மனிதன் – நடமாடும் களிமண்!

in 2026 அக்டோபர்

மனிதன் – நடமாடும் களிமண்!

எஸ். ஹலரத் அலி

குர்ஆனும், அறிவியலும் ஒரு புதிரை விடுவிக்கும்போது…

“அவன் படைத்த ஒவ்வொன்றையும் அழகாக்கினான்; மனிதனைக் களிமண்ணில் இருந்து ஆரம்பித்தான்!”       அல்குர்ஆன் 32:7

இந்த ஒரு ஆயத்தில் நிலவியல், உயிரியல், வேதியியல், அழகியல் என நான்கு அறிவியல் துறைகள் அடங்கியுள்ளன. சுபஹானல்லாஹ்! இது வெறும் வர்ணனை அல்ல, நவீன அறிவியல் உறுதிப்படுத்தும் ஒரு பிரம்மாண்ட உண்மை!

மனித உடல் = களிமண்ணின் மினரல் லிஸ்ட்!

விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மனித உடலில் 60+தனிமங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான 26 தனிமங்கள் களிமண்ணிலும் உள்ளன! மேலும், மனித உடலின் நிறையில் 96% நான்கு தனிமங்களால் ஆனது.

ஆக்ஸிஜன் 65%, கார்பன்18%, ஹைட்ரஜன் 10%, நைட்ரஜன் 3%, இதில் ஆச்சரியம் என்னவென்றால், களிமண்ணின் வேதியியல் அமைப்பும் இதே தனிமங்களால் ஆனது. களிமண்ணில் உள்ளது மனித உடலிலும்  உள்ளது.

அதன் வேலை : சிலிக்கான் எலும்பு, தோல், முடி எலும்பு உறுதி, கொலாஜன் உற்பத்தி.

ஆக்ஸிஜன்  65% :உடல் சுவாசம், நீர் சமநிலை.

இரும்பு: இரத்தம் (ஹீமோகுளோபின்) ஆக்ஸிஜன் கடத்தல், கால்சியம் எலும்பு, பல் எலும்பு உறுதி.

மக்னீசியம்: தசை, நரம்பு தசை செயல்பாடு, ஆற்றல்  வளர்சிதை  மாற்றம்.

பொட்டாசியம்  : நரம்பு, இதயம் இதயத் துடிப்பு, கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ம்ஹிபு, புரதம் உயிரின் அடிப்படை.

மண்ணை ஆய்வு செய்தால் என்ன கிடைக்கும்?

அதே லிஸ்ட் மனித ரத்தத்திலும் கிடைக்கும்!

ஹிபுறீபு விஞ்ஞானியின் புரட்சிகரக் கண்டுபிடிப்பு!

2013ல் NASA விஞ்ஞானி Prof. ROBERT HAZEN தலைமையிலான ஆய்வுகள் உலகை உலுக்கியது.

களிமண் தான் உயிரின் முதல் லேப்! களிமண் படிகங்கள் தான் முதல் ம்ஹிபுவை உருவாக்கியது!

இதற்கான அறிவியல் ஆதாரங்கள் :

மான்ட்மோரில்லோனைத் களிமண் என்பது எரிமலைச் சாம்பல் சிதைவதால் உருவாகும் ஒரு கனிமம். இது மூலக்கூறுகளை திறம்பட பிணைத்து, நீண்ட மூலக்கூறுகளை (நுயிஷ்ஆலிதுerவி) உருவாக்க வினையூக்கியாக செயல்படுகிறது. களிமண் ஹைட்ரஜெல், மற்றும் பாதுகாத்து, மற்றும் செயல் முறைகளை திறம்பட மேம்படுத்துகிறது.

RNA World கோட்பாட்டின்படி ம்ஹிபு மற்றும் புரத அடிப்படையிலான உயிருக்கு முன்பாக RNA அடிப்படையிலான உயிர் இருந்தது. மான்மட்மோரில்லோனைட் களிமண் அதற்கு வினையூக்கியாக  இருந்தது.

களிமண் மேற்பரப்புகளில் Wet-dry சுழற்சிகள் மூலம் Monomers செறிவூட்டு, Peptides மற்றும் Nucleic Acids ஆக உருவாகின்றன. இதுவே முதல் செல் உருவாக்கத்தின் பாதை.

குர்ஆன் கூறுகிறது : மனிதனை ஒட்டும் களி மண்ணில் இருந்து படைத்தோம்.   அ.கு.37:11

(ஒட்டும் களிமண்) : அதே இப்னு கதீர் அவர்களின் தப்ஸீரில், ஒலிக்கும் உலர்ந்த களிமண்  என்று  விளக்கப்பட்டுள்ளது.

இன்று மருத்துவத்தில் களிமண் சிகிச்சை :

களிமண் வெறும் பழங்கால மருத்துவம் அல்ல; நவீன அறிவியல் ஆய்வுகள் அதன் ஆற்றலை உறுதிப்படுத்துகின்றன. களிமண் நச்சு நீக்கம், கால்சியம் மான்ட்மோரில்லோனைட் களிமண், பாக்டீரியா நச்சுகள், கன உலோகங்கள், ஆகியவற்றை உடலில் இருந்து  நீக்குகிறது. இது உடலில் உறிஞ்சப்படாமல் குடல் மற்றும் தோல் மேற்பரப்பில் மட்டுமே செயல்படுகிறது.

களிமண் சிகிச்சையின் பாதுகாப்பு :

ஆய்வுகளின்படி பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்தால் அத்தியாவசிய வைட்ட மின்கள் அல்லது தாதுக்களின் உறிஞ்சுதலை மாற்றாது; கல்லீரல் அல்லது சிறுநீரக நச்சுத் தன்மை  எதுவும்  இல்லை.

தோல் பராமரிப்பு : களிமண் முகமூடிகள் முகப் பருவைக் குறைக்கவும், தோல் அழற்சியைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. ஏனெனில் களிமண் Antibacterial மற்றும் Anti-Inflammatory பண்புகளைக் கொண்டுள்ளது.

நீர் பிடிப்பு : நம் உடலில் நீர் 85%, களிமண்ணில் நீர் பிடிப்பு அதிகம்! அதனால்தான் அல்லாஹ் மின்தீன்–களிமண் என்று கூறினான் வெறும் மண்  அல்ல  நீர்  கலந்த  ஈரமான  களிமண்!

உடலும், களிமண்ணும் ஒரே மூலக்கூறு, ஒன்றை ஒன்று ஈர்க்கும்! 

“அஹ்ஸன குல்ல ­ய் இன் கலக”- அழகாக்கி னான்! 

இந்த ஆயத்தின் முதல் பகுதி மிக அழகு!

அல்லாஹ் வெறும் “”படைத்தான்” என்று சொல்லவில்லை. “”அஹ்ஸன–மிக அழகாக் கினான்”,  களிமண்– பார்க்க அழுக்கு! ஆனால் அதிலிருந்து அழகான மனிதனை படைத்தான். அதே களிமண் தான் இன்று Detox, Skincare, Bone Health என்று மருத்துவத்தில் அழகுக்குப் பயன்படுகிறது! மனிதனின் மூலப்பொருள் களிமண் என்றாலும், அல்லாஹ் அதை “அஹ்ஸன‘ அழகிய வடிவில் படைத்தான். இது அவனது கருணை மற்றும் ஞானத்தின் அடையாளம்.

முடிவு : மனிதன் = நடமாடும் களிமண்! உட லில் உள்ள ஒவ்வொரு தனிமமும் மண்ணில் உள்ளது. 

மண்ணுக்குத் திரும்புவோம் : “”மின்ஹா கலக்னாகும் வ பீஹா நுஈதுகும்”       அ.கு.20:55

32:7 என்ற ஒரே ஆயத்தில் Geology+Biology+Chemistry+Aesthetics நான்கு அறிவியல் துறைகள் அடங்கியுள்ளன! இது முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு 1448 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட அறிவியல் அற்புதம். சுபஹானல்லாஹ்!

Previous post:

Next post: