திரைப்படமும் இஸ்லாமும் குர்ஆன், ஹதீத் பார்வையில்…

in 2026 ஜூலை

திரைப்படமும் இஸ்லாமும் குர்ஆன், ஹதீத் பார்வையில்…

எஸ். ஹலரத் அலி

முன்னுரை : 

1. ஊடகம் ஒரு கத்தி போன்றது….

கத்தி காய்கறி நறுக்கவும் பயன்படும், கொலை செய்யவும் பயன்படும். கத்தி ஹராம் இல்லை. பயன்பாடுதான் ஹலால்–ஹராமை தீர்மானிக்கும். சினிமாவும் அப்படித்தான். குர்ஆன் சினிமாவை நேரடியாக பேசவில்லை. ஏனெனில் நபி(ஸல்) காலத்தில் சினிமா இல்லை. ஆனால் சித்திரம், கதை, பொழுது போக்கு, பெண், ஆண் கலப்பு, இசை பொய் இவை பற்றி குர்ஆன்–ஹதீத் தெளிவான கொள்கைகளை வைத்துள்ளது. அதை வைத்து தான் சினிமாவை அளக்க வேண்டும்.

2. குர்ஆன்–ஹதீதின்  ஐந்து  அடிப்படை கொள்கைகள்  :

2.1 “தஸ்வீர்” –   உருவம்  படைத்தல்:

ஹதீஸ் : “உருவம் படைப்பவர்கள் மறுமையில் கடுமையாக வேதனை செய்யப்படுவார்கள். நீங்கள்  படைத்ததற்கு  உயிர்  கொடுங்கள்‘.    புகாரி 5950

விளக்கம் : இங்கே சொல்லப்படுவது “சிலை வணக்கத்திற்காக” உருவம் செய்வது. இப்னு ஹஜர், இமாம் நவவி சொல்கிறார்கள். நிழல் இல்லாத படம் கல்வி, அடையாள அட்டைக்கு அனுமதி உண்டு. அதனால் வீடியோ, புகைப்படும் பெரும்பாலான அறிஞர்கள் பார்வையில் “அக்ஸ்‘ பிரதிபலிப்பு. ஹராம் இல்லை.

2.2 “ஹயா” – வெட்கம், ஆபாச தடை :

குர்ஆன் 24:30,31: “நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வை களை தாழ்த்திக்கொள்ளட்டும். பெண்கள் தங்கள் அலங்காரத்தை வெளிக்காட்ட வேண்டாம்…”

முடிவு : ஆண் பெண் தொட்டு நடிப்பது, அரைகுறை ஆடை, காதல் காட்சி, ஆபாச வசனம். இவை  தெளிவாக  ஹராம்.

2.3 “இசை” மஆஸிஃப் !

ஹதீத் : “என் சமுதாயத்தில் விபச்சாரம், பட்டு, மது, இசைக்கருவிகளை ஹலாலாக்கும் கூட்டம் வரும்”.   புகாரி : 55

விளக்கம் : நான்கு மத்ஹபும் இசைக்கருவி ஹராம் என்றே சொல்கிறது. இமாம் இப்னு ஹஸ்ம், கர்ளாவி போன்றோர் “தஃப் தவிர மற்றவை ஹராம் இல்லை, உள்ளடக்கம் தான் முக்கியம்‘ என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை கருத்து… பின்னணி இசை, பாடல் கூடாது குரல்,  இயற்கை  ஒலி  அனுமதி.

2.4 “கித்ப்” பொய், கற்பனை!

குர்ஆன் 31:6: “மக்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுக்க “லஹ்வல் ஹதீத்‘ –வீணான  பேச்சுக்களை  விலைக்கு  வாங்குவோர்  உள்ளனர்‘.

விளக்கம் : பொய்யான கதை, மக்களை உண்மையிலிருந்து திசை திருப்பும் கதை ஹராம். ஆனால் “நீதி போதிக்க கற்பனை கதை” அனு மதி. நபி(ஸல்) அவர்களே உவமைகள் சொல்லி யுள்ளார்கள். யூசுப் சூரா “அஹ்ஸனல் கஸஸ்” – அழகிய வரலாறு என்று குர்ஆன்  சொல்கிறது.

2.5 “இஸ்ராஃப்” – வீண் விரயம், நேரம் வீணடிப்பு : 

குர்ஆன் 17:27 : “வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள்”

ஹதீத் : “இரண்டு அருட்கொடைகள்: ஆரோக்கியம், ஓய்வு நேரம். அதில் பலர் ஏமாந்துவிடு கின்றனர்”.   புகாரி 6412

முடிவு : 3 மணி நேரம் படம் பார்ப்பது. அதில் பயன் இல்லை என்றால் “வீண்”

3. திரைப்படங்கள் மூலம் இஸ்லாத்தை முழுமையாக  காட்டமுடியுமா?

பதில் :  “முழுமையாக” முடியாது. “ஓரளவு” முடியும். ஏன் முடியாது? ஏன் ஓரளவு முடியும்?

1. இஸ்லாம் “அனுபவம்”

தொழுகை, நோன்பு, தவக்குல், இக்லாஸ் இதை நடித்து காட்டமுடியாது. உள்ளத்தின் நிலை கேமராவில் வராது.

1. வரலாறு, ஒழுக்கம் :

பத்ரு போர், உமர்(ரழி), நீதி, ஸலாஹு தீன் கருணை–இதை கதையாக சொல்லலாம். படம் உதாரணம்.

2. நபி(ஸல்) உருவம் காட்ட கூடாது.

முஸ்லிம் உம்மத் ஏகோபித்த முடிவு, நபியை நடிக்க வைக்காமல் இஸ்லாமிய வரலாறு  எடுப்பது  கடினம்.

3. தஃவா  ஆயுதம் :

2 மணி நேர படம் 200 பக்க புத்தகம் செய்யாத தாக்க்ததை செய்யும். ஈரானின்” படம்.

4. சினிமா “காட்சி ஊடகம்‘. “இஸ்லாம் செவி வழி, சிந்தனை வழி மார்க்கம். “இக்ரஃ– ஓதுவீராக‘  என்று  தான்  தொடங்கியது.

5. தீய பிம்பத்தை உடைக்க:

ஹாலிவுட் முஸ்லிமை தீவிரவாதியாக காட்டுகிறது. நாம் உண்மையான வாழ்வியலை காட்டலாம்.

சரத் : பெண் நடிக்கக் கூடாது அல்லது ஹிஜாபுடன், தொடுதல் இல்லாமல் இசை இல்லை. கற்பனை கலந்தாலும் அடிப்படை உண்மைக்கு மாறக்கூடாது. லாபம் நோக்கம் இல்லாமல் தஃவா  நோக்கம்  இருக்கவேண்டும்.

தமிழில் வந்த “ஹபீப்‘ திரைப்படம் – மார்க்க  மதிப்பீடு!

“ஹபீப்‘ படத்தின் கதை : 2022 காலக் கட்டத்தில் நடந்த ஒரு இஸ்லாமிய குடும்பம், தொழுகை. பள்ளிவாசல், ஹிஜாப், ஹலால் ஹராம் பேணும் வாழ்க்கை. சமூக அநீதிக்கு எதிரான  போராட்டம்.

4.1 ஏற்கக்கூடிய  அம்சங்கள் :

1. தஃவா நோக்கம்: முஸ்லிம் குடும்பம் எப்படி இருக்கும். ஐவேளை தொழுகை, பெரியவர்களுக்கு மரியாதை–இதை காட்டியது.

2. ஆபாசம் இல்லை : காதல் காட்சி, அரைகுறை ஆடை, இரட்டை அர்த்த வசனம் இல்லை,  பெண்கள்  ஹிஜாபுடன்.

3. சமூக செய்தி : அநீதிக்கு எதிராக போராடுவது “அம்ர் பில் மஃரூஃப்‘-நன்மையை ஏவுதல்.

4.2 மார்க்க  ரீதியாக  கேள்விக்குறி?

1. இசை : பின்னணி இசை, பாடல்கள் இருந்தன. பெரும்பான்மை அறிஞர்கள் பார்வையில் இது  தவிர்க்கப்பட  வேண்டியது.

2. ஆண், பெண் கலப்பு : நடிகர் நடிகை தொடாமல் நடித்தாலும், ஒரே உணர்ச்சிகரமான பார்வை. இது “கல்வத்‘ இல்லை என்றாலும் “ஃபித்னா‘ வாசலை திறக்கும். இப்னு உஸைமீன்: “பெண் திரையில் தோன்றுவதே “ஃபித்னா‘ ஆகவிடும்.

3. கற்பனை+உண்மை : வரலாறு இல்லாத கற்பனை கதை “இஸ்லாமிய படம்‘ என்று சொல்லி  மார்க்கம்  சொல்லாததை  சேர்த்தால்  “பித்அத்‘  ஆகிவிடும்.

4. உருவம் : நடிகர்களின் புகைப்படம் போஸ்டர், இது “தஸ்வீர்‘ வகையில் வரும். அவசியம் இல்லாமல்  செய்வது  தவிர்க்க  சொல்லப்பட்டுள்ளது.

4.3 முடிவு :  “ஹபீப்‘  ஏற்புடையதா?

“முற்றிலும் ஹலால்” என்று சொல்ல முடியாது. “முற்றிலும் ஹராம்” என்றும் சொல்ல முடியாது. “ஷிபுஹாத்‘ – சந்தேகமானது.

யாருக்கு ஏற்புடையது : சினிமா மூலம் தஃவா செய்யலாம் என்ற இமாம் கர்ளாவி. ஜாஸ்ஸாஸ்(ரஹ்) போன்றோர் கருத்தை பின் பற்றுவோருக்கு இசையை தவிர்த்து, பெண் காட்சியை  குறைத்தால்  ஏற்புடையது.

யாருக்கு  ஏற்புடையது  இல்லை:

ஸவூதி லஜ்னா, இப்னு பாஸ் கருத்துப்படி இசை, பெண் படம் எடுப்பதே கூடாது என்போருக்கு இது  ஹராம்.

நடுநிலை :  இப்னு தைமியா கூற்று :

ஆயுதம் போல் ஊடகம். தீமையை தடுத்து நன்மை ஏவ பயன்பட்டால் அனுமதி.

“ஹபீபி‘ 90% குப்பை சினிமாவை விட 100 மடங்கு பரவாயில்லை. ஆனால், “முழு இஸ்லாமிய படம்‘ என்ற தகுதி இல்லை. இன்னும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். இசையை எடுக்கவேண்டும். பெண் கதாபாத்திரம் அல்லது நிழலாக காட்டவேண்டும்.

5. முடிவுரை :   ஒரு  சமநிலை  பாதை

1. சினிமா தவிர்க்க முடியாத ஊடகம். முஸ்லிம்கள் விலகி நின்றால் எதிரிகள் நம் கதையை  தவறாக  சொல்வார்கள்.

2. ஆனால் “இஸ்லாமிய சினிமா‘ என்ற பெயரில் மார்க்க வரம்பு மீற கூடாது.

நோக்கம் தூய்மையானால் மட்டும் போதாது. வழிமுறையும் தூய்மையாக இருக்க வேண்டும்.

3. மாற்று வழி : டாகுமெண்டரி, அனி மேசன், நிழல் பொம்மலாட்டம், இதில் இசை, பெண், உருவம் பிரச்சினை இல்லாமல் தவ்பா செய்யலாம்

இறுதி வார்த்தை “நன்மையிலும், இறையச் சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் உதவாதீர்கள்‘.   அல்குர்ஆன் 5:2

சினிமா “நன்மைக்கு‘ உதவினால் பயன்படுத்து “பாவத்திற்கு‘ உதவினால் விட்டுவிடு! அல்லாஹ்  மிக  அறிந்தவன்!

Previous post:

Next post: