தலையங்கம் : வானத்தை தொட ஆசைதான்… ஆனால்…? தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அன்றாடம் கூட்டணியைப் பற்றியும், தொகுதி பங்கீடு பற்றியுமான செய்திகள் தலையங்கமாக உள்ளன. மேலும், தேர்தல் காலங்களில் பேசு பொருளாக இருப்பது இஸ்லாமியர்களின் இஸ்லாமிய கட்சிகளின் நிலையுமாகும். அதாவது இஸ்லாமியர்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க.விற்கு வாக் களிப்பவர்கள் என்பதாகும். மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மைக்கு யார் காரணம்? என்றால் தி.மு.க.தான் என்பதாக எல்லோரும் சொல்லும் வாய்மொழி வார்த்தையாகும். இது நகைப்புக்குரிய ஒன்றாக உள்ளது. உண்மை என்னவென்றால்; […]
ஈத் – பெருநாள் கொண்டாட்டம்! – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகக் கொண்டாட அனுமதி வழங்கி இருக்கிறான். ஆண்கள் மஹல்லா பள்ளிகளிலும், பெண்கள் கடமையான ஐங்கால தொழுகைகளை தங்கள் வீடுகளிலும் தொழுது கொள்ள அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று தொழத் தடுக்கப்பட்ட மாதவிடாய் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால், தங்களின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதற்கு உரிய ஆடைகள் இல்லாத […]
அல்குர்ஆனின் வழியில் அறிவியல்….. “நிலத்தில் மிதக்கும் மலைகள்” எஸ். ஹலரத் அலி மறு பதிப்பு : இஸ்லாம் அறிவியல் உண்மைகளை அரவ ணைத்துச் செல்லும் மார்க்கம். இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூல் அல்குர் ஆனோ, அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கிய ஆய்வுப் பெட்டகமாக விளங்குகிறது. இன்றைய நவீன அறிவியல் கருத்துக்கள் அடங்கிய வசனங் கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. அவ்வசனங் களில் ஒன்றுதான். “அன்றியும், மலைகளைப் போல் உயர மாகச் செல்லும் […]
என் மகனும் ஆலிமானால்…! அ. நஜ்முத்தீன் உலக அளவில் சுமார் 53 முஸ்லிம் நாடுகள் (ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்டவை) உள்ளன. இப்போதுள்ள (2025ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி) உலக மக்கள் தொகை சுமார் 800 கோடி பேரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 200 கோடி பேருக்கு மேல் உள்ளனர். மேற்கண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொண்டதால் வழிபாடு செய்வதற்காக (தொழுகையை நிறைவேற்றுவதற்காக) உலக முழுவதும் சுமார் 37 லட்சம் பள்ளிவாசல்கள் உள்ளன. இந்தோனிசியாவில் மட்டும் சுமார் 8 லட்சம் பள்ளிவாசல்கள் […]
மனப்போக்கு… – பசிர் அஹமது மறு பதிப்பு : “அமல்கள் யாவும் எண்ணங்கள் பொறுத்தே”. அறிவிப்பவர்: உமர்(ரழி), நூல்கள்: புகாரி1, முஸ்லிம் 3530 இந்த ஹதீதை பெரும்பாலான முஸ்லிம்கள் அறிவார்கள். நிய்யத் என்று வார்த்தைகளால் மொழிய வேண்டியதில்லை. நினைத்தாலே போதும் என்ற அளவில் பல மார்க்க அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் நம் நெஞ்சில் நிறைந்தவை. மிஞ்சி மிஞ்சிப் போனால், தொழுமுன் “உஸல்வீ ஸலாத்தஸ் ஸுப்ஹு” என்பன போன்ற சில அரபி சொற்களை வாயால் மொழியும் சடங்காக “நிய்யத்தை” […]
‘END OF LIFE’ என்பது வாழ்வின் எல்லையா? வாழ்க்கையின் எல்லையா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் மனிதன் மற்றும் உயிரினங்கள் உயிரோடு வாழ்ந்து மரணித்த காலத்தை “வாழ்வின் எல்லை” என்பார்கள். அதற்கு காரணம், வாழ்க்கை என்ற பயணம் பிறப்பின் மூலம் தொடங்கி மரணத்துடன் முடிவடைவதால் அவ்வாறு கருதப்படுகிறது. மேலும் மரணம் ஒவ்வொரு நாளும் நம்மிடம் நெருங்கிக் கொண்டு வருவதால் மரணம்தான் “வாழ்வின் எல்லை” என நினைக்கிறோம். அதனால் “வாழ்வின் எல்லை‘ என்பதும் “வாழ்க்கையின்‘ என்பதும் இரண்டும் ஒன்றுதான் என்பது […]
மோசஸ் என்னும் மூஸா(அலை) அவர்களின் வரலாறு! S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். இறைநூலில் அதிகமாக குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவர்தான் மோசஸ் என்னும் மூஸா(அவரை இறைவன் பொருந்தி கொள்வானாக!) அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் இறைநூலில் பல இடங்களில் விரிவாக வருகிறது. நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து […]
பெண்கள்…. கமாலுத்தீன் மறு பதிப்பு : பெண் ஒரு கரு, கதை எழுத, கட்டுரை எழுத, கவிதை எழுத, விவாதம் பண்ண… இன்னும் நிறைய வியங்களுக்கு “கரு‘. பெண் விற்பனை பொருள், விபச்சாரத்தில், பெண் சளைக்காத உழைப்பாளி, ஊன், உறக்கம் இல்லாமல் தன் குடும்பத்திற்காக உழைப்பவள். பல பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி விட்டு விடை மட்டும் காணாமல் மீண்டும் புதிராகிப் போய்விடும் வியம், பெண். இந்த முறை இந்திய மக்கள் தொகை கணக் கெடுப்பின் பெண் குழந்தைகள் […]
பெருநாள் ஜகாத்! சம்ஸுள்ளுஹா ரஹ்மானி மறு பதிப்பு : நோன்புப் பெருநாளன்று வழங்கப் பட வேண்டிய தர்மத்தை “ஃபித்ரு‘ என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா என்றும் கூறுவர்) இது கட்டாயமாக செய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்‘ என்ற பதத்தையே பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு : “எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே அந்த தர்மத்தைக் கொடுத்து விடுகின்றாரோ, அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஜகாத் […]
வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை பிப்ரவரி தொடர்ச்சி…. அதற்கு அவர்கள், “ஷிஐபே! நீர் சொல் கின்றவற்றில் பெரும்பாலானவை எங்களுக்குப் புரியவில்லை. (11:91) என்றும், “நிச்சயமாக நீர் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டோரில் ஒருவர்தான்” என்று கூறினார்கள். (26:185) மேலும், நீரும் எங்களைப் போன்ற ஒரு சாதா ரண மனிதரே! தவிர வேறு விசேசம் இல்லை என்றே கருதுகிறோம் (26:186) என்றும், நிச்சயமாக உம்மை எங்களிலேயே மிகவும் பலவீனமான மனிதராகத்தான் நாங்கள் காண்கிறோம். […]
உலகில் நாம் செய்யவேண்டியது முதலீடா? நுகர்வா? M. சையத் முபாரக், நாகை அருட்கொடை : அல்லாஹ் மக்கள் அனைவருக்கும், அனைத்து படைப்பினங்களுக்கும் தனது அருட் கொடைகளைக் கணக்கின்றி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடுவீர்களாயின், அவற்றை உங்களால் வரையறுக்கவே முடியாது. (அ.கு.14:34) அவைகளில் உலக வாழ்க்கைக்குத் தேவையானதும் இருக்கின்றன. மறுமை வாழ்விற் குரியதும் இருக்கின்றன. நாம் அதனை எவ்வாறு உபயோகப்படுத்துகிறோம் என்பதிலி ருந்து அது முதலீடா? நுகர்வா? என்பது தெரியவரும். அதில் மிக முக்கியமானதாக, […]
அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை! அவனுடைய முயற்சிக்கு ஏற்பவே பலன் கிடைக்கும்” (3:39,40) மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முக்கியமான இரண்டு செய்திகளை மேற்கண்ட வசனங்கள் கூறுகிறது. எந்தவொரு மனிதனும் முயற்சிக்கான பலனை மட்டும் பெறமுடியாது. அவனுடைய செயலுக்கான பலனைத்தான் பெறுவான். அதாவது “முயற்சி‘ & “செயல்‘ இந்த இரண்டு சொற்களும் ஒரே மாதிரி தோன்றினாலும் அவற்றின் அர்த்தத்தில் வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாட்டை யாரெல்லாம் புரிந்து […]
ரஹிமுத்தீன், குண்டூர் 1. மது மற்றும் சூதாட்டத்தினால் என்ன விளைவு ஏற்படும் என அல்லாஹ் கூறுகிறான்? சிறியபலனும், பெரும் பாவமும். அல்குர்ஆன் : 2:219 2. எதைச் செய்தால் நேரான வழி என அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வைவணங்குவதால். அல்குர்ஆன் : 3:51 3. படர்தாமரை இருந்தால் என்ன செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? ஓதிப்பார்க்க கூறினார்கள். முஸ்லிம்:4422 4. நபி(ஸல்) அவர்கள் தனது கையால் யாரையும் அடித்தார்களா? அடித்தது இல்லை. முஸ்லிம் : 4651 5. நபி(ஸல்) […]
ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்… எஸ்.எம்.அமீர், இலங்கை “கண்ணும் சிலவேளை பொய் சொல்லும்” ஆனால் துல்லியமான கணக்கீடு ஒருபோதும் பொய் சொல்லாது என நிரூபிக்கப்பட்ட அறிவியல் சொல்கிறது அதனால்தான்! இறை நம்பிக்கை கொண்டவர்களே! (தீயவனான) பாவி ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், (அது உண்மைதானா? எனத்) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில்(அதனை முழுமையாக நம்பி) அறியாத்தனமாக ஒரு கூட்டத் தினரை நீங்கள் தாக்கிவிடுவீர்கள். (என்பதனாலாகும்) மேலும் அப்படி நீங்கள் செயல்பட்ட தன் […]
அய்யம்பேட்டை A. நஜ்முதீன் மனிதர்கள் ஏமாறுவது அல்லது ஏமாற்றப்படுவது வரலாற்றில் புதிய ஒன்று அல்ல. காலம் காலமாக நடந்து வருவதுதான். காலத்திற்கேற்ப வடிவங்களும் பெயர்களும் மாறுகின்றன. டிஜிட்டல் காலத்திலும் கூட மக்கள் ஏமாறு கிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது மனிதர்களை டிஜிட்டல் அடிமையாக மாற்றி ஏமாற்றி வருகிறார்கள். ஆனாலும் மக்களில் பெரும்பாலோர் தன்னை யாரும் ஏமாற்றிவிடக்கூடாது, ஏமாறவும் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதன் காரணாக சின்ன சின்ன விசயங்களில் கூட கவனம் செலுத்துவார்கள். உதாரணமாக தள்ளுவண்டி வியாபாரிகள், […]