சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்
அபூ அஸீம், இலங்கை
ஜூலை மாத தொடர்ச்சி…
போர் செய்வதற்காக “பைஅத்” எனும் வாக்குறுதி செய்த பின்னரும் பொறுமை வேண்டும்:
(நபியே!) நிச்சயமாக (ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது குறைஷயரின் தாக்குதலை எதிர்த்து போர் செய்வதற்காக) உம்மிடம் (பைஅத்) வாக்குறுதி செய்கின்றார்களே! அத்தகையோர் அவர் கள் (பைஅத் எனும்) வாக்குறுதி செய்வ தெல்லாம் அல்லாஹ்விடம் தான். அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரங்களுக்கு மேல் இருக்கின்றது. ஆகவே எவர் (பைஅத் என்னும் அவ்வாக்குறுதியை) முறித்து விடு கின்றாரோ, அவர் தனக்குக் கேடாகவே (அதனை) முறித்து விடுகின்றார். இன்னும் எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியைப் (பொறுமையுடன்) பூர்த்தியாக்கி வைக்கின்றாரோ அப்பொழுது அவருக்கு அல்லாஹ் மகத்தான(நற்) கூலியை (நிச்சயமாகக்) கொடுப்பான். (48:10)
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டளவில், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதாவது “நபியவர்களும், அவர்களது தோழர்களும், புனித ஹரம் பள் ளிக்குள் நுழைகின்றார்கள். கஃஅபாவின் சாவியைப் பெறுகின்றார்கள் அனைவரும் கஃபாவை வலம் வந்தபின்னர் தங்களது உம்ராவை நிறைவு செய்கின்றார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்கின்றார்கள். சிலர் முடியைக் குறைத்துக் கொள்கின்றார் கள். இவ்வாறு தான் கண்ட கனவை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் கூறியபோது அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அதே ஆண்டு உம்ராவிற்காகப் புறப்பட்டுச் சென் றார்கள். பாதி வழியிலேயே இணைவைப் பாளர்களால் தடுத்து நிறுத்தப் படுகின்றார் கள். சமரசப் பேச்சுவார்த்தைக்காக மக்கா வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உஸ்மான் (ரழி) அவர்களும் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி பரவியபோதே இந்த “”பைஅத்துர் ரிள்வான்” எனும் சத்தி யப் பிரமாண வாக்குறுதி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் நிறைவேற்றப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு பார்க்க: 48:18,25,26, புகாரி: 2731,2732,4840-4843, 4150, 4154, 4171, முஸ்லிம்: 1784,1856, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 498-506, 515-517, 525-549, அர்ரஹீக் அல்மக்தூம்: 410-426, முஸ் னத் அஹ்மத், முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக்.
அந்தச் சம்பவத்தின்போது, ஹுதைய் பியாவின் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். உஸ்மான்(ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார் கள் என்ற வதந்தி பரவியது. சமாதான ஒப் பந்தத்தில் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்’ என்று எழுதுவதற்குத் தடை விதித் தார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்ற வாசகத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
உம்ராவின் எண்ணத்தைக் கைவிட்டு விட்டுக் குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது உம்ராவை நிறைவேற்றாமல் எவ்வாறு என்றெண்ணிய நபித் தோழர்களில் ஒருவர் கூட அதற்கு முன்வரவில்லை. அதுபோலவே, தங்களது தலைக்கு மொட்டை அடித்துக் கொள்வதற்கும் உம்ராவை நிறைவேற்றாமல் எவ்வாறு என்றெண்ணியே அவர்களில் யாரும் முன் வரவில்லை.
வெளியரங்கத்தில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பாதகமான ஒப்பந்தம் ஒன்று எழுதப்பட்டு விட்டது என்றதொரு கருத்து நிலவியது. அதனால் அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத் தியத்திலும் இருப்பது உண்மைதானே?
நம்மில் கொல்லப்பட்டவர்கள் சுவ னத்திலும், அவர்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள் என்பது உண்மைதானே? என்று உமர்(ரழி) அவர் கள் கேட்டார்கள். பின்னர் கோபத்துடன் எழுந்து சென்று அபூபக்கர்(ரழி) அவர்களிடமும் அதேபோன்று அதே கேள்வியைக் கேட்டார்கள். அப்போது (நபியே! ஹுதை பிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலமாக) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றி யைத் தந்தோம். (48:1,2) என்ற வசனம் அருளப்பட்டது. உடனே நபியவர்கள் ஒருவரை அனுப்பி அவ்வசனத்தை உமர்(ரழி) அவர்களிடம் ஓதிக்காட்டும்படி கூறினார்கள். அதைக் கேட்டுவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்த உமர்(ரழி) அவர்கள் “அல்லாஹ் வின் தூதரே! இது வெற்றியான விஷயமா?’ என்று கேட்டார்கள். (அர்ரஹீக் அல்மக்தூம் 410-426)
மேலும் அவர்கள் எத்தகையோர் என் றால் அல்லாஹ்(வின் திருநாமம்) கூறப் பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத் தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற் படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும் தொழுகை யைச் சரிவரக் கடைபிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராக வும் இருப்பார்கள். (22:35) எனும் தொடருக்கு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! சோதனைகள் வரும்போது நாம் பொறுமையைக் கடைபிடித்தே தீர வேண்டும் இல்லையேல் மன உளைச்சல் ஏற்பட்டு நாம் அழிந்து போக வேண்டியதுதான் என்று ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்6, பக். 74-77)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சய மாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே யிருக்கும். (2:45) இறைத்தூதர் அய்யூப் (அலை) அவர்களைப் போல, (38:41-44) இறைத்தூதர் அய்யூப்(அலை) அவர்கள் வாழ்க்கையில் மிகவும் சோதனைகளைத் தாங்கினார்கள். சுமார் பதினெட்டு ஆண்டு களுக்கும் மேலாக மிக நீண்ட காலம் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு உறவுகளைப் பிரிந்து அல்லல்பட்டார்கள். ஆனாலும் அத்துணை சோதனைகளையும் பொறுத்தார்கள். எந்த அளவுக்கென்றால் அன்னாரின் உடலில் இருதயத்தைத் தவிர மற்ற பாகங்களில் ஓர் ஊசி நுழையும் அள வுக்கேனும் ஒரு சிறு இடம்கூட சுகமாக இல்லை. அன்னாரை உறவினர்கள், நண்பர் கள், அந்நியர்கள், என எல்லோரும் உதறிச் சென்றுவிட்டனர் அவர்களின் மனைவி யைத் தவிர. (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 7, பக்கம் 848)
மனைவியோடு கோபம் ஏற்படும்போதும்:
ஒரு புடி புல் (கற்றையை) உமது கையில் எடுத்து அதைக்கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக! நீர்(உமது) சத்தியத்தை முறிக்கவேண்டாம் (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரை பொறுமை உடைய வராக கண்டோம். அவர் சிறந்த நல்லடியார். நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார். (38:44)
அய்யூப்(அலை) அவர்கள் தமது துணைவியார் மீது கோபம் கொண்டிருந்தார்கள். அவருடைய துணைவியார் செய்த ஏதோ ஒரு காரியமே அவரைக் கோபம் கொள்ளச் செய்தது. ஆனாலும் பொறுமை கொண்டார்கள். மேலதிக விபரங்களுக்கு (பார்க்க. 39:41-44, தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்7, பக்கம் 848-855)
மேலும் இன்னும், இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே!) நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர் களே! (21:85)
பின்னர், இறை நம்பிக்கை கொண்டு பொறுமையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். (90:17)
இன்னும் அவர்கள் பொறுமையுடன் இருந்து, நமது வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்டபோது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர் களை, இமாம்களை அவர்களில் நின்றும் உண்டாக்கினோம். (32:24)
பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார். துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன. பிறகு அவர் (பொறுமையுடன் தமது துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார். (12:84)
மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர். எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்துவிடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை, (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை, அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான். (3:146)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறியதாவது: (முற்கால) இறைத் தூதர்களில் ஒருவரின் நிலையை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருந்ததை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அந்த இறைத் தூதரை அவருடைய சமுதாயத்தார் அவரை இரத்தம் சிந்த அடித்தார்கள். அவரோ தமது முகத்திலிருந்து வடிந்த இரத்தத்தைத் துடைத்தபடி, “இறைவா! எனது சமுதாயத்தாரை மன்னித்துவிடு. ஏனெனில் அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார் என அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 3477, முஸ்லிம் 3668, 1792, ரியாளுஸ் ஸாலிஹீன் 36)
சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீதில் கூறியிருப்ப தாவது: நான் “அல்லாஹ்வின் தூதரே! மக்களிலேயே மிகக் கடுமையான(சத்திய) சோத னைக்கு உள்ளானவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இறைத் தூதர்கள் அடுத்து (அவர்களைப் போன்ற) சிறந்தவர்கள் பிறகு (அவர்களுக்கு அடுத்த) சிறந்தவர்கள் (எவ் வாறெனில்) ஒருவர் தாம் கொண்டுள்ள (ஏகத்துவ) மார்க்கப் பற்றுக்கு ஏற்ப (வாழ்க்கையில் சத்திய) சோதனைக்கு உள்ளாவார் கள். “இறுதியில் அவர் பாவமே இல்லாத நிலையில் பூமியில் நடப்பார்” என்று அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித் தார்கள். (திர்மிதி, இப்னு மாஜா, நஸயீ, தாரிமீ, இப்னு ஹிப்பான், ஹாக்கிம், ஃபத்ஹுல் பாரீ, புகாரி, பாகம் :6, பக்கம் 316, பாடம் மூன்றின் சிறி குறிப்புப் பகுதி ஐந்தாவது)
நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக் கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல் லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். எனவே உங்களில் பொறுமை யும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள். உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு அவர்க ளில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள் வார்கள். (ஏனெனில்) அல்லாஹ் பொறுமை யாளர்களுடன் இருக்கின்றான். (8:66)
இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர் களது காலத்தில் அன்றைய ஈராக்கின் தலை நகரான “பாபில்’ எனும் நகரத்தில் மாபெரும் வல்லரசைப் பெற்றவனாக; ஆணவம், அகம் பாவம், அடக்குமுறை, அக்கிரமம் என அனைத்து அழிச்சாட்டியமும் கொண்டு “”தானே இறைவன் என்றும், தன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் வாதிட்ட வனாகவும் மிக நீண்ட நாட்களாகிய நானூறு ஆண்டுகளாக அப்பிரதேசங்களை ஆட்சி புரிந்து வந்த சர்வாதிகாரியானவனும் ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆட்சி செய்த அரசர்கள் நால்வர்களில் ஒருவனும்… (2:258) முஜாஹித்(ரஹ்), கத்தாதா(ரஹ்), கத்தீ (ரஹ்), ஸைத் பின் அஸ்லம்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6 பக்.653, சிறு குறுப்பு: ஐந் தாவது பாகம் 5, பக்.897,
சிறு குறிப்பு: 49ஆவது பாகம் 1, பக்.838-842) ஆகிய “நம்ரூத்’ பின்கன் ஆன் என்ற அரசனுடைய ஆளுகையின் கீழ் பதினாறு வயதேயான இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்பில் தூக்கி வீசுவதற்காக, அவர்கள் எல்லோரு மாக அதிக அளவிலான விறகுகளைச் சேக ரித்து நிலத்தில் பெரியதொரு குழி தோண்டி அதில் விறகுகளைப் போட்டுத் தீ மூட்டி னார்கள். இதற்கு முன்னர் அப்படியயாரு நெருப்பு மூட்டப்பட்டிருக்காது எனும் அள வுக்குப் பெரிய தீப்பொறிகளும் உயரமான தீப்பிழம்புகளும் அதிலிருந்து வெளிப்பட் டன. அதன் அருகில் கூட செல்ல முடியாது, அதனால் “குர்து’ இனத்தைச் சேர்ந்த ஒரு பாரசீகக் கிராமவாசியின் யோசனையின் பேரில் இப்ராஹீம்(அலை) அவர்களை ஒரு கவன் பொறியில் தட்டில் அமரவைத்துத் தீக்குழியில் வீசி எறிந்தார்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)