மாற்று மதத்தவர் ஒவ்வொரு நாளும் “வணக்கம்” என்கிறார். நான் பதிலுக்கு “வணக்கம்” என்று கூறலாமா?

in 1996 ஆகஸ்ட்,ஐயமும்! தெளிவும்!!,கேள்வி-பதில் (தொகுப்பு)

ஐயமும்! தெளிவும்!! 

ஐயம்: மாற்று மதத்தவர் என்னைப் பார்த்து காலையில் ஒவ்வொரு நாளும் “வணக்கம்” என்கிறார். நான் பதிலுக்கு “வணக்கம்” என்று கூறலாமா?

    பதிலுக்கு “வணக்கம்” கூறுவது தவறாக தெரிகிறது. காரணம் அவர் என்னை நோக்கி வணங்குகிறேன்! (வணக்கம்) என்பதும் நான் பதிலுக்கு வணக்கம் (வணங்குகிறேன்) என்பதும் சரியாகப் புலப்படவில்லை.

    நபிவழியில் நான் அவருக்கு பதில் எவ்வாறு கூறுவது? மற்ற சகோதரர்களும் மாற்று மதத்தினரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவு தாருங்கள்.

கீழக்கரை: முஹம்மத் மதார், அபுதாபி.

தெளிவு: அத்வைத கொள்கையின்படி அதாவது மனிதனும் தெய்வமாகின்றான் என்ற கொள்கைப்படி மனிதனை மனிதன் வணங்கும் அதாவது “வணக்கம்” என்று கூறும் பழக்கம் ஹிந்து சகோதரர்களிடம் நடைமுறையில் இருக்கிறது. படைத்தவன் வேறு; படைக்கப்பட்டவை வேறு; இரண்டும் ஒன்று பட முடியாது என்ற உறுதியான  கொள்கையுடையவர்கள் முஸ்லிம்கள். எனவே மனிதனுக்கு மனிதன் வணக்கம் செலுத்தும் தவறான பழக்கம்” இஸ்லாம்” அனுமதிக்கும் ஒன்றல்ல. இதைத் தெளிவாக நம்மோடு பழகும் ஹிந்து சகோதரர்களுக்கு நயமாக எடுத்துரைக்கும் கடமை நமக்குண்டு.

அவர்கள் நமக்கு வணக்கம் தெரிவிக்கும் போது வணங்கப்படுவதற்குரிய தகுதி எனக்கில்லை; படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்; எனவே என்னைப்பார்த்து ‘வணக்கம்’ என்று கூறாதீர்கள். நீங்கள் விரும்பினால் ”ஸலாம்” என்று கூறுங்கள் என்று அழகாக அறிவுரை பகரலாம். “ஸலாம்” – என்றால் சாந்தி. சாந்தியை அமைதியை விரும்பாதார் எந்த மதத்திலும் இருக்க முடியாதே. எப்போதாவது நம்மைச் சந்திப்பவரை விட்டு விட்டாலும் தினசரி நம்மைச் சந்தித்து அன்புடன் பழகும் மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தின்  சிறப்பை எடுத்தியம்புவது நமது கடமையாகும். உங்களோடு தினசரி பழகும் அந்த சகோதரருக்கு இதமாக இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்.

Previous post:

Next post: