வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?
அபூ இஸ்ஸத், இலங்கை
பூமியில் அவர்கள் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு பிரயாணம் செய்வார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்கள் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும், அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய காதுகள் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும், நிச்சயமாக அவர்களுடைய (வெளிப்) பார்வைகள் குருடாகவில்லை, எனினும் நெஞ்சங்களிலுள்ள (அவர்களுடைய) இதயங்கள் குருடாகிவிட்டன. (அல்குர்ஆன் 22:46) என்று அல்லாஹ் சொல்வதன் மூலம் நாம் புரிந்து கொள்வது என்ன? அதாவது வெறுமனே உடலோடு மட்டும் பயணிக்காமல் உடலோடும் சிந்தனைத் திறனோடும் தான் அவர்கள் பயணம் செய்யவேண்டும், சுற்றிப் பார்க்க வேண்டும். அவ்வாறு சுற்றிப் பார்த்தால் தான் பாடம் பெறமுடியும். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் : 6, பக்கம்:101) அவ்வாறு சிந்தனை இல்லாது, உணர்வு இல்லாது, அச்சம் இல்லாது, வெறும் பார்வையை மாத்திரம் கொண்டு அப்படியான இடங்களுக்குச் செல்லக்கூடாது என்பதைத்தான் இறைத் தூதர்(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். பொதுவாக “பார்வை” என்று வரும்போது வெறுமனே அது “கண்கள்” மாத்திரம் பார்க்கும் பார்வை அல்ல. மாறாக அது சிந்தனை கலந்த பார்வையாக இருக்க வேண்டும். அதுவே இரு உலக ஈடேற்றத்திற்கான சிறந்த பார்வையாகும்.
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட (நல்லுபதேசத்)தை அவர்கள் மறந்து விடவே, (அவர்களைச் சோதிக்கும் பொருட்டு) ஒவ்வொரு பொருளின் வாயில்களையும் நாம் அவர்களுக்குத் திறந்து விட்டோம். (அவர்களுக்கு தேவையானவை அனைத்தும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன) முடிவாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தம் அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரெனப் பிடித்துவிட்டோம். அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகிவிட்டனர். (அ.கு. 6:44)
ஆகவே, அநியாயம் செய்துகொண்டிருந்த அச்சமூகத்தாரின் வேர் தூண்டிக்கப்பட்டுவிட்டது. (அவர்கள் அடியோடு அழிக்கப்பட்டனர்) இன்னும், எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வுக்கே உரியதாகும். (அல்குர்ஆன் 6:45)
(அழிந்துபோன) அவர்களுக்காக வானமும், பூமியும் (துக்கித்து) அழவில்லை. (தப்பித்துப் பாவமீட்சி தேடிடச்) சிறிது அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. (அல்குர்ஆன் 44:29) மாறாக அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்டு சுதாரிச்சுத் தப்பித்துக் கொண்ட;
“இறைத்தூதர் யூனுஸ் பின் மத்தா” (அலை) அவர்களின் சமூகத்தவர்கள்”
தமது தாயின் வயிற்றுக்குள் இருந்தபோதே அல்லாஹ்வுவைத் துதித்துக் கொண்டிருந்தவராகிய, (தஃப்ஸிர் இப்னு கஸீர் 7:785)
ஈராக்கில் உள்ள “அல்மவ்ஸில்’ நகருக்கு அருகில் “டைக்ரிஸ்’ நதிக்குக் கிழக்குப் பக்கம் கூஃபாவின் புறநகர்ப் பகுதியில் கர்பலாவை அண்டியுள்ள “நீனவா’ எனும் நகர்ப் பகுதியைச் சேர்ந்த “ஆஷீர்’ இனத்தவர்களும், யூதர்களுமாகிய, மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப் பெற்றவரான, (21:87,88, தஃப்ஸீர் இப்னு கஸீர் 4:453, 5:912-919)
பரிசுத்த குர்ஆனில் 109, வசனங்களைக் கொண்ட பத்தாவது அத்தியாயத்திற்கு இவரது பெயர் இடப்பட்டவரான, (தஃப்ஸீர் இப்னு கஸீர் : 4:453) விவிலியம் பழைய ஏற்பாட்டில் “யோனா’ என்று குறிப்பிடப்படுப வராகிய (தஃப்ஸீர் இப்னு கஸீர் 5:913, சிறு குறிப்பு 66ஆவது) அன்னாரின் பெயரில் ஓர் ஆகமம் இடம் பெற்றுள்ளவராகிய (தஃப்ஸீர் இப்னு கஸீர் 5:913, சிறுகுறிப்பு 66ஆவது)
மீன் அவர்களை விழுங்குவதற்கு முன்ன ரும், பின்னர் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னரும் இறைத்தூதராக அனுப்பப் பெற்ற வரான; (இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித் (ரஹ்), பஃகவீ(ரஹ்), சயீத் பின் ஜுபைர்(ரஹ்) மக்ஹூல்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர்:7:788)
முந்தைய சமுதாயங்களில் இவரது சமூக மக்களைத் தவிர, வேறு எந்த சமுதாயத்தாரும், எந்த ஊர்க்காரர்களும், தமது நபியை ஒருவர் விடாமல் அனைவரும் நம்பியதில்லை, அந்த அளவுக்கு ஒருவர் விடாமல் அவரது சமூகத்திலுள்ள அனைவருமே நம்பிய சமுதாயத்தைச் சேர்ந்தவரான, அதாவது அவர் எந்தச் சமூகத்தாருக்குத் தூதராக அனுப்பப் பெற்றாரோ அச்சமூகத்தார் அனைவருமே இறைநம்பிக்கை கொண்டு இவரையும் ஏற்றுக்கொண்ட தூதராகிய (10:98, 37:148, தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் 4:567-569, 7:782, 5:912-919)
இவரது சமூகத்தாரைத் தவிர வேறு ஊர்க்காரர்களும் (வேதனை வருவதற்கு முன்பே) இறை நம்பிக்கை கொண்டு அந்த இறை நம்பிக்கை அவர்களுக்குப் பயனளித்திருக்கக் கூடாதா? (இவரது சமூகத்தார்) இறை நம்பிக்கை கொண்டபோது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களிடமிருந்து நாம் அகற்றினோம். அவர்களைச் சிறிது காலம் வரை வசதி வழங்கி அனுபவிக்கச் செய்தோம். (19:98) என்று அல்லாஹ் புகழந்து பேசும் சமுதாயத்தவர்களுக்கு நபியாக அனுப் பப்பட்டவரான (தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் 4:567-569, 7:782-789, 5:912-919)
இவரது சமூகத்தாரைத் தவிர வேறு ஊர்க்காரர்களும் (வேதனை வருவதற்கு முன்பே) இறை நம்பிக்கை கொண்டு அந்த இறை நம்பிக்கை அவர்களுக்குப் பயனளித்திருக்கக் கூடாதா? (இவரது சமூகத்தார்) இறை நம்பிக்கை கொண்டபோது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களிடமிருந்து நாம் அகற்றினோம். அவர்களைச் சிறிது காலம் வரை வசதி வழங்கி அனுபவிக்கச் செய்தோம். (10:98) என்று அல்லாஹ் புகழ்ந்து பேசும் சமுதாயத்தவர்களுக்கு நபியாக அனுப்பப்பட்டவரான, (தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் 4:567-569, 7:782-789, 5:912-919)
அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். (37:147) எனும் வசனத்திற்கு, அவர்கள் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் இருந்தார்கள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், அந்த மக்கள் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர் இருந்தார்கள் என்பதாக சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களும், அச்சமூகத்தார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இருந்தார்கள் என்பதாக, மக்ஹூம்(ரஹ்) அவர்களும், அந்த மக்கள் ஒரு லட்சத்தை விட இருபதாயிரம் பேர் கூடுதலாக இருந்தார்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, உபைபின் கஅப்(ரழி) அவர்களும், பிரஸ்தா பிக்கக்கூடிய அளவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்ட இறைத்தூதராகிய, (10:98, ஜாமிஉத் திர்மிதி 3153, தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், இப்னு கஸீர் 4:567-569, 7:782, 5:912-919)
ஆக! மறுமையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அவரைப் பின்பற்றப்பட்டவர்களோடு செல்லும் இறைத்தூதராகிய; (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி 5705,5752,6541, முஸ்லிம் 374(10:98) தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், இப்னு கஸீர் 4:567-569, 7:782, 5:912-919) இறைத்தூதர் “யூனுஸ்'(அலை) அவர்களைக் குறித்து;
“என்னை யூனுஸ் பின் மத்தாவை விடச் சிறந்தவன் என்று கூறுவது எந்த மனிதருக்கும் தகாது” என்று இறுதி இறைத்தூதராகிய (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி : 3395,3413, 4630,7539, முஸ்லிம் : 4739, தஃப்ஸீர் இப்னு கஸீர் 7:783)
இறைத்தூதர் (37:139) “யூனுஸ் பின் மத்தா’ அவர்கள், (அலை) அவர்களை ஈராக்கில் உள்ள “அல்மவ்ஸில்’ நகருக்கு அருகில் உள்ள “நீனவா’வாசிகளுக்குத் தூதராக இறைவன் அனுப்பி வைத்தான் யூனுஸ்(அலை) அவர்கள் அம்மக் களை அல்லாஹ்வின்பால் அழைத்தார்கள் அவர்கள் அந்த அழைப்பை ஏற்க மறுத்து தங்களது இறை மறுப்பிலேயே பிடிவாதமாக இருந்துவந்தார்கள். இதனால் கடுமையான கோபம் கொண்ட யூனுஸ்(அலை) அவர்கள் அம்மக்களிடமிருந்து கோபமாக, வேகமாக, வெளியேறினார்கள். வெளியேறு முன் மூன்று நாட்களுக்குப் பின்னர் அல்லாஹ்வின் வேதனை உங்களுக்கு இறங்கும் என்பது குறித்து அம்மக்களை எச்சரிக்கை விடுத்தார்கள். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அம்மக்கள் திருந்தாத காரணத்தால் அவர்களை விட்டும் கோபத்தில் வெளியேறிச் சென்று விட்டார்கள்.
வேதனை வரும் என்பதை நபியிடமிருந்து உறுதி செய்து கொண்ட அம்மக்கள் நபி பொய்யுரைக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்டார்கள். இதனிடையே வேதனை வருவதற்கான சில அடையாளங்களை நேரில் அவர்கள் “கண்களால்’ பார்த்தும் விட்டார்கள். (சிந்தித்தார்கள் தங்களுக்குள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தார்கள்) தங்களுக்கு வேதனை நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அப்போது அந்த மக்கள் அல்லாஹ்விடம் அடைக்கலமாகி பாவ மீட்சி பெறும் பொருட்டு ஒவ்வொரு கால்நடைகளையும் அதன் கன்றுகளையும் தனித் தனியாகப் பிரித்தார்கள். தங்களது குழந்தைகளையும், கால்நடைகளையும் மற்றும் ஏனைய பிராணிகளையும், ஓரிடத்தில் குழுமச் செய்து, முடியாலான ஆடையை அணிந்துகொண்டு அங்கு வலிமையும் மான்பும் மிக்க அல்லாஹ்விடம் அடைக்கலமாகி, ஓலமிட்டு அழுதுகொண்டே, பாவமன்னிப்புத் தேடி உதவி கோரினார்கள். அவர்களின் உள்ளங்களின் உண்மையையும், கடந்தகாலத் தவறுகளுக்காக வருந்திப் பாவ மீட்சி பெறும் உறுதியும் இருப்பதைக் கண்ட அல்லாஹ் வந்த வேதனையை அவர்களை விட்டும் அகற்றினான். (10:98, தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம் 4, பக்கம் 568,569, பாகம் 5, பக்கம் 912 919) இதனையே ஏகனாகிய அல்லாஹ்;
எனவே, (நாம் இதற்கு முன்னர் அழித்துவிட்ட எத்தனையோ ஊர்களில் இருந்தவர்கள் நமது வேதனை வரும் முன்) ஓர் ஊர் (மக் கள்) விசுவாசங் கொண்டு பின்னர், அதன் விசுவாசம் அதற்கு பயனளித்திருக்கக் கூடாதா? (அவ்வாறு உலகில் எந்த ஊரும் இருக்கவில்லை) யூனுஸின் சமூகத்தாரைத் தவிர (அவர்கள் அல்லாஹ்வின் தண்டனை வரும் முன் விசுவாசங் கொண்டு, அந்த விசுவாசம் பயனளித்த ஊரைச் சார்ந்தவர்களாவார்கள்) அவர்கள் விசுவாசங் கொண்டபோது இவ் வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றிவிட்டோம். (உலகிலும்) சிறிது காலம் வரை அவர்களை சுகம் அனுபவிக்குமாறும் செய்தோம். (அல்குர் ஆன் 10:98) என்று கூறுகின்றான். இதனையே, சிந்தனைப் பார்வை, அறிவுப் பார்வை, ஆய்வுப் பார்வை, தகவல் பார்வை என்று நாம் சொல்கின்றோம். அழிக்கப்பட்ட மற்ற சமுதாயத்தினரைப் போல யூனுஸ்(அலை) அவர்களுடைய சமூகத்தவர்களும் தமது “கண்களால்’ வெறும் பார்வை மாத்திரம் பார்த் திருந்தால் வந்த அழிவிலிருந்து தப்பியிருக்க மாட்டார்கள். அதனையே;
“நீனவா’ பிரதேசத்து மக்களை உயர்ந்தோன் அல்லாஹ்வின் தூய ஓரிறைக் கொள்கை மார்க்கத்தின்பால் அழைத்தார்கள். அம்மக்கள் அந்த அழைப்பை ஏற்க மறுத்துத் தங்களது இறை மறுப்பிலேயே பிடிவாதமாக இருந்துவந்தார்கள். இதனால் கடும் கோபம் கொண்ட யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதியில்லாமலேயே அந்த மக்களோடு கோபித்துக் கொண்டு பொறுமையை இழந்தவர்களாக! அந்த நகரை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்திலுள்ள “யாஃபா’ துறைமுகத்திற்கு வந்து துனூசியா செல்வதற்காகக் கப்பல் ஏறினார். அப்போது அக்கப்பல் காற்றின் வேகத்தால் நாலாபுறங்களிலிருந்தும் அலைகளால் அலைக் கழிக்கப்பட்டது குலுங்கியது கப்பலில் இருந் தோர் நீரில் மூழ்கி விடுவோமோ என அஞ்சினர் கப்பலின் பளுவைக் குறைக்க பயணிகளில் ஒருவரைக் குறைத்தால் நல்லது என்று கருதிய கப்பல் உரிமையாளர்கள், மூன்று முறை சீட்டுக் குலுக்கிப் போட்டதிலும் யூனுஸ்(அலை) அவர்களின் பெயரே வந்தது (37:141) அதுவே அல்லாஹ்வின் ஏற்பாடாகவும் இருந்தது, அதனால் யூனுஸ்(அலை) அவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டார்கள். (37:141, 21:87,88, ளஹ்ஹாக்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 5:912-919)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)