இஸ்லாமிய காலண்டர் கலந்தாய்வு கூட்ட அழைப்பு!!

in 2022 ஆகஸ்ட்

அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்

இஸ்லாமிய காலண்டர் கலந்தாய்வு கூட்ட அழைப்பு!!

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

கலந்துரையாடும் சகோதரர்கள் : சகோதரர் றீ.க்ஷி.அப்துர்ரஹ்மான் மற்றும் ம்r.பு. முஹம்மது அலி

இடம் : சகோதரர் ம்r.பு.முஹம்மது அலி அவர்கள் “மருத்துவமனை’

முகவரி: 27/43, கான்மியான் சந்து, பாலக்கரை, திருச்சி-620008.

தலைப்பு: ஹிஜ்ரி கமிட்டியின் ஹிஜ்ரி நாள்காட்டியில் குறைபாடுகள் பற்றிய கலந்துரையாடல்.

இருசாராரும் கணக்கிடுவதிலும், நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்பதிலும் ஒத்த கருத்து உடையவர்களே!

கருத்து வேறுபாடு: எதனை மையப்படுத்தி கணக்கிடுவது இஸ்லாமிய அடிப்படை என்பதும், நாளின் ஆரம்பம் மற்றும் நேர கணக்கீட்டையும் எதன் அடிப்படையில் கணக்கிடுவது, எதனை மையப்படுத்தி கணக்கிடுவது என்பதையும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத் அடிப்படையில் கலந்துரையாடல். இது குறித்து கலந்தாலோசிக்க அனைவரும் வருகை புரிந்து ஆய்வும் ஆலோசனையும் வழங்கவும் தங்களின் சந்தேகங்களை கேட்கவும், விளக்கம் பெறவும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஹிஜ்ரி கமிட்டி சகோதரர்களும் மற்றும் மாற்றுக் கருத்துள்ள அனைத்து சகோதரர்களும் வந்து கேள்வி கேட்டு விளக்கம் பெற்று கலந்து கொண்டு ஆலோசனையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

 

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்

 1. சுவனத்தில் அணிவிக்கப்படும் பட்டா டைகளின் பெயர்கள் என்ன?
  1. சுன்துஸ், 2. இஸ்தப்ரக். குர்ஆன் 18:3
 2. நரகவாசிகளுக்கு கொடுக்கப்படும் நீர் என்ன?
  உருக்கப்பட்ட செம்பைப் போன்ற சூடான நீர். குர்ஆன் 18:29
 3. தாகூத் என்றால் என்ன?
  அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவை குர்ஆன் 4:51
 4. இறைவனின் கணக்கின்படி ஒருநாள் என்பது எத்தனை வருடங்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
  50,000 ஆண்டுகள். குர்ஆன் 70:4
 5. உயிரினங்களை எதிலிருந்து படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
  நீரிலிருந்து. குர்ஆன் 21:30
 6. அல்லாஹ் கீழ்வானத்தை எவ்வாறு அலங்கரித்துள்ளதாக கூறுகிறான்?
  விளக்குகளால். (நட்சத்திரங்களால்) குர்ஆன் 41:12
 7. மனிதனுக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடியவை எவை?
  பார்வைகளும், தோல்களும். குர்ஆன் 41:20
 8. தாரிக் என்றால் என்ன?
  அது ஒரு இலங்கும் (தெளிவான ஒளி தரும்) நட்சத்திரம். (குர்ஆன் 86:3)
 9. உம்முல் குரா என்றால் என்ன?
  நகரங்களின் தாயாகிய மக்கா. குர்ஆன்6:52
 10. மறுமை நம்பிக்கை கொள்ளாதவரின் நிலை எவ்வாறு இருக்கும்?
  வேதனையாலும், தூரமான வழிகேட் டிலுமே இருப்பார்கள். குர்ஆன் 34:8
 11. “லவ்ஹுல் மஹ்பூல்’ என்றால் என்ன?
  தெளிவான பதிவேடு. குர்ஆன் 34:3
 12. ஸபஃ நாட்டின் இளவரசி சுலைமான் நபியை காணாதவரை அவர் எந்த நிலையில் இருந்தார்?
  இறைவனை நிராகரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தார். குர்ஆன் 27:43
 13. (ஸமூது கூட்டத்தினரான) ஹிஜ்ர்வாசிகள் வீடுகளை எவ்வாறு அமைத்துக் கொண்டார்கள்?
  மலைகளை குடைந்து வீடுகளை அமைத்துக்கொண்டார்கள். குர்ஆன் 15:80,82
 14. நேரான பாதையில் நிச்சயமாக வழி நடத்தப்படுபவர் யார் என அல்லாஹ் கூறுகின்றான்?
  அல்லாஹ்வை (இஸ்லாமை) பலமாகப் பற்றிக் கொள்பவர். குர்ஆன் 3:101
 15. அல்லாஹ்வின் உபதேசத்தைப் புறக் கணிப்பவர் மறுமை நாளில் எவ்வாறு எழுப்பப்படுவார்?
  குருடனாக. குர்ஆன் 20:124
 16. இந்த சமுதாயத்துக்கு முஸ்லிம் என்று பெயர் வைத்தவன் யார்?
  அல்லாஹ். குர்ஆன் 22:78
 17. மனிதர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பற்றி எந்த நிலையில் இருக்கின்றனர்?
  அலட்சியமாகவே இருக்கின்றனர். குர்ஆன் 10:92
 18. வானத்தையும், பூமியையும் அல்லாஹ் எதற்காக படைத்தான்?
  யார் அழகிய செயலுடையவர் என சோதிப்பதற்காக. குர்ஆன் 11:7
 19. உண்ணத் தகாத(ஹராமான) மாமிசங் கள் எவை?
  தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதாருக்காக அறுக்கப்பட்டவை. குர்ஆன் 2:173
 20. ஹம்ரி என்றால் என்ன?
  மது. குர்ஆன் 2:219

Previous post:

Next post: