்ல, சூரிய கிரஹணம் சந்திர மாதத்தின் கடைசி இறுதி நாளில் 29 அல்லது 30-ல் இடம் பெறும் என்பதும சந்திர கிரஹணம் சந்திர மாதத்தின் நடுப்பகுதியில் 14 அல்லது 15-ல் இடம் பெறும் என்பதும் இன்று நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் புரோகித மவ்லவிகள் பிறையைக் கண்ணால் பார்த்தே நாளைத் தீர்மானிக்க வேண்டும்  என்ற நிலையில் 3-ம் பிறையை முதல் பிறையாகக் கொள்வதால், சந்திர கிரஹணம் பிறை 12 அல்லது 13லும், சூரிய கிரஹணம் 27 அல்லது 28-லும் இடம் பெறும் பரிதாப நிலையை – நூற்றுக்கு நூறு உறுதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைக்கு புறம்பான மூட நம்பிக்கை நிலையை புரோகித மவ்லவிகள் சரிகாணலாம்; ஏற்கலாம். ஆனால் ஒரு டாக்டர் – முனைவர் இந்த மூடத்தனமான கூற்றுக்கு வக்காலத்து வாங்குவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

அடுத்து அல்குர்ஆன் 2:238-ல் கூறப்பட்டுள்ள தொழுகை அஸர் தொழுகைதான் என்பதை, நபி(ஸல்) அவர்கள் மூலம் அவர்களது மனைவிகள் ஆயிஷா, ஹப்ஸா(ரழி-ம்) ஆகிய இருவர் உறுதி செய்துள்ளனர். (புகாரீ 4533, 6396) கிராமவாசிகளும், வாகனக் கூட்டத்தினரும், நாங்கள் நேற்று பிறை பார்த்தோம் என்று நபி(ஸல்) அவர்களிடம் சாட்சி கூறியுள்ளனர். இவற்றிலிருந்து நாள் காலை பஜ்ரிலிருந்து ஆரம்பிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்க, இந்த டாக்டர் நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற புரோகித மவ்லவிகளின் மூடக் கூற்றை ஏற்று எழுதி இருப்பது நாம் முன்னர் விளக்கியுள்ளதையே உறுதிப்படுத்துகிறது.

சவூதி அரசு ‘உம்முல்குறா’ என்ற முன்கூட்டியே கணித்து தயாரிக்கப்பட்ட தினசரியை 9 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதோடு, எஞ்சிய ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மூன்று மாதத்திற்கு மட்டும் தலைப்பிறையைப் பார்க்குமாறு மக்களை அரசு கேட்கிறது. மேலும் சூரியன் மறைவதற்கு முன்னதாகவே சந்திரன் மறைந்து விடுகின்ற நாளில் தலைப்பிறையைக் கண்டதாகக் கூறும் தகவலை சவூதி அரசு சரியானதாக ஏற்றுக் கொள்கிறது. அதனால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது என்று கட்டுரையாளர் குறைபடுகிறார்.

உம்முல் குறா – ஷஃபான் 28-ம் நாளில் ரமழான் தலைப் பிறையைப் பார்க்கும்படி சவூதி அரசு வேண்டுகோள் விட்டதாகவும், உம்முல் குறா. 28-ம் நாள் என்பது இம்முறை மக்காவில் தலைப்பிறை பார்த்த ஷஃபானின் 27-ம் நாளாகும் என்றும், ஒரு மாதத்தின் 27-ம் நாளிலோ அல்லது 28-ம் நாளிலோ அடுத்த பாதத்திற்கான தலைப்பிறையைத் தேடுதல் என்பதற்கு எந்தவொரு நபி வழி ஆதாரங்களோ வானியல் ரீதியான அடிப்படைகளோ இல்லை என்று கட்டுரையாளர் குறிப்பிட்டு அது பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது என்றும் கூறுகிறார்.

முதலில் கட்டுரையாளரும் மற்றவர்களும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சவூதி அரசாக இருக்கட்டும், உலகில் காணப்படும் எந்த முஸ்லிம் நாட்டு அரசாக இருந்தாலும், அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து முழுக்க முழுக்க குர்ஆன் ஹதீஃதை பின்பற்றும் நிலையிலில்லை. எல்லா முஸ்லிம் நாடுகளும் அங்கிருக்கும் புரோகித மவ்லவிகளின் ஆதிக்கதிற்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்கின்றன. இந்த 50-க்கும் மேற்பட்ட எந்த ஒரு முஸ்லிம் நாட்டிலாவது, புரோகித மற்ற தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறியைச் சொல்லும் அந்நஜாத் மாத இதழை நாம் ஆரம்பித்திருந்தால், அது அன்றே முடக்கப்பட்டுப் போயிருக்கும் நாமும் கம்பி எண்ணும் நிலையே ஏற்பட்டிருக்கும், அல்லாஹ்வின் பெரும் கிருபை முஸ்லிம் மதம் புரோகிதர்களின் ஆதிக்கம் செல்லாத, நம் இந்திய நாட்டில் அந்நஜாத்தை ஆரம்பிக்கும் நிலையில் நம்மை இந்தியனாகப் படைத்தான். அதனாலேயே கடந்த 21 வருடங்களாக அந்நஜாத் பெரும் பொருளாதார நெருக்கடிக்கிடையிலும் தொய்வின்றித் தொடர்கிறது. இந்தப் புரோகித மவ்லவிகளால் சாதிக்க முடிந்த ஒரே காரியம். அமானித மோசடி சொத்து மோசடி, பொருளாதார மோசடி என அப்பட்டமான அவதூறுகளை வாரி இறைத்து, அந்நஜாத்திற்கு உதவி செய்து கொண்டிருந்தவர்களையும் உதவி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியது ஒன்றுதான். ஆயினும் அவர்களால் அந்நஜாத்தை வெளிவரவிடாமல் முடக்க முடியவில்லை.

சவூதி அரசும் அங்குள்ள புரோகித மவ்லவிகளை திருப்திபடுத்தும் நிலையில்தான் செயல்பட வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் நம் நாட்டில் பழைய பஞ்சாங்கத்தைக் கொண்டு பிறையைக் கணிப்பது போல், அங்கும் சவூதி அரேபியாவில் கணிப்பின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதுதான் ‘உம்முல்குறா’ தினசரி காலண்டர். அதை அங்குள்ள புரோகித மவ்லவிகள் சரி கண்டுள்ளதால், கட்டுரையாளர் எழுதி இருப்பதுபோல் வருடத்தின் ஒன்பது மாதங்களின் செயல்பாடுகளை சவூதி அரசு நடைமுறைப் படுத்துகிறது. ஆயினும் விஞ்ஞான அறிவு மிகைத்துள்ள இக்காலக் கட்டத்தில் நோன்பை ஆரம்பித்தல், முடித்தல், பெருநாள் கொண்டாடுதல், ஹஜ் இவை மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படைகளாக இருப்பதால், அவை மிகத்துள்ளியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சவூதி அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. நம் இந்திய நாட்டிலிருந்தும் சரியான புள்ளி விபரங்களுடன் ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் மாதங்கள் பிறப்பதை துள்ளியமாக அறிவித்துக் கொடுத்து, இதற்கு மாற்றமாகச் செயல்பட்டால், நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே சவுதி அரசு இருதலைக் கொள்ளி என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது. உண்மையை ஏற்று தங்கள் நாட்டு புரோகித மவ்லவிகளைப் பகைத்துக் கொள்வதா? அல்லது சத்தியத்தைப் புறக்கணித்து புரோகித மவ்லவிகளை திருப்திபடுத்துவதா? என்று தடுமாறுகிறது சவூதி அரசு.

எனவேதான் 9 மாதங்களுக்கு ‘உம்முல்குறா’ தினசரி காலண்டர் என்ற நிலையும் 3 மாதங்களுக்கு பிறை பார்த்தல் என்ற நிலையும் காணப்படுகிறது. மேலும் பிறையை மேலே போய் பார்ப்பது, தொலைநோக்கி மூலம் பார்ப்பது போன்ற நாடகங்கள் ‘அறங்கேறுகின்றன. 22-ம் தேதி ரமழான் தலைப்பிறையை தாம் கண்டதாக நால்வர் விடுத்த அறிவித்தலின் அடிப்படையில் 23ம்தேதி ரமழான் ஆரம்பமாவதாக சவூதி அறிவித்தது. ஆனால் யதார்த்தம் வேறுவிதமாக இருந்தது. குறித்த தினத்தில் மக்கா நகரில் சூரியன் அஸ்தமிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னதாகவே சந்திரன் அஸ்தமித்துவிட்டது. இந்த நாளில் மஃறிபுக்கு பின்னர் பிறையைக் கண்டதான சாட்சியத்தை சவூதி ஏற்றுக் கொண்டது வினோதமானது ஏனெனில் குறித்த தினத்திற்குரிய சூரிய அஸ்தமன நேரத்தை வானியலாளர்கள் கணித்துச் சொல்ல அந்த நேரத்திற்கு மஃறிபுக்கு அதான் சொல்லித் தொழுதவர்கள். சந்திர அஸ்தமன நேரத்தைக் கணித்துச் சொன்னபோது அதனை நம்ப மறுப்பது விரோதமானது. காலம் காட்டும் கருவிகளான சூரியனுக்குமட் சந்திரனுக்கும் இடையே ஏன் இந்த பாரபட்சம்? என்று கட்டுரையாளர் கேட்டுள்ளார்.

புரோகித மவ்லவிகளிடம் இந்தத் தடுமாற்றம் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் ஒரு டாக்டர் – முனைவர் இந்தத் தடுமாற்றத்தில் சிக்கி இருப்பதுதான் எமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நபி(ஸல்) அவர்களது அன்றைய காலத்தில் சூரியன் மறையும் நேரம் நாம் இன்று கூறுவது போல் மணி, நேரம், வினாடி எனத் துள்ளியமாகத் தெரியாது. தோராயமாக கண்ணால் பார்த்தார்கள். சந்திரனைப் பற்றியோ அது மறையும் நேரம் அறவே தெரியாது. எனவே அங்கு சாட்சியின் அவசியம் ஏற்பட்டது. அதே போல் இன்றும் கண்ணால் பிறையை பார்க்க வேண்டும் என அடம் பிடிப்பவர்கள் சாட்சியத்தை ஏற்றுவிட்டுப் போக வேண்டியதுதானே? சாத்தியம்; சாத்தியம் இல்லை என சூரியன் மறைவு, சந்திரன் மறைவு, இவற்றை இன்றைய மணி, நிமிட கணக்குப்படி ஏன் துருவி ஆராய வேண்டும்? இதுவே அவர்களின் விதண்டாவாதத்தை அம்பலப்படுத்த வில்லையா? பிறை வானில் தோன்றி இருக்கிறது. சூரியன் மறைவதற்கு ஒரு நிமிடம் முன்னதாகவே மறைந்துவிடுகிறது என்பதைத் துள்ளியமாக அறிந்து கொண்டவர்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் ஏன்?

புதிய மாத சந்திரன் பிரதிபலிக்கும் ஒளி அதாவது சன்னக்கீற்று எங்கள் கண்ணில் பட்டால்தான் அதைப் பிறையாக ஏற்றுக் கொள்வோம். அதாவது அந்த ஒளிக்கீற்று எங்கள் கண்ணில் பட்டபின்னரே சந்திரன் சுற்ற ஆரம்பிக்கிறது. அதுவரை அது தனது ஓடுபாதையில் சுற்றாமல் அப்படியே நிற்கிறது என்ற நம்பிக்கை, மூடத்தனமான நம்பிக்கை இல்லையா? அல்குர்ஆன் 36:40க்கு எதிராக நம்பிக்கை இல்லையா? பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற மூட நம்பிக்கையைப் பாடமாகக் கற்று பட்டம் பெற்று மவ்லவிகளாக வெளிவந்தவர்களிடம் இந்த மூட நம்பிக்கை இருப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் ஒரு டாக்டரிடம்-முனைவரிடம் இந்த மூட நம்பிக்கை இருக்கலாமா?

22-ம் தேதி ரமழான் தலைப்பிறையை தாம் கண்டதாக நால்வர் விடுத்த அறிவித்தலில் புறக்கண்ணால் கண்டதாக இருக்கிறதா? இல்லையே! அறிவு குறைந்தவர்கள் ‘ருஃயத்’ என்ற பதம் புறக்கண்ணால் பார்ப்பதை மட்டுமே குறிக்கும் என்று மூடத்தனமாக எண்ணனால் அது யாருடைய குற்றம்? அந்த நால்வரும் கணினி கணக்கீட்டின் மூலம் சந்திரன் தனது முதல் மாத சுற்றை முடித்துக் கொண்டு, இரண்டாம் மாத சுற்றை ஆரம்பித்துவிட்டதை தங்களின் அறிவுக் கண்ணால், கணக்கீட்டுக் கண்ணால் கண்டதைச் சொன்னால் அதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் கண்டதைச் சொன்னதை ஏற்று சவூதி அரசு அறிவித்ததில் என்ன குற்றம் கண்டீர்கள்? அந்த சவூதி அரசு செய்யும் தவறு புரோகிதர்களின் உம்முல் குறா காலண்டரையும், கணினி கணக்கீட்டின்படியுள்ள காலண்டரையும் போட்டுக் குழப்புவதுதான். அந்த நாட்டு ஸலஃபி புரோகித மவ்லவிகளுக்கு அஞ்சியே அவ்வாறு செயல்பட்டு வருகிறது. பெரும்பான்மையான மக்கள் அந்தப் புரோகிதர்களின் சொல்படியே நடக்கிறார்கள். எனவே அரசுக்கு எதிராக அந்த மவ்லவிகள் மக்களைத் தூண்டிவிட்டால், அது தங்களுக்குப் பெரும் தலைவலியாகிவிடுமே என்ற அச்சத்தில் இந்த இரட்டை வேடம் போடும் நிலை ஏற்படுகிறது.

சவூதி அரசு படைத்து, பரிபாலித்து, நிர்வகித்து வரும் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி நடக்க முன்வந்தால், அமெரிக்காவுக்கும் அஞ்சாது, புரோகித ஸலஃப் மவ்லவிகளுக்கும் அஞ்சாது; உள்ளது உள்ளபடி சத்தியத்தைச் சொல்ல முன் வந்துவிடும்.

“காலம் காட்டும் கருவிகளான சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே ஏன் இந்தப் புரோகித மவ்லவிகளிடமும் கேட்க வேண்டிய கேள்வியை, இந்த டாக்டர் நம்மிடம் கேட்டுள்ளார். அதைத்தான் இப்போது நாம் கேட்கிறோம். சூரியன் மறைவதைக் கண்ணால் பார்க்காமல் கணக்கீட்டின் அடிப்படையில் சந்திரன் மறைவதையும் கணக்கீட்டின் அடிப்படையில் கடிகாரத்தைப் பார்த்து ஏற்றுக் கொள்ளும் நீங்கள், சந்திரன் தோன்றி மறைவதையும் கணக்கீட்டின் அடிப்படையில் சந்திரன் மறைவதைக் கண்ணால் பார்க்காமல் ஏற்றுக் கொள்வதில் தயக்கம், காட்டுவது ஏன்? காலம் காட்டும் கருவிகளான சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே ஏன் இந்த பாரபட்சத்தை நீங்கள் காட்டுகிறீர்கள்? வார்த்தை ஜாலங்களைக் கொண்டு சத்தியத்தை மறைப்பது புரோகித மவ்லவிகளின் பிறவிக் குணம், அந்த இழி குணம் டாக்டராகிய உங்களையும் பிடித்துள்ள மர்மம் என்ன?

உரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் தராமல் சொந்த யூகங்களைக் கொண்டு தற்கொலைப் படைகளை நியாயப்படுத்தி தீர்ப்பு வழங்கும் யூசுஃப் அல் கர்ழாவியின் நோன்பு பற்றிய தீர்ப்பும் முடமாகவே இருக்கிறது. இன்றைய விஞ்ஞான யுகத்தில், பிறை பிறக்கும் நேரம் மணி, நிமிடம் வினாடி என திட்டமாகத் தெரியக் கூடிய காலத்தில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை விட அடிமுட்டாள்த்தனமான ஒரு தீர்ப்பு இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட தீர்ப்புகளை புரோகித மவ்லவிகள் மட்டுமே அளிக்க முடியும். குறைந்தபட்சம் இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு மார்க்கத்தில் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு குர்ஆன் வாக்கை எடுத்துக் காட்டட்டும் பார்க்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஃதையாவது எடுத்துக் காட்டட்டும் பார்க்கலாம். சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக, கொல்லைப்புற இடுக்கு வழியாக சமுதாயத்தில் நுழைந்து ஆதிக்கம் செலுத்துபவர்களே இந்த புரோகித மவ்லவிகள் – இவர்களின் பிடியிலிருக்கும் காலமெல்லாம் மேலும் மேலும் அதலபாதாளத்தை நோக்கி அழிவுப் பாதையிலேயே செல்லும் முஸ்லிம் சமுதாயம்.

இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து சமுதாயம் விடுபட்டு, சுயமாக குர்ஆனையும் ஹதீஃதையும் என்று நேரடியாகப் படித்து சிந்தித்துச் செயல்பட ஆரம்பிக்கிறதோ அன்றுதான் இந்த சமுதாயம் மீண்டும் அது இழந்துவிட்ட உன்னத நிலைக்கு உயரும். மாதம் பிறக்கும் கிழமையை துள்ளியமாக தசம பின்னத்தில் போட்டுக் காட்டுகிறோம். கவனமாகப் பார்த்து முடிவு எடுங்கள். அடுத்த ஆண்டு ஹிஜ்ரி 1428 ரமழான், ஷவ்வால், துல்ஹஜ், மாதங்களின் தலைப்பிறை என்ன கிழமை தோன்றும் என்பதை இப்போதே கணக்கிட்டுக் காட்டுகிறோம் கவனமாகப் படியுங்கள்.

ஹிஜ்ரி ஆண்டின் துவக்கம் அதாவது 01.01.0001 அன்று வியாழக்கிறமையாகும்.

இஸ்லாமிய ஒரு மாதம் 29.53059 நாட்கள்

இஸ்லாமிய ஒரு வருடம் 29.53059×354.36708

ரமழான் வருடத்தின் 9-ம் மாதம், ஷவ்வால் 10ம் மாதம், துல்ஹஜ் 12-ம் மாதம்

ரமழான் மாதம் 01.09.1428

ஆரம்பம் 01.01.0001

கழித்தால் 01.08.1427 வியாழன்

இப்போது வருடங்களை நாட்களாக்குவோம்.

1427×354.36708 = 505681.82316

மாதங்களை நாட்களாக்குவோம்.

8×29.53059 = 236.24472

இரண்டையும் கூட்டினால் மொத்த நாட்கள்

505918.06788

தசம பின்னம் 0.4க்குக் குறைவாக வந்தால், அல்கோரிதம் என்ற கணக்கீட்டின்படி ஒரு நாள் குறைக்கப்படவேண்டும். அப்படியானால் 505918 நாட்கள் 505917 நாட்களாகின்றன.

இந்த முழு 505917 நாட்கள வாரங்களாக்கினால்

   72273

7  505917

 49

  15

  14

   19

   14

    51

    49

     27

     21

      6 மீதி

எனவே 1428 ரமழான் முதல் நாள் புதன் அன்று ஆரம்பிக்கும்.

ஆனால் இந்த புரோகித மவ்லவிகளும் அவர்களின் பக்த கோடிகளும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து 1428 ரமழான் நோன்பை வியாழன் அல்லது வெள்ளி ஆரம்பிப்பார்கள்.

அடுத்து ஷவ்வால் மாதம் 01.01.1428

        ஆரம்பம்    01.01.0001 வியாழன்

        கழித்தால்    00.09.1427

இப்போது வருடங்களை நாட்களாக்குவோம்.

        1427×354.36708 = 505681.82316

மாதங்களை நாட்களாக்குவோம்.

        9×29.53059 = 265.77531

இரண்டையும் கூட்டினால் மொத்த நாட்கள் 505947.59847

இந்த முழு 505947 நாட்களை வாரங்களாக்கினால்

  72278

7  505947

 49

  15

  14

   19

   14

    54

    49

     57

     56

      1 மீதி

எனவே 1428 ஷவ்வால் முதுல் நாள் வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பிக்கும். ஆனால் இந்த புரோகித மவ்லவிகள் சனி அல்லது ஞாயிறு பெருநாள்  கொண்டாடுவார்கள்.

அடுத்த துல்ஹஜ் மாதம் 01.12.1428

        ஆரம்பம்   01.01.0001 வியாழன்

        கழித்தால்    00.09.1427

இப்போது வருடங்களை நாட்களாக்குவோம்.

        1427×354.36708 = 505681.82316

மாதங்களை நாட்களாக்குவோம்.

        11×29.53059 = 324.83649

இரண்டையும் கூட்டினால் மொத்த நாட்கள் 506006.65965

இந்த முழு 506006 முழுநாட்களை வாரங்களாக்கினால்

  72278

7  505947

 49

  16

  14

   20

   14

    60

    56

     46

     42

      4 மீதி

 

எனவே துல்ஹஜ் முதல் நாள் திங்கள் அன்று ஆரம்பிக்கும். புரோகித மவ்லவிகள் செவ்வாய் அல்லது புதன் அன்று துல்ஹஜ் பிறை பிறந்ததாக மக்களை படையர்கள் ஆக்குவார்கள்.

இவ்வளவு துள்ளியமாக கணக்கிட்டுக் காட்டினாலும், புரோகித மவ்லவிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களின் அகம்பாவம், ஆணவம், தான் என்ற மமதை அதாவது அன்று அபூ ஜஹீலுக்கும் அவனைச் சார்ந்த தாருந் நத்வாவினருக்கும் இருந்த அத்தனை குணங்களையும், இன்று இவர்களிடம் நீங்கள் பார்க்கலாம். மக்களை தங்களின் வார்த்தை ஜாலம் மூலம் வழிகேட்டில் கொண்டு செல்ல முனைவார்களே அல்லாமல், நேர்வழியை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவர்களை விட்டு விடுபட்டு சுயமாகச் சிந்திப்பவர்களே வெற்றிபெறுவர். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!

***********

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா? செய்யது, அபிராமம்

தெளிவு : அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா?

இந்தப் பிரச்சனையில் சிலர், வலிமார்கள் மரணத்திற்குப் பிறகும் உயிருடன் உள்ளனர் என்றும், வேறு சிலர் இறந்து விட்டனர் என்றும் இரு வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். இதில் எது சரியானது என்பதைத் தெளிவாக ஆராய்ந்தாலே  இதன் உண்மையை விளங்க முடியும்.

முதலில் (மரணித்த பின்னும்) ‘உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்துக் கொண்டோரின் வாதங்களைப் பார்ப்போம்.

“அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டோரை இறந்தவர்களென்று எண்ண வேண்டாம்; அவர்கள் உயிருடன் உள்ளனர். இறைவனிடமிருந்து உணவும் அளிக்கப்படுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளித்த பேருபகாரங்கள எண்ணி மகிழ்ச்சியில் நினைத்தவர்களாக உள்ளனர்”. அல்குர்ஆன் 3:169,170

அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களென கூறாதீர்கள்! அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் அதனை நீங்கள் உணர இயலாது”. அல்குர்ஆன் 2:154

மேற்கூறிய இரண்டு ஆயத்துகளும் (திருகுர்ஆன் வாக்கியங்களும்) அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை மிகத்தெளிவாக பறைசாற்றுகின்றன. திருகுர்ஆனே இவ்வளவு தெளிவாகக் கூறும்போது நாம் எப்படி மறுக்க இயலும்? என்பது முதல் சாராரின் வாதம். மேலும் கப்ருகளை (மரித்தவர்களின் அடக்க ஸ்தலங்களை) நாம் காணும் போது, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூற வேண்டும். என்று  ஹதீஸில் வருகின்றது. ‘ஸலாம்’ உயிருள்ளவர்களுக்குத்தானே சொல்ல முடியும் அதனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது என்று கூறுகின்றனர்.

இந்த ஆதாரங்கள் சரியானது தானா? என்பதை நாம் ஆராய்வோம். மேற்கூறிய ஆயத்துகள் எப்பொழுது, எதற்காக இறங்கியது என்பதைக் கவனித்தால் தான் அதன் முழுப்பொருளைப் புரிந்து கொள்ள முடியும். பத்ரு போர்க்களத்தில் சில சஹாபாக்கள் (நபிதோழர்கள்) ஷஹீதாக்கப்பட்ட (வீரமரணம் அடைந்த) நேரத்தில் காபிஃர்கள் ‘இந்த முஹம்மது அப்பாவி மக்களை தேவை இல்லாமல் பலி கொடுக்கிறாரே’ எந்தவித பயனுமில்லாமல் அவர்களின் வாழ்வு வீணடிக்கப்படுகின்றதே’ என்று குறை கூறிய போது அவர்களுக்கு பதில் தரும் விதத்தில் இந்த வசனங்களை அல்லாஹ் இறக்கினான். ‘நீங்கள் நினைப்பது போல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்லை. உங்களால் உணரமுடியாத வேறொரு விதமான வாழ்க்கை வாழ்கிறார்கள்’ என்ற பொருள்பட கூறுகிறான். அதனால்தான் முதல் ஆயத்தில் ‘நீங்கள் உணர முடியாது’ என்ற சொல்லையும் இறைவன் அதனுடன் சேர்த்திருக்கின்றான். இரண்டாம் ஆயத்தில் ‘அஹ்யாவுன் இன்த ரப்பிஹிம்’ என்ற சொல்லை இணைத்திருக்கிறான். அதாவது இறைவனின் கண்ணோட்டத்தில் அவர்கள் உயிருடன் உள்ளனர் (உங்கள் கண்ணோட்டத்தில் அல்ல என்ற பொருள்பட)

“காஃபிர்களே! நீங்கள் நினைப்பது போல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்ல மாறாக! அவர்களுக்கு வேறு விதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. அந்த மகிழ்ச்சியில் அவர்கள் நினைத்துள்ளனர் என்ற பொருள்பட அல்லாஹ் அவர்களுக்கு பதில் கூறுகிறான்” (திருக்குர்ஆனுக்குப் பொருள் கொள்ளும் போது எதற்காக, எப்போது அந்த வசனம் இறங்கியது என்பதையும் கருத்தில் கொண்டு தான் விளக்கம் தர வேண்டும் என்பது தஃப்ஸீர்ன் விதி).

எனவே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நம்மில் சிலர் நினைப்பது போல் “நாம் பேசுவதை கேட்பார்கள், நமக்கு பதில் தருவார்கள். நாம் அங்கே செல்வதை உணர்ந்து கொள்வார்கள்” என்பது அதன் பொருள் அல்ல.

அந்த காஃபிர்கள் நினைத்தது போல் “மறு உலக வாழ்க்கை கிடையாது. அவர்கள் மரணித்தவுடன் எல்லாமே முடிந்து விட்டது. மறு உலக சுகங்கள் கிடையாது” என்பதுவும் அதன் பொருள் அன்று.

மாறாக, மனிதர்கள் கண்ணோட்டத்தில் உலகத்துடன் உள்ள தொடர்பைப் பொறுத்தவரையில் அவர்கள் மரணித்து விட்டார்கள். அல்லாஹ்விடம் வேறொரு விதமான வாழ்க்கை அவர்களுக்கு உண்டு என்பதுதான் இந்த ஆபத்துகளின் உண்மைப் பொருள்.

அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் ‘அந்த நல்லவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவை ரூபத்தில் சுவர்க்கத்தில் சுற்றித்திரிகின்றன’ (முஸ்லிம்) என்று விளக்கம் தந்தனர். நம்மில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்ற பொருளில் அல்ல என்பதை இந்த ஹதீஸ் மூலம் தெரியலாம்.

கப்ருகளைக் காணும்போது சலாம் சொல்லுவது அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற பொருளில் அல்ல; ஏனென்றால் இந்த சலாம் அவ்லியாக்களுக்கு மட்டும் உரியது அல்ல. எந்த முஸ்லிமின் கப்ரை கடக்க நேரிட்டாலும் சலாம் சொல்லவேண்டும். அதுவும் ‘கப்ருவாசிகளே! உங்கள்மீது சலாம் உண்டாகட்டும்! நீங்கள் முந்தி விட்டீர்கள்; நாங்களும் உங்களுடன் வந்து சேரக்கூடியவர்கள் தான்” என்று இந்த வசனத்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். நாம் நம் மரணத்தை நினைவுபடுத்திக் கொள்வதற்காக இதனைச் சொல்ல வேண்டும். நம்முடைய ஸலாம் அவர்கள் செவியில் கேட்கும் என்பது அதன் பொருள் அல்ல. ‘தென்றல் காற்றே! கொஞ்சம் நில்லு’ என்று இலக்கியமாக நாம் அழைக்கின்றோம் என்றால், தென்றல் காற்றுக்கு இந்த அழைப்பு புரியும் என்பது அதன் பொருள் அல்ல. தென்றல் காற்றை அழைப்பது போல் பாவனை செய்கின்றோம்; அது போன்்ற இலக்கியம்தான் இதுவும்.

அதனால் முதல் கூட்டத்தினரின் வாதம் மிகவும் பலவீனமானது என்பது நமக்கு நன்கு புலனாகின்றது. இரண்டாவது சாரார்  எடுத்து வைக்கும் ஆதாரங்கள் முற்றிலும் அந்த வாதத்தை முறியடித்து விடுகின்றன. அவர்களின் ஆதாரங்களைப் பார்ப்போம்.

 

 

“ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைக் கட்டாயம் சுவைத்தே தீரவேண்டும்”. அல்குர்ஆன் 3:185, 21:35, 29:57

‘ஒவ்வொரு’ என்ற பதம் எந்த மனிதரையும் இந்த முடிவிலிருந்து நீக்க முடியாத, விதிவிலக்குப் பெற முடியாத விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது; எனவே எல்லோரும் இறந்து விட்டவர்கள் என்பது தெளிவாகின்றது.

ஒரு வாதத்திற்காக, சிலரை இந்த விதியிலிருந்து நீக்கலாம் என்றால், அந்தஸ்தில், வலிமார்கள் எட்டமுடியாத உன்னதமான உயர்வு பெற்ற நபிமார்களுக்கு அந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருகுர்ஆனே மிகத்தெளிவாக நபிமார்களும் மரணித்தவர்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவாக்குகின்றது. அந்த வசனங்களை நாம் பார்ப்போம். நபி சுலைமான்(அலை) அவர்கள் ‘பைத்துல் முகத்தல்’ கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் போது மரணித்து விடுகிறார்கள். அவர்கள் மரணித்தது  தெரியாமல் ஜின்கள் அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. பல நாட்கள் கைத்தடியை ஊன்றியவராகிய அவர்கள் மரணித்த நிலையில் நிற்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் கைத்தடியை கரையான்கள் அரித்துக்கொண்டு வந்தபோது, திடீரென அவர்கள் கீழே விழுகிறார்கள். அப்போதுதான் ஜீன்களுக்கு சுலைமான் நபி இறந்து விட்டார்கள் என்ற உண்மை தெரிகிறது. இதனை குர்ஆன்

 

சுலைமான் மீது நாம் ‘மவ்த்தை’ விதித்தபோது, அவர் இறந்து விட்டார் என்பதை கரையான்களைத் தவித வேறெவரும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அல்குர்ஆன் 34:14

 

இந்த வசனம் சுலைமான் நபிக்கு மரணம் சம்பவித்தது என்பதை ‘மவ்த்து’ என்ற வார்த்தையின் மூலம் தெளிவாக்குகின்றது.

 

 

‘யாஃகூபிற்கு மரணம் வந்தபோது’ (அல்குர்ஆன் 2:133) என்ற வசனத்திலும் ‘மவ்த்து’ என்ற பதத்தை அல்லாஹ் பிரயோகம் செய்திருக்கிறான். மிகப்பெரும் இரண்டு நபிமார்களே இறந்து விட்டனர். மவ்தாகி விட்டனர் என்றால், வலிமார்கள் எம்மாத்திரம்?

 

 

மேலும் நபிமார்களின் தலைவராகிய நபி(ஸல்) அவர்களை நோக்கி ‘நபியே நீரும் மரணிக்கக் கூடியவர், உமக்கு முன் வந்த நபிமார்களும் மரணித்து விட்டவர்கள்’. அல்குர்ஆன்: 29:30

நபி(ஸல்) அவர்களே மரணித்து விட்டவர்கள் என்றால் வேறு யார்தான் (நம்மவர்களின் சிலர் நினைக்கின்ற பொருளில்) உயிருடன் இருக்க முடியும்?

நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டபோது, பலரும அவர்கள் இறக்கவில்லை’ என்று எண்ணியபோது அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் “முஹம்மதை வணங்குபவர்கள் யாரேனுமிருந்தால் (அவர்கள் புரிந்து கொள்ளட்டும்!) முஹம்மது நிச்சயம் இறந்து விட்டார்கள்” என்று சொன்னதும் இங்கே நினைவு கூரத்தக்கது.

ஐயம்: ‘அகீகா’ கொடுப்பது அவசியமா? அதன் முறை என்ன? ஷபீர் அஹமது, திருச்சி.

தெளிவு : ‘அகீகா’ பற்றி நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளை அவர்கள் காலத்து நடைமுறையைப் பார்ப்போம்.

ஆண் குழந்தைக்காக ‘அகீகா’ உண்டு. அதன் சார்பாக இரத்தத்தை ஓட்டுங்கள்’ அறிவிப்பவர் : சல்மான் இப்னு ஆமிர்(ரழி), நூல்கள்:புகாரீ, அஹ்மத், அபூதாவுது, திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா

ஒவ்வொரு ஆண் குழந்தையும் ‘அகீகா’வுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளான். அவன் சார்பாக ஏழாம் நாள் அறுத்துப் பலியிடவும்! அன்றே பெயர் வைக்கவும்! அவன் தலை(மயிரை)களையவும்! அறிவிப்பவர்:சமுரா(ரழி), நூல்கள் : சமுரா(ரழி), நூல்கள்:அஹ்மத்,நஸயீ, அபூதாவூது, திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம், பைஹகீ

‘ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள்’ என்றும், ‘பெண் குழந்தை சார்பாக ஒரு ஆடு’ என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி), நூல்கள் அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, இப்னு ஹப்பன், பைஹகீ.

மேற்கூறிய நபிமொழிகள் ‘அகீகா’ கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதாவது கட்டாயக் கடமை என்று கருதும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் ‘அகீகா’ கட்டாயக் கடமையானதல்ல. ஏனெனில் நபி(ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்கள் ‘அகீகா’ பற்றிக்கேட்டபோது.

யாரேனும் தன் குழந்தையின் சார்பாக அறுத்து பலியிட விரும்பினால் ஆண் குழந்தையின் சார்பாக இரண்டு ஆடுகளும், பெண் குழந்தை சார்பாக  ஒரு ஆடும் கொடுக்கட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூது, நஸயீ.

இந்த நபிமொழியில் ‘விரும்பினால்’ கொடுக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ‘அகீகா’ கட்டாயமான ஒன்றல்ல என்று உணரலாம்.

‘அகீகா’ என்பது அரபு நாட்டில் வழக்கமாகவே நடந்து வந்த நடைமுறையாகும். இஸ்லாம் வந்தபின் அதை அங்கீகாரம் செய்தது. ஆனால் ‘அகீகா’வின் பெயரில்  நடந்த வேறு சில சடங்குகளை இஸ்லாம் ஒழித்தது.

தாங்கள் அறியாமைக் காலத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து, குழந்தையின் தலை மயிரை நீக்கி, அந்த ஆட்டின் இரத்தத்தை குழந்தையின் தலையில் பூசிக்கொண்டிருந்தோம். அல்லாஹ் இஸ்லாத்தைத் தந்த போது ஒரு ஆட்டை அறுப்போம். குழந்தையின் தலை மயிரை நீக்குவோம். தலையில் குங்குமப் பூவைப் பூசுவோம் என்று புரைதா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்கள்: அஹ்மத், அபூதாவூது, நஸயீ.

இதற்கு முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களின் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் என்று குறிப்பிடப்பட்டதைப் பார்த்தோம். இந்த ஹதீஸில் ஒரு ஆட்டை கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஹதீஸிலிருந்து ஆண் குழந்தையின் சார்பாக ஒரு ஆடும் கொடுக்கலாம் என்பதற்குப் பின் வரும் நபி வழியும் சரியான ஆதாரமாகின்றது.

‘நபி(ஸல்) அவர்கள், ஹஸைன்(ரழி), ஹுஸைன்(ரழி) சார்பாக ஒவ்வொரு ஆடு ‘அகீகா’ கொடுத்துள்ளார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி), நூல்கள்: அபூதாவூது, இப்னு ஹப்பான், ஹாகிம், பைஹகீ.

இந்த நபிவழி ஒரு ஆடு கொடுக்கலாம் என்ற அனுமதியை உணர்த்துவதோடு, பெற்றவர்கள்தான் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை; மிக நெருங்கிய உறவினர்களும் கொடுக்கலாம். குறிப்பாக குழந்தையின் பாட்டனார் கொடுக்கலாம் என்பதையும் உணர்த்துகின்றது. குழந்தையின் பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பாட்டனார் கொடுக்கலாம் என்பதையும் இந்த ஹதீஃத் நமக்கு உணர்த்துகின்றது. ஹஸன்(ரழி), ஹுஸைன்(ரழி) இருவரின் பெற்றோர்கள் இருந்தபோதே அவர்கள் பாட்டனராகிய நபி(ஸல்) அவர்கள் ‘அகீகா’ கொடுத்துள்ளனர்.

“குழந்தை பிறந்த ஏழாம் நாள் அன்று ‘அகீகா’ கொடுக்கப்பட வேண்டும்” என்பதை, இரண்டவதாக நாம் குறிப்பிட்ட ஹதீஃத் குறிப்பிடுகின்றது. பதினான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாளிலும் கொடுக்கலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ‘பைஹகீ’யில் ஹதீஸ் உள்ளது. ஆனால் இந்த ஹதீஃதில் குறைபாடுகள் உள்ளன.

“நபியாக ஆக்கப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் தனக்காக ‘அகீகா’ கொடுத்தார்கள்” என்று ‘பைஹகீ’யில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், நிராகரிக்கப்பட்டதாகும். இதன் அறிவிப்பாளர்களில் அப்துல்லாஹ் இப்னு முஹர்ர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நிராகரிக்கப்படக் கூடியவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இமாம் நவவீ அவர்கள் ‘இது பொய்யான ஹதீஃதாகும்’ என்று ‘ஷரஹுல் முஹத்தப்’ நூலில் குறிப்பிடுகிறார்கள்.

ஆக மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு என்றும் ஒரு ஆடு கொடுப்பது சிறப்பு என்றும் ஒரு ஆடு கொடுப்பது போதுமானது என்றும் அது கட்டாயக கடமையானதல்லவென்றும் 7வது நாளில் கொடுக்க வேண்டும் என்றும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அதன் மாமிசத்தை எப்படிப் பங்கிடப்பட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடாததாலும், ஸஹாபாக்கள் இதுபற்றி கேட்காததாலும், குர்பானி மாமிசம் பங்கிடப்படுவது போன்றே இதுவும் பங்கிடப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானம் செய்யலாம்.

ஐயம்: இந்த தெய்வங்கள் எங்களுக்கு பரிந்துரை செய்யும் என்ற 10:18, 39:3 வசனங்களின் அடிப்படையில் காஃபிர்கள் இவ்வுலக வாழ்க்கையில்தான் பரிந்துரை செய்யும் என நினைத்தார்கள். இது தவறு தான். ஆனால் நம் வலிமார்களிடத்தில் பரிந்துரை கேட்பது ஆகிரத்தில் அல்லவா? இது எப்படி தவறாகும்?

தெளிவு:  அல்லாஹ் குர்ஆனில் பரிந்துரையைப் பற்றி கூறுவதை எல்லாம் பாராமல், தானே சொந்த விளங்களைத் தெரிந்து ஓரிரு குர்ஆன் வசனங்களுக்குக்கூறி உங்களைக் குழப்பிக்கொள்ளாதீர். நீங்கள் கூறியுள்ள இரு கூற்றுக்களும் குர்ஆனுக்கு முற்றிலும் மாறானது என்பது குர்ஆன், ஹதீஃத் மூலமும் விளங்குவோமாக!

குர்ஆன் வசனங்கள் 10:18, 39:3 அடிப்படையில் ‘காஃபிர்கள் இவ்வுலக வாழ்க்கையில்தான்’ அவர்கள் வணங்கும் தெய்வங்கள் பரிந்துரை செய்யும் என நினைத்திருந்தார்கள் என்பது அவரது முதல் கூற்று; அது முற்றிலும் தவறான கூற்றாகும்.

 

 

“(மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி) நாம் உங்களை முதன் முதலாகப் படைத்தோமே அதுபோன்று தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள். இன்னும் நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் முதுகுகளுக்குப்பின் விட்டு விட்டீர்கள். எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்றும், உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை. உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை. உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்துவிட்டது. உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன என்று அல்லாஹ் கூறுவான்”. அல்குர்ஆன் 6:94

 

அல்லாஹ்வையன்றி அவர்கள் எவற்றை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவை (அவனிடம அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவையல்ல (குர்ஆன் 39:43) எனவும் கூறுகிறான்.

 

 

மறுமையில் தங்களுக்கு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமென நம்பி நாம் வணங்கியவைகள், அச்செயலை செய்யாததை அவர்கள்  பார்க்கிறார்கள். பரிதவிக்கிறார்கள், புலம்புகிறார்கள். இந்த புலம்பலை அல்லாஹ் அழகாக படம்பிடித்துக் காட்டுவதை குர்ஆனில் 7:53, 26:87 முதல் 102 வரை உள்ள வசனங்களில் காணலாம். தயவு செய்து குர்ஆனை புரட்டிப் பாருங்கள்.

வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (உள்ளன என நினைத்துக்கொண்டு) நீங்கள் அவனுக்கு (அல்லாஹ்வுக்கு) அறிவிக்கிறீர்களா? என்று கேட்பீர்களாக! (10:18), ஏனெனில் அல்லாஹ் கூறியதற்கு மாற்றமாக, தான் அவனைவிட தெரிந்தவர்போல ‘அவை இவ்வுலக வாழ்க்கையில்தான்’ பரிந்துரை செய்யும் என்று எண்ணியதாகக் கூறியுள்ளார்.

அவரது இரண்டாவது கூற்று ‘நாம் வலிமார்களிடத்தில் பரிந்துரை கேட்பது ஆகிரத்தில் அல்லவா? அது எப்படி தவறாகும்?” என்பதாகும். இதுவும் குர்ஆன், ஹதீஸ் பார்வையில் முற்றிலும் தவறானதாகும்.

அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை”. அல்குர்ஆன் 6:70, 32:4

‘பரிந்து பேசுதல் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது”. அல்குர்ஆன் உரியது’. அல்குர்ஆன் 39:44

“சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்கு பலனளிக்காது”. அல்குர்ஆன் 74:48

“அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்”. அல்குர்ஆன் 2:255.

“அவனுடைய அனுமதி கிடைத்த பின்னரேயன்றி அவனிடம் பரிந்து பேசுபவர் எவருமிலலை”. அல்குர்ஆன் 10:3, 34:23

“பாதுகாப்பளித்தல், பரிந்து பேசுதல் ஆகியவை. அல்லாஹ்வின் ஏகபோக உரிமையில் உள்ளவையே”. அல்குர்ஆன் 10:3, 34:23

அவன் அனுமதி வழங்கியவர்கள் மட்டுமே ஆகிரத்தில் பரிந்துரை பேசமுடியும். மற்றவர்களால் பரிந்துபேச முடியாது. முடியவே முடியாது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் நிரூபிக்கின்றன.

வலிமார்கள் ஆகிரத்தில் பரிந்து பேசுவார்கள் என்ற அந்த கூற்று சரியென்றால் அவ்லியாமார்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்தான் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது. வஹீ வந்ததா? அல்லாஹ்வும், அவனது ரசூலும் கூறியுள்ளனரா? ஏதாவது கிதாபுகளில் எவரோ எழுதி வைத்ததை ஆதாரமாக காட்டாமல் குர்ஆன், ஹதீஃதிலிருந்து ஆதாரம் காட்ட முடியுமா? முடியவே முடியாது.

நபி(ஸல்) அவர்கள் நமக்கு பரிந்து பேசுவார்கள். மற்ற நபிமார்கள் கூட தங்களது சமுதாயத்தினருக்கு பரிந்து பேச முன்வரமாட்டார்கள். ஒவ்வொரு நபி, ரசூல்மார்கள் தாம், தாம் செய்த ஓரிரு தவறுக்காக என்னைக் காப்பாற்று, என்னைக் காப்பாள்று என வருந்தி, பரிந்து பேச முடியாமல் திணருவார்கள். தங்களுக்குப் பரிந்துபேச, கேட்க அவர்களது உம்மத்துக்களை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்புவார்கள் என்ற நீண்ட ஹதீஸை புகாரீ, முஸ்லிம், அஹ்மது போன்ற ஹதீஸ் நூல்களில் நாம் காணுகிறோம்.

நபி(ஸல்) அவர்களும் தாம் ஸஜ்தா செய்து அல்லாஹ்வின் அனுமதி பெற்ற பின்னரே பரிந்து பேசுவார்கள். அதுவும் அல்லாஹ் குறிப்பிட்ட மக்களுக்குப் பரிந்துபேசுக! என வரையறையளித்து, பரிந்துபேச அனுமதியளிக்கிறான். அக்கூட்டத்தாருக்குத்தான் நபி(ஸல்) அவர்கள் பரிந்து பேசுவார்கள் என்பதையுமு் அந்த ஹதீஃதில் காணலாம். அனஸ் பின் மாலிக்(ரழி) அறிவிக்கும் இந் நீண்ட ஹதீஸை புகாரியில் தெளஹீத் என்ற பாடத்தில் காணலாம்.

நிலைமை இப்படியிருக்க வலிமார்கள் ஆகிரத்தில் பரிந்து பேசுவார்கள் எனக்கூறுவது நபி, ரசூல்மார்களை விட இந்த வலிமார்கள் சிறந்தவர்கள், எவ்வித தப்புத் தவறுகளையும் செய்யாதவர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார் இந்த மவ்லவீ. எவ்வளவு ஆபத்தம் என்பதை காணுங்கள்; ஆலிம் என்ற பெயரில் எந்த அபத்தத்தையும் அரங்கேற்ற நினைக்கும் இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!

ஐயம் : வேலை செய்து சம்பாதிக்கும் ஒரு தொழிலாளியை அவருடைய முதலாளி தொழுகைக்குச் செல்லக்கூடாது என்று தடை செய்தால், அதற்காக அத்தொழிலாளி தமது வேலையை விடுவதா? அல்லது அல்லாஹ் உனது நாட்டம் என்று அவனிடம் கூறிவிட்டு தொழாமல் இருப்பதா? என்ன செய்ய வேண்டும்? பஷீருத்தீன், மாயாவரம்.

தெளிவு : ஒருவர் தொழுகையைத் தவறவிட்டு தூங்கிவிட்டால் அல்லது அதை மறந்து விட்டால் அவருக்கு (விழிப்பு) ஞாபகம் வந்தவுடன் தொழுது கொள்வாராக! ஏனெனில் அல்லாஹ கூறுகிறான்.

 

“என்னை நினைப்பதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக” (அல்குர்ஆன் 20:14) என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரழி), நூல்:முஸ்லிம்.

அனஸ்(ரழி) அவர்கள் மற்றொரு அறிவிப்பின்படி அதற்குப் பரிகாரம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதாக உள்ளது. நூல்கள் : புகாரீ, முஸ்லிம்

“ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி மிக விசாலமானது. ஆகையால் நீங்கள் என்னையே வணங்கி வழிப்படுங்கள்!“. அல்குர்ஆன் 29:56

“படைத்த இறைவனுக்கு மாறு செய்யும் வகையில் படைக்கப்பட்ட எந்த மனிதருக்கும் வழிப்பட்டு நடப்பது கூடாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: நவாஸுபின் கல்ம்ஆன்(ரழி) நூல்:ஷரஹுஸ்ஸுன்னா

தங்களுடைய இந்த சூழ்நிலையில் அல்லாஹ்வே! உனது நாட்டம் என்று சொல்லிவிட்டு தொழாமல் இருந்து விட்டு அல்லாஹ்விடம் தப்பித்துக் கொள்ளலாம் என்று கருதுகிறீர்களா? இது என்ன? இதைவிட மிகச்சிக்கலான சூழ்நிலையில் நமது சகோதரர்களில் பலர் மாட்டிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களுக்கு இறை அச்சம் இறை உணர்விருப்பதால் அல்லாஹ்வின் கடமைகளை அலட்சியம் செய்து விட்டிருப்பதற்கு துணிவில்லை. அதே நேரத்தில் தமது வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்றும் கருதுகிறார்கள். இத்தகையோர் பின்வரும் ஹதீஃத் கவனிப்பார்களாக!

இவ்வுலகத்தை நேசிக்கும் ஒருவர் மறுமை வகையில் சிரமத்தை மேற்கொள்ள வேண்டியராயுள்ளார். மறுமையை நேசிக்கும் ஒருவர் இவ்வுலக வகையில் சிரமத்தை மேற்கொள்ள வேண்டியவராயுள்ளார். எனவே நீங்கள் அழிந்து போகக்கூடியதைப் பார்க்கினும் சதா நிலைத்திருக்கக் கூடியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வீர்களாக!” என்று  நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா(ரழி), நூல்கள்: அஹ்மத், பைஹகீ.

இவ்வாறே வல்ல அல்லாஹ் மேற்காணும் வசனத்தில் தனது உலகை மிக விசாலமாகப் படைத்து விட்டு “ஈமான் கொண்டிருக்கும் எனது அடியார்களே!” என்று பெருமையாக அழைத்து என் உலகம் மிக விசாலமானது. (நீங்கள் குறுகிய மனப்பான்மையில் எதற்கும் தயங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை) நீங்கள் என்னையே வழிபட்டு, எனக்கு மட்டும் (வேறு யாருக்குமின்றி) அடியார்களாகி விடுவீர்களானால் உங்களை நான் எங்கும் வாழ வைத்துக் காட்டுவேன். காரணம் என் உலகம் மிக விசாலமானது என்று கூறி தமது எஜமானாகிய அவனை நாம் நம்பிச் செயல்படுவதற்காக நம்மை அழைக்கிறான்).

 

 

நபி(ஸல்) அவர்களோ, “படைத்த இறைவனுக்குமாறு செய்யும் வகையில் படைக்கப்பட்டுள்ள எந்த மனிதருக்கும் வழிப்பட்டு நடப்பது கூடாது” என்று மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். ஆகவே உங்கள் முதலாளி முஸ்லிமாயிருந்தால், அவரிடம் பணிவன்புடன் கெஞ்சிக் கேட்டுப்பாருங்கள்! அநேகமாக வழிபிறந்துவிடும்; இல்லையென்றால் உங்களால் இயன்றவரை தொழுகையை விடாது தொழுதுகொண்டு, பொறுமையுடன் இருந்து அல்லாஹ்விடம் தங்கள் தேவையைக் கேட்டுக் கொண்டிருங்கள். அல்லாஹ் அதற்கான வழிவகையைச் செய்யப் போதுமானவனாகும்.

 

“எவர் அல்லாஹ்வை அஞ்சி நடக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (தக்கதோர்) வழியை உண்டாக்கி விடுவான். மேலும் அவருக்கு அவர் நினையாப் புறத்திலிருந்து வாழ்க்கை வசதிகளையும் அளிப்பான். எவர் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறாரோ அவருக்கு அவனே முற்றிலும் போதுமானவன்”. அல்குர்ஆன் 65:2,3)

“ஈமான் கொண்டவர்களே! பொறுமையுடனும் தொழுகயுடனும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்”. அல்குர்ஆன் 2:153

****************

Next post: