2060ல் முதியவர் 19.6% அதிகரிப்பு… சிறுவர் 7% குறைவு! இஸ்லாம் கூறும் எச்சரிக்கை!! 

in 2026 அக்டோபர்

தலையங்கம் :

2060ல் முதியவர் 19.6% அதிகரிப்பு… சிறுவர் 7% குறைவு!

இஸ்லாம் கூறும் எச்சரிக்கை!! 

“உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்….

இது இன்றைய உலகின் –  Biggest Crisis :

இது பற்றி…

குர்ஆன், ஹதீதில் நேரடியாக 2 விசயம் உண்டு!

1.    குர்ஆனில் முதுமை பற்றி என்ன சொல்கிறது?

குர்ஆன் மனித வாழ்க்கையை 4 பாகங்களாக சொல்கிறது!

“அல்லாஹ்தான் உங்களை பலவீனமான நிலையில் படைத்தான், பின் பலவீனத்திற்கு பின் பலத்தை கொடுத்தான், பின் பலத்திற்கு பின் பலவீனத்தையும், நரை முடியையும் ஆக்கினான்!       அல்குர்ஆன் 30:54

மற்றொரு  வசனம் :

உங்களில் சிலர் (அர்தலில் உமுர்) மிகத் தள்ளாத முதுமை பருவத்திற்கு திருப்பப்படுவார்கள், அறிந்த பின், எதுவும் அறியாமல் போக! அல்குர்ஆன் 16:70

அதாவது! முதுமை அதிகரிப்பது, அல்லாஹ்வின், சுன்னத்துல்லாஹ், இயற்கை! ஆனால் அது முதுமையை பராமரிப்பது யார்?

இளைஞர்கள்! இளைஞர்கள் குறைந்தால் முதியவர் பராமரிப்பு யார் செய்வார்? இது தான் குர்ஆன் எச்சரிக்கும் சோதனை!

நபி(ஸல்)  அவர்கள்  துஆ  கேட்டார்கள்:

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அன் உரத்த இலா அர்தலில் உமுர்” யா அல்லாஹ்! கேவலமான முதுமையில் இருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். புகாரி 2822

2. சிறுவர் குறைவு, குழந்தை பாக்கியம் குறைவு ஹதீதில்  உண்டா?

ஆம்! இதுதான் கியாமத் நாளின் அடையாளம்!

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

“தஸவ்வஜூல் வதூதல் வலூத – அதிகம் நேசிக்கக்கூடிய, அதிகம் குழந்தை பெறக்கூடிய, பெண்களை மணமுடியுங்கள். ஏனெனில், நான் மறுமையில், மற்ற உம்மத்துகளை விட, உங்களை, அதிக எண்ணிக்கையால் பெருமைப்படுவேன்!”  அபூதாவூத் : 2050

இன்று  என்ன  நடக்கிறது?

மேற்கு ஜப்பான், கொரியா, ஐரோப்பா – Child Free, Culture!

ஒரு குழந்தை போதும்! Carrier! பணம் இல்லை! என்று குழந்தையை தவிர்க்கிறார்கள்! இதனால் தான் 2060ல் 19.6%, முதியவர் 7% சிறுவர் குறை!

இது ஹதீதில் சொல்லப்பட்ட கியாமத் அடையாளத்திற்கு நேர்மாறு! நபி(ஸல்) அதிக குழந்தை வேண்டும் என்றார்கள்.  நாம்  குறைக்கிறோம்!

3. இதற்கு தீர்வு இஸ்லாத்தில் என்ன?

அ) திருமணத்தை எளிதாக்குங்கள்:

இன்று –   திருமணம்  30  வயதில்.

சீதனம் – ஆடம்பரம்! இதனால் குழந்தை-Late!

ஆ. முதியவரை பாரம் என்று நினைக்காதீர்கள்:

குர்ஆன்: வபில் வாலிதைனி இஹ்ஸானா பெற்றோருக்கு  நன்மை  செய்யுங்கள்! அல்குர்ஆன் 46:15 

என்கிறது! முதியவர் அதிகரித்தால் அவர்கள் ரஹ்மத்!  Nursing Home அல்ல. வீடுதான் இஸ்லாமிய  தீர்வு!

இ. குழந்தை, ரிஸ்க், அல்லாஹ் கொடுப்பான்:

“வலா தக்துலூ அவ்லாதகும் கஷ்யத இம்லாக்” வறுமைக்கு பயந்து குழைந்தைகளை கொல்லாதீர்கள். நாம் தான் உங்களுக்கும், அவர்ளுக்கும் உணவளிக்கிறோம்! அல்குர்ஆன் 17:31

முடிவுரை : 2060 – Crisis – என்பது மேற்கின் விளைவு!

இஸ்லாம் சொல்கிறது :  குழந்தை அதிகம் பெறுங்கள், சமூகம் இளமையாகும்!

முதியவரை கண்ணியப்படுத்துங்கள், சமூகம்  அபிவிருத்தி  பெறும்! இல்லை என்றால் ஜப்பான் போல், “பள்ளிகள் மூடப்பட்டு முதியோர் இல்லம் திறக்கும்”

Previous post: