ஒருவனை மட்டுமே வழிபடும் உண்மை முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள்!

in 2022 ஆகஸ்ட்

ஒருவனை மட்டுமே வழிபடும் உண்மை முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள்!

ஷரஹ் அலி

எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் சேர்த்து நாகூர், ஏர்வாடி, பொட்டல்புதூர் இவை போன்ற கற்பனை மண்ணறைகளையும், கற்பனை தெய்வங்களையும் இணைத்து இணை வைத்து வணங்கியதால்தான் குறை´கள், காஃபிர்களானார்கள், நிரந்தர நரகவாதியானார்கள். அதேபோன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு அணுவின் முனை யளவு கூட சம்பந்தமே இல்லாத ஏர்வாடி நாகூர் போன்ற தர்காக்களில் பறக்க விடும் இந்த கற்பனைக் கொடிகளின் மீதும் கற்பனை கப்ருகளின் மீதும் நம்பிக்கை வைப்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வினி டத்தில் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.

மேலும் அவர்கள் இணைவைப்பவர் களாக இருக்கிற நிலையில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. (குர்ஆன்:12:106)

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்’ என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக!) (குர்ஆன் 31:13)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர் களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சய மாக மிகவும் பெரிய பாவத்தையே கற் பனை செய்கின்றார்கள். (குர்ஆன் : 4:48)

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகி றார்கள். இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை’ என்றும் கூறுகிறார்கள். அதற்கு நீர், “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்’ என்று கூறும்.  (அல்குர்ஆன்: 10:18)

எனது அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

பாவங்களிலே மிகமிக மோசமான பாவமான மேற்கண்ட தர்கா வழிபாட்டை விட்டு முற்றிலும் நீங்கி எல்லாம் வல்ல அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவன் ஒரு வனை மட்டுமே வழிபடும் உண்மை முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள். உங்களுடைய மரணத்திற்கு முன்பாக, மார்க்கத்தை முழுமையாக விளங்(கி அல்லாஹ்வின் மன்னிப்பை பெற முயற்சி செய்யுங்கள். மாறாக) எங்களுக்கு முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மட் டும் போதாது. மிர்சா குலாம் அஹமத் காதியானி என்பவரால் தான் நாங்கள் மார்க் கத்தை முழுமையாக விளங்க முடியும் என்று கூறி காதியானிகள் அல்குர்ஆன் 5:3, 16:44,64 போன்ற வசனங்களை நிராகரிக்கின்றனர்.

அதேபோல் ஹனஃபியாக்கள் நபி (ஸல்) அவர்கள் மட்டும் போதாது. இமாம் அபூ ஹனீஃபாவும் வேண்டும் என அன் னாரை முன்னிலைப்படுத்தி அல்குர்ஆன் 5:3, 16:44,64 வசனங்களை நிராகரிக்கின்ற னர். இப்படியே ஷாஃபி, ஹன்பலி மாலிகி போன்ற மத்ஹபினரும், அதேபோல் வீனினிலு, வீஹிவீமூவினர் அண்ணன் பீஜையையும் இவ்வாறு அந்தந்த பிரிவு இயக்கத்தினர் அவரவர்களின் தலைவரை முன்னிலைப் படுத்தி மேற்கண்ட அல்குர்ஆன் வசனங் களை புறக்கணிக்கின்றனர்.

இவ்வாறான புறக்கணிப்பின் காரண மாக நமது சமுதாயத்தினருக்கு கிடைக்க வேண்டிய அல்லாஹ்வின் உதவி தூரமாகி இந்துத்துவா பயங்கரவாதிகளின் கொடுமை களுக்கு நமது சமுதாயம் பலியாகிக் கொண் டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த இழிவு நீங்க வேண்டு மானால் அதற்கு ஒரே ஒரு வழி நமது சமுதாயம் அனைத்துப் பிரிவு இயக்கங் களின் தலைவர்களை கண்டிப்பாக புறக் கணித்து விட்டு அல்குர்ஆன் 22:78 வசனத் தின்படியும் புகாரி 7084 நபிமொழியின் படியும் ஒரே அமீரின் கீழ் ஒரே அல்முஸ்லி மீன் சமுதாயமாக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

இல்லையயன்றால் காவிப் பயங்கரவாதி அமித்ஷா கூறியபடி இன்னும் நாற்பது ஆண்டுகளில் மத்தியில் பாஜக ஆட்சிதான் என்பது மட்டுமல்ல. நானூறு ஆண்டுகள் கூட நீடிக்கலாம். அவ்வாறு நீடிக்கும் காலமெல்லாம் நமது சமுதாயம் தொடர்ந்து இந்துத்துவாவினரின் பயங்கரவாதத்தை, கொடுமைகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எனவே எனது அருமை இஸ்லாமிய சமுதாயமே விரைவாக சிந்தித்து உடன டியாக முடிவெடுத்து ஒரே சமுதாயமாக ஒன்றிணையுங்கள்! பின்பு பாருங்கள்! நமக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவி வருவதில் எந்தத் தடையும் இருக்காது! தடை என்பதே இல்லை!!

மேற்கூறிய அல்குர்ஆன் வசனங்கள் வருமாறு:

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை சம்பூரணமாக்கினோம். மேலும் என்னுடைய அருட்கொடையையும் உங்களுக்கு நிறைவு செய்து விட்டோம். இன்னும் இஸ்லாமிய மார்க்கத்தையே உங்களுக்காக நாம் தேர்வு செய்துவிட்டோம்.  அல்குர்ஆன் 5:3

தெளிவான அத்தாட்சிகளையும், நெறிநூல்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர் களுக்கு அருளப்பட்டதை (முஹம்மது நபி யாகிய) நீங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத் துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காக வும் உமக்கு இந்நெறிநூலை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 16:44)

அல்குர்ஆனை தெளிவுபடுத்தும் அதிகாரம் நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது.

(நபியே!) அன்றியும், அவர்கள் எவ் வி­யத்தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார் களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இந்நெறிநூலை இறக்கினோம். இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ரஹ்மத்தாக வும் (அருளாகவும்) இருக்கிறது.   (அல்குர்ஆன் 16:64)

இஸ்லாமிய மார்க்கத்தை தெளிவாக்கி நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரே தலைவர் நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மட் டும்தானே தவிர குலாம் அஹ்மது காதி யானியோ அல்லது இமாம் அபூ ஹனீஃபாவோ அல்லது புரோகிதர்களோ அல்லது வேறு எந்த மனிதரும் கிடையவே கிடையாது.

Previous post:

Next post: